பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நாளைய இந்தியா - நவீனமயம்

நாளைய இந்தியா நவீனமயமாதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

வளர்ச்சியின் பயனானது பெருமளவிலான மக்களை எட்டியுள்ளது. அதனால் கிராமப்புறங்களிலிருந்து நகருக்கு இடம் பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிறந்த வாழ்க்கைத் தரத்தை எதிர்நோக்கும் ஒரு புதிய நடுத்தர வர்க்கமொன்று தோன்றி வளர்ந்து வருகிறது. பெருகிவரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நகரங்கள் உருவாகாவிடில் இப்போதிருக்கும் நகரங்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும். பிரதமர், ஏற்கெனவேயுள்ள நடுத்தரமான நகரங்களை நவீனப்படுத்தியும், பெருநகரங்களின் அருகே துணை நகரங்களை உருவாக்கியும் நூறு அதிநவீன வசதிகளுடன் கூடிய நவீனமயம் நகரங்கள் (Smart City) உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் சர்வதேச தரத்திற்கு இணையாக ரூ.48 ஆயிரம் கோடியில் 100 நகரங்கள் நவீனமயமாக (Smart City) உருவாக்கவும், அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் 500 நகரங்களை அனைத்து வசதிகளுடன் புதுப்பிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதேபோல் அனைவருக்கும் வீடு திட்டத்தில் அடுத்த ஏழு ஆண்டுகளில் 2 கோடி வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ 4 லட்சம் கோடியாகும். இம்மூன்று திட்டங்கள் தொலைநோக்கு திட்டங்கள் ஆகும். வளரும் நாடாக மாறும் திட்டமாக செயல்பட போகிறது.

நாட்டில் முதல் முறையாக இப்போது ஒரு சவாலை தொடங்கியுள்ளோம். அதன் படி நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் கூடிய நவீனமயம் 100 நகரங்கள் (Smart City) அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை அளிக்கலாம். இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசும் மாநில அரசுகளும் கைகோர்த்து செயல்பட வேண்டும். நவீனமயம் நகரங்கள் திட்டத்தை மத்திய அரசு தனியாக தயாரிக்கவில்லை. உலகளாவிய அளவில் கட்டுமானத் துறையில் உள்ள சிறந்த நடைமுறைகள் ஆராயப்பட்டு, பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளுடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறு நகரங்களில் வாழும் மக்களுக்காக பெரு நகரங்களில் செயல்படுத்தப்படும் நவீனமயம் நகரம் போன்ற திட்டம்தான் அம்ருத் நகரத் திட்டம்.

அம்ருத் திட்டம்

இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 500 நகரங்கள் மேம்படுத்தப்பட இதில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், குடிசைவாசிகள் ஆகியோரின் நலன்கள் கருத்தில் கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்களில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு மேம்படுத்தப்படும். மேலும் குடிநீர் வசதி, கழிவுநீர் மேலாண்மை மழைநீர் வடிகால், போக்குவரத்து, மரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதே இந்த இரண்டு திட்டங்களின் முக்கிய நோக்கம் ஆகும். அப்போதுதான் பொது மக்கள் வசதியாக வசிப்பதற்கான சூழல் ஏற்படும். மேலும், சாலை வசதி போன்றவையும் நகரத்தின் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்படும். முழுமையான இணைய வசதி, இலவச கம்பியில்லா இணையம் (Free Wi-Fi) மின் நிர்வாகம் போன்ற பெரு நகரங்களுக்கு உரித்தான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு நகராளுமையின் தரம் உயர்த்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் 73 சதவீத நகர்ப்புற மக்கள் பயன் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் 33 நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளின் தரம் உயர்த்தப்படும் என  எதிர் பார்க்கப்படுகிறது.  நாட்டில் உள்ள நகரங்களை சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ளதுபோல் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தும் நடவடிக்கையின் முதல் முயற்சி ஆகும்.

பிரதம மந்திரி அவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வரும் 2022 ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 2 கோடி புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 13 நவீனமயம் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கு அடுத்து தமிழகத்தில் 12 நவீனமயம் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன.

அவையாவன

 • சென்னை,
 • கோவை,
 • திருச்சி,
 • மதுரை,
 • திருநெல்வேலி,
 • சேலம்,
 • திருப்பூர்,
 • ஈரோடு,
 • வேலூர்,
 • தூத்துக்குடி,
 • திண்டுக்கல்,
 • தஞ்சாவூர்

ஆகிய 12 மாநகராட்சிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

நகர் மயமாக்கல்

நகர் மயமாக்கல் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவிகிதம் நகர்ப்புற இந்தியாவில்தான் நடக்கிறது. அடுத்த 15 வருடங்களில் இந்த சதவிகிதம் 75 சதவிகிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரங்கள் நவீனமயம் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் கருவியாக கருதப்படுவதால், நகர் மயமாதலை விரைவுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதுமட்டும் அல்லாமல் வர்த்தகம் செய்வதற்கும் முதலீடு செய்வதற்கும் உகந்த நகரமாக மேம்பாடு அடையும். இதனால் ஏழைகளும் பயன் பெறுவர். நாளைய இந்தியா நவீனமயம் இந்தியாவாக மாறும் நிலைக்கு உள்ளது. வரும் காலங்கள் நவீனமயமான நகரங்களாக மாறும் நிலை வெகு தொலைவில் இல்லை என்பதை அறிய முடிகிறது. நமது 66வது குடியரசு தினம் உரையில் நமது பிரதம மந்திரியின் மேற்கோளானது “உலகம் முமுவதிலும் ஈடு இணையற்ற, வாய்ப்புகள் கொண்ட நாடாக இந்தியாவை நீங்கள் பார்ப்பீர்கள். மீதமுள்ள உலகத்திற்கு வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பில் இந்தியா முன்மாதிரியாகலாம்" என்பதை இத்திட்டங்கள் மூலம் இந்தியாவை உலக அரங்கில் நவீனமயம் இந்தியாவாக அழைத்து செல்கிறார் என்பதை நன்றாக அறிய முடிகிறது.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
3.04761904762
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top