பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கிசான் விகாஸ் பத்திர திட்டம்

கிசான் விகாஸ் பத்திர திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்க்பட்டுள்ளன.

கிசான் விகாஸ் பத்திரம்

இந்திய தபால் துறையில் பல முதலீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், அதில் மிகவும் பிரபலமான திட்டம் என்றால் கிஸான் விகாஸ் பத்திர திட்டம் தான்.

தபால் துறையில் இருக்கும் பிபிஎஃப், என்.எஸ்.சி திட்டங்கள் போலவே கிசான் விகாஸ் பத்திர திட்டத்திலும் பல நன்மைகளும் மற்றும் சில இடர்களும் உள்ளது. பொதுவாக சிறு முதலீட்டாளர்கள் இத்திட்டத்தை வங்கி வைப்பு நிதிகளுடன் ஒப்பிடுவார்கள் எனவே சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான திட்டமாக கிசான் விகாஸ் பத்திரம் உள்ளது.

வட்டி வகிதம்

இத்திட்டம் மக்களுக்கு 1,000 ரூபாய் குறைந்தபட்ச முதலீடாக கொண்டு 5000 ரூபாய், 10,000 ரூபாய் என்ற வீதத்தில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. இத்திட்ட முதலீட்டில் வருடத்திற்கு 8.7 சதவீத வட்டியை அளிக்கிறது.

மேலும் இத்திட்டத்தில் 100 மாதத்தில் ஆதாவது 8 வருடம் 4 மாதத்தில் உங்கள் முதலீட்டு 2 மடங்காக உயரும்.

இத்திட்டத்தில் செய்த முதலீட்டை, திட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எடுக்க வேண்டும் என்றால் 2 வருடம் 6 மாதங்கள் பொருத்திருக்க வேண்டும்.

வரி விலக்கு

தபால் நிலையத்தில் வழங்கும் பிற திட்டங்களை போலவே இந்நிறுவனம் இத்திட்டத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் இத்திட்டத்தை வைத்துக்கொண்டு கடன் பெற்றுக்கொள்ள முடியும்.

வங்கி வைப்பு நிதிகள்

இத்திட்டத்தை வங்கி வைப்பு நிதிகளுடன் ஒப்பிட்டால் லாப விகிதத்தில் சற்று குறைவானதே. வங்கிகளில் வைப்பு நிதி திட்டத்திற்கு 3 வருடத்திற்கு 9 சதவீத வட்டியை வழங்குகிறது.

ஆதாரம் : தலைமை தபால் அலுவலகம், சென்னை

3.31914893617
கே ரவி Aug 31, 2019 07:25 AM

வட்டி விகிதம் ஒரே மாதிரி இல்லாமல் இருக்கின்றது என்பதே என்னுடைய கருத்து மாறிக்கொண்டே இருக்குமா என்று என்னுடைய கேள்வி இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top