பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வி உதவித்தொகை

கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் கல்வி கடன் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை

சிறுபான்மை சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட பாரதப் பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டத்தின் கீழ் இந்த பள்ளிப் படிப்புக் கல்வி உதவித்தொகை 2008-2009 ஆம் நிதியாண்டில் துவங்கப்பட்டது. சிறுபான்மை சமூகத்தினரின் குழந்தைகளை அவர் தம் கல்வியில் மேம்பாடு அடையச் செய்வதன் மூலம் இச்சமுதாயத்தினரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திட்டல் இத்திட்டத்தின் யுக்தியாகும்.

உறுப்பினர் அடையாள அட்டை என்றால் என்ன ?

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிப்பதும், கல்விக்கான செலவினங்களுக்கான பொருளாதாரச் சுமையை குறைப்பதும் பெற்றோர்கள் குழந்தைகளை இடைநிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பி பள்ளிக் கல்வியை முடிக்க வைப்பதை ஊக்குவிப்பதை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சிறுபான்மை பிரிவினர் யாவர் ?

இசுலாமியர், கிறித்தவர், சீக்கியர், பாரசீகர், பௌத்தர் ஆகியோர் இத்திட்டத்தின் குறிப்பிடப்பட்டுள்ள சிறுபான்மை சமூகத்தினர் ஆவர்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் யாவை ?

அ)அரசு, அரசு நிதி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ/மாணவியராக இருத்தல் வேண்டும்.
ஆ) முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் படிக்கும் மாணவ/மாணவியராக இருத்தல் வேண்டும்.
இ) முதல் வகுப்பு நீங்கலாக, இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டின் இறுதித் தேர்வில் குறைந்த பட்சம் 50மூ மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வருமான உச்சவரம்பு ஏதும் உண்டா ?

ஆம். பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ரூ. 1 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மிகக்குறைந்த வருட வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ/மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

என்னென்ன உதவிகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கபபடுகின்றது ?

முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விச் சேர்க்கை, கற்பிப்பு மற்றும் பராமரிப்புக் கட்டணங்கள் வழங்கப்படுகின்றது.

எவ்வளவு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது?

வகுப்பு

சேர்க்கைக் கட்டணம்

கற்பிப்புக் கட்டணம்

பராமரிப்புக் கட்டணம்

விடுதியில் தங்கி படிப்பவர்

வீட்டிலிருந்து வந்து படிப்பவர்

விடுதியில் தங்கி படிப்பவர்

வீட்டில் வந்து படிப்பவர்

வி.தங்கி படிப்ப வா

வீ.வந்து படிப்பவர்

1 முதல்

----

100

5 வரை

6 முதல்

மாணவ / மாணவியர் செலுத்திய தொகை (அ) அதிகபட்சம் ரூ.500/-

மாணவ / மாணவியர் செலுத்திய தொகை (அ) அதிகபட்சம் ரூ.500/-

மாணவ / மாணவியர் செலுத்திய தொகை (அ) அதிகபட்சம் ரூ. 3500/-

மாணவ / மாணவியர் செலுத்திய தொகை (அ) அதிகபட்சம் ரூ. 3500/-

ரூ.600

ரூ.100

10 வரை

யாரிடம் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் ?

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) சேர்க்கை மற்றும் கற்பிப்புக் கட்டணங்களை தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தும். பராமரிப்புத்தொகை, காசோலை/வரைவோலையாக மாணவ/மாணவியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மாணவ/மாணவியர் அவர்களுடைய வங்கிக் கணக்கில் இதைச் செலுத்தி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் எங்கு பெறலாம் ?

விண்ணப்ப படிவங்களை மாணவ/மாணவியர்கள் அவர்களது கல்வி நிறுவனத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் (அல்லது) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை ?

ஆ) வருமானச் சான்றிதழ்
ஆ) சாதிச்சான்றிதழ்
சாதி மற்றும் வருமானச் சான்றிதழ் வருவாய்த்துறையினரால் வழங்கப்பட்டது (அல்லது) ரூ.10/- மதிப்புள்ள நீதிமன்ற சாரா மாதிரிப் படிவத்தை படியிறக்கம் (டவுன் லோடு) செய்து அதனைப் பூர்த்தி செய்து, பெற்றோர்/பாதுகாவலரால் உறுதி ஆவண (யுககனையஎவை) கையொப்பமிட்டும் சமர்ப்பிக்கலாம்.

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்குதல்

சிறுபான்மை சமூகத்தினரின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக பிரமத மந்திரி அவர்களின் புதிய 15 அம்ச திட்டம் ஜுன் 2006-ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நல் மதிப்பெண் பெற்ற சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மாணவ / மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பிற்காக கல்வி உதவித்தொகை வழங்க 29.01.2007 அன்று பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்குதல் திட்டம் துவங்கப்பட்டது.

இத்திட்டத்தின் நோக்கம் என்ன ?

சிறுபான்மை சமுதாயத்தில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவ/மாணவியர்கள் உயர்கல்வி கற்கவும் அதன் மூலம் நல்ல பணியில் சேரவும் வாய்ப்பு ஏற்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

எந்தெந்த சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் ?

இசுலாமியர், கிறித்தவர் சீக்கியர் பௌத்தர் மற்றும் பாரசீகியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

எந்தெந்த மேற்படிப்பு இத்திட்டத்தின் கீழ் வருகின்றது ?

அ) மத்திய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பதினோராம் வகுப்பு முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை பயிலும் மாணவ/ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
ஆ) மத்திய அரசின் தேசிய தொழிற்நெறி பயிற்சி (NCVT) –ஆல் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைத் தொழிற்கல்வி (vocational course), ஐ.டி.ஐ. (I.T.I.), ஐ.டி.சி. (ITC), பாலிடெக்னிக் மற்றும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி பயிலும் மாணவ/மாணவியர்களும் விண்ணப்பிக்கலாம்.
இ) மதிப்பெண் மற்றும் குடும்ப வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (Merit-cum-Means Scholarship) திட்டத்தின் கீழ் வராத தொழில்நுட்ப/தொழிற்கல்வி (Technical / Professional) பயிலும் மாணவ/மாணவியர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஈ) சட்டம், மருத்துவம் எம்.பி.ஏ (M.B.A), எம்.சி.ஏ (M.C.A) மற்றும் பொறியியல் (Engineering) பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள் யாவை ?

அ)பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ரூ. 2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆ) மாணவ/மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில் 50 விழுக்காட்டிற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இ) வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ/மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வழங்கப்படும் கல்வி உதவித்தொகையின் அளவு எவ்வளவு ?

படிப்பு

சேர்க்கைக் கட்டணம் (ரூ.)

பராமரிப்புக் கட்டணம்ழூ்

விடுதியில் தங்கி படிப்பவர் (ரூ.)

வீட்டிலிருந்து வந்து படிப்பவர் (ரூ.)

பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகள்

7,000/-

380

230

வாழ்க்கை தொழிற்கல்வி, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், ஆசிரியர் பட்டயப்பயிற்சி

10,000/-

380

230

இளங்கலை மற்றும் முதுகலை்

3,000/-

570

300

எம்/பில் மற்றும் ஆராய்ச்சி (Ph.d)

----

1200

550

  • மாதந்தோறும் வருடத்திற்கு 10மாதங்கள் வழங்கப்படும்.

எவ்வளவு காலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் ?

படிக்கும் காலம் முழுவதற்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஆனால், தேவையான அளவு வருகைப் பதிவு (attendance) இல்லா விட்டாலோ அல்லது இறுதித் தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறைவாகப் பெற்றாலோ கல்வி உதவித்தொகை கிடைக்காது.

விண்ணப்பப் படிவத்தினை கல்வி நிறுவனத்தின் தலைவரிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவ/மாணவியர் அவர் பயிலும் கல்வி நிறுவனத்தின் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்?

அ)வருமானச் சான்றிதழ் (கடந்த நிதியாண்டிற்குரியது)
ஆ)சாதிச் சான்றிதழ்
இ) மதிப்பெண் பட்டியல்
வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் வருமானச்சான்றிதழை சமர்ப்பிக்கலாம் (அல்லது) ரூ.10/- மதிப்புள்ள நீதிமன்ற சாரா மாதிரிப் படிவத்தினை படியிறக்கி (download) பூர்த்தி செய்து, பெற்றோர் / பாதுகாவலர் உறுதி ஆவண (Affidavit) கையொப்பமிட்டும் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கல்வி உதவித்தொகை பெற வங்கிக் கணக்கு துவங்க வங்கிக் கணக்கில் ஏதும் குறைந்தபட்ச தொகை வைக்க வேண்டுமா ?

இல்லை. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகை தொடர்பான திட்டங்களுக்கு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவில், மாணவ / மாணவியர்கள் பணம் ஏதும் செலுத்தாமலேயே வங்கிக் கணக்கு (No Frill Account) துவங்கிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கல்விக்கடன்

தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மைச் சமூகத்தில் உள்ள நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவ / மாணவியர்கள் உயர் கல்வி கற்று அதன் மூலம் அவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள உதவுவதற்காக இத்திட்டம் துவங்கப்பட்டது.

எந்தெந்த சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலும் ?

இசுலாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த மற்றும் பார்சி ஆகிய மத சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவ / மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

எந்தெந்த படிப்பிற்கு கல்விக் கடன் வழங்கப்படும் ?

மத்திய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம் / தொழிற்கல்வி (Teechincal and Professional Courses) பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படும். மருத்துவம், பல் மருத்துவம் (BDS), பி.யு.எம்.எஸ் (BUMS), பி;;/.பார்ம் (B.Pharm), பி.எஸ்.சி;; நர்சிங் (B.Sc., Nursing), கால்நடை மருத்துவம், பொறியியல் (B.E.,), பி.டெக் (B.Tech), பி.ஆர்க் (B.Arch), ஆசிரியர் பட்டப்படிப்பு (B.Ed), எம்.பி.ஏ (M.B.A.), பி.சி.ஏ (B.C.A), எம்.சி.ஏ (M.C.A) மற்றும் இதற்கு ஈடான தொழில்நுட்ப/ தொழிற்கல்வி பயிலும் மாணவ/மாணவியர்கள் கல்விக்கடன் பெறலாம்.

எந்தெந்த கட்டணங்களைச் செலுத்த கல்விக்கடன் வழங்கப்படுகின்றது ?

அ. சேர்க்கைக் கட்டணம் / போதனைக் கட்டணம்
ஆ. நூலகக் கட்டணம், புத்தகங்கள் மற்றும் தேவையான கல்வி மெட்டீரியல்கள் வாங்குவதற்கான செலவு
இ. தேர்வுக்கட்டணம்
ஈ. விடுதிக்; கட்டணம் (தங்குமிட வாடகை மற்றும் உணவு)

வழங்கப்படும் கடன் தொகை எவ்வளவு ?

ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக ரூ.50,000/- வரையில் 5 வருடத்திற்கு அதாவது மொத்தம் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரையில் கல்விக் கடன் வழங்கப்படும்.

கல்விக்கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு ?

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்விக் கடனுக்கான ஆண்டு வட்டி 3 விழுக்காடு மட்டுமே ஆகும்.

கடன் தொகையை எப்போது திரும்பச் செலுத்தவேண்டும் ?

கல்வி பருவக்காலம் முடிந்து (Course Completion) 6-ஆம் மாதம் அல்லது பணியில் சேர்ந்த தேதி, இதில் எது முந்தையதோ அத்தேதியிலிருந்து கடனைத் திரும்பச் செலுத்தவேண்டும்.

கல்விக் கடன் பெற பிணையம் (Surety) ஏதும் தரவேண்டுமா ?

ஆம். அரசு/பொது நிறுவனங்கள் (Public Sector undertaking) / வங்கி / தன்னாட்சி அமைப்புகள் (autonomous bodies) ஆகியவற்றில் ஏதேனுமொன்றில் நிரந்தரப் பணிபுரியும் பணியாளர் ஒருவர் பிணையம் அளிக்கவேண்டும்.

எந்த வங்கிகள் மூலம் இக்கல்விக் கடன் வழங்கப்படுகின்றது ?

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) இக்கடனை மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள் நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்குகின்றது.

விண்ணப்பப்படிவம் எங்கு பெற்று, எங்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் ?

விண்ணப்பப்படிவத்தை டாம்கோ நிறுவனம் (அல்லது) சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (பி.ப.) மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் அலுவலகத்தில் கட்டணம் ஏதுமின்றிப் பெறலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பம் பெற்ற அலுவலகத்திலேயே சமர்ப்பிக்கலாம். இந்த அலுவலகங்களைத் தவிர, சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளிலும் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பப்படிவத்துடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள் எவை ?

அ) சாதிச்சான்றிதழ் / பள்ளி (அ) கல்லூரி மாற்றுச்; சான்றிதழ்
ஆ) வருமானச் சான்றிதழ்
இ) இருப்பிடச் சான்றிதழ் / ரேசன் கார்டு நகல்
ஈ) கல்விச் சான்றிதழ் நகல்
உ) கல்லூரிக் கட்டண விபரம்
ஊ) வங்கி கோரும் பிற ஆவணங்கள்

3.20588235294
பிரேம்குமார் Jun 15, 2019 07:01 PM

நமது நாடு ஏழை எளிய
குழந்தைகளுக்கு (அனைத்து வகுப்பு
சாதினர்) கல் உதவித்தொகை
அளிக்க வேண்டும்

TASNA Mar 29, 2016 12:15 PM

கல்விக் கடன் பெற விண்ணப்பித்த அலுவலகத்தை அணுகி விவரங்கள் பெறவும்.

தமிழன் Mar 29, 2016 08:48 AM

நான் இந்த மாத இறுதிக்குள் கல்வி கட்டனம் செலுத்த வேண்டும் ஆனால் இன்னும் பணம் கிடைக்கவில்லை எப்போது வரும்?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top