பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முன்பள்ளி ஆசிரியரின் சிறப்பியல்புகள்

முன்பள்ளி ஆசிரியரின் சிறப்பியல்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பணிகள் அந்நாளைய சட்டங்களை நிர்ணயிக்கும் மனுவின் கூற்றுப்படி ஆசிரியர் என்பவர் படைக்கும் கடவுள் “பிரம்மா’விற்கு ஒப்பானவர். தகுதியற்ற மருத்துவர் எவ்வாறு நோயாளியின் உயிருக்கு அபாயமாக இருக்கிறாரோ அதைப்போலவே தகுதியற்ற ஆசிரியர் நாட்டிற்கே கேடு விளைவிக்கிறார். ஏனெனில் இவர்களால் இளங்குழந்தைகளின் ஆளுமையும் மனதும் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

திறமையான ஆசிரியரின் முக்கிய பண்புகள்

1 குணங்கள்: ஆசிரியர் என்பவர் உயரிய பண்புகளை உடையவராக இருத்தல் வேண்டும். ஏனெனில் அவருடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், நடத்தை போன்ற குணங்கள் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.

2. உளவியலறிவு : குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் அவர்களுடைய பிரச்சனைகள் பற்றி நன்றாக அறிந்து அவற்றைத் தவிர்ப்பதற்கு அடிப்படையான உளவியலறிவு மிகவும் அவசியம், இல்லையெனில் நேரம், சக்தி, மனித வளம் போன்றவை கணிசமான அளவில் வீணாகும். ஏனெனில் குழந்தைகளின் தனியாள் வேறுபாடுகளைப் பற்றி அறிய குழந்தை உளவியல் பற்றி ஆசிரியர் ஒரளவு கற்றறிந்தவராக இருத்தல் வேண்டும்.

3. கிரகித்துக் கொள்ளும் முறை : ஆசிரியரின் கற்பிக்கும் முறையானது சரியான முறையில் இருக்கும்போது அவருடைய கற்பித்தல் மிகவும் பயனளிக்க கூடியதாகவும், விரும்பத்தக்க விளைவுகளை உடையதாகவும் இருக்கும்.

4. குழந்தைகளின் தனித்தன்மைக்கு மதிப்பளித்தல் : எந்தக் குழந்தையையும் (சாதுவான) ஊமையான விலங்கினைப் போல் நடத்துதல் கூடாது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மையுண்டு. கல்வியின் ரகசியமே குழந்தைகளை (அங்கீகரிப்பில்) மதிப்பதிலுள்ளது. எனவே, குழந்தையின் எண்ணங்களுக்கு மதிப்பளித்தல் வேண்டும்.

5. பாரபட்சமற்ற முறையிலிருத்தல் : ஒரு ஆசிரியர், ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும் சலுகை அளிப்பவராக இருத்தல் கூடாது. எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரியாகப் பாவித்தல் வேண்டும்.

6. பொறுமை : கைப்பிடியளவு பொறுமை (காலன்) அதிக அளவு மூளையை விட பயனுள்ளது (A handful of patience is better than abushel of brain) பழக்க வழக்கங்கள் ஒரு நாளில் ஏற்படாது. குழந்தைகளை சரியான வழிக்குக் கொண்டு வர சிறிது கால அவகாசமும் பொறுமையும் தேவைப்படுகிறது. எனவே, ஆசிரியர் பொறுமையுடனிருத்தல் வேண்டும்.

7. ஆராய்ச்சி மனப்பான்மை : பழமையான கருத்துக்கள் முறையில்லாமல், நவீன உத்திகளை வகுப்பறையில் பயன்படுத்தக் கூடியவராகயிருத்தல் வேண்டும். தன்னுடைய நேரத்தை புதுவகையான கற்பித்தல் முறைகளை ஆராய்ந்து தேர்வு செய்யக் கூடியவராக ஆசிரியர் இருத்தல் வேண்டும்.

8. உண்மையான ஆதிக்கம் செலுத்துபவராக இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்குக் குறைவான உத்தரவுகளையே பிறப்பித்தல் வேண்டும். ஏனெனில் அதிகமாகக் கட்டளையிடும் போது அதற்கு பயனில்லாமல் போகிறது.

9. புகழ்வதும் குற்றம் சாட்டுதலும் சரியான முறையிலிருத்தல் அவசியம்: பாராட்டுதலும் குற்றம்சாட்டுதலும் இரண்டும் முக்கியமான போர்கருவி போல், ஆசிரியர் அதனை கவசமாகப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு கற்பித்தல் வேண்டும். மேலும் பாரபட்சமின்றி அதனைப் பயன்படுத்தல் வேண்டும்.

10. பாடங்களில் புலமை பெற்றவர் தன்னுடைய பாடங்களில் அதிகப் புலமை பெற்றவராக இருத்தல் அவசியம். தன்னுடைய பங்கில் ஏதேனும் குறை இருப்பின் மாணவர்கள் முன்னிலையில் அவரின் மதிப்பைக் குறைக்கும். ஆசிரியர் ஒரு தீப்பொறியாக இருந்தால்தான் மாணவர்களின் மனதை ஊக்குவிக்க முடியும்.

11. தினசரி குறிப்புகளைத் தயார் செய்தல்: ஆசிரியர் எவ்வளவு திறமைமிக்கவராக, அனுபவசாலியாக இருப்பினும் கற்பித்தலுக்கு முன் குறிப்புகளைத் தயார் செய்தல் அவசியம்.

12. தன்னைத் தானே மதிப்பீடு செய்தல் : ஆசிரியர் தன்னைப் பற்றி சுய மதிப்பீடு செய்து தன்னுடைய பலவீனங்களை சரி செய்து கொள்ள வேண்டும். ரைபர்னின் கூற்றுப்படி ஆசிரியரைப் பொறுத்தவரை சுயமதிப்பீடு செய்தல் என்பது ஒரு முக்கிய தேவையான கருவியாகச் செயல்படுகிறது.

13. நகைச்சுவையுணர்ச்சி: ஆசிரியரானவர் இயற்கையாகவே நகைச்சுவையுணர்ச்சியுடனும், நல்ல பண்புகளுடனும் இருப்பது முக்கியம். இவை வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரமாகும்.

14. மன உணர்வுகளில் ஸ்திரதன்மை உடையவராயிருத்தல்: ஆசிரியரின் உணர்ச்சிகளின் நிலைத் தன்மை மாணவர்களைப் பாதிக்கிறது. மகிழ்ச்சியற்று, மனச்சோர்வு மற்றும் அதிருப்தியுடைய ஆசிரியர் தன்னுடைய மாணவர்களை மகிழ்ச்சியாகவோ, ஒத்துப் போகக் கூடியவராகவோ இருக்க உதவ முடியாது.

15. கேள்வி கேட்கும் திறமை மற்றும் ஆசிரியர் முன்னுதாரணமாய் இருத்தல் வகுப்பறையில் ஆசிரியரின் வெற்றியானது அவரின் கேள்விகேட்கும் திறனைப்பொறுத்தது. தவறாமல் கேள்வி கேட்கும் ஆசிரியர் குறையில்லாமல் கற்பிக்கிறார். ஆசிரியர் உத்தரவிடுபவராகவோ வேலை வாங்குபவராகவோ இல்லாமல் உதவி புரிபவராகவும் வழிகாட்டியாகவும் ஆலோசனை கூறுபவராகவும் இருத்தல் வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

3.4
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top