பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திய ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனம்

இந்திய ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனம்

இந்திய ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனம்

முன்னாளில் இந்திய போட்டோ-இன்டர்பிரிடேஷன் கல்வி நிறுவனம் என்று அறியப்பட்ட, இந்திய ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனம், கடந்த 1966ம் ஆண்டு நிறுவப்பட்டது. சர்வே ஆப் இந்தியாவின் வழிகாட்டலின் கீழ் இது அமைக்கப்பட்டது. இதுபோன்றதொரு கல்வி நிறுவனத்தை ஏற்படுத்தும் எண்ணமானது, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் தோன்றியது என்று கூறப்படுகிறது.

டெஹ்ராடூனிலுள்ள இந்த கல்வி நிறுவனத்தின் கட்டடம், கடந்த 1972ம் ஆண்டு திறக்கப்பட்டது. துவக்கப்பட்டது முதல், ஜியோஇன்பர்மேடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் ரிமோட் சென்சிங் ஆகியவற்றில் திறன் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறது மற்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள பயனர் சமூகங்களுக்கு பயனளிக்கும் விதமாக, அந்த இரண்டு துறைகளின் பயன்பாடுகளை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

இன்றைய நிலையில், இந்த கல்வி நிறுவனமானது, அனைத்து நிலைகளிலுமான நிபுணர்களுக்கு ஏற்ற வகையில், பல ப்ரோகிராம்களை வைத்துள்ளது. இடைநிலை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், புதிய பட்டதாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் என்ற பலவகையினர் அந்த வகைப்பாட்டிற்குள் அடங்குவர்.

நோக்கங்கள்

ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோஇன்பர்மேடிக்ஸ் ஆகிய துறைகள் மற்றும் இயற்கை வள சர்வே, புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்கள், கடலாராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் அவற்றின் பயன்பாடுகள் குறித்த பயிற்சிகள் மற்றும் முதுநிலை அளவிலான படிப்புகள் ஆகியவற்றின் மூலம், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான ஆசிய, பிசிபிக் மையம் வழங்கும் பயிற்சி மற்றும் கல்வித் திட்டங்களை நடத்துதல்.

இஸ்ரோவின் பல்வேறான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறது மற்றும் ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோ-இன்பர்மேஷன் ஆகிய துறைகளில் செயல்முறை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.

மாணவர்களின் வளாக அனுபவம்

இங்கு தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு, தரமான கற்றல் வளங்கள் மற்றும் சமூகம் மற்றும் அறிவுசார் செயல்களில் ஈடுபடும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன. இங்கே படிக்கும் மாணவர்களுக்கு, வகுப்பறை பயிற்சி எந்தளவு முக்கியமோ, அதேயளவு, புதிய திறன்களை கற்றுக்கொள்வதும், வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை சுயமுயற்சியில் அறிந்துகொள்வதும், நூலகம் மற்றும் ஆய்வகத்தில் பயனுள்ள முறையில் செயல்படுவதும் அவசியமாகிறது.

பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் இங்கே வந்து படிப்பதால், கலப்பு மாணவர் சமூகம் இங்கே இருக்கிறது. நல்ல அனுபவமும், அர்ப்பணமும் கொண்ட ஆசிரியர்கள், மாணவர்களின் வளாக வாழ்க்கையை வளப்படுத்துகிறார்கள்.

வசதிகள்

 • கணினி ஆய்வகம்
 • மத்திய நூலகம்
 • இணைய வசதி
 • வங்கி வசதி
 • ஆராய்ச்சி
 • சிறந்த வசதியான விடுதிகள்
 • மருத்துவ சேவைகள்
 • உடற்பயிற்சி கூடங்கள்  .

படிப்புகள்

எம்.எஸ்சி., படிப்புகள்

 • ஜியோஇன்பர்மேடிக்ஸ்
 • இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை

எம்.டெக்., படிப்பு

 • ரிமோட் சென்சிங் மற்றும் ஜி.ஐ.எஸ்., அப்ளிகேஷன் என்ற துறையில், எம்.டெக்., படிப்பு வழங்கப்படுகிறது.

பிஎச்.டி., படிப்பு

ஜியோஇன்பர்மேடிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் ஆகியவை, பிஎச்.டி., ஆய்வுக்கான பாடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இக்கல்வி நிறுவனம், புனே பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பல பல்கலைகளால், இக்கல்வி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி திட்டங்கள்

சான்றிதழ் படிப்பு

 • ரிமோட் சென்சிங் மற்றும் இமேஜ் இன்டர்பிரிடேஷன் என்ற பிரிவில் 8 வாரகால சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது.

குறுகியகால படிப்பு

சிறப்பு அம்சத்துடன், ரிமோட் சென்சிங் படிப்பில் குறுகியகால படிப்பு வழங்கப்படுகிறது. இது 8 வாரகால அளவு கொண்டது.

என்.என்.ஆர்.எம்.எஸ். படிப்புகள்

கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் படிக்கும் மாணவர்களில், ஒவ்வொரு ஆண்டும், சுமார் 60 முதல் 80 வரை, இத்திட்டத்தின் மூலம் பயிற்சிகளைப் பெறுகிறார்கள்.

சிறப்பு படிப்புகள்

தமிழ்நாடு நீர்வள அமைப்பு, நகர் மற்றும் நாட்டு நிர்மாண அமைப்பு, இந்திய வன சர்வே அமைப்பு உள்ளிட்ட பல்வேறான பிரிவுகளில், சிறப்பு படிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

முதுநிலை டிப்ளமோ

இந்நிறுவனம் வழங்கும் பழமையான படிப்புகளில் ஒன்று முதுநிலை டிப்ளமோ. இப்படிப்பில் 2 Modules உள்ளன. இப்படிப்பு 10 மாத காலஅளவைக் கொண்டது. முதல் Module 4 மாதங்களும், 2ம் Module, 3 மாதங்களும் கொண்டது.

இந்நிறுவனம் பற்றிய அனைத்து விபரங்களையும் விரிவாக அறிந்துகொள்ள www.iirs.gov.in/ என்ற வலைத்தளம் செல்க.

3.13793103448
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top