பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய கிரிக்கெட் அகடமி

தேசிய கிரிக்கெட் அகடமி பற்றிய குறிப்புகள்

தேசிய கிரிக்கெட் அகடமி

இந்தியாவிலுள்ள திறமைவாய்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு விஞ்ஞான ரீதியான பயிற்சியளிக்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில், கடந்த 2000ம் ஆண்டில் உருவாக்கியதுதான் தேசிய கிரிக்கெட் அகடமி. இன்று, சிறந்த கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்கான ஒரு தரமான மையமாக விளங்குகிறது.

நோக்கம்

இந்தியாவில் கிரிக்கெட்டின் தரத்தையும், பாதுகாப்பையும் அனைத்து நிலைகளிலும் மேம்படுத்த, உயர்தர சிறப்பு பயிற்சி, அதற்கான கல்வி ஆகிவற்றை வழங்கி, விளையாட்டு அறிவியலை சிறப்பான முறையில் பயன்படுத்துவதே தேசிய கிரிக்கெட் அகடமியின்(NCA) நோக்கம்.

இங்குள்ள வசதிகள்

தேசிய கிரிக்கெட் அகடமியில், உலக தரத்திலான மைதானங்களும், விக்கெட்டுகளும் உள்ளன. மேலும், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷனின் ஆதரவும் உண்டு.

 • ஒரு முக்கிய கிரிக்கெட் மைதானம்(சின்னசாமி ஸ்டேடியம்)
 • 18 குறும்புல் படுகையும்(turf), 3 சிமெண்ட் பயிற்சி விக்கெட்டுகளும் மற்றும் 6 மைய விக்கெட்டுகளையும் கொண்ட தனி மைதானம்.
 • 3 சின்தெடிக் விக்கெட்டுகளைக் கொண்ட உள் வசதி
 • 4 பந்துவீச்சு மெஷின்கள்
 • சிறப்பான ஜிம்னாசியம்
 • விரிவுரையாளர் அறை
 • பிசியோதெரபி கிளினிக்

தங்குமிட வசதி

விளையாட்டு வீரர்கள் வழக்கமாக, கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷன் கிளப் இல்லத்தில்தான் தங்குகிறார்கள். இதன் வசதிகள் பின்வருமாறு,

 • சிறந்த வீட்டு உபயோகப் பொருட்களுடன், நவீன வசதிகளையும் கொண்டு, நன்கு குளிரூட்டப்பட்ட வகையில் தங்குமிடம் அமைந்துள்ளளது.
 • சிறப்பான சமையல் வசதிகளும் உண்டு.
 • நீச்சல் குளம் மற்றும் மருத்துவமனையும் உண்டு.

பயிற்சிகள்

 • Drill, வலைப் பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகளின் மூலமாக திறன்களை மேம்படுத்தல்.
 • தேவையான காலகட்டங்களில், விளையாட்டுப் பயிற்சிகளை நடத்தி, விளையாட்டு உணர்வையும், வியூகத் திறன்களையும் வளர்த்தல்.
 • ஜிம்னாசிய பயிற்சியின் மூலமாக, ஒரு விளையாட்டு வீரர் உடல் தகுதியுடன் இருப்பதற்கான பயிற்சி.
 • விளையாட்டு ஊட்டச்சத்து, முதலுதவி போன்ற அம்சங்களைப் பற்றி பயிற்சியளித்து, மனம் மற்றும் இதர துணைநிலை திறன்களை மேம்படுத்தல்.
 • யோகா, Sports message Therapist மற்றும் Pool பயிற்சி போன்றவைகளின் மூலம் கடினமான பயிற்சி சூழல்களிலிருந்து வீரர்களை விடுவித்தல்.
 • விளையாட்டு விதிமுறைகள், நிதி மேலாண்மை மற்றும் போதை மருந்து சிக்கல் ஆகியவைப் பற்றிய பயிற்சி.
 • நவீன மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோ பகுப்பாய்வு

பயிற்சி

* காயங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பயிற்சி.

NCA வழங்கும் கிரிக்கெட் தொடர்பான படிப்புகள்

 • கோச்(பயிற்சியாளர்) படிப்பு - பயிற்சியாளராவதற்கான இந்தப் படிப்பு, நிலை A, நிலை B, நிலை C போன்ற 3 நிலைகளில் வழங்கப்படுகிறது.
 • பிசியோதெரபிஸ்ட் படிப்பு - இந்தப் படிப்பானது நிலை 1, நிலை 2 மற்றும் பிசிசிஐ அங்கீகாரம் பெற்றது(BCCI Accredited) என்ற மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
 • Fitness Trainer படிப்பு - இப்படிப்பானது, நிலை 0, நிலை 1 மற்றும் நிலை 2 ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

தேசிய கிரிக்கெட் அகடமியில் வழங்கப்படும் படிப்புகளைப் பற்றியும், National Cricket Academy பற்றியும், முழுமையாக அறிந்துகொள்ள, http://ncabcci.com/

2.89285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top