பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / சிறப்பு கல்வி நிறுவனங்கள் / மத்திய மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் ஆராய்ச்சி நிறுவனம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மத்திய மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் ஆராய்ச்சி நிறுவனம்

அறிமுகம்

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்பத்தில் ஏறக்குறைய பாதியளவு இயந்திரவியல் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. எனவே இந்த இறக்குமதியை குறைத்து, இயந்திரவியல் பொறியியல் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் மற்றும் தன்னிறைவை அடையும்பொருட்டு மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் ஆரம்பிக்கப்பட்டதுதான் மத்திய மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் ஆராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனம் கடந்த 1958, பிப்ரவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனம் மத்திய சி.எம்.இ.ஆர்.ஐ. -ன் கீழ்வரும் ஒரு உயர்ந்தபட்ச ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறையில் தேசிய அளவில் இருக்கும் நிறுவனம் என்பதால், தொழில்துறை மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்தி, அத்துறையில் இந்தியாவின் வெளிநாட்டு சார்பை பெருமளவு குறைத்து, சர்வதேச அளவில் போட்டியிடுவதே ஆகும். அந்த நோக்கம் தற்போது நல்லமுறையில் நிறைவேறியுள்ளது.

குறுகிய கால படிப்புகள்

பி.இ./பி.டெக்./எம்.சி.ஏ. மாணவர்களுக்கு, மின்னணுவியல்(எலக்ட்ரானிக்ஸ்), இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினீயரிங், கணினி அறிவியல் இன்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில், சி.எம்.இ.ஆர்.ஐ, படிப்புகளை வடிவமைத்துள்ளது.

இந்த படிப்பானது, எம்பெட்டட் டெக்னாலஜியில் தங்களின் வருங்கால பணியை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இந்த பாடத்திட்டம் மிகவும் பயனுடையதாய் இருக்கும்.

இதில் சேர்வதற்கு, இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள், தொடக்கநிலையில் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பின்னணியை வைத்திருக்க வேண்டும். மேலும் பி.இ/பி.டெக்/எம்.டெக் -இல், மைக்ரோபிராசசர் துறையில் பேப்பர் முடித்தவர்கள் இந்த படிப்பிற்கு பொருத்தமானவர்கள்.

பொறியியலில் முதுநிலை ஆராய்ச்சி படிப்புகள்

இரண்டுவருட முழுநேர ரெசிடென்ஷியல் முதுநிலை பொறியியல் படிப்பு இங்கு நடத்தப்படுகிறது. இளநிலை பொறியியலில் எந்த பிரிவிலும் படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம் குறைந்தது 70% மதிப்பெண்கள் அல்லது ௭.௦ சி.ஜி.பி.ஏ. பெற்றவர்கள் மட்டுமே இதற்கு தகுதியுடையவர்கள்.

நல்ல கேட்(GATE) மதிப்பெண் பெற்றிருந்தால் அது கூடுதல் தகுதியாக கருதப்படும்.

வயது வரம்பு: 25 வருடங்கள் (பொது/ஓ.பி.சி), 28 வருடங்கள் (எஸ்.சி/எஸ்.டி)

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், கியூ.எச்.எஸ். திட்டத்தின்கீழ் பயிற்சி விஞ்ஞானியாக கருதப்படுகிறார்கள். மேலும் பிற்காலத்தில் ஆய்வுக்கு தயாராக இருக்கும் விஞ்ஞானியாக/சவாலான திட்டங்களை மேற்கொள்ளும் பொறியாளர்களாக அவர்களை உருவாக்கும் விதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் இந்த மாணவர்கள் மாதம் ரூ.25000 உதவித்தொகை உள்ளிட்ட பலவித உயர் சலுகைகளைப் பெறுவார்கள்.

திட்டங்கள்

 • ஸ்வராஜ் டிராக்டர்
 • சோனாளிகா டிராக்டர்
 • தேயிலை பறிக்கும் இயந்திரம்
 • கரும்பு அறுவடை இயந்திரம்
 • காலண்டர் முத்திரை இயந்திரம்
 • தோல் தைக்கும் இயந்திரம்

உள்ளிட்ட பல முக்கியமான இயந்திர திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பயிற்சியளிக்கப்படும் துறைகள்

எம்பெட்டட் சிஸ்டம்ஸ் தொழில்நுட்பம் சம்பந்தமாக இந்த நிறுவனம் ஏற்கனவே தேவைப்படும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதைத்தவிர,

 • ஆற்றல் மேலாண்மை துறையில் எம்பெட்டட் பஸ்ஸி கட்டுப்பாடு
 • எப்.பி.ஜி.ஏ. மூலமாக ஹார்டுவேர் ஆப்டிமைசேஷன்
 • ஸ்மார்ட்-கார்ட் அடிப்படையிலான அப்ளிகேஷன் ஸ்பெசிபிக் ஆராய்ச்சி
 • எம்பெட்டட் வெப்-சர்வர் அடிப்படையிலான தொழில்நுட்ப மேம்பாடு

பயிற்சியில் சேர்வதற்கான தகுதிகள்

 • எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினீயரிங், கணினி அறிவியல் இன்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பி.இ./பி.டெக்./எம்.சி.ஏ. படித்தவர்களுக்காக இந்த பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • எம்பெட்டட் தொழில்நுட்ப துறையில் தங்களின் வருங்கால வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த பயிற்சி பேருதவி புரிகிறது.
 • இளநிலை/முதுநிலை மாணவர்கள் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பின்னணியை கொண்டிருக்க வேண்டும்.
 • மேலும் இளநிலை/முதுநிலை பொறியியல் படிப்புகளில் மைக்ரோபிராசசர் பேப்பர் முடித்தவர்களுக்கும் இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

நூலகம்

இந்நிறுவனத்திலுள்ள நூலகம், பயனர்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால சேவைகளை நிறைவு செய்யும் விதத்தில் வசதிகளைப் பெற்றுள்ளது. குறிப்பெடுத்தல், டேட்டாபேஸ் தேடுதல் சேவைகள், ஆடியோ-விஷுவல் வசதி, கோரிக்கையின்படி உபகரணம் அளிப்பது, ஆவண சேவைகள் உள்ளிட்ட பலவற்றை இந்நூலகம் செய்கிறது. மேலும் இங்கே வசதிகள் தானியங்குமயமாக்கப்பட்டுள்ளன. இங்கு புத்தகங்கள், சஞ்சிகைகள் உள்ளிட்ட 65000 வகையான சேகரிப்புகள் உள்ளன.

3.09090909091
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top