பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / பள்ளிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணித்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணித்தல்

பள்ளிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணித்தல் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கிராமக் கல்விக்குழு மற்றும் சமூகத்தின் முக்கிய பங்கு கிராமத்தில்/வார்டில் உள்ள பள்ளிகளில் இதர கல்வி வசதிகளை மேற்பார்வை செய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகும். சமுதாய அடிப்படையிலான திட்டங்களை அமல்படுத்தும்போது கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை முக்கியமானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

  • அனைத்து குழந்தைகளும் தவறாமல் பள்ளிக்கு வருதல்.
  • பெண் குழந்தைகள் மற்றும் பின்தங்கிய நலிவுற்ற குழுக்களில் உள்ள குழந்தைகளின் சேர்க்கை மற்றும் தக்கவைத்தல்.
  • தரமான கல்வியை குழந்தைகள் பெறுதல்.
  • குழந்தைகள் தங்கள் உரிமைகளை பெறுதல்.
  • அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் நிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப் படுதல்.
  • கிராமக் கல்விக் குழு மற்றும் பெற்றோர்கள் உடன் கலந்தாலோசித்து பள்ளியின் வேலை நேரத்தை முடிவு செய்தல்.
  • பள்ளி உள்கட்டமைப்பு சரியாக பயன்படுத்தப்படல்.
  • எதற்காக மானியங்கள் வழங்கப்பட்டதோ அந்த தேவைகளுக்காக மானியங்கள் பயன்படுத்தப்படுதல்.
  • மாற்றுப் பள்ளி மையங்கள் ஒழுங்காக நடத்தப்படுகின்றதா என கண்காணிக்கப் படுதல்.
  • பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பொருள்கள் போதுமான அளவு இருத்தல் மற்றும் அப்பொருள்கள் வகுப்பறை கற்பித்தலின்போது பயன்படுத்தப்படுதல்.

ஒன்றியக் கல்வி அலுவலரின் பங்கு

உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் உதவியுடன் ஒன்றிய கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டியதாக எதிர் பார்க்கப்படுவது.

  • அவரது அதிகார எல்லைக்கு உட்பட்ட பள்ளிகள், நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளையும் வருடம் ஒருமுறை பார்வையிட வேண்டும்.
  • பள்ளி கட்டிடங்களின் நிலை, உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்கள் அமரும் முறை ஆகியவற்றை பார்வையிட வேண்டும்.
  • குறிப்பாக குடிநீர், கழிப்பறைகள், சமையலறை மற்றும் மதிய உணவு தயாரித்தல் போன்ற இடங்கள் சுத்தம் மற்றும் சுகாதாரமாக அமைந்துள்ளதா என்பதையும் கவனத்துடன் பராமரிக்கப்படுகிறதா எனவும் பார்வையிடல்.
  • பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களால் பராமரிக்கப் பட வேண்டிய பதிவேடுகளை பார்வையிடல்.
  • பின்னூட்டத்தின் அடிப்படையில் அடிப்படைத் தேவைகள் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
  • மக்கள்தொகை கணக்கெடுப்பு, கிராமங்களின் எண்ணிக்கை பஞ்சாயத்துகள் (ஊராட்சிகள்) குழுவாக உள்ள குடியிருப்புகள், ஆதி திராவிட, பழங்குடியின, பிற பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள், பள்ளியில் உள்ள, பள்ளி செல்லாக் குழந்தைகள், சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் மற்றும் பல தரவுகளை பெறுதல்.

பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளுக்கு அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தேவையான உதவிகளை அளிக்கின்றன.

மேற்கண்ட ஒன்றிய கல்வித் தகவல்கள் கண்காணித்தலின் ஒரு செயல்பாடாக சேகரிக்கப் பட்டவை. இதை அடிப்படையாக கொண்டே வருடாந்திர மாவட்ட ஆண்டு செயல் திட்டம் மற்றும் நிதி ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வியில் எழும் நிர்வாகம் மற்றும் ஆளுமை தொடர்பான சிக்கல்கள்

அனைவருக்கும் தொடக்கக் கல்வி அளிப்பதில் பரவலாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சில அடிப்படை ஆளுமை சிக்கல்கள் இடம் பெறுவதை காண இயலும். குழந்தைகளை கல்வி அமைப்பில் கொண்டு வரும் செயல்முறை வகுக்கப்பட்டு அதை உறுதி செய்ய வேண்டும். அச்செயல்முறை ஒவ்வொரு பள்ளியும் மாணவர் சேர்க்கை முறையினை பிரபலப்படுத்தவும், பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து சேர்க்கை பதிவு பட்டியலை ஆண்டு பதிவேடாக ஆவணப்படுத்தவும் வேண்டும். பகுதியளவு பணத்தை நிறுத்துதல் அல்லது அங்கீகாரத்தை கருத்தில் கொண்டு நிதி அளிக்கப்படுகிறது.

கல்வி அமைப்பை முழுவதுமாக எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு மாணவரும் ஒரு பள்ளியிலாவது சேர்வதும் சமத்துவமாக நடத்தப் பெறுவதும் உறுதிப்படுத்த வேண்டும். இதனை உறுதி செய்யாதபோது சம அளவில் கல்வி பெறும் வாய்ப்பற்று, அரசியலமைப்பின்படியான உறுதியினை நிலைநாட்டாமல் போக வாய்ப்பு உண்டு.

ஆசிரியர் நியமனமும் மேலாண்மையும்

ஆசிரியர்களை நிர்வகித்தலில் பரவலாக்கத் தன்மையை குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டமானது வலியுறுத்துகிறது. இச்சட்டமானது தகுதி சான்றளித்தல், பணி அமர்த்துதல், தக்கவைத்தல் மற்றும் பதவி உயர்வு அளிப்பது போன்ற திறன் மற்றும் சட்ட அடிப்படையில் ஆசிரியர் நியமனத்தை வலியுறுத்துகிறது. அனைவருக்கும் தொடக்கக் கல்வியினை வழங்குவதில் நிறுவன அளவில் பெரிய மாற்றம் வேண்டுமெனில் இந்த ஆளுகைப் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளுதல் அவசியமாகிறது. இத்தகைய அமைப்பை நிறுவ வேண்டுமானால், அதில் ஏற்படும் சிக்கல்களை கவனமுடன் கையாள அதிக காலநேரம் தேவைப்படும்.

தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளிலிருந்து ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு தேவையான நெறிமுறைகளை எடுத்து பின்பற்றிக் கொள்ளலாம். உள்ளூர் அமைப்புகள் தங்கள் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து பணியமர்த்தலாம். அவர்களின் தரத்தினை உறுதி செய்வதில் சமரசம் கூடாது.

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டமானது, மாநில அரசை ஓராசிரியரைக் கொண்டு செயல்படும் பள்ளிகள் இல்லாத நிலையினை உறுதி செய்ய வலியுறுத்துகிறது. மேலும் தொடக்க நிலையில் குறைந்தது 50% பெண் ஆசிரியர்கள் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என்பதும் பின்பற்றப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு சம்பளம் அளிப்பதில் பல்வேறுபட்ட நிலைகள் காணப்படுகிறது. தற்போதுள்ள அரசு சாரா தனியார் பள்ளிகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்படும் பிரச்சினைகளை பெரிதாக்குகின்றன. தற்போது காணப்படும் வேறுபட்ட ஆசிரியர் ஊதிய விகிதமானது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பள்ளி மேலாண்மை குழுவின் பணிகள்

பள்ளி மேலாண்மை குழு பள்ளியை நிர்வகித்தலின் மூலம் கல்வியினை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இம்மேலாண்மை குழுவானது பலதரப்பட்ட பங்குதாரர்களை உள்ளடக்கியும், அதன் மூலம் பரந்துபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முடிவினை எடுக்கவும் வழிவகை செய்கிறது. நிதியுதவி பெறாத பள்ளியை தவிர்த்து, மற்ற பள்ளிகள் அனைத்தும் அங்கீகாரம் பெற்ற 6 மாதத்திற்குள் பள்ளி மேலாண்மை குழுவை உருவாக்கவும், அதனை இரண்டாண்டிற்கு ஒருமுறை மறுசீரமைப்பு செய்யவும் வேண்டும். பள்ளி மேலாண்மை குழுவில் 75% பேர், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களாகவோ அல்லது பாதுகாவலராகவோ இருத்தல் வேண்டும்.

பள்ளி மேலாண்மை குழுவில் 25% பேர்கள் பின்வரும் நபர்களாக இருக்கலாம்.

  • மூன்றில் ஒரு பங்கினர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ளூர் அதிகாரிகளால் தெரிவு செய்யப் பட்டவர்களாக இருக்கலாம்.
  • மூன்றில் ஒரு பங்கினர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களாக இருக்கலாம். இவர்களை பள்ளி ஆசிரியர்களே தெரிவு செய்ய வேண்டும்.
  • மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் உள்ளூர் கல்வியாளராகவோ/ பள்ளியில் பயிலும் குழந்தைகளாகவோ இருக்கலாம். இவர்களை குழுவில் உள்ள பெற்றோர் தெரிவு செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு உரிமைகள்

  • வாழ்வாதார உரிமை, குடும்ப உணர்ச்சியை வெளிப்படுத்தும் உரிமை, உடல்நலம் மற்றும் வளர்ச்சி தகாத மற்றும் நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதலில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை, கல்வி பெறுவதில் சமவாய்ப்பு, பண்பாடு மற்றும் பாரம்பரியம், வீடு, கழிப்பறை, குடிநீர் வசதி, வெளிச்சமான வகுப்பறைகள் போன்ற குறைந்தபட்ச அடிப்படை உள்கட்டமைப்பு, புத்தகங்கள், கரும்பலகை, அறிவியல் ஆய்வகக் கருவிகள், குறிப்புகள்ஆசிரியர்கள் இலவச சீருடை, புத்தகங்கள், சத்துணவு போன்ற முறையார்ந்த உரிமைகள், தரமான கல்வி, கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு ஆகியனவாகும்.
  • குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (2009) குழந்தை பாதுகாப்பு உரிமைக்கு முதன்மையான பொறுப்பு வகுப்பதில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு முதல் நிலையில் உள்ளது.

பள்ளி மேலாண்மைக் குழுவால் தயாரிக்கப்படும் பள்ளி வளர்ச்சித் திட்டம்

பள்ளி மேலாண்மைக் குழு ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைய குறைந்தது மூன்று மாதத்திற்கு முன் பள்ளி வளர்ச்சித் திட்டத்தை தயார் செய்ய வேண்டும். பள்ளி வளர்ச்சித் திட்டத்தின் மூன்று கால திட்டமானது மூன்று உப ஆண்டு திட்டங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

பள்ளி வளர்ச்சித் திட்டத்தில் இருக்க வேண்டியவை :

  • ஒவ்வோர் ஆண்டிற்கான வகுப்பு வாரியான மாணவர் சேர்க்கை
  • தலைமையாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் ஆகியோரையும் சேர்த்து கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை.
  • மூன்று ஆண்டுகளுக்கான வருடாந்திர நிதி தேவை
  • ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சிகள்,
  • குழந்தைகளின் உரிமைகள்
  • இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், செய்முறை புத்தகங்கள் அளிப்பதற்கு தேவையான கூடுதல் நிதி தேவை குறித்து பள்ளி வளர்ச்சித் திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவேண்டும்.

பள்ளி மேலாண்மை குழுவின் பங்கும் தொடர்புடைய அரசுத் துறைகளும்

  • குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் இருப்பதை கட்டாயப்படுத்துகிறது. மேலும் இது குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பை யூகித்து ஏற்படுத்தப்பட்டது.
  • ஆதி திராவிட, பழங்குடியின, கல்வியில் பின்தங்கிய பிரிவைச் சார்ந்த குழந்தைகளுக்கான துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் பள்ளி மேலாண்மை குழுவின் முனைப்பான பங்களிப்பினை தொடர்ந்து இருக்கச் செய்வதற்கான முறையார்ந்த அதிகாரபூர்வமான உரிமையை உறுதி செய்வதை குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் உள்ளடக்கிய கல்வி வலியுறுத்துகிறது.
  • பள்ளி மேலாண்மைக்குழு, இயலாக் குழந்தைகளுக்கான சிறப்பு தேவைகள் அளிப்பதில் அக்குழந்தைகளுக்கு சம வாய்ப்புகள் அளிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய இயலாக் குழந்தைகளுக்கான அரசுத் துறைகளுடன் இணைந்து செயல்படுவது அவசியமாகிறது.
  • பள்ளி மேலாண்மைக் குழுவானது குழந்தைகள் விருப்பமற்ற ஆனால் செய்தேயாக வேண்டிய பொறுப்புகளில் இருந்தும் விடுபட்டு பள்ளியில் சேர்வதற்கான ஏழ்மை நிலையைக் குறைக்கும் நிகழ்வுகளை துரிதப்படுத்த அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளுடன் இணைந்து செயலாற்றுவது அவசியமாகிறது.
  • மேலும் இக்குழுவானது குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் இப்பணியில் முழுமையாக ஈடுபட்டு தங்கள் பணியை மேற்கொள்ளுகின்றனவா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
  • குழந்தைகளுக்கான பாதுகாப்பு உரிமைகள் என்பது உடல் ரீதியான துன்புறுத்தல், தவறான முறையில் நடந்து கொள்ளுதல், எரிச்சலூட்டும் வகையில் மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்தலில் இருந்து பாதுகாப்பு போன்றவற்றை உள்ளடக்கியது.
  • பள்ளி மேலாண்மைக் குழு குழந்தைகளை தகாத முறையில் / தவறான / நேர்மையற்ற முறையில் பயன்படுத்துவதில் இருந்து பாதுகாக்க மாநில பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித்துறை மற்றும் தேசிய மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு குழுமம் போன்றவற்றுடன் ஒத்துழைத்து செயல்படுவது அவசியமாகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top