பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முன்பருவ கல்வியை கற்பிக்கும் வழிமுறைகள்

முன்பருவ கல்வியை கற்பிக்கும் வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குழந்தை நலத் திட்டங்கள் பிறந்தது முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகள் காப்பகமாகவும், மூன்று வயது முதல் ஐந்து வரையுள்ள குழந்தைகளுக்கு பால்வாடியாகவும், 6 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு முறை சாரா கல்வி வகுப்புகளாகவும் செயல்படுகிறது. கலை நயத்தோடும், ஆக்கபூர்வமாகவும், விளையாட்டு முறையிலும், மேலும் கல்வித் தொடர்பான இடங்களுக்கு செல்லுதல் மூலம் கல்வி கற்றல் செயல்படுகிறது.

  • குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல், குழந்தை பிறப்பதற்கு முன்னும், பின்னும் தேவையான கவனிப்பு முறைகளைத் தாய்க்கு அளித்தல்.
  • சத்துணவு - பால், மதிய உணவு, ஊட்டக்குறைவான குழந்தைகளுக்குச் சிறப்பான உணவுகள் வழங்குதல்,
  • மருத்துவரின் அறிவுரைப்படி பாலூட்டும் தாய்க்கு பால் வழங்குதல். கல்வி பயணம் செல்லுதல்,
  • விழாக்கள் கொண்டாடுதல்,
  • விளையாட்டு போன்ற செயல்களின் மூலம் குழந்தைகளுக்கு போதுமான பொழுதுபோக்கு வசதிகளை அளித்தல்.
  • முறையான கல்வி முறைக்குக் குழந்தைகளை ஒருங்கிணைத்துத் தயார் செய்து மனநிறைவோடு எதிர்கொள்ளவும், அல்லது தொழிற்கல்வியில் பயிற்சியளிக்கவும் உதவுதல்.
  • சமுதாய நலத் திட்டங்களாக ஒரே எண்ணமுடைய பெற்றோர்களை இணைத்து குழந்தை நலன்,  சுகாதாரம்,  சத்துணவு போன்றவற்றில் பயிற்சி பெறச் செய்தல்.
  • விலை குறைவான கல்விசாதனங்களை தயாரிக்க ஆக்கபூர்வமானகூடங்களை அமைத்துக் கொடுத்தல்

போன்ற செயல்கள் மூலம் குழந்தைகளின் முன்பருவ கல்வியை குழந்கைளுக்கு கற்பிக்கலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

Filed under:
3.14285714286
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top