பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / கல்வியில் நான் விரும்பும் மாற்றம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வியில் நான் விரும்பும் மாற்றம்

கல்வியில் நான் விரும்பும் மாற்றம் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கட்டுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னுரை

கல்வி என்பது அழியாத செல்வம். கல்வி கற்பதன் முலம் நாம் புது புது விஞ்யான செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. பல பல பட்டம் பெறுவது மட்டும் கல்வி பயன் பட போவதில்லை. நம் அறிவை பெருக்குவததற்கும், அவர்களின் வாழ்க்கை நிலையையும் உயர்த்துவதோடு அவர்களின் பொருளாதார நிலைமையும் உயர்த்துகின்றது மேலும் கல்வியில் நான் விரும்பும் மற்றங்களில் சில.

பள்ளி கல்வி

நோயாளிகளை வலுகட்டாயமாய் வெளியேற்றி விட்டு ஆரோக்கியமானவர்களை மட்டுமேவைத்து கொள்ளும் மருத்துவமனைகளை போன்றது பள்ளிக்கூடங்கள். படிக்க இயலாதவனை படிக்க வைக்கத்தான் பள்ளிக்கூடங்கள் என நினைத்தோம். ஆனால் நன்கு படிக்கும் மாணவனை மறைமுகமாய் கழுவேற்றி நகலடுகும் எந்திரமாய் அவனை மாற்றி வென்றெடுத்தோம் முதலிடத்தை என செய்தித்தாளில் மார்தட்டி பணம் குவிக்கும் மதுகடைகளாய் பள்ளிக்கூடங்கள் மாறிபோனது. இந்த நிலைமையை மாற்றியமைக்கவேண்டும். அனைவருக்கும் சமமான கல்வி, அனைவருக்கும் கல்வி என கருப்பு தங்கம் காமராஜர், நேரு, காந்தி, அண்ணா போன்ற தலைவர்கள் கல்வியை கட்டாயம் ஆக்குவதற்கு பல போரட்டங்களை சந்தித்தனர். ஆனால் கல்வியில் கிழ் தங்கியவர்களை ஊக்குவிக்க எந்த கல்வி நிறுவனங்களும் தயாராக இல்லை.

விண்ணப்பங்களின் குவியல்கள்

பள்ளிகளுக்கு முன்னால் இரவும் பகலுமாய் காத்திருக்கின்றனர்கள் நம் பெற்றோர்கள். ஏன் எனில் அரசு பள்ளிகளில் தரம் இல்லாத கல்வி, தரம் இல்லாத கட்டிடங்கள், போதிய ஆசிரியர்கள் இல்லை என்று குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு தயங்குகின்றனர் நம் பெற்றோர்கள்.

பட்டயபடிப்பு

கல்லூரிப்படிப்பு என்பது முந்தைய காலங்களில் ஏழைகளால் நினைக்க முடியாத ஒன்றாக இருந்தது. இப்போது கல்லூரி படிப்பு சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இளங்கலை, முதுகலை போன்ற படிப்புகள் படிப்பதற்கு அரசு ஊக்குவிக்கிறது. இதுபோல் பெண் கல்வியையும் ஊக்குவிக்கிறது. அரசுகல்லூரிகளில் படிக்கும் கல்வி தரமான கல்வியே இதை நன்கு அறிந்துகொள்ளவேண்டும் நம் பெற்றோர்கள். கல்வி தரத்தை நன்கு அறிந்துகொள்ளாமல் தனியார் கல்லூரிகளில் சேர்த்துவிடுகின்றனர். இந்த அறியாமையை மாற்றியமைக்க வேண்டும்.

இலட்சிய கல்வி

மாணவர்கள் அவர்கள் படிக்க நினைத்த இலட்சியகனவை நிறைவேற்ற அரசும், பெற்றோரும் ஊக்குவிக்க வேண்டும். 2020-ல் இந்திய அரசு வல்லரசு ஆக இது உதவியாக மட்டும் அல்லாமல் இது இந்தியாவில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஆக இருக்கும்.

அரசு கல்வி உதவி

நம் அரசு நம் நாட்டு கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பல நல்ல திட்டங்களையும், உதவிகளையும் செய்துவந்தாலும், அவை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு சேரவும், உணவும், உடையும், தங்கும் வசதியும், தரமனதாகவும் மற்ற அரசியல் வல்லுநர்களினால் சிதையாமல் முழுமையாக வந்து சேருமாறு கவனிக்க வேண்டும்.

கல்வி மட்டும் அல்லாமல், விளையாட்டு துறையிலும் போதிய விளையாட்டு உபகரணங்களும் பள்ளிகளில் இல்லை. கிராமப்புற பள்ளிகளில் இருந்து மாணவர்களை முன்னேற்ற உதவும் வகையில் இருக்க வேண்டும்.

மனிதனின் மதிப்பு கல்வியை வைத்தே

கல்வி ஒன்றே மனிதன் சொத்து. கல்வி கற்ற மனிதன் சான்றோன். கல்வி காட்டும் வழிகள் நன்றே. கல்வி கற்றால் வாழ்க்கை சிறக்கும். இதுவே வாழ்க்கையின் நியதி. கல்வி கற்ற பின்னே வேலை பெற்றான். சுற்றம் சூழ வாழக் கற்றான். நல்ல பழக்கம் கல்வி கொடுக்கும். இவை அனைத்தும் கல்வி கற்ற பின்னே நடக்கிறது. படித்தால் சுயமாய் சிந்திக்க‌ முடியும். நன்மை எது தீமை எது என தெரியப் படுத்தும்.

கல்வி அன்றும் இன்றும்

ஒற்றை துண்டுடன் ஒழுக்கமே முதலாய் கைகட்டி கண்ணியமாய் நடந்த குருகுலம் அன்று கல்வியில் இருந்தது. அன்னியர் தலையீட்டால் அனைத்தும் ஆங்கிலமயமாய் தொழில் நுட்ப அறிமுகத்தால் இன்று கற்பவை எல்லாம் கணினி மயமாய் ஆனது. நாகரீக குறுக்கீட்டால் கேட்டரிங், க்ளோனிங் டிசைனிங் என பட்டியல் நீண்டாலும் இன்றைய போட்டி உலகில் கல்வி மூளையை அடகுவைத்து முதுகுக்கு பின்னால் விலை பேசும் தரகு வியாபாரமாய் ஆனது.

காலம் மாறும் கவிநயம் மாறும் மாறுதல் என்றும் மாறாது இருக்க மாற்றங்கள் உண்டு இன்றும் உலகில். நம் கல்வி முறையில் மாற்றம் வேண்டும். நமது கல்வி நாளைய தலைமுறைக்கு வரலாற்று பாடங்கள் மட்டும் இல்லாமல் சரித்தர பாடமாக இருக்கவேண்டும். புதுப்புது படைப்புகள் தினந்தினம் இங்கு இருக்கிறது புத்தகங்களை நிரப்புவது வாடிக்கை என்றானது இவ்உலகில். மாற்றியமைக்க வேண்டுவது புத்தகத்தை மட்டும் அல்ல மாறாத கல்வி முறையும் தான்.

அருமை தமிழகம்

கல்வி தரத்தில் நம் நாட்டில் தங்க தமிழகமாக திகழ வேண்டும், அகழ்வு ஆராய்ச்சி படிப்புகளிலும், ஆராய்ச்சி படிப்புகளிலும் மாணவர்கள் முன்னேற ஊக்குவிப்பும், உதவிகளும் செய்து தரவேண்டும். நம் நாட்டில் பெற்ற கல்வியை இங்கேயே பணியாற்றும் சூழ்நிலை வர வேண்டும். வெளிநாட்டவர் கல்வி கற்க நம் நாட்டிற்கு வரும் வகையில் நம் கல்வி தரம் உயர வேண்டும். மற்ற நாடுகள் நம் நாட்டை திரும்பிபார்க்கும் வகையில் நம் நாட்டு மாணவர்களின் கல்வி திறமை வெளிப்பட அரசு நடவடிக்கை எடுத்து கல்வி நிலையை கண்காணிக்க வேண்டும். கல்வி கண் திறந்த நாடே மற்ற நாடுகளைக் காட்டிலும் தலை சிறந்த நாடாகவும், செல்வ செழிப்பான நாடாகவும் இருக்க வேண்டும்.

முடிவுரை

நம் கல்வியில் தொழில்நுட்ப ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் சில மாற்றங்கள் மட்டும் வேண்டும். மதிப்பெண் மட்டும் வாழ்க்கை இல்லை. மாணவர்களின் வசந்தகாலத்தை இறந்தகாலமாய் ஆக்கிவிடாதீர்கள். விரும்பிய பாடம் படிக்கட்டும் விருப்பபடி படிக்கட்டும் என பெற்றோர்கள் முடிவெடுக்கும் உரிமையை தர வேண்டும். படித்தவர் எல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் இல்லை. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் பல பேர் நன்கு படித்தவர் இல்லை. படிப்பு என்பது ஒரு திறவுகோல் மட்டுமே. உங்கள் கனவுகளை உங்கள் பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள்.

ஆதாரம் : S.தனபாக்கியம், திருப்பூர்

3.09677419355
ஸ்ரீ.இரத்னா தேவி நாயர் Jul 02, 2019 07:43 AM

சிறப்பான கட்டுரை

நரேந்திர மோடி Nov 05, 2018 03:12 PM

மிகவும் நன்று

MUTHUKUMAR S Jun 29, 2018 06:40 PM

அருமையான தாக்கத்தை வெளியிட்டுள்ளீயிர்கள்
தஞ்சையில் பயோகேர் கல்வி நிறுவனம் ஏழை எளிய மக்களுக்கு கல்வியுடன் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறோம் உங்களின் கருத்தே என் விருப்பம் . சா.முத்துக்குமார் , தஞ்சை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top