பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)

10 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான (போஸ்ட்-மெட்ரிக்) மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம்

மைய அரசு திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பினை தொடரும் ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவ / மாணவியர்க்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் முறையே ரூ.1,00,000/- மற்றும் ரூ.1,08,000/-க்கு மிகாமல் இருப்பின், குறிப்பேடுகள் வாங்குதல் போன்ற கட்டாயச் செலவுகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயக் கட்டணங்கள் ஆகியவற்றை ஈடுசெய்ய அதிக அளவாக மாதம் ஒன்றிற்கு ரூ.330/- வரை அவர்கள் பயிலும் படிப்புக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது.

இவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயில்பவராக இருப்பின் இத்தொகை அவர்கள் பயிலும் படிப்புக்கு ஏற்றவாறு அதிக அளவாக மாதம் ஒன்றிற்கு ரூ.740/- வரை பராமரிப்புப்படியாக வழங்கப்படுகிறது.

இவை தவிர மாணவ / மாணவியர்களால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டாயக் கட்டணங்கள் அக்கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன

2.95
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top