பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்?

படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்?

  • படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
  • படிக்கும் இடம் சிறியதாக இருந்தாலும், எந்த வகையிலும் கவனத்தை திசை திருப்பக் கூடியதாக இருக்கக் கூடாது.
  • பகலிலும், இரவிலும் போதுமான வெளிச்சம் உள்ள இடமாக இருக்க வேண்டும்.
  • நல்ல காற்று வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும்.
  • படிக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • உங்களது அறையில் தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப் பெட்டி, தொலைபேசி போன்றவைகள் இல்லாமல் இருந்தால், கவனம் சிதறாது.
  • நீங்கள் படிப்பதற்குத் தேவையான அனைத்து புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் பிற பொருட்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பொருட்களைத் தேடுவதற்காக அதிக நேரத்தைச் செலவழிக்காதீர்கள்.
  • படிக்கும் இடத்தில் படுக்கை இருப்பதைத் தவிர்க்கவும். படுக்கை இருந்தால் படுத்துக் கொண்டே படிக்கலாம் என்று எண்ணம் தோன்றும்.
  • குழந்தைகள், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நீங்கள் படிக்கும் இடத்திற்கு வந்து போகும் இடமாக இருக்கக் கூடாது.
  • இரவில் குடிப்பதற்கு படிக்கும் அறையிலேயே தண்ணீர்  வைத்துக் கொள்ளுங்கள்.
  • காலையில் எழுந்தவுடன் உங்கள் அறையிலேயே சிறிது நேரம் யோகா அல்லது தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் நினைவு திறன் அதிகரிக்கும்.
  •  

    ஆதாரம் : தினமணி - கல்வி

3.01538461538
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top