பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / கலைத்திட்ட இணைச் செயல்பாடுகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கலைத்திட்ட இணைச் செயல்பாடுகள்

கலைத்திட்ட இணைச் செயல்பாடுகள் (Co-curricular Activities) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நேரடி அனுபவங்கள் நிலைத்த அறிவைப் பெற உதவும். வகுப்பறையில் அறிவியல் பாடங்களை புரிந்து கொள்வதற்குரிய நேரடி அனுபவங்களை முழுமையாகக் கற்போருக்கு அளிக்க முடிவதில்லை. இதனால் அறிவியல் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து, கற்றலை சுமையாக்கிக் கொள்கின்றனர். மேலும் அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கு வகுப்பறைகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, வகுப்பறை சூழல்கள் தவிர கற்போரை வளப்படுத்தும் பிற சூழல்களை அமைப்பதற்கு உதவும் ஆதாரக் கருத்துகளை ஓர் ஆசிரியர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமென்பதால், இப்பகுதியில் கலைத்திட்ட கூடுதல் இணைச் செயல்பாடுகளில் கற்போரை ஈடுபடுத்தும் பல அமைப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கங்கள்

 • மாணவன் இப்பாடத்தைக் கற்பதன் மூலம் கலைத்திட்ட இணைச் செயல்பாடுகளின் அவசியத்தை விளக்குகிறான்.
 • அறிவியல் மன்றங்களின் முக்கியத்துவத்தை விவரிக்கிறான். அறிவியல் மன்றங்களை வகைப்படுத்துகிறான்.
 • அறிவியல் மன்ற அமைப்பு முறையையும் செயல்படுவதற்கான வழி முறைகளையும் விவரிக்கிறான்.
 • அறிவியல் மன்றம் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பட்டியலிடுகிறான்.
 • களப்பயணத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறான். களப்பயணம் செல்லத் திட்டமிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான கருத்துகளைப் பட்டியலிடுகிறான்.
 • களப்பயண முறையின் நிறை, குறைகளை அட்டவணைப்படுத்துகிறான்.
 • களப்பயண முறையைக் கையாண்டு கற்பிக்கக் கூடிய அறிவியல் பாடப்பகுதிகளை அடையாளம் கண்டு பட்டியலிடுகிறான்.
 • அறிவியல் வினாடி- வினாவின் நோக்கங்களைக் கூறுகிறான். வினாடி- வினா நடத்துவதற்கான விதிமுறைகளை விவரிக்கிறான்.
 • அறிவியல் கண்காட்சி என்றால் என்ன? என்பதைக் கூறுகிறான். அறிவியல் கண்காட்சி நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறான்.
 • அறிவியல் கண்காட்சி அமைக்கும் வழிமுறையை விவரிக்கிறான்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top