பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / கல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ்

ஆரம்பக்கல்விக்கு மாற்று ஆசிரியர்களின் பயனுள்ள பங்களிப்பு, பல நிலை சூழல்களில் கற்றலை மேம்படுத்துதல் போன்ற தலைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரம்பக்கல்விக்கு மாற்று ஆசிரியர்களின் பயனுள்ள பங்களிப்பு

பெறப்பட்ட பதில்களின் சாராம்சம்

மாற்று ஆசிரியர்கள் தொடர்பான சமுதாயக் கண்ணோட்டம், வேலைக்கமர்த்தும் கொள்கைகள், வாழக்கைத்தரம் மற்றும் அவர்களின் செயல்திறம் உட்பட்ட பல அம்சங்கள் பற்றிய ஒரு ஆய்விற்கு பதிலளித்தவர்கள், இவற்றை பற்றி கலந்துரையாடி சூழ்நிலைகளை மாற்றியமைக்கத் தேவையான பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

மாணவர்கள் வெற்றி பெறுவதில் மாற்று ஆசிரியர்களின் பங்கு

பள்ளிச சேர்க்கையை ஊக்குவித்தல், வருகையை அதிகரித்தல் மற்றும் மாணவர்களை இடையில் விலகாமல் இருத்தி வைத்தல் போன்றவற்றின் மூலம், மாணவர்களின் கல்விநிலையை மேம்படுத்துவதில் மாற்று ஆசிரியர்கள் நல்ல மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறார்கள் என பெரும்பாலானவர்கள் கருதினார்கள்.  குறிப்பாக, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் போதும், மாணவர் ஆசிரியர் விகிதம் அதிகரிக்கும் போது ஏற்படும் ஆசிரியர் பற்றாக்குறையின் போதும் அவர்கள் பங்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதிக முயற்சி மற்றும் கூடுதல் ஆதரவு தேவைப்படும் செயல்முறை கல்வி முறைகளை பயன்படுத்தி, அடிப்படை கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளை மற்றவர்களுடன் சமமாக கற்க வைப்பதிலும், மாணவியருடன் கலந்து கற்பிப்பதிலும் (குறிப்பாக அவர்கள் பெண்களாக இருக்கும் போது) மாற்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவ இயலும். உதாரணமாக, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில், பள்ளி சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்களை இடையில் விலகாமல் இருத்தி வைத்தல் மற்றும் மாணவியரின் கல்விநிலை மேம்பாட்டுக்கு மாற்று ஆசிரியர்களை பயன்படுத்தியுள்ளார்கள்.

மாற்று ஆசிரியர்கள் பயன்பாடு மூலம், கலவையான முடிவுகள் ஏற்பட்டிருப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  மாற்று ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்பட்ட மாணவர்கள் போதுமான அளவு சாதித்திருப்பது முதல், தொடர் முயற்சிகள் செய்தும் குறைவான மேம்பாடு ஆகிய பல நிலைகள் உள்ளதை ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆசிரியர்கள் மற்றும் மாற்று ஆசிரியர்களுக்கிடையே சாதனை அளவுகளில் பெரிய மாற்றங்கள் இல்லை என பிற ஆய்வுகள் சுட்டிக்காட்டும் போது, 1 முதல் 3-ம் வகுப்பு வரையான மாணவ்ர் முன்னேற்றத்தில் மிகச்சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மேல் வகுப்புகளுக்கு போகப்போக அது குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்துள்ளதாகவும் வேறொரு ஆய்வு கூறுகிறது.  ஆய்வுகள், மாவட்ட தொடக்கக்கல்வி திட்ட (District Primary Education Programme – DPEP) சூழ்நிலைகளில் செய்யப்பட்டிருப்பதும், சர்வ சிக்க்ஷ அபியான் (Sarva Shiksha Abhiyan – SSA) சூழலில் செய்யப்படவில்லை என்பதையும் தாங்கள் அறிந்திருப்பதாக பதிலளித்தவர்கள் கூறியுள்ளனர். கல்வித்தரத்தை மேம்படுத்த, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பணி செய்யும் நிறுவனங்களின் முயற்சிகளையும், அகில இந்திய அளவில் மாணவர்களின் திறன் நிலைகளை அதிகரிக்க பயிற்றுனர்கள் பயன்படுத்தப்பட்டதையும் தங்கள் பகிர்தலில் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், மாற்று ஆசிரியர்களின் குறைவான பயிற்சிகள் மற்றும் குறைவான  ஊதியம் போன்ற காரணங்களால், நீண்ட கால அடிப்படையில் மாணவர் மேம்பாடு குறைவான அளவிலேயே இருக்கும் வாய்ப்புள்ளதாக அவர்கள் வாதிடுகிறார்கள்.   மாற்று ஆசிரியர்கள் நியமனம் ஒப்பந்த ஊதிய அடிப்படையில் இருப்பதால், அவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் துறைரீதியான வளர்ச்சிக்கு வாய்ப்புகள் இருப்பதில்லை.  சமூகத்தில் அவர்கள் பாராட்டப்பட்டாலும், அவர்கள் முழு அளவிலான ஆசிரியர்களாக ஏற்கப்படுவதில்லை மற்றும் மரியாதை கிடைப்பதில்லை. மேற்கண்ட அம்சங்கள் அடிப்படையில், முறையாக பயிற்சி பெற்ற முழு ஆசிரியர்களுக்கு அவர்கள் ஒரு மாற்றாக மட்டுமே இருக்க முடியும் என எதிர்ப்பாளர்கள் கருதுகிறார்கள்.

மாற்று ஆசிரியர்களைப் பற்றிய சமுதாயக் கண்ணோட்டம்

மாற்று ஆசிரியர்கள் சமுதாயத்தில் ஏன் பாராட்டப்படுகிறார்கள் என விவாதிக்கும் போது, உறுப்பினர்கள் அவர்களின் நேர்மை, நேரம் தவறாமை, உற்சாக மனநிலை, ஈடுபாடு, அந்தந்த சமுதாயத்திலேயே வசிப்பவர் போன்ற முக்கிய காரணங்களை முன்னிலைப்படுத்தினார்கள். மேலும், அவர்கள் வேலை சூழ்நிலை காரணமாக அவர்கள் சாதித்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் சமுதாயத்தில் உணர்ந்து இருக்கிறார்கள்.

மாற்று ஆசிரியர்கள் நியமனக் கொள்கைகள்

முறை சார்ந்த மற்றும் முறைசாரா பள்ளிகள் ஆகிய இரண்டுமே மாற்று ஆசிரியர்களை நியமிப்பதாக பதிலளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முறைசார்ந்த வழிகளில் நியமிக்கப்படும் மாற்று ஆசிரியர்கள், முழு நேர ஆசிரியர்களை விட மிகக்குறைந்த ஊதியம் பெறுகிறார்கள். மற்றும், அவர்களின் வயது, கல்வித்தகுதி, இருப்பிடம், ஊதியம், வேலைக்காலம், செயல்பாடு போன்றவை தொடர்பான நிபந்தனைகளும் நியமனத்தில் உண்டு. ஆனாலும், பெரும்பாலான மாற்று ஆசிரியர்கள், பஞ்சாயத்து தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். மாற்று ஆசிரியர்கள் நியமனத்தில் கடைபிடிக்கப்படும் பல்வேறு வகைகளையும், உதாரணமாக பகுதி நேரம் மற்றும் நேரம் சார்ந்து ஊதியம் பெறும் வகைகளை உறுப்பினர்கள் முன்னிலைப்படுத்தினார்கள்.

ஒரு மாற்று ஆசிரியரின் வாழ்க்கை

பெரும்பாலான மாற்று ஆசிரியர்கள், உள்ளூரில் வேறு வேலைகள் கிடைக்காததாலேயே இந்தப் பணியில் ஈடுபடுவதாக விவாதத்தில் குறிப்பிடப்பட்டது. அவர்களுக்கென தொழிலாளர் சங்கங்களோ, அவர்களின் நலனுக்கு தேவையானவற்றை எடுத்துக்கூறும் அமைப்புக்களோ இல்லை என்பதையும் பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டார்கள்.

மாற்று ஆசிரியர்களின் அனுபவங்களைப் பற்றிய ஆய்வுகள், ஊதியம் போன்றவற்றில் பலர் வேறுபடுத்தப்படுவதாகவும், வேலை நிலைத்தன்மை, தர மேம்பாட்டுக்கான வழிகளும், முறைப்படி வேலை நிரந்தரமாக்கத்திற்கான சரியான விதிகளும் (கடமைகளை பற்றி மட்டுமே விதிகள் உள்ளன) இல்லாததும் கவனத்துக்குரியது என்றும் கூறுகின்றன.

இதனால், அரசுப் பள்ளிகளில் போதிய அனுபவம் பெற்ற பிறகு பல மாற்று ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளுக்கு சென்று விடுகிறார்கள்.

ராஜஸ்தான  மாநிலத்தில், மாற்று ஆசிரியர்களின் திறன்களை வளர்க்கும் விதத்தில் செயல்படுத்தப்படும், ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தீவிர பயிற்சித் திட்டத்தை உறுப்பினர்கள் எடுத்துக் காட்டினார்கள்.

எனினும், மாற்று ஆசிரியர்களின் திறன்களை முறைப்படி மற்றும் தேவை அடிப்படையில் வளர்க்க தேவையான முதலீடு, இது போன்ற சில திட்டங்களில் மட்டுமே செய்யப்படுவதாக அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

இறுதியாக, மாற்று ஆசிரியர்களின் உறுதியற்ற வேலைக்காலம் போன்றவற்றால், நீண்ட கால அடிப்படையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள உருவாக்கும் வகையிலான செயல்பாடுகளை திட்டமிடமுடியாமல் போய்விட்டதாகவும்  பங்கேற்பாளர்கள் கூறினார்கள்.

பல வகுப்பு மற்றும் பல நிலை சூழல்களில் கற்றலை மேம்படுத்துதல்

பெறப்பட்ட பதில்களின் சாராம்சம்

தொடக்க கல்வி முறையில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் பல வகுப்புகள்/பல நிலை கற்றல் சூழல் நிலை நிலவுவதால், அதை மேம்படுத்தும் யுக்திகள் மற்றும், வெற்றிகரமான உதாரணங்கள் ஆகியவை பற்றிய கருத்துக்களை கூறுமாறு ஆய்வில் கேட்கப்பட்டிருந்தது.  ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள், பல வகுப்புகளைக் கொண்ட ஆரம்பப்பள்ளிகளை ஒரே நேரத்தில் நடத்துவது "பல வகுப்பு கற்பிக்கும் சூழல் “(multi grade teaching - MGT)" எனப்படுகிறது. ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்கள் மத்தியில், கற்கும் திறனில் பல நிலைகள் நிலவுவது "பல நிலை கற்பித்தல் சூழல் (multi-level)" எனப்படுகிறது.  குழந்தைகளுக்கு கற்பிக்கும் அணுகுமுறை இந்த இரண்டு வகை சூழல்களிலும் சாத்தியமே என்ற கருத்து வெளிப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் கிடைத்த வெற்றிகரமான அனுபவங்களின் சிறப்பம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டதில், இரண்டு வகையான அணுகுமுறைகள் பற்றியும் தெரிய வந்தன: முதலாவது, பெரும்பாலும் அரசால் நடத்தப்படும் அமைப்புகளால் செயல்படுத்தப்படும் முறை.  இரண்டாவது, பெரும்பாலும் தன்னார்வ நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் முறைகள்.  பிந்தையதில், பெரிய அளவில் புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன.  இந்த புதிய வகை சிந்தனைகளுடனான அணுகுமுறைகளின் சில சிறப்பம்சங்கள் (சில இரண்டு வகைகளிலும்) காணப்படுகின்றன:

  • வகுப்பறை மற்றும் மதிப்பெண் சார்ந்த முறைகளுக்குப் பதிலாக, குழு அடிப்படையிலான, அனுபவக்கல்வி முறைகள்
  • தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்களுக்கென வடிவமைக்கப்பட்ட, மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய  பாடத்திட்டங்கள்.
  • உள்ளூர் சூழ்நிலைகள் மற்றும் தேவைகள் அடிப்படையிலான பாடத்திட்டங்கள்
  • பல நிலை சூழல் வகுப்புக்களில் கற்பிக்கும் மாற்று முறைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள்
  • பள்ளியின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க, சமுதாயம், பெற்றோர், மற்றும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களைத் தயார்படுத்துதல்
  • வயது/வகுப்பு வித்தியாசமின்றி, குழந்தைகளை மையப்படுத்திய, சுயமாக இயன்ற அளவு கற்கும் முறைகள்
  • வகுப்பறைகள் வடிவமைப்பு மற்றும் கற்கும் சூழ்நிலைகளில் சிறப்பு கவனம் செலுத்துதல்
  • பங்கேற்பு அணுகுமுறைகள், குழந்தைகளின் ஆக்கல் திறன் ஆகியவற்றை ஊக்குவித்தல்

இவ்வகை முறைகளை கடைப்பிடிப்பதால், சிறந்த கல்வி பெறுதல், மன அழுத்தம் இல்லாத கற்றல், பெற்றோர்-மாணவர்கள் மனநிறைவு, ஆசிரியர்களின் அதிக ஈடுபாடு மற்றும் செலவு கட்டுப்பாடு ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.

தன்னார்வ அமைப்புகள் செயல்படுத்திய சிறப்பான மாதிரிகள் (இவற்றில் ஒன்று யூனிசெஃப் உதவியுடன் செயல்படுத்தப்பட்டது)

பல வகுப்பு சூழல் நிலவும், குறிப்பாக கிராமப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான திட்டங்கள் பற்றிய தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

• குழந்தைகளை மையப்படுத்திய கற்பித்தல் முறை ரிஷிவேலி மாதிரியில் கடைப்பிடிக்கப்படுகிறது. நீண்டகால போக்கில், இது சுயசார்புடன் இயங்கக்கூடியது மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் ஓராசிரியர் பள்ளிகளில் பரிசோதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முழுமையாக்கப்பட்டது. இந்த முறையில் காணப்படும் சிக்கனத்தன்மை, சாதனைகளை நோக்கிய கற்பித்தல் முறை, சமுதாயத்தில் அதிக ஆதரவு  போன்ற காரணிகளை உணர்ந்து, பல அரசுகளும் தங்கள் மாநிலங்களில் இந்த முறையை கடைபிடிக்க ஆர்வம் காட்டுகின்றன.

• உத்தரபிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில், கற்பித்தல் முறைகளின் தரத்தை உயர்த்த வழிகாட்டும், யூனிசெஃப் அமைப்பின் மாதிரி இன்னோரு உதாரணம்.  இதில், பல வகுப்பு மற்றும் பல நிலைகள் ஆகிய இரண்டு சூழ்நிலைகளும்,  உள்ளூர் தேவைக்கேற்ற கற்பித்தல் உபகரணங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன.  இது குழந்தைகளை மையப்படுத்திய கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, மாணவர்களை இடையில் நிற்காமல் இருத்துதல் மற்றும் அவர்களின் கல்விநிலை மேம்பாட்டுக்கு உதவுகிறது.

• பல நிலைகள் சூழலில், வழக்கமான பள்ளிகளில் உள்ள வகுப்பு / வயது வாரியாக மாணவர்களை வகைப்படுத்தாமல், அவர்களின் கற்கும் திறனுக்கேற்ப வகைப்படுத்தும் முறை, ராஜஸ்தான் மாநில டிகந்தர் நகரில் ஒரு தன்னார்வ அமைப்பால் நிறுவப்பட்டுள்ளது.  ஒரு மாற்று கல்விமுறையாக காணப்படும் இதில், கற்கும் வேகத்தில் தேவைக்கேற்ற நெகிழ்வுத்தன்மை இருப்பதும், வயது / வகுப்பு வாரி பாடத்திட்டங்களில் உள்ளது போலல்லாமல் வித்தியாசப்படுத்தப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகின்றன.

அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் நிலவும் போக்கு

அரசு நடத்தும் நிறுவனங்களில் பெரும்பாலும், அதிகளவு காணப்படும் பல நிலை கற்பிக்கும் சூழலை மனதில் கொண்டு, மதிப்பெண் அடிப்படையிலான கற்பித்தல்-கற்றல் முறை பாடத்திட்டங்களை மறுசீரமைப்பு செய்வதில் அதிக அக்கறை காட்டும் போக்கு உள்ளது. அரசு நிறுவனங்களில், குழந்தைகளை மையப்படுத்திய, பல நிலை சூழல்களுக்கு ஏற்ற பயிற்சிகள் மற்றும் பாடத்திட்ட ஆதரவு ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மற்றும் ஒரிசாவிலிருந்து பெற்ற அனுபவங்கள், இந்த முறைகளைப் பற்றி எடுத்துக் கூறுகின்றன: குஜராத்தில், பல நிலை சூழல்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதை குறிக்கோளாக கொண்டு, ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளின் தரமும் அளவும் மதிப்பிடப்படுகின்றன. பல வகுப்பு/நிலை சூழல்கள் அளிக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஆசிரியர்களின் திறன்களை வளர்க்கும் விதமாக தொடர்ச்சியான வழிகாட்டுதல் அளிப்பது, அவசியமாகும். ஒரிசாவில், இரண்டு கட்ட வழிமுறை முக்கியமென கருதப்படுகிறது: (I) பள்ளிகள் மற்றும் கற்கும் சூழ்நிலைகளை மேம்படுத்துவதை முக்கியத் தேவையாக கொள்வது: (ii) ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை அதிகரிப்பதற்கான முறையான, பணி சார்ந்த பயிற்சிகள்.

சர்வதேச அனுபவங்கள்

இதே போன்ற பல வகையான வேறுபட்ட அனுபவங்கள் சர்வதேச அளவிலும் காணப்படுகின்றன.  ‘இனி பள்ளிகளே வேண்டாம்’ என்ற மிக முற்போக்கான முறையில், பள்ளிகள், பாடப்புத்தகங்கள், ஆசிரியர்கள், மதிப்பெண்கள் ஆகியவற்றுக்கு மாற்றாக, கற்கும் மையங்கள், சொந்தமாக தயாரித்த கல்வி பொருட்கள், மாணவர்களில் ஒருவரே ஆசிரியர், சமுதாயத்தின் பெரும் ஆதரவு, மற்றும் ஆசிரியர்கள் இத்தகைய பங்கேற்பு சூழலை வலுப்படுத்துபவராக இருத்தல் ஆகியவை நடைமுறையில் உள்ளன. இந்த முறை, கிராமப்புற பள்ளிகளில் நன்கு செயல்படுகிறது.  மற்றோரு முறையில், பல நிலை சூழலை கையாள, ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் மட்டுமல்லாமல், பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல், தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் செயல்முறைகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  ஜாம்பியா, பெரு, கொலம்பியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில், இத்தகைய முறையே அரசு பள்ளிகளில் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவிலும், சர்வதேச அளவிலான அனுபவங்களின் அடிப்படையில், புதுமையான முறைகளை கடைபிடிப்பதன் மூலம், பெரும் சுமையாக இருக்கும் பல நிலை கற்றல் முறையை, நமக்கு பயன் தரும் வழியில் மாற்ற இயலும்.  பாடத்திட்டம் மற்றும் கற்கும் வேகம், வயது/வகுப்பு அடிப்படையில் அல்லாமல், குழந்தைகளின் கற்கும் திறனுக்கேற்று இருப்பதை வாய்ப்பாக கொண்டு, மாற்று கற்பித்தல் முறைகளை மேம்படுத்த வேண்டும்.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு வள ஆதார மையம் துவங்குவதற்கான அறிவுரைகள்

ஆரம்ப கள்வியை உலகளவிலாக்குவதில் புதிய அணுகுமுறைகள்

2.8275862069
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top