கல்வி பயிலும் உரிமை குறித்த ஐ.நா.வின் அறிக்கை
உடல் குறைபாடுகள் உள்ளோரின் மேம்பாடு குறித்து அக்கறையுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த அறிக்கை, அவர்களுக்கான கல்வி அளிப்பதில் தீவிர முனைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது. யுனெஸ்கோ வழங்கியுள்ள ஏராளமான உள்ளீடுகள் இணைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் கல்வி தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு சவால்களையும், அந்தத் திட்டத்தின் வரையறைகள், செயலாக்கத்தை கண்காணித்தல் ஆகியவற்றையும் விவரிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு: https://www.youtube-nocookie.com/v/kZxNldBEU6o, http://en.unesco.org/themes/education-21st-century
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் புதுமைத் திட்டத்திற்கு மஹாராஷ்ட்ரா மாநிலம் முழுவதிலும் அமோக வரவேற்பு
சர்வ சிக்ஷா அபிஞான் எனப்படும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக மஹாராஷ்ட்ரா மாநில கல்வி அமைச்சர், திரு. வசந்த் புர்கே, யுனிசெஃப் அமைப்பினர் ஆகியோரின் உதவியோடு யவத்மல் மாவட்டத்தில் பெருமளவிலான பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும்படி பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்வதற்காகத் தொடங்கப்பட்ட பிரச்சார இயக்கம் இது. குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பதைப் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதற்காக கிராமம் கிராமமாக ஞானரதம் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஞானார்த்தப் பரிப்ரமா எனப்படும் இந்தப் பிரசாரத்திட்டம் அந்த மாவட்ட மக்களிடையே மிகவும் பிரபலமடைந்முள்ளது.
http://www.unicef.org/india/education_3185.htm
கொல்கத்தா தெருவோர குழந்தைகள் அனைவர் மீதும் அக்கறை செலுத்துதல்
கொல்கத்தாவில் பிறந்துள்ள புறக்கணிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்குவதில் கொல்கத்தா மாநகராட்சி, அரசுத்துறைகள், யுனிசெஃப் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளில் இருந்து அவர்களையும் பாதுகாத்து, சுகாதார வசதிகளையும், கல்வி வசதிகளையும் வழங்குவதற்கு இந்தக் கூட்டு முயற்சி வழிவகுக்கிறது.
http://www.unicef.org/india/media_3024.htm