பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கேரள நினைவுச்சின்னங்கள்

கேரள நினைவுகள் பற்றிய குறிப்புகள்

அறிமுகம்

நினைவு மலர்கள் ஒருவரின் வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகளின் பதிவுகளாகும். அனுபவங்கள் எதைப்பற்றியதாகவும் இருக்கும். பயணம் மேற்கொள்ளும் போது நினைவு மலர்கள் மிகப்பெரிய பயனுள்ளவையாக இருக்கும். குறிப்பாக கேரளா போன்ற இடங்களுக்குச் செல்லும் போது மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.

கேரளாவின் கலாச்சாரம், வரலாறு, கலை, சமூக, சமய, கூறுகளைக் கொண்ட வெவ்வேறு நினைவு மலர்கள் பயணிகளுக்கு கிடைக்கும்.

கேரள நினைவு மலர்கள் மிகப் பரந்த அளவிலான கவர்ச்சியான தனித்தன்மை கொண்ட கையால் உருவாக்கப்பட்ட ஒரு புத்தகமாகும். அவற்றுள் மிக முக்கியமானவை அரன்முலா கண்ணாடி (உலோக கண்ணாடி) கைவினைப் பொருட்கள், தேங்காய் ஓட்டிலிருந்து செய்யப்படும் கைவினைப் பொருட்கள், மரக்கட்டை, களிமண் மற்றும் மூங்கில், முரல் ஓவியங்கள் கசவு சேலை (சரிகை வேலைப்பாடு கொண்ட சேலை) ஆகியவையாகும்.

கேரள அரசின் சுற்றுலாத்துறைக்கான கல்ச்சர் ஷாபீயிலிருந்து சுற்றுலா மேம்பாட்டுதுறை முகமை மூலம் ஏராளமான கேரள நினைவு மலர்களை பயணிகள் வாங்க முடியும். பரிசு பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்களான உருளி (வாக்) பாரா (பித்தளை சிற்றுரு வேலைப்பாடு கொண்ட பாரம்பரிய பாத்திரம்) கட்டு வள்ளம் (அரிசி தோணி) அரன்முலா கண்ணாடி (உலோக கண்ணாடி) நெட்டிபட்டம் (யானைமுக அலங்காரம்) நெட்டூர் பெட்டி (பாரம்பரிய ஆபரணப்பெட்டி) இன்னும் பிற பொருட்களையும் பயணிகள் கல்ச்சர் ஷாபீயில் இருந்து வாங்கலாம்.

நினைவுச் சின்னங்கள்

அரன்முலா கண்ணாடி

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக கேரள கைவினைஞர்கள் உலோக கண்ணாடியை உருவாக்கினர். அரன்முலாவிலுள்ள (பத்தன்னாதிட்டா மாவட்டம்) பித்தளை (ஓடு) பொருட்கள் செய்யும் பணியாளர்கள் உலக பிரசித்திப் பெற்ற கைப்பிடியோடு கூடிய உலோக கண்ணாடிகள், செய்வதில் பிரசித்திப் பெற்றவர்கள். இது அரன்முலா கண்ணாடி எனப்படும்.

நெட்டூர் பெட்டி

நெட்டூர் பெட்டி என்பது இந்த மண்ணோடு நெருங்கிய தொடர்பு கொண்ட மலபாரின் நெட்டூர் பகுதியில் வடிவமைக்கப்படும் கேரள பெண்களுக்கு விருப்பமான பாரம்பரிய ஆபரண பெட்டி ஆகும்.  இந்த காஸ்கெட் (பெட்டி) கைவினைஞர்களின் பெருமைக்கும் திறனுக்கும் நல்ல எடுத்துக்காட்டாகும். இந்த பெட்டி தேக்கு மரத்திலிருந்து செய்யப்பட்டது. பெட்டியின் ஒவ்வொரு இணைப்பு, சேர்க்கை, பூட்டு யாவும் உளியால் கையாலேயே செதுக்கப்பட்டிருக்கும். மரப்பெட்டிகள் நன்கு வார்னிஷ் பூசப்பட்டு பின்னர் அவற்றிற்கு பித்தளை சட்டம் பொருத்தப்படும். இப்போது இந்த கூம்பு வடிவ மூடி கொண்ட வேலைப்பாடு செய்யப் பட்ட பெட்டி பழைமையான பொருட்கள் சேகரிப்பு பொருட்களாகவே உள்ளது. மிகச்சிறிய அளவிலான கைவினைஞர்களே இன்று உள்ளனர். எனவே இந்த பெட்டிகள் எல்லாம் இன்று அரிய பொருளாகிக் கொண்டிருக்கிறது.

கல்ச்சர் ஷாபீ கேரள நினைவுப் பொருட்களை விளம்பரப்படுத்த கேரள சுற்றுலாத்துறையால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு முகமை ஆகும்.

நெற்றிப்பட்டம்

கேரளத்தினர் எவ்வளவுதான் விலை உயர்ந்து கொண்டிருந்தாலும் விருந்துகளுக்குத் தங்க நகைகளை அணிந்து செல்லவே விரும்புவர். கேரள கொண்டாட்டங்களில் யானையும் முக்கிய பங்கு வகிப்பதால் எந்த விழாவிலும் நன்கு அலங்கரிக்கப்பட்ட காட்சியாக யானை ஊர்வலம் இருக்கும். நெற்றிப்பட்டம் என்பது திறனுடைய கைவினைஞர்கள் தங்கத்தால் செய்யும் யானையின் நெற்றியில் போடப்படும் ஒரு அழகு ஆபரணமாகும். இப்போது இந்தியா முழுவதும் யானை அலங்கரிப்பு மாறுபட்ட விதத்தில் அல்லது கன கச்சிதமாக செய்யப்படுகிறது.

நெற்றிப்பட்டம் தயாரிப்பு: மூன்றரைக்கிலோ செம்பு 3 சவரன் (24 கிராம்) தங்கம் ஆகியவை கலந்து ஒரு சாதாரணமான நெற்றிப்பட்டம் செய்யப்படுகிறது. ஒரு ஆபரணம் செய்ய குறைந்தது 20 நாட்கள் ஆகும். நெற்றிப்பட்டத்தின் அளவு யானைக்கு யானை வேறுபடும். 9 லிருந்து 10 அடி உயரம் உள்ள யானைக்கு 60’’-60’’ நீளம் உள்ள நெற்றிப்பட்டம் அதில் குறைந்தது 11 சந்திரக்கலா (பிறைநிலா) இருக்க வேண்டும்

நிலவிளக்கு

மலையாளிகளின் அனைத்து பாரம்பரிய சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்களில் நிலவிளக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கேரளாவில் இந்துமத கொண்டாட்டங்களிலும் சமூக கலாச்சார நிகழ்ச்சிகளிலும் நிலவிளக்கு இடம் பிடித்திருப்பதை நாம் காணலாம்.

மாலை இருட்ட தொடங்கியதும் இந்து குடும்பங்களிலுள்ள இளம் பெண்கள் விளக்கு (நிலவிளக்கு) ஏற்றி வீட்டின் வராண்டாவில் வைப்பர். மின்னும் நிலவிளக்கு ஏற்றி அவள் மற்ற குழந்தைகள், குடும்ப பெரியவர்கள் குறிப்பாக தாத்தா-பாட்டியோடு சேர்ந்து கீர்த்தனைகள் மற்றும் மாலை பூஜைகளைச் செய்வர்

நிலவிளக்கு ஒரு நிகழ்ச்சி தொடங்குவதற்கு அடையாளமாக ஏற்றப்படும். நிலவிளக்கு ஏற்றுவது கேரளாவில் வெற்றிக்கான ஒரு நன்னிமித்தமாகவே கருதப்படுகிறது. பெரிய நிலவிளக்கு வெவ்வேறு கலை நிகழ்ச்சிகள் நிகழும் போது முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றும் பலர் இரவு நேரங்களில் தமது பாரம்பரிய வழக்கமாக எண்ணி விளக்கேற்றி வருகின்றனர்.

உரு மாடல்

உரு அல்லது டாவ் ஒரு அரேபிய பாரம்பரிய வர்த்தக பாத்திரம் ஆகும். உரு அல்லது டாவ் திறன் வாய்ந்த கேரள கைவினைஞர்களால் கேரளத்தில் உறுதியான மரக்கட்டைகள் மற்றும் அதன் தொழில் நுட்பம் கொண்டு செய்யப்பட்ட்து. அரேபியர்கள் தங்கள் டாவ் வடிவமைப்பு தொழில்நுட்பத்தை மலபாரினருக்கு (வட கேரளா) விட்டுச் சென்றனர்.

கோழிக்கோடு மாவட்டத்தின் பேப்போர் இங்குள்ள முக்கியமான துறைமுகமாகும். அது பின்னர் ஒரு கப்பல் கட்டும் மையமாக மாறியது. தொழிற்சாலை முன்னேற்றம் அடைந்த இங்கு சமீப காலம் வரைக்கும் இரும்பும் ஸ்டீலும் கட்டுமான பணிகளுக்கு நல்லது என ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் இந்த தொழில்நுட்பமே பயன்பட்ட்து.

உரு என்ற மிகப் பெரிய பாத்திரம் சாதாரணமாக ஒன்றுகொன்று ஆணி அரையப் பட்டு நன்கு திட்டமிடப்பட்ட மரக்கட்டையால் செய்யப்பட்டதாகும். இதை செய்வதற்கு ஐம்பது கைவினைஞர்கள் சேர்ந்து குறைந்தது நான்கு வருடங்கள் வேலை செய்து ஒரு பாத்திரத்தை செய்து முடிப்பர்

பேப்போரி லிருந்து மரத்தாலான பிரமாண்டமான கைவினைப் பொருட்களை கைவினைஞர்கள் இப்போது பெரும்பாலும் செய்வதில்லை ஆதலால் பல பொருட்கள் இன்று கிடைப்பதில்லை. 3’’ முதல் 10’’ வரை உள்ள பாத்திரங்களின் மாடல்களுக்கு கூட நீங்கள் Rs.450/- முதல் Rs.2500/- வரை கொடுக்க வேண்டியுள்ளது.

பாரம்பரிய ஆடை

கசவு முண்டு மற்றும் கசவு நேரியத்து ஆகியவை முற்றிலும் பருத்தி கைத்தறியால் நெய்யப்பட்டு பார்டர் ஜரிகை நூலால் வேயப்பட்டதாக இருக்கும். தங்க ஜரிகை பார்டர்கள் சில வேளைகளில் எதிர்பதமான கலரில் இருக்கும். அவர்கள் பாரம்பரிய சேலைகள் அல்லது சுடிதார் ஆடைகளை வழக்கமாக அணிவர்.

ஒரு மலையாளிப் பெண் (கேரளத்தினர்) முண்டு மற்றும் நேரியத்து அணிந்து நீள தளர்வாக கட்டப்பட்ட எண்ணெய் தேய்க்கப்பட்ட கூந்தல் கொண்டவளாக மல்லிகைப்பூ நீளமாக சூடி ஒரு படத்தில் இருப்பது போல நேர்த்தியாக இருப்பாள். அவர்கள் நெற்றில் பொட்டு, கண்களில் கண் மை நாகரிகத்திற்கு ஏற்ற தங்க ஆபரணங்களை அணிந்திருப்பர். இந்த நிலத்தின் தனிப்பட்ட தன்மை மற்றும் கவர்ச்சி ஒரு இயற்கை அழகை கொடுக்கிறது. ஆண்கள் இடுப்பில் ஒரு முண்டும் தோளில் ஒரு நேரியத்தும் அணிந்திருப்பர்.

பவித்ர மோதிரம்

பயான்னூர் பவித்திர மோதிரம் மாறுபட்ட முறையில் பிரத்தியேக கை வேலைபாட்டுடன் கூடிய தங்க மோதிரம். இது புனித ஆபரணமாகக் கருதப்படுகிறது. இந்த புனித மோதிரத்தை கன்னூர் மாவட்டத்திலுள்ள பயான்னூர் என்ற இடத்தின் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் மட்டுமே தயாரிக்கும் உரிமை பெற்றிருக்கின்றனர். பக்தியோடு யார் அணிந்தாலும் அவருக்கு அந்த மோதிரம் யோகத்தை தரும் என நம்பப்படுகிறது.

மிளகு

கேரளாவில் மிளகு ஒரு கலப்பின பயிர் வளர்ப்பு சூழலில் பயிரிடப்படுகிறது. வயநாட்டில் காப்பி பயிரோடு சேர்த்து பெரிய அளவில் மிளகு பயிரிடப்படுகிறது. மிளகு பெரும்பாலான கேரள வீட்டு தோட்டங்களில் முக்கிய பொருளாக உள்ளது

கேரளாவின் நறுமணம் வீசும் கடற்கரைகள் வணிகர்களை அழைக்கும் மறக்க முடியாத நினைவுகளாக இன்னும் தொடர்ந்து கவர்ந்து இழுக்கிறது. நறுமணப் பொருள் வணிகம் இன்னும் மாநிலத்தின் முதன்மை வணிக பரிமாற்றமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா உலகின் அதிகமாக நறுமணப் பொருள் ஏற்றுமதியில் இந்த மாநிலம் முதன்மை வகிக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் நறுமண பொருட்களில் ¾ பகுதி கேரளாவிலிருந்து மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேரளாவின் நறுமணப் பொருள் வணிகம் பாபிலோன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளோடு நடைபெற்று வருகிறது. கேரளாவின் இலவங்கம் இறந்த உடல்களை சவப் பெட்டிகளில் பதப்படுத்தவும் வாசனைத் திரவியங்கள் மற்றும் புனித எண்ணெய்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இஸ்ரேல் நாட்டின் சாலமோன் அரசரால் (கி.மு 1000) கேரளாவிற்கு நறுமணப்பொருட்கள் வாங்குவதற்காக கப்பல் அனுப்பி வைக்கப்பட்டதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து இலவங்கம் முதன் முதலாக அரபு நாடுகள் வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முரல் ஓவியம்

கேரள புராதாண கதைகளை (பழைய இந்திய புராணங்கள்) அடிப்படையாகக் கொண்ட முரல் ஓவியத் தொகுப்புகள் ராஜஸ்தானுக்கு அடுத்ததாக பெரிய கலைத்தொகுப்பு கொண்ட மாநிலமாக உள்ளது. கேரளாவின் முரல் ஓவியங்கள் மாறுபட்ட இயல்பு மற்றும் தொழில் நுட்பத்தைத் தாங்கியவையாக உள்ளன. பெரும்பாலானவை 15 மற்றும் 19 –ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் வரையப்பட்டவை. இன்னும் சில ஓவியங்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிற்கு உரியவை.

கேரள கோவில்கள் மற்றும் அரண்மனைகளில் வெவ்வேறு வகையான இந்து கடவுள்கள், தேவியர் மற்றும் அவர்களின் தெய்வீகச் செயல்கள் மற்றும் பாடல் காட்சிகள் காணப்படுகின்றன. இந்த விந்தை காட்சிகள் நமக்கு முழு ஈடுபாட்டினையும் மற்றும் பக்தியையும் கொடுக்கிறது. வரைவதற்குத் தேவையான பசை, வண்ணங்கள், பிரஷ் முதலியவை செடிகள் அல்லது தாவர எண்ணெய்களிலிருந்து எடுக்கப்பட்டன. கேரளாவில் அதிகமாக ஆரஞ்சு-சிவப்பு, ஆரஞ்சு-மஞ்சள், பச்சை, சிகப்பு, வெள்ளை, நீலம், கருப்பு, மஞ்சள், பொன்னிற மஞ்சள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

நீங்கள் ஓவியக்கலையை ஆர்வத்தோடு பார்க்கும் மாணவராக இருந்தால் கேரளாவில் இருக்கும் போது நீங்கள் தவறாமல் பார்க்கத் தக்க ஒரு சில இடங்கள் உள்ளன.

கேரளாவின் பழைமையான முரல் ஓவியங்கள் திருநதிக்கரை மலைக் கோவிலில் காணப்படுகின்றன. அது இன்று அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ளது

ஏராளமான முரல் பதாகைகள் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணபுரம் அரண்மனையின் காயகுளத்துக்கு அருகில் உள்ள கஜேந்திர மோக்சாவில் உள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தின் மாட்டன்சேரி அரண்மையில் இந்து புராணங்கள், இராமாயணம் மற்றும் பாகவதம் ஆகியவற்றின் காட்சிகளை வெளிப்படுத்தும் ஏராளமான முரல் ஓவியங்கள் உள்ளன. எட்டுமன்னார் சிவன் கோவிலில் காணப்படும் சுவர் ஓவியங்களில் பழைய திராவிட முரல் கலைவடிவம் காணப்படுகிறது.

ஏலக்காய்

கேரள சமையல் மிகவும் ருசியாக இருப்பதை அதன் அதிகபடியான நறுமணப் பொருட்கள் மெய்பிக்கும் என்பதை சில பிரயாண கைடுகள் இந்த நறுமண பூமியைப்பற்றி தெரிவிக்கிறது.

7500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நறுமணப் பொருட்கள் வணிகம் கேரளாவில் நடைபெற்று வருகிறது. மிளகாய் மற்றும் மிளகு மிகவும் விரும்பத்தக்க ஒரு பொருளாக இருக்கிறது மலபாரின் ஏலக்காய் உலகின் முதல் தரமானதாகக் கருதப்படுகிறது. உண்மையில் கேரளாவில் இருந்து கொண்டு செல்லப்படும் ஏலக்காய் எந்த மருத்துவ செயலுக்கும் மேலை நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

ஏலக்காய் (ஏலம்) அதன் மருத்துவ குணங்கள் தவிர தேயிலை பொருளாகவும், குளிர்பானங்கள், மிட்டாய் வகைகள், சைவ அசைவ உணவுகளில் அருமையான சுவை மற்றும் மணம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 750-1000 மீட்டர் வரை உயரம் உள்ள மரங்கள் நிறைந்த அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை ஏலக்காயின் பிறப்பிடமாகும். இடுக்கி மாவட்ட குன்றுகள்தான் நறுமணப் பொருட்கள் பயிரிடும் முக்கிய இடமாக உள்ளதால் அது ஏலக்காய் மலை எனப்படுகிறது.

இந்தியா உலகின் முதன்மை ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடாகும். இதில் கேரளாவிற்கு முதன்மையான பங்கு உண்டு. பொதுவாக மாநிலத்தின் (நாட்டினுள்) உள்ளே உள்ள அனைத்து மளிகை கடைகள், பேரங்காடிகள் மற்றும் மாநிலத்திற்குச் சொந்தமான அனைத்து வணிக மையங்களிலும் ஏலக்காய் கிடைக்கும். இதனுடைய நியாயமான விலை ஒரு கிலோ Rs.500/- லிருந்து Rs.600/- வரை இருந்தாலும் தரத்திற்கு ஏற்ப அதன் விலை மாறுபடுகிறது.

சந்தனமர எண்ணெய்

சந்தனமர எண்ணெய் அல்லது ‘நீர்ம தங்கம்’ என அழைக்கப்படுவது பல ஆண்டு காலமாக இந்த பூமியின் புகழ் பெற்ற வாசனைத் திரவியமாக உள்ளது. சந்தன மர வேர்கள் மற்றும் கட்டைகளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் மாநிலம் முழுவதும் ஒருசில இடங்களிலிருந்து மட்டுமே எடுக்கப்படுவதால் இது மிகவும் விலை உயர்ந்த எண்ணெய் பொருளாக உள்ளது.

அண்டை மாநிலமான தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தோடு ஒப்பிடும்போது (குறிப்பாக மைசூர் காடுகள்) கேரளாவில் குறைவான ஏக்கரிலேயே சந்தனமரக் காடுகள் உள்ளன. கேரளாவில் தேவி குளத்திற்கு அருகிலுள்ள புகழ்பெற்ற கோடை வாசஸ்தலமான கோட்டயம் நகரிலிருந்து 149 கி.மீ தொலைவிலுள்ள மறையூர் மற்றும் வயநாடு குன்றுகள் ஆகிய இடங்களில் சந்தனமரக் காடுகள் உள்ளன.

மறையூர் கேரளாவின் இயற்கை சந்தனமரக் காடுகள் உள்ள ஒரே இடமாகும். வனத்துறையினரால் நடத்தப்படும் சந்தன தொழிற்சாலைக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகின்றனர். நல்ல தரமான சந்தன மரங்கள் வளர்வதற்கு குறைவான மழையே ஏற்புடையதாகும். அதிலிருந்துதான் தரமான எண்ணெய் எடுக்க முடியும்.

உயர்தர மக்களின் தவிர்க்க முடியாத காஸ்மெடிக் பொருளான சந்தன எண்ணெய் மூலம் கர்நாடக அரசு பல ஆண்டுகளாக நல்ல லாபம் ஈட்டி வருகிறது. கேரள அரசு கைவினைப் பொருட்கள் எம்போரியத்தில் இந்தப் பொருட்கள் விற்பனைக்காக உள்ளன. அவற்றுள் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள SMSM இன்ஸ்டிடியூட் ஆகும். சில தனியார் முகமைகள் தயாரிக்கும் சந்தன எண்ணெய்யும் அரசின் ஆராய்ச்சி பிரிவில் ஆய்வு மேற்கொண்ட பிறகு இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

சந்தனகட்டை உருவசிலை

இவை சற்று விலை கூடுதலாக இருந்தாலும் அதன் மணம் மற்றும் இந்த பூமியின் நினைவுகளுக்காக பயணிகள் இதனை வாங்கிச் செல்கின்றனர். யானைமுகத் தெய்வமான கணபதி மற்றும் பெருமான்களான பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன், பாம்பு படகுகள், யானைகளின் சந்தனச்சிலைகள் கேரளாவின் புகழ் பெற்ற நினைவுப் பொருட்களாகும்.

மாநிலம் முழுவதும் உள்ள கைவினைப் பொருட்கள் கடைகளில் இத்தகைய சந்தனச் சிலைகள் வெவ்வேறு விலைகளில் கிடைக்கின்றன. அந்த கலை பொருட்களில் வடிவம், அதில் காணப்படும் உணர்வுகள், அதில் கலக்கப்படும் பொருட்களின் கலவை விகிதம், கட்டையின் மதிப்பைக் கூட்டும் படியாக சேர்க்கப்படும் தங்க வண்ணம் ஆகியவை கேரள கைவினைஞர்களின் திறனுக்கு நல்ல எடுத்துகாட்டாகும். சந்தனக்கட்டை அதன் மணத்தை அதிக ஆண்டுகளாக தக்கவைத்துக் கொள்ளும். அந்தப் பொருளின் மீது நீர்த்தெளிக்கும் போது அதன் மணம் பல நாட்களாக அறை முழுவதும் வந்து கொண்டே இருக்கும்.

அளவு மற்றும் கலை வேலைப்பாட்டிற்கு ஏற்ப விலை மாறுபடும். நீங்கள் நானூறு ருபாயிலிருந்து ஏதாவது ஒரு பொருளை நீங்கள் வாங்கி கொள்ளலாம். 5 அடி உயர சிலை 500000 ருபாய்க்கு (பரிமாற்ற விலை) 1 US டாலர் = 54.40  இந்திய ருபாய்) SMSM இன்ஸ்ட்டிடியூட் திருவனந்தபுரத்தில் விற்கப்படுகிறது.

கதக்களி அலங்காரப்பொருட்கள்

கேரள கலாச்சார அடித்தளத்தின் சின்னங்களாக உள்ள  கதக்களி முகமூடிகள்  தற்போது சிறிய அளவு நினைவுப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களாகக் கிடைக்கின்றன. இவைகளை முழுமை செய்யும் நுட்பமான தலைக்கவசம், வண்ணம் தீட்டப்பட்ட முகம் மற்றும் நீண்ட கருமையான தலைமுடியுடனான கதக்களி உடை போன்ற அரிய கலை பொருட்கள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், களிமண் அல்லது பாப்பியர் மாக் ஆகியவற்றை கலந்து செய்யப்படுகின்றன.

முகத்தின் வண்ண அடிப்படையில் தலைக்கவச வடிவம் மற்றும் தாடி போன்றவை 5 வெவ்வேறு வகையான கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப தரப்படுகிறது. பச்சை வண்ணம் நற்பண்பு மற்றும் சான்றாண்மையையும் கத்தி பெருமை, போர்க்குணம் மற்றும் அநீதியையும், சிவப்பு தாடி புராணகால நல்ல பண்புகளையும் கொண்ட வானர தெய்வத்தையும் கருப்பு தாடி நாடோடி மனிதர்கள், காட்டு வாசிகள் மற்றும் குகை வாசிகளையும் குறிக்கிறது. மினுக்கு அல்லது பளபளப்பு கதாப்பாத்திரங்கள், பெண்கள், சாதுக்கள், பிராமணர்கள், ஆகியவர்களைக் குறிக்கும். வழக்கமாக கேரளத்தினர் நல்ல பண்புகளைப் பிரதிபலிக்கும் பச்சை வண்ணதையே வீடுகளில் வைப்பர்.

இந்த பல்வண்ண அதிக கிராக்கியான கைவினைப் பொருட்கள் பண வருவாய் தரும் குடிசைத் தொழில் ஆகும். ஒரு முகமூடி 100 ரூபாயிலிருந்து சில நூறு ரூபாய் வரை அதன் அளவு மற்றும் பொருள் தரத்திற்கு ஏற்ப உள்ளது. கதக்களி முகமூடியை சுற்றுலாத்தளங்கள் மற்றும் கோவில்களின் அருகிலுள்ள அரசுக்கு சொந்தமான கைவினைப்பொருட்கள் விற்கும் வர்த்தக மையங்களில் பெறலாம்.

சுண்டன் வல்ளோம் மாடல்

 • சுண்டன் வள்ளம்கள் அல்லது பாம்பு படகு 24 மீட்டர் நீளத்திலிருந்து 36 மீட்டர் நீளமுள்ள நாகப் பாம்பு தலை போன்று அஞ்சிலி கட்டையில் செய்யப்பட்டிருக்கும். 100 படகோட்டிகள் இருக்க இடங்கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய இந்த படகு காயலில் செல்வது விந்தையாக இருக்கும்.
 • கேரளாவின் பெரிய அளவிலான பாரம்பரிய படகுகள் வெவ்வேறு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அவற்றுள் மிகவும் கம்பீரமானது சுண்டன்வள்ளம்கள். நவீன கேரள வரலாற்றோடு இந்த படகு போட்டிகள் நெருங்கிய தொடர்புடையவை. அரச பரம்பரையினர் இந்த மாநிலத்தில் இருந்த போது, பல்வேறு அரசர் பரம்பரையினர் இந்த படகில் இன்னும் சில படகுகள் புடைசூழ அதாவது ஒவ்வொன்றும் உணவு, உடைகள், பாத்திரங்கள், வேலைக்காரர்கள், பெண்கள், போர்த்தளவாடங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் படியாக படகுகள் புடை சூழ செல்வர். இந்த அரசு சுற்றுலாக்கள் மக்களுக்கு பார்ப்பதற்கு வண்ணமயான ஊர்வலமாக தெரியும். இந்தக் காட்சியிலிருந்து அரச குடும்பம் மறைந்த பின்னர் கலாச்சார பாரம்பரிய காட்சி கண்களிலேயே நிலைத்திருக்கும். பல படகுகள் பயன்படுத்தப்படும் இன்றைய படகுப் போட்டிகள் நெஞ்சை அள்ளும் காட்சியாக இருக்கும்.
 • முதலாவது சுண்டன் வள்ளம் 9-ஆம் நூற்றாண்டில் 200 பேர் இருக்க இடம் கொள்ளும் அளவிற்குப் பெரிதாக இருந்தது. ஆரம்பகால ஐரோப்பியர்கள் கேரளாவின் இந்த படகினை பாம்பு படகு என்று அழைத்தனர். ஏனெனில் இந்தப் படகுகளின் நீளம் நார்வேயின் பாம்பு படகுகளை ஒத்திருந்ததால் முற்கால ஐரோப்பியர்கள் இதனை பாம்பு படகுகள் என்று அழைத்தனர்.
 • இன்று சுண்டன் வல்ளோம் சிற்றுருக்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மாடங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாடெங்கிலும் உள்ள பாரம்பரிய கடைகள் மற்றும் கைவினைப்பொருள்கள் எம்போரியம் ஆகிய இடங்களில் கிடைக்கும். நூற்றுக்கான கிராமத்தினர் இந்த மாடல்கள் செய்வதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இன்று உலகம் முழுவதும் இந்தப் பொருட்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது.
 • சுண்டன் சிற்றுருக்கள் சந்தனகட்டை அல்லது யானைத் தந்த இணைப்புகள், பித்தளை பட்டன் ஆகியற்றை வைத்து செய்யப்பட்டு மெழுகுவர்த்தி தாங்கிகள், பேனா தாங்கிகள், சாவி தாங்கிகள் போன்ற வெவ்வேறு அலங்கரிப்பு பொருட்களாக காணப்படுகிறது. விலை 100 ரூபாயிலிருந்து சில நூறு ரூபாய் வரை அதன் அளவு மரக்கட்டையின் வகை மற்றும் அலங்காரப் பொருட்கள் பயன்படுத்தப்படுவது ஆகியவற்றிற்கு ஏற்ப இருக்கும். அவை பேன்சி கடைகளில் பேரம் பேசி வாங்கப்படுகிறது மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு எம்போரியங்களிலும் அவை கிடைக்கின்றன.
 • கல்ச்சர் ஷாபீ கேரள நினைவுப் பொருட்களை விளம்பரப்படுத்த கேரள சுற்றுலாத்துறையால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு முகமை ஆகும்

வாழைக்காய் சிப்ஸ்

 • சிப்ஸ் உலகம் முழுவதும் உள்ள அனைத்து வயதினருக்கும் விருப்பமான சிற்றுண்டி ஆகும். பிரிங்கின்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ், பாக்ஸ்-சென் சுவை சிப்ஸ் மற்றும் பல்வேறு வகை ஃப்ரெஞ்சு ஃப்ரைகளுக்கு மிகவும் பழக்கமுடைய யாராக இருந்தாலும் ஒருமுறை சிப்ஸ் சாப்பிட தொடங்கிவிட்டால் அவர்களால் நிறுத்த முடியாது என்ற உண்மையை மறுக்க முடியாது.
 • கேரள வசீகர சமையல் எந்தவித செயற்கை வண்ணங்கள் அல்லது சுவைகளும் சேர்க்காமல் ஒரு அரிய வகை இயற்கை சிப்ஸ்-ஐ வழங்குகிறது. நாங்கள் வாழைக்காய், பலாப்பழம், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு முதலியவற்றில் சிப்ஸ் தயாரிக்கிறோம். சிப்ஸ் தயாரிப்பாளர்களை நீங்கள் மாநிலம் முழுவதும் காணலாம். இந்த முறுமுறுப்பான, உப்புசுவை, மெல்லிய காய்கறிகளின் சீவல்கள் எண்ணெயில் பொரித்தெடுப்பது வாழைக்காய் பொறிதல் அனைத்து வீடுகளிலும் செய்யப்படுகிறது.
 • வாழைக்காய், பலாப்பழம், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, போன்றவற்றின் விலை அவை பொறித்தெடுக்கப்படும் எண்ணெய்களுக்கு ஏற்ப (வழக்கமாக தேங்காய் எண்ணெய்) இருக்கும்.

புல்பாய

 • மிருதுவான, குளிர்ச்சி, சிவப்பு மற்றும் பச்சை வடிவமைப்பு, பாரம்பரிய புல்பாய அல்லது புல் பாய்கள் கேரளாவின் மிகவும் பழைமையான கையால் முடையப்படும் தயாரிப்புகளுள் ஒன்றாகும். இந்த பாய்கள் நான்கு வேதங்களுள் ஒன்றான அதர்வ வேதத்தில் (கி.மு 3500 - 1500) இருப்பதை இன்னும் காண முடிகிறது. (பண்டைய இந்திய தத்துவ நூல்) சாதாரண மக்கள் அமர்வதற்கு மரக்கட்டைகள் பயன்படுத்தும் போது அதன் அளவிற்கும் வடிவிற்கும் ஏற்ப அமர்வதற்கும் படுப்பதற்கும் பயன்படுத்தும் அந்த காலத்து பாய்கள் இவை எல்லாவற்றினும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 • கோரப்புல்லிலிருந்து முடையப்பட்டு (சைப்ரஸ் கோரைம்போசஸ்) 91.5 லிருந்து 152 செ.மீ வரை உயரமான புல்வகை பாப்பரைஸ் புல் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவை வெவ்வேறு வடிவங்களில் வண்ணம் தீட்டப்படுகின்றன. ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் கோரப்புல் உயரமாக வளரும். கிராம மக்கள் அவற்றை மொத்தமாக வெட்டி கொண்டுவந்து நீளமாக மெல்லியதாக நார்களாக வெட்டி மூன்று நாட்கள் வரை காய போடுவர். இந்த நார்கள் பின்னர் சாபங்கம் (காசல்பினியாசாப்பன்) சேர்த்து கொதிக்க வைத்து வண்ணமிடப்படுகிறது. வழக்கமாக 183 செ.மீ நீளம் முதல் 91.5 செ.மீ அகலம் வரை உள்ள புல்பாய் முடைவதற்கு ஒருநாள் முழுவதும் ஆகும்.
 • புல்பாய் குளிர்ச்சியான உட்காருவதற்கான ஒரு பொருளாகும். இன்னும் மாநிலம் முழுவதும் பெருமளவில் கோடைகாலங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. பைகள், மேசைவிரிப்புகள், சுவர் அலங்காரங்கள் போன்றவையும் இந்த கோரைப்புல்லில் செய்யப்படும் வேறு பொருட்களாகும். பாலக்காடு மற்றும் திரிச்சூர் மாவட்டங்களில் இந்தத் தொழில் பெரும்பாலும் காணப்படுகிறது. இந்தப் பாய்கள் மற்றும் பிற பொருட்களை உலகசந்தையில் பெருமளவில் காண முடிகிறது. அவை கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, நியூசிலாந்து முதலிய நாடுகளுக்கு நெடுநாளாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 • புல்பாய்களுக்கு இந்தியாவின் பிற இடங்களிலும் நல்ல வியாபாரம் உள்ளது. குறிப்பாக மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் இதற்கு நல்ல கிராக்கி உண்டு.
 • ரூபாய்.45/- லிருந்து  ரூபாய்.800/- வரை அதன் அளவு, நெசவின் தன்மை, வடிவமைப்புகளுக்கு ஏற்ப விலை உண்டு.

ராமசம் விசிறி

 • ராமசம் விசிறி (வெட்டிவேரால் செய்யப்படும் விசிறி) மற்றும் படுக்கும் பாய்கள் ராமசம் மற்றும் தைலம் மற்றும் வாசனைப் பொருள் சாறுகளை அதன் வேர்களிலிருந்து எடுத்து தயாரிக்கப்படுகின்றன. இவை பழங்காலத்திலிருந்தே இத்தகைய தயாரிப்புகள் கோடை காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன முறையில் மின்சார வசதிகள் மூலம் நல்ல முறையில் அனைத்து வசதிகளும் கிடைத்தாலும் இன்னும் கேரள வீடுகளில் ஆடம்பர கவர்ச்சி பொருளாக இவை இருப்பதை இன்றும் காணலாம்.
 • ராமசம் இன் தாவரயியல் பெயர் வெட்டிவேர் சிசானோடைஸ். இந்த புல் மற்றும் இதன் வேர்கள் பெருமளவில் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
 • வழக்கமாக ராமச விசிறி மீது தண்ணீரைத் தெளிக்கும் போது அவை குளிர்ச்சியான மணத்தை வீச தொடங்குகின்றன. ராமசம் புல்லின் மீது குருடர் கூட நீரைத் தெளித்து அரையை குளிர்ச்சியாகவும் மனோரம்மியமாகவும் கோடை காலத்தில் வைத்து கொள்ள முடியும்.
 • ஏழை மனிதனின் ஏர்கண்டிஷனரான, உள்நாட்டு தயாரிப்புப் பொருள் ராமசம் வேர்களில் நீர் ஊற்றுதல் மற்றும் மின்சார மோட்டார் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து வரும் மாறுபட்ட காற்று புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சி கொடுப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. சிறிது வெட்டிவேரை மண்பாண்ட்டத்தில் உள்ள நீரில் போட்டு வைத்தால் அதிலுள்ள நீர் தித்திப்பாக மாறுகிறது. இந்த நீரை அருந்தினால் அது உடல் வெப்பத்தை விரைவாக தணிக்கும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக காய்ந்த ராமச்சத்தைக் கூரைகளில் போட்டு அதன் மீது கோடை காலத்தில் மாலை நேரங்களில் நீர் தெளித்து அதன் கீழுள்ள அறைகளில் குளிர்ச்சியாக்கப்படுகிறது.

தங்க ஆபரணங்கள்

 • மிகப்பழங்காலத்திலிருந்தே கேரளத்தினர் தங்கத்தின் மீது அதிக விருப்பம் கொண்டிருந்தனர், அந்த காலத்திலிருந்து இன்று வரை ஒவ்வொரு சமூகம் அல்லது சாதியினர் தமக்கென்று பாரம்பரிய வடிவமைப்பில் ஆபரணங்கள் கொண்டிருந்தனர். அவற்றைச் செய்வதற்காக தனிப்பட்ட தங்க ஆசாரி எனப்படும் நபர்கள் இருந்தனர். ஆனால் நவீன காலத்தில் அந்த பழைய நிலை முற்றிலும் மாறியிருப்பதைக் காணலாம். பேஷன் தொழிலின் அபார வளர்ச்சி, பாரம்பரிய மற்றும் பழைமையான விதங்களிலான நகைகள் ஒரே இடத்தில் தங்கக் கடைகளில் பெறும்படியான வசதிகள் உள்ளன.
 • சமயம் அல்லது சாதி ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலான கேரளப் பெண்கள் தங்க ஆபரணங்களை அணிகின்றனர் மற்றும் அவற்றின் வடிவங்கள் பெரும்பாலான சமய மற்றும் திருமண நிகழ்ச்சிகளின் போது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கேரளா திருமணங்களின் முக்கிய சடங்கு தாலிகட்டு இதில் ஒரு சிறிய இலைவடிவ தங்கத்தோடு கூடிய சங்கிலி போடுவது திருமண பந்தத்தின் புனிதத் தன்மையை குறிப்பதாக இருக்கும். இந்த சடங்கு இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் ஒரு சிறிய சிலுவையை தாலி எனப்படும் இலை வடிவத்தின் மீது பொரித்திருப்பர்.
 • மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஆபரணங்களுள் ஒன்று கிறிஸ்தவ பெண்கள் தங்கள் காதுகளின் மேல் பகுதியில் அணியும் வளையமாம். முகமதிய பெண்களும் குறிப்பிட்ட வகை காதணிகள், நெக்லஸ்கள் மற்றும் பெரிய அளவில் வடிவமைக்கப்பட்ட ஒட்டியாணம் போன்றவற்றை அணிதல் உண்டு
 • தங்க ஆபரணங்கள் பெரும்பாலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் செய்யப்படுகின்றன. மைய கேரளாவின் திரிச்சூர் பாரம்பரிய தங்க நகைகள் வாங்குவதற்கான சுவர்க்க பூமியாக கருதப்படுகிறது. திரிச்சூரின் தங்கக் கடை தெருவில் ஒரே வரிசையில் ஏராளமான தங்க கடைகளை காணலாம்.
 • மிகவும் பிரசித்திபெற்ற தங்க ஆபரணம் பயான்னூர் பவித்திர மோதிரம், தங்க நெக்லஸ், மனோன்மணி, இலக்க தாலி, பூத்தாலி, பழையக்கமலா, மங்கமாலா, தாலமினி, சுட்டியம் சேலும் மற்றும் புலிய மோதிரம் ஆகியவை ஆகும். காதுகளுக்கு ஜிமிக்கி, கண்ணுநீர்த்துளி, தோடா ஆகியவையும் வளையல் வகைகளான காப்பு, கற்கள், முத்துக்கள் மற்றும் எனாமல் பொரிக்கப்பட்ட (பிரேஸ்லட்) கைசெயின் ஆகியவையும் அவர்களின் ஆபரண வகைகளாகும்.
 • இடுப்பில் ஆடையினுள் அணியப்படும் ஆபரணம் அரஞ்சானம் வழக்கமாக மெல்லிய செயினாக இருக்கும். ஆனால் முகமதிய பெண்கள் ஆடையின் மீது பெல்ட் போன்று அணியும் ஒரு ஆபரணம் ஒட்டியாணம் எனப்படும். இந்த ஒட்டியாணம் அகலமாகவும் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கும்.

ஊறுகாய்கள்

 • கேரளத்தினர் எப்போதும் தமது மதிய உணவின் போது சுவையான காரமுள்ள, மணக்கும் ஊறுகாய் அல்லது அச்சார் எடுத்துக் கொள்வர்
 • கேரளாவில் செய்யப்படும் மாங்காய் வகைகளுள் மிகவும் முக்கியமானை பிஞ்சு மாங்காய் ஊறுகாய், உலர்ந்த மாங்காய் ஊறுகாய், துண்டு மாங்காய் ஊறுகாய் ஆகியவை ஆகும். இதற்கு அடுத்துஎலுமிச்சை ஊறுகாய் ஆகும், இது பல்வேறு வடிவங்களில் மாறுபட்ட சுவையுடன் கிடைக்கிறது. இஞ்சி பூண்டு ஊருகாய், நெல்லிக்காய் ஊறுகாய், இறால் ஊறுகாய், சீர்மீன் ஊறுகாய் என இன்னும் பிற ஊறுகாய் வகைகளும் உண்டு.
 • இன்று இந்த நுட்பமான ஊறுகாய் செய்யும் கலை பழைய தலைமுறையோடு அழியும் தருவாயில் உள்ளது. பெரிய கூட்டுக் குடும்பங்களிலிருந்து தனிக் குடும்பங்களுக்கு மாறியது, வாழ்க்கை முறை மாற்றங்கள், தொழில்கள் ஆகியவற்றில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது. பழங்காலத்தில் கூட்டுக் குடும்பங்களிலுள்ள வயதான பெண்களின் மேற்பார்வையில் பெருமளவில் ஊறுகாய்கள் செய்யப்பட்டு பெரிய காற்று புகாத ஜாடிகள் அல்லது பரணிகள் எனப்படும் சைனா ஜாடிகளில் வைக்கப்பட்டன. ஊறுகாய்கள் கெடாமல் இருப்பதற்காக சுத்தமும் உலர்வுமான சூழலில் பெருமளவு கவனத்துடன் தயாரிக்கப்பட்டு அடுத்த பருவம் வரை கெடாமல் பூஞ்சைகள் வராமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும்.
 • நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதிக அளவில் ஜாடியில் உள்ள மேல்மட்டம் வரை நிற்கும்படி ஊற்றி இது பராமரிக்கப்படும். அதன் பிறகு ஜாடியை மூடியால் மூடி, ஒரு துணியால் பொதிந்து வைக்கப்படும். ஒருவேளை தரையில் வைத்தால் ஒரு சில அளவு கூட காற்று புகாதவாறு நன்றாக பொதிந்து பாதுகாக்கப்படும்
 • இந்தப் பெரிய ஊறுகாய் பரணிகள் அழகுப் பொருளாகவும் பூச்சாடிகளாகவும் பெரிய கட்டடங்களிலும் ஹோட்டல்களிலும் அல்லது பொருட்காட்சி சாலைகளிலும் இன்று வைக்கப்பட்டுள்ளன.
 • ஆனால் ஊறுகாய் என்ற எண்ணம் வந்ததுமே அது இன்றும் நம் நாவில் எச்சில் ஊற வைக்கிறது. காளான் ஊறுகாய் தயாரிப்பு குழு மற்றும் விரிவான ஊறுகாய் வகைகளுக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவை முழுவதுமாக இல்லை என்றாலும் கேரளத்தினரின் பாரம்பரிய ஊறுகாயின் சுவை மணத்தையும் நிலைநிறுத்தி அவர்களின் விருப்ப உணவை உண்ணுவதற்கு உதவுகிறது.

முந்திரி பருப்பு

 • கடவுளின் தேசமான கேரளத்தின் பிரசித்திப்பெற்ற முந்திரிப்பருப்பு பச்சையாகவோ வறுத்தோ உப்பு சேர்த்தோ உண்ணப்படுகிறது. நூற்றாண்டுகளாக கேரளாவின் ஏற்றுமதிப் பொருளாக முந்திரிப் பருப்பு உள்ளது. மேலும் இங்கு சுவையான சமையல் வகைகள் செய்யும் போது அதில் முந்திரிப்பருப்பு பயன்படுத்தப்படுகிறது. முந்திரிப்பருப்பு போர்ச்சுகீசியர்களால் கேரளாவிற்குக் கொண்டு வரப்பட்டது எனக் கூறப்படுகிறது.
 • முந்திரி மரம் (அனகார்டியம் ஆக்சிடென்டல்லே) பொதுவாக பரங்கி மாவு என்று மலையாளத்தில் கூறப்படுகிறது. பெரும்பாலான முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கொல்லம் மாவட்டத்திலேயே அதிகப்படியாக உள்ளன.
 • முந்திரி மரம் 12 மீ உயரம் வரை வளரும். இவை பெரும்பாலும் வெப்ப மண்டல நாடுகளான இந்தியா ஸ்ரீலங்கா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படுகிறது. இந்த மரம் நடப்பட்டு 3 ஆண்டுகளில் பலன் தரத் தொடங்கும். எட்டு முதல் பத்து வருடங்களில் அதன் பலன் தரும் திறன் உச்சத்தை எட்டும். இந்த மரங்கள் 30 முதல் 40 வருடங்கள் வரை உயிருடன் இருக்கும்.
 • முந்திரிப்பருப்பு பதப்படுத்துதலில் வறுத்தல், ஓட்டினை நீக்குதல் ஓட்டிலிருந்து எண்ணெய் எடுத்தல், பருப்பின் மீது ஒட்டியிருக்கும் தோலை நீக்குதல், தேர்வு செய்தல் மற்றும் தரவாரியாக பாக்கெட்டில் அடைத்தல் ஆகியவை அடங்கும். தரம் மற்றும் பிராண்ட் பெயருக்கு ஏற்ப முந்திரிப் பருப்பு விலைகள் ஏற்ற இறக்கம் உடையவையாக கடைகளில் கிடைக்கும்.

கடல் உணவு

 • கேரளாவின் சிரிம்ப், கட்டல் மீன், ஸ்குயிட் மற்றும் பிற மீன்கள் உலகச் சந்தையில் பெருமளவில் கிடைக்கின்றன.  இம்மாநிலம் வரமாக கடற்கரையை பெற்றிருப்பதால் பெருமளவு மீன்பிடித்தொழில் நடைபெற்று வருகிறது. முக்கிய மீன் வகைகளான சார்டைன் (மத்தி ச்சாளை) மாக்கெரல் (அயிலை) இறால் (செம்மீன், சில்வர், பெல்லிங், முல்லான்) ஆகியவை நல்ல வருவாயை ஈட்டித்தருகின்றன.
 • 36000 சதுர கி.மீ கடல் நீர் 3600 சதுர கி.மீ உள்நாட்டு நீர்நிலைகள், 44 ஆறுகள், ஏரிகள், கழிமுகங்கள், காயல்கள், கால்வாய்கள், மீன் பண்ணைகள் மூலம் கேரளா இந்தியாவின் மிகப்பெரிய மீன்வள மாநிலமாக உள்ளது. இந்த மாநிலத்தின் கடல் வளங்களின் இருப்பு ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் ஆகும்.
 • கேரளாவிலிருந்து டப்பாக்களில் அடைத்து அனுப்பப்படும் மீன் உணவுகளுக்கு தென் கிழக்கு ஆசிய, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மிகவும் பிரசித்திப்பெற்ற சந்தைகளாக உள்ளன. இந்நாடுகள் பல ஆண்டுகளாக கேரளாவின் கடல் ஏற்றுமதிப் பொருட்களின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களாக உள்ளன.
 • கேரளாவிலிருந்து டப்பாக்களில் அடைத்து அனுப்பப்படும் மீன் உணவுகளுக்கு தென்கிழக்கு ஆசிய, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மிகவும் பிரசித்திப் பெற்ற சந்தைகளாக உள்ளன. மூன்றில் ஒரு பகுதி மீன் கொல்லத்திலிருந்து குறிப்பாக நீந்தகாரா என்னும் பழைய அரேபியன் கடற்கரை துறைமுகத்திலிருந்து கிடைக்கிறது. கொல்லத்தில் 24 உள்நாட்டு மீன்பிடி கிராமங்கள் உள்ளன. வெனிஷ் ஆப் ஈஸ்ட் என்று அழைக்கப்படும். ஆலப்புழா மீன்பிடி தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரபிக் கடலின் ராணி எனப்படும் கொச்சியில் ஏராளமான கடல் உணவு ஏற்றுமதி குழுமங்கள் உள்ளன.
 • 80 கி.மீ கடற்கரையைக் கொண்ட காசர்கோட்டில் பல மீன்பிடி மையங்கள் உள்ளன. வடக்கு கேரளாவிலுள்ள கன்னூர் மாவட்டத்திலுள்ள 82 கி.மீ நீளமுள்ள கடற்கரை உள்ளதால் மீன்பிடி தொழிலுக்கு சாத்தியமான கூறுகள் பெருமளவில் உள்ளன.

யானை மாடல்

 • கேரளத்தின் விழாக்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் போது நாம் அலங்கார யானைகள் வண்ண குடைகள் ஆகியவற்றை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம். கேரளாவின் யானை அவர்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும். ஏறத்தாழ ஒவ்வொரு வீட்டிலும் ஒரு யானை இருப்பது போல் இருக்கும். நீங்கள் ஒரு வீட்டைக் கூட ஒரு தந்தத்தினால் தூக்கிவிடலாம். நமது கைவினைஞர்கள் மரக்கட்டை மற்றும் கல்லில் செதுக்கி அதனை சிறிய கண்ணாடிகள், முத்துகள் மற்றும் பூவேலைப்பாடுகள் போன்ற மிகவும் அழகிய வேலைப்பாடுகளைச் செய்து உண்மையாக அலங்கரிக்கப்பட்ட தந்தத்தோடு கூடிய யானை போல் செய்துவிடுவர்.
 • கேரளா அதன் சிற்பக்கலை, உலோக மணி செய்தல், அணிகலன்கள், கிராணைட் சிலைகள், தூண்கள், தேங்காய் நார், தேங்காய் ஓடு மற்றும் கடல் சிப்பி உற்பத்திகள் மர சிற்பங்கள் (குறிப்பாக தேக்கு மரம் மற்றும் சந்தன மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும்). பாம்புப்படகு மாடல்கள் மற்றும் பிற உருவங்கள் செய்வதில் பெயர்பெற்ற மாநிலமாக இது உள்ளது. ஒவ்வொரு கைவினைப் பொருட்களுக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்டப் பகுதி உண்டு. தேக்கு மரம், யானைகள் தவிர சங்கு மற்றும் கடல் சிப்பி பொருட்கள் போன்றவற்றோடு பேப்பர் வெயிட் மற்றும் விளக்குகளுக்கு வண்ணம் தீட்டும் கைவினைஞர்கள் திருவனந்தபுரத்தில் உள்ளனர். யானைகளுக்கான முக அலங்காரம் மற்றும் அணிகலங்கள் மற்றும் பிற விழாக்களுக்கான உபகரணங்கள் யாவும் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள திருவன்குளம் மற்றும் திரிச்சூர் அருகிலுள்ள பகுதிகளில் செய்யப்படுகிறது.

ரவி வர்மா ஓவியங்கள்

 • கேரளத்தின் பாரம்பரிய ஓவியங்கள் அவற்றின் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட களமெழுது (தரையில் ஓவியம் வரைதல்) மற்றும் வசீகரம் சுண்ணாம்பில் வரையப்படும் ஓவியங்கள் அவர்களின் சுவர் ஓவியங்கள் ஆகியவற்றை கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் நாம் காணலாம். தாள் மற்றும் பேப்பர் வருவதற்கு முன்பாக பனையோலை மற்றும் காய் வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது கேரளா ராஜா ரவிவர்மா ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்று உள்ளது.
 • இளவரசர் ரவிவர்மா (1848 - 1906) திருவாங்கூர் சமஸ்தானத்தில் கிளிமனூர் அரண்மனையில் தனது சிறுவயதிலேயே ஓவியம் வரையும் திறன் பெற்றவராயிருந்தார். இவர் ஆயில் பெயிண்ட் தியோட ஜான்சன் என்ற ஆங்கில ஓவியரிடம் பயின்றார். அவர் அரண்மனையிலேயே இருந்து ஓவியம் கற்பித்தார்.
 • ரவிவர்மா ஓவியங்கள் மனித உணர்வுகள் மற்றும் உடலமைப்புகளை அப்படியே வெளிப்படுத்துவதாக இருந்தன. இயற்கையில் இருப்பதை அப்படியே உண்மையாக வெளிப்படுத்தும் திறன் ரவிவர்மா ஓவியங்களுக்கு உண்டு
 • ரவி வர்மாவின் நேர்த்தியான ஓவியங்கள் ஸ்ரீசித்ரா அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் திருவனந்தபுரத்திலுள்ள நாப்பியார் அருங்காட்சியகம் வளாகத்தினுள் உள்ளது. இது திங்கள்கிழமை தவிர வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் காலை 9:00 மணியிலிருந்து மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகம் ரியோரிச் மற்றும் மொகலாயர், இராஜ புத்திரர் மற்றும் தஞ்சாவூர் கலை பள்ளிகள். அஜந்தா மற்றும் பாக் குகைகளின் துண்டுகள் மற்றும் கீலை நாடுகளான சீனா, ஜப்பான், திபெத், பாலி ஆகிய நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட ஓவியங்கள் அடங்கிய கலைவீடாக உள்ளது.
 • தற்போது ஓவியக்கலையைப் பயிற்றுவிக்கும் இரு முக்கிய நிறுவனங்கள் கேரளாவில் உள்ளன. காலேஜ் ஆப் பைன் ஆர்ட்ஸ், திருவனந்தபுரம் மற்றும் அரசு ரவி வர்மா காலேஜ் ஆப் பைன் ஆர்ட்ஸ், மாவலிக்கார ஆலப்புழா மாவட்டம். ரவி வர்மா ஸ்கூல் ஆப் பைன்  அவருடைய மகன் ரவி வர்மாவால் நிறுவப்பட்டது.

நார் தயாரிப்புகள்

 • எளிய மற்றும் நேர்த்தியான அழகான வேலைப்பாடு அமைந்த நார் தயாரிப்புகள் எந்த வீடு அல்லது அலுவலகத்திற்கும் ஒரு அழகைத் தரும் அழகிய படம் போன்ற நார் பொருட்களில் கிராம பெண்களின் கைவேலைப்பாடுகள் புதுமையான அளவில் இருக்கும். தரை விரிப்புகள், கம்பளிகள், சுவர் அலங்காரப் பொருட்கள், கதவு அலங்கார பொருட்கள் பைகள், தொட்டில் கூரை/ தரை சாமான்கள், படுக்கைகள், மெத்தைகள் சிறிய அழகுப் பொருட்கள் திரைச் சீலைகள் போன்றவை அந்த பொருட்களாகும்.
 • தேங்காய் நெட்டியிலிருந்து நார் பொருட்கள் உருவாக்குதல் ஒரு பெரிய தொழிலாக இங்கு நடைபெறுகிறது. முதலாவது தேங்காய் நெட்டி (மேல் ஓடு) பெருமளவில் சேர்க்கப்பட்டு கிராமங்களின் சுற்றுபுறங்களில் உள்ள காயல்களில் அழுக வைக்கப்படும். மெல்லியப் பொருட்கள் எல்லாம் அழுகி விடும். நார் பகுதி மட்டும் எஞ்சி இருக்கும். அதனைக் கொண்டு சென்று எந்திரங்களின் மூலம் கயிறு திரிப்பர். பின்னர் அவை சாயமிடப்பட்டு கவர்ச்சியான கைவினை திறன்மிக்க பொருளாக செய்யப்படும்
 • பெரும்பாலான தேங்காய் நார் தொழிற்சாலைகள் கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உள்ளன. 400000 ற்கும் மேற்பட்ட மக்கள் ஏறத்தாழ 84% பெண்கள் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாரம்பரிய தொழிற்சாலைகள் இன்னும் கேரளாவில் இருந்து கொண்டிருக்கின்றன.
 • நீங்கள் தேங்காய் நார் தயாரிப்புகளை நாடெங்கிலும் உள்ள கேரள மாநில கோ ஆப்ரேட்டிவ் கொயர் மார்கெட்டிங் பெடரேசன் (கோய்ரெஃபெட்) லிருந்து பெற்றுக்கொள்ளலாம். மின்னஞ்சல் மூலம் http://www.coirfed.com என்ற வலைதளத்தில் தேர்வு செய்யும் வசதி அல்லது உங்கள் வடிவமைப்புகளை தேர்வு செய்து பதிவு செய்து வாங்கும் வசதிகள் உள்ளன, இந்த இயற்கைக்கு உகந்த பொருட்கள் நீங்கள் பதிவு செய்த உடனேயே உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலை தரத்தைப் பொறுத்து நூறு ரூபாய்க்கு குறைவான விலையிலிருந்து ஒருசில ஆயிரங்கள் வரையாக நீங்கள் கேட்டுக் கொண்ட பொருளின் நெய்தல் முறை மற்றும் அளவுக்கு ஏற்ப இருக்கும்.

வெங்கல பாத்திரங்கள்

 • இந்தியாவின் மிக புகழ் வாய்ந்த வெண்கலக் கைவேலை பழங்கால நடராஜர் சிலை (சிவபெருமானின் நடனப்படம்) ஆகும். ஆனால் கேரள வெண்கலம் (மணி உலோகம் அல்லது கண் உலோகம்) பொதுவாக ஓடு என்று அழைக்கப்படுறது சிறிய மற்றும் பெரிய பாத்திரங்கள், விளக்குகள் முதலியவை இதில் செய்யப்படுகிறது. பெரிய திரி விளக்குகளின் பல்வேறு வடிவங்கள், அளவுகளாலான ஒவ்வொரு வீடுகளிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
 • வால்கண்ணாடி (வால் கண்ணாடி) செல்வத்தின் தெய்வமான லட்சுமியைக் குறிக்கும். பிற பூஜை பொருட்களான கெண்டி (குறிப்பிட்ட வடிவம் கொண்ட மூக்கு வழியாக நீர் ஊற்றும் பாத்திரம்) உருளி (வாயகன்ற பாத்திரம்) தட்டு முதலியவற்றில் நேர்த்தியாக கைவேலை செய்யப்பட்டிருக்கும். இவற்றுள் பெரும்பாலானவை இன்று கலாச்சார பொருள்கள் கடைகளில் மட்டுமே கிடைக்கிறது. அசல் வெண்கலம் அழகாக இருப்பதோடு விலையும் அதிகம். மலையாளிகள் சமையலறைகளில் இத்தகைய பாத்திரங்கள் நிறைந்திருந்தவை முற்றிலுமாக மாற்றப்பட்டு தற்போது எவர் சில்வர், அலுமினியம் மண்பாண்டம் மற்றும் கண்ணாடிப் பாத்திரங்களாக மாறியுள்ளன.
 • ஆனால் இன்னும் சடங்குகள் மற்றும் சமய திருவிழாக்களின் போது இத்தகைய ஓடு பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உருளி செய்வதற்கு வெவ்வேறு வெண்கலம் (வெள்ளோடு) பயன்படுத்தப்படுகிறது. இதில் பெருமளவு காரீயம் கலக்கப்படுகிறது.
 • உருதொழில் வட கேரளாவில் பெருமளவில் உள்ளது. கன்னூரின் பயான்னூர் மற்றும் குங்கிமங்கலம் திரிச்சூரின் இரிஞ்சலகுடா, பாலக்காட்டின் பள்ளீபுரம் ஆகிய வட கேரளப் பகுதியிலும் ஆலப்புழா மாவட்டத்தின் ஆரமுல்லா மற்றும் மன்னார் பகுதியிலும் ஏராளமான வெண்கல பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன.

கதக்களி மாடல்கள்

 • கதக்களி மற்றும் கதக்களி முகமூடி அல்லது மாடல் இரண்டும் சேர்ந்து மொத்த கேரளாவின் அடையாளமாக கருதப்படுகிறது. சிறிய கலைவடிவ மாடல்கள் அல்லது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ஆல் செய்யப்பட்ட அல்லது மரத்தில் செய்யப்பட்ட முகமூடி ஆகியவை கேரள நினைவுப் பொருட்கள் ஆகும். கதக்களி பொம்மை கதக்களி வேஷத்தின் மறுபதிப்பாக உள்ளது. இது வெவ்வேறு வடிவங்களில் மற்றும் சிறியது முதல் பெரியது வரை எல்லா உருவங்களுக்கும் ஏற்ப அனைத்து வகைகளிலும் கிடைக்கும்.
 • கதக்களி 300 வருட பழைமை வாய்ந்த பாரம்பரிய நடன நாடகம். இது கோமாளி, முத்ரா, மற்றும் இசை அடிப்படையிலான புராணக்கதையோடு கூடிய நடனமாகும்.
 • மனிதன் மற்றும் சூப்பர் மேன் கதாப்பாத்திரங்களுக்கு கதக்களி ஆடைகள் அலங்காரம் ஆகியவை சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே இருக்கும்.
 • தலைக்கவசம் மற்றும் முகத்திற்கான வண்ணம் ஆகியவை கதாப்பாத்திரத்திற்கு கதாப்பாத்திரம் வேறுபடும். பிற கலைவடிவங்களை விடவும் கதக்களி ஆடைகள் தலையணை போன்று தடிமனாக வைத்துத் தைக்கப்பட்ட பாவாடை, கையில்லாத சட்டைகள், ஏராளமான ஆபரணங்கள் பெரிய தலைக்கவசம் என குறிப்பிடும்படி இருக்கும்.
 • கதக்களி பொம்மை மாடல்கள் இந்த அனைத்து சிறப்பினையும் பெற்றிருக்கும். இந்த மாடல்கள் நாடு முழுவதும் உள்ள கைவினைப் பொருட்கள் எம்போரியங்களில் கிடைக்கும். சில குறிப்பிட்ட ஊர்களில் வசிக்கும் கைவினைஞர்களிடம் முதலாவதே சொல்லி வைத்தும் இந்த பொருட்களை வாங்கலாம்.

கிராம்பு

 • கிராம்பு கேரளாவில் பொதுவாக கிடைக்கும் நறுமணப் பொருள் ஆகும். கிராம்பு இயூகினியா, காரியோபைலேட்டா, பூமொட்டு கிராம்பு. கேரளத்தினர் இதனை கிராம்பு அல்லது காரயாம்பு என்று அழைப்பர்.
 • கிராம்பு ‘கரம் மசாலாவில்’ போடப்படும் ஒரு முக்கியமானப் பொருளாகும். (நறுமணப் பொருட்கள் வெவ்வேறு விகிதத்தில் வறுத்து பொடி செய்யப்படுகிறது.) பாரம்பரிய கரம் மசாலா வீட்டிலேயே தயார் செய்து பராமரிக்கப்படுகிறது. ஆனால் தற்போது உடனடியாக பயன்படுத்தும்படி வெவ்வேறு பிராண்ட் பெயர்களில் கிடைக்கிறன. கிராம்பு கறிக்கு மணத்தையும் சுவையையும் கொடுக்கும்.
 • கிராம்புகள் மாநிலதிலுள்ள மளிகை கடைகளில் முத்திரையிடப்பட்ட பாக்கெட்டுகளில் கிடைக்கும். அவற்றை வருடக்கணக்காக பாதுகாத்து வைக்க முடியும்.
 • சமையலுக்கு மணமூட்டும் ஒரு பொருளாக செயல்படுவதோடு மருந்துப் பொருளாகவும் கிராம்பு பயன்படுகிறது. கிராம்பு இலைகளை அரைத்து பல்வலிக்குப் பயன்படுத்தலாம். கிராம்பு எண்ணெய் அசிடிட்டி மருத்துவத்திற்கும் அஜீரணத்திற்கும் நல்ல பயன் கொடுக்கும். தரம் மற்றும் அது விளையும் பருவ காலத்திற்கு ஏற்ப அதன் விலை வேறுபடும்.

வைக்கோல் கலை

காயல்கள் மற்றும் மாலை நேர வானம், வள்ளம்களி (படகு போட்டி) ஊர்த்திருவிழாக்கள் மற்றும் விழாக்கள், குடிசைகள் மற்றும் சிற்றூர்கள், குன்றுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற கேரளாவின் விவரிக்க இயலாத காட்சிகள் அனைத்தும் வைக்கோல் கலை மூலம் உயிர் கொடுக்கப்பட்டு, ஓர் உன்னத இடத்தை பிடித்துள்ளன. இந்த பிரத்தியேகமான வைக்கோலை வெவ்வேறு அளவில் வெட்டி துணிகளில் ஒட்டும் தனித்தன்மை வாய்ந்த கலைக்கு வைக்கோல் சித்திரங்கள் (வைக்கோல் படங்கள்) என்று பெயர்

ஓணம், கிறிஸ்துமஸ், புதுவருடம் ஆகிய திருவிழா காலங்களில் வைக்கோல் வாழ்த்து அட்டை செய்யும் குடிசை தொழில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகவும் நல்ல வருவாய் ஈட்டுவதாகவும் இருக்கும். இந்த வாழ்த்து அட்டைகள் கடையில் கிடைக்கும் பிற அட்டைகளோடு ஒப்பிடும் போது விலை மலிவானதாகவே உள்ளது.

வைக்கோல் கைவினைஞர்கள் பெரும்பாலும் கிராமத்தைச் சார்ந்தவர்களே ஆவர். எனினும் கிராமத்தினருக்கு உரிய எளிமை, எண்ணம் அழகு பற்றிய உணர்வு ஆகியவை இந்த படங்களில் பெருமளவில் மிளிர்வதைக் காணலாம். பெரிய சுவர் அலங்கார பொருட்கள் சில நேரங்களில் இருபக்கமும் பயன்படுத்தக் கூடிய வகையில் சில நேரங்களில் கிடைப்பதுண்டு. இந்த நுட்பமான கைவேலை கலை நுணுக்கமும் புதுமையும் கொண்ட வைக்கோல் படங்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கைவேலைப் பொருட்கள் கடைகளிலும் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன.

கிடைக்குமிடம்

கல்ச்சர் ஷாபீ,

மஸ்காட் ஹோட்டல்,

திருவனந்தபுரம் - 695 033,

கேரளா.

மின்னஞ்சல்: info@cultureshoppe.com, www.cultureshoppe.com

ஆதாரம் : கேரளா சுற்றலாத்துறை

Filed under:
3.125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top