பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி

தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தகவல் தொடர்பில் முன்னேற்றம்

நாம் வாழும் இந்த யுகம் தகவல் யுகம். தகவல் தொடர்புகள் இன்றி இன்றைய உலகம் முன்னேற முடியாது. தகவல் தொடர்புகளைத் தனிப்பட்டத் தகவல் தொடர்புகள், தொழில் சார்ந்த தகவல் தொடர்புகள், பொதுவான தகவல் தொடர்புகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

தனிப்பட்டத் தகவல் தொடர்புகள், தபால், தந்தி, தொலைக்காட்சி மூலம் நடைபெறுகிறது. தொழில் சார்ந்த தொடர்புகள், சட்டங்கள், ஆய்வறிக்கைகள், விளக்கக் கட்டுரைகள் மூலம் நடைபெறுகின்றன. பொதுவான தகவல் தொடர்புகள், மக்கள் தகவல் தொடர்பான செய்தித்தாள்கள், புத்தகங்கள், அறிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் நடைபெறுகின்றன.

தபால் வழித் தொடர்பு

தபால் வழித் தொடர்பு-தனித் தகவல் தொடர்பு ஆகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட தபால் வழித் தொடர்பு மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 1852-ஆம் ஆண்டு முதல், தபால் தலை கராச்சியில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஏறக்குறைய 1.5 லட்சம் தபால் நிலையங்கள் உள்ன. இந்திய தபால் நிலையம் உலகிலேயே மிகப்பெரியது. இந்தியா எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தபால் எண் (Postal Index Number) PIN கொடுக்கப்பட்டுள்ளது. 1975-ல் விரைவுத் தபால் முறை (Speed Post) அமுல் படுத்தப்பட்டது. 1977-ல் செயற்கைக் கோள் மூலம் தகவல் தொடர்பு கொள்ளும் சேவை நடைமுறைக்கு வந்தது. 1995-ல் கிராமப்புற தபால் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

தொலைபேசி

இந்திய தொலைபேசி சேவை நடைபெறுவதற்கு முன்பே தந்தி சேவை தொடங்கப்பட்டது. 1981-82-ஆம் ஆண்டு முதன் முதலில் கொல்கத்தாவில் தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது. 1990-ல் தொலைபேசி சேவை இரயில் வேக்கு விரிவுப்படுத்தப்பட்டது.

1984-ல் உருவாக்கப்பட்ட தொலைநிலை இயக்க மேம்பாட்டு மையம் ஒரு திருப்புமுனை ISD (International Subscriber Dialing) NSD (National Subcriber Dialing) PCO (Public Call Office) போன்றவை எண்ணற்ற அளவில் பயன்பாட்டிலுள்ளன. தனியார் துறை ஊக்குவிக்கப்பட்டன. அதன் விளைவாக அலைபேசி (Cell Phone) பெருமளவில் உருவாகின. இது மின்னணு தொலைத் தொடர்பில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி ஆகும்.

வானொலி தகவல் தொடர்பு

கம்பியில்லாத தந்தி வானொலியின் முன்னோடி. முதல் உலகப் போரின் போது வானொலி இராணுவத்தில் இரகசிய தகவல் தேவைக்காக பயன்படுத்தப்பட்டது.

இந்திய வானொலி தனியார் முயற்சியாகும். 1936 ஜூன் மாதம் இந்திய வானொலி சேவை அகில இந்திய வானொலி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வானொலி நிகழ்ச்சிகளை 1. தேசிய நிகழ்ச்சிகள், 2. மாநில நிகழ்ச்சிகள், 3. உள்ளூர் நிகழ்ச்சிகள் என மூன்றாகப் பிரிக்கலாம். இவை செய்திகள், ஸ்பாட் லைட், இசை, நாடகங்கள், பேச்சுகள், சிறிய நிகழ்ச்சிகள், விவசாய நிகழ்ச்சிகள், தொழிலாளர்கள், பெண்கள் - குழந்தைகள் - தொடர்பான செய்திகள், கருத்துக்கள், குடும்ப நலம், சுகாதாரம், தேசபக்திப் பாடல்கள், சினிமா பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளாக ஒலிபரப்படுகின்றன. இது ஒரு சிறந்த தகவல் தொடர்பு சாதனம் ஆகும்.

பண்பலை வரிசை ஒலிபரப்பு

பண்பலை வரிசை முதன்முதலில் 1977ல் சென்னையில் துவங்கப்பட்டது. இத்துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் மூலம் பல தனியார் பண்பலை வரிசைகள் இன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் பொழுது போக்கு அம்சம் கொண்டவையாக உள்ளன.

தொலைக்காட்சி

வானொலி என்பது ஒலி வடிவம் மட்டும் ஆகும். தொலைக்காட்சி என்பது ஒளியும், ஒலியும் சேர்ந்த வடிவம் ஆகும். 1959 செப்டம்பர் 15ந்தேதி டெல்லி தொலைக்காட்சி மையம் தொடங்கப்பட்டது. 1965 ஆகஸ்டு மாதம் முதல் பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பு நிகழ்ச்சிகள் அறிமுகமாயின. 1976 முதல் இது தூர்தர்சன் (Doordarshan) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

தூர்தர்சனில் அன்றாட செய்திகள், அறிவியல், கலை நிகழ்ச்சிகள், விளக்கத்திரைப்படங்கள், தொடர்கள், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படங்கள், போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இவை தவிர நிபுணர்களின் உரைகள், கலந்துரையாடல், வேளாண்மை, கிராம வளர்ச்சி, உடல்நலம், குடும்ப நலம், சுற்றுச் சூழல், நுகர்வோர் உரிமை பற்றிய தகவல்களும் ஒளிபரப்பாகின்றன.

கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், முறைசாராக் கல்வி நிகழ்ச்சிகள், பல்கலைக்கழக மானியக்குழு வழங்கும் வகுப்பறை நிகழ்ச்சிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற, சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை சிறப்பு இடம் பெறுகின்றன.

கேபிள் டி.வி. வரவால் தொலைக்காட்சி வரலாற்றில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மும்பையில் அடுக்குமாடிக் கட்டிடங்களில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஒட்டல்களுக்கு முதலில் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டது. தனியார் துறை கேபிள் தொலைக்காட்சி வலையங்களை நடத்துவோர் மற்றும் இடைத்தரகர்களின் ஏக போக கட்டுபாடுகளிலிருந்து விடுபட 'வீட்டுக்கு நேரடி தொலைக்காட்சி தொழில்நுட்பம் பயன்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் சிறப்பு ஆண்டெனா வைத்து அனைத்து சேனல்களையும் பார்க்க முடியும்.

தொலைக்காட்சியால் பல எதிர்மறை விளைவுகள் உள்ளன. வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்திய பண்பாட்டுக்கு இணையாக இல்லை. பாலுணர்வு, வன்முறை நிகழ்ச்சிகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இதனால் இளைஞர்கள், சிறுவர்கள் வழிதவற வாய்ப்பு உள்ளது. தொலைக்காட்சி தொடர்கள், மூடநம்பிக்கைகளையும், போலிப் பழக்க வழக்கங்களையும், குடும்ப சண்டைகளையும் பெரிதுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள் இடையே விளம்பரங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இதன் வரவால் திரைப்படத்துறையும், பத்திரிகைத் துறையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. மதுபானம், சிகரெட், பான்மசாலா இவை பற்றிய விளம்பரங்கள் தூர்தசனில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கேபிள் தொலைக்காட்சிகளில் தடை செய்யப்படவில்லை. எனவே எதிர்மறை விளைவுகள் அதிகமாக உள்ளன.

பத்திரிக்கை தகவல் தொடர்பு

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய பத்திரிக்கைகள் சிறப்பாகச் செயல்பட்டன. 1868ல் அமிர்த பஜார் பத்திரிக்கை (Amrita Bazar Patrika) ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, முதல் இந்திய பத்திரிக்கை வரலாறு ஆரம்பமானது. விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்கள் பத்திரிக்கை வாயிலாகவே மக்களிடம் பேசினர். சுதந்திர உணர்வுகளைத் தட்டி எழுப்பினர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் - பிரிவு-19, பத்திரிக்கை சுதந்திரப் பாதுகாப்பு அளிக்கிறது. பத்திரிக்கைகள் சுதந்திரமாக செயல்பட்டால் மட்டும் போதாது. அது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அரசுக்கு ஆதராகவோ, எதிரிப்போ இன்றி, நடுநிலையோடு செயல்பட வேண்டும். இன்று பல பத்திரிக்கைகள் மக்களின் குரலாக ஒலிக்கின்றன. நலிவடைந்தோருக்கு நீதி கிடைக்க, வறுமை, வேலையின்மை, சத்துணவு, வியாபாரம், வருமான உயர்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுச் செய்திகள் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கின்றன.

இன்று இந்தியாவில் 101 மொழிகளில் (தேசிய மற்றும் வட்டார கிளை மொழிகள்) நாளிதழ்களும், வார மாத, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு இதழ்களும் வெளியிடப்படுகின்றன. தகவல் தொழில் நுட்பம் பெருகிவிட்ட இக்காலத்தில் அனைத்துப் பத்திரிக்கைகளும், இன்டெர்நெட் மூலம் மிகக் குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் வலம் வருகின்றன.

திரைப்படங்கள் மூலம் தகவல் தொடர்பு

திரைப்பட காலத்திற்கு முன்பு, நாடகத்துறை செல்வாக்கு பெற்றிருந்தது, நாடகங்களைப் போன்று திரைப்படங்கள் கலை வடிவங்களாக இல்லை, நாடகம் ஒரு மலிவான மக்கள் பொழுது போக்கு அம்சம் ஆகும். 1896-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ந்தேதி லூமியோ சகோதரர்கள் மும்பையில் "திரைப்படக் கண்காட்சி"நடத்தினர். 1896-க்கும் 1930-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆயிரம் ஊமைப்படங்கள் வந்தன. 1931-ல் பேசும் திரைப்ட சகாப்தம் தொடங்கியது. இன்று திரைப்படத்துறை அறிவியல் தொழில்நுட்பம் கொண்டு சிறப்பாகச் செயல்படுகின்றது. குறிப்பாக கிராபிக்ஸ், 3D அனிமேஷன் இவற்றின் மூலம் பல தந்திரக் காட்சிகள் மூலம் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.

திரைப்படங்களின் அபரித ஆற்றல், மக்களை நல்வழிக்கு அழைத்து செல்ல வேண்டும். இது ஒரு சிறந்த தகவல்தொடர்பு சாதனம் ஆகும்.


தகவல் தொடர்பு

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை

3.4375
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top