பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

டி.இ.டி அளவீடுகளும் இயக்கமும்

டி.இ.டி அளவீடுகளும் இயக்கமும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

*  தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது - அளவீடு எனப்படும்.

*  தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு - அலகு எனப்படும்.

*  பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.

*  எந்த ஒர் அளவீடும் அனைவருக்கும் ஒரே அளவைத்தான் தரவேண்டும் என்பது - திட்ட அளவீடு

*  மீட்டர், கிலோகிராம், வினாடி போன்றவை - திட்ட அலகுகளாகும்.

*  நிளம், நிறை, காலம் - அடிப்படை அளவுகள் ஆகும். இவை வேறு எந்த அளவுகளைக் கொண்டும் பெற இயலாது.

*  FPS முறை - அடி, பவுண்டு, வினாடி *  CGS முறை - சென்டிமீட்டர், கிராம், வினாடி

*  MKS முறை - மீட்டர், கிலோகிராம், வினாடி

*  பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960. இதனை SI அலகு முறை என்பர்.

*  நீளம், நிறை, காலம் - SI அலகுமுறையின் அடிப்படை அளவுகளாகும்.

*  நீளத்தின் அலகு - மீட்டர் *  நிறையின் அலகு - கிலோகிராம்

*  காலத்தின் அலகு - வினாடி *  1மீட்டர் = 1000 மில்லிமீட்டர் கொண்டது.

*  1மீட்டர் = 100 சென்டிமீட்டர் கொண்டது. *  1கிலோமீட்டர் =1000 மீட்டர் கொண்டது.

*  ஒரு கிராம் = 1000 மில்லி கிராம் கொண்டது.

*  ஒரு கிலோகிராம் = 1000 கிராம் கொண்டது.

*  நிறையை அளவிட சட்டத்தராசு, இற்பியல் தராசு, மின்னணுத் தராசு போன்றவை பயன்படுகிறது.

*  மணலில் உள்ள பருப்பொருளின் அளவைவிட அரிசி, பஞ்சு போன்றவற்றின் பருப்பொருளின் அளவு குறைவானது.

*  ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோகிராம்.

*  ஒரு மணி = 3600 வினாடிகளைக் கொண்டது.

*  ஒரு குவிண்டால் = 100 கிலோகிராம் கொண்டது.

*  ஒரு வினாடி = 1000 மில்லி வினாடி கொண்டது.

*  ஒரு வினாடி = 10,00,000 மைக்ரோ வினாடி கொண்டது.

*  ஒரு நிமிடம் - 60 வினாடி கொண்டது.

*  ஒரு மணி = 60 நிமிடம் கொண்டது.

*  ஒரு நாள் = 24 மணி நேரம் கொண்டது.

*  ஒரு ஆண்டு = 365 1/4 நாள்கள் கொண்டது.

*  ஒரு மெட்ரிக்டன் = 1000 கிலோகிராம் கொண்டது.

*  தங்கத்தின் நிறையை அளக்க கிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.

*  மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்களின் நிறை - மில்லி கிராம் என்ற அலகால் குறிப்பிடுகிறோம்.

*  ஒரு கிலோகிராமை விட அதிக நிறையை உடைய கரும்பு, பருத்தி போன்ற பொருள்களை அளக்க மெட்ரிக்டன், குவிண்டால் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.

*  அரிசி, சர்க்கரை போன்றவற்றை அளக்க கிலோகிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.

*  முற்காலத்தில் காலத்தை அளக்க சூரியக் கடிகாரம், மணல் கடிகாரம், நீர்க்கடிகாரம் போன்றவை பயன்படுத்தப்பட்டன.

*  உசல் கடிகாரம், கைக்கடிகாரம், நிறுத்துக்கடிகாரம் போன்றவை காலத்தை அளக்க பயன்படுகின்றன.

*  பூமியின் நிறையைப்போல் சூரியன் 3,20,000 மடங்கு அதிக நிறை கொண்டது.

*  ரோபோவின் தந்தை எனப்படுபவர் - ஐசக் அசிமோ.

*  ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச் சொல்.

*  ரோபோவின் மூளையாக செயல்படுவது - மின்னணுச் சில்லு(Chip)

*  நேரத்தைப் பொருத்துப் பொருத்துப் பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும்.

*  பொருத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருந்தால், அது ஒய்வு நிலையில் உள்ளது என்கிறோம்.

*  ஒய்வும் இயக்கமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது.

*  ஒரு பொருள் நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கினால் அத்தகைய இயக்கம் நேர்கோட்டு இயக்கம்

*  நேர்கோட்டு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - தானே விழும் பொருளின் இயக்கம், மின்தூக்கியின் இயக்கம்(Lift)

*  ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாக வைத்து வட்டப் பாதையில் இயங்கினால், அத்தகைய இயக்கம் - வட்ட இயக்கம் எனப்படும்.

*  குடைராட்டினம், கடிகாரத்தின் முள், மாவு அரைக்கும் இயந்திரம் போன்றவை வட்ட இயக்கத்தை சேர்ந்தவை.

*  வட்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - கடிகார முள்முனையின் இயக்கம், மின்விசிறியின் இறக்கைகளில் ஏதேனும் ஒர் இடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியின் இயக்கம்.

*  சுழற்சி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - பம்பரத்தின் இயக்கம், மின்விசிறியின் இயக்கம், குடை இராட்டினத்தின் இயக்கம்.

*  சீரலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம், சுவர் கடிகார ஊசலின் இயக்கம், சுண்டிவிடப்பட்ட    வீணைக் கம்பியின் இயக்கம், பூமியைச் சுற்றி வரும் நிலவின் இயக்கம், சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்.

*  தன்னிச்சையான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம், கால் பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம்.

*  அலகுகளை வரிசைப்படுத்துக: வினாடி, நிமிடம், மணி, வாரம், மாதம், ஆண்டு, மில்லி வினாடி, மைக்ரோ வினாடி.

*  நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதான நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர் வரை இருக்கும்.

ஆதாரம் : கல்விச்சோலை

3.13793103448
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top