பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜூலியஸ் சீஸர்

ஜூலியஸ் சீஸர் பற்றிய ஒரு சிறு தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கி.மு. 75-ம் வருடம் சட்ட திட்டங்களில் நிபுணத்துவம் பெறுவதற்காக, கிரேக்க நாட்டுக்கு கடல் வழிப் பயணமானார் 25 வயது இளைஞரான ஜூலியஸ் சீஸர். எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த அனைவரும் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டார்கள். ‘20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் நபரை விடுதலை செய்கிறோம்’ என ஒவ்வொருவரின் நாட்டுக்கும் தனித்தனியாகத் தகவல் அனுப்பினார்கள். உடேன சீஸர் கோபமாகி, ‘‘என் விலை 20 தங்கக் காசுகள்தானா?! என்னைக் கேவலப்படுத்தாதீர்கள். 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள்’’ என்றார் தோரணையோடு. கொள்ளையர்கள் அலட்சியமாகச் சிரிக்க, ‘‘சிரிக்காதீர்கள். உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட என்னால் முடியும்’’ என்றார். கொள்ளையர்கள் மேலும் சிரித்தார்கள்.

சக பயணி ஒருவர், ‘‘எதற்காக இப்படி உன்னை நீயே உயர்வாகப் பேசி கொள்கிறாய்! அது உனக்கே ஆபத்தாக முடியலாம்’’ என்று எச்சரிக்க, ‘‘நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள். அரச நீதி நூல்களில் சொல்லியிருப்பதைத்தான் நான் கடைப்பிடித்து வருகிறேன்’’ என்றார் சீஸர்.

பின்னர், 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்து வெளியே வந்ததும், வீரம் மிக்க ஆட்களைத் திரட்டிக்கொண்டு போய் கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு, தான் சொன்னது போலவே அவர்கள் அத்தனை பேரையும் கழுத்தை அறுத்துக் கொன்றார். இந்த வெற்றியைப் பெரும் பொருட்செலவு செய்து கொண்டாடினார். ‘‘ஏன் இப்படிச் சுய தம்பட்டம் அடிக்கிறார்கள்?’’ எனப் பிறர் கேட்டபோது, ‘‘உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே!’’ என கூறினார்.

சுமார் ஒன்பது ஆண்டுகள் நடந்த இந்த ‘கவுல்’ போராட்டத்தில், சுமார் இருபது லட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து லட்சம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர். இந்தப் போர், சீஸ‌ருக்கு செனட் சபையிலும், மக்கள் மனதிலும் நிரந்தர இடத்தையும், பெரும் வீரன் என்கிற புகழையும் பெற்றுத் தந்தது. அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை ஜூலியஸ் சீஸர். ரோம் நகர அதிகாரத்தில் இருந்த மரியஸ், சீஸரின் உறவினர். எனவே, சீஸரால் மிக எளிதாக படைத் தலைவராகி, போர்களில் பங்கேற்று வெற்றிகள் குவிக்க முடிந்தது. மரியஸுக்குப் பின் ஆட்சியைப் பிடித்த ‘சுல்லா’வின் பேத்தியைத் திருமணம் செய்துகொண்டு, செனட் சபையில் முக்கிய இடம் பிடித்தார் சீஸர். மிகப் பெரும் செலவில் பிரமாண்டமான ஸ்டேடியம் அமைத்து, ‘அடிமைகளின் மரண விளையாட்டு’ நடத்தி, மக்களிடம் பெரும் புகழ் பெற்றார். கி.மு.58-ல் ஐரோப்பிய கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் இடம்பெயர்ந்து, ‘கவுல்’ நோக்கி வருகிறார்கள் என்றதும், அவர்களால் ரோம் நகருக்கு ஆபத்து வருமெனப் படையுடன் கிளம்பினார் சீஸர்.

ரோம் நகரின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாகச் செயல்படத் தொடங்கினார் ஜூலியஸ் சீஸர். ரோமன் காலண்டர் மாற்றியைமக்கப்பட்டது. நகரெங்கும் சீஸரின் சிலைகள் நிறுவப்பட்டன. நாணயங்களில் அவரது உருவம் பொறிக்கப்பட்டது. தன் புகழ் இந்த பூமி உள்ளவரை நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, பெரும் செலவுகள் செய்தார் சீஸர். அவரை இனியும் விட்டுவைத்தால், ரோம் சீரழிந்துவிடும் என அவருக்கு வேண்டப்பட்டவர்கள் சிலரே கொல்லத் துணிந்தார்கள்.

எல்லோரும் அவரைக் கத்தியால் குத்த, மகன் போல் தான் நினைத்திருந்த புரூட்டஸிடம் ஓடினார் சீஸர். அவனும் கத்தியெடுத்துக் குத்தவே, ‘‘யூ டூ புரூட்டஸ்’’ என்று பதறித் துடித்தபடி உயிரைவிட்டார். ஜூலியஸ் சீஸர் விமர்சனத்துக்கு உரியவராக இருந்தாலும், அவரைப் புகழின் உச்சியில் ஏற்றிவைத்தது, ‘உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே!’ என்கிற அவரது மந்திரச் சொல்தான்.

நன்றி : எஸ்.கே.முருகன் , பா சீனிவாசன்

ஆதாரம் - tamilclone

Filed under:
2.86666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top