பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இணையத் தமிழ் இதழ்களின் வகைப்பாடு

இணையத் தமிழ் இதழ்களின் வகைப்பாடுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உலகம் முழுவதும் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இணையத்தின் செயல்பாடு அண்மையில்தான் பல்வேறு வழிகளில் பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டுள்ளது. அண்மைக்காலம் வரையில் இணையத்தின் செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றில் பெரும்பாலும் ஆங்கிலமொழியே பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு நாடுகள் இணையத்தைப் பலவழிகளில் பயன்படுத்தத் தொடங்கியபின் அந்தந்த நாட்டு மொழிகள் இணையத்தில் இடம்பெறும் தேவை ஏற்பட்டது. எந்தத் துறையின் அறிவும் அம்மக்கள் பேசும் மொழியில் இருந்தால்தான் அது மக்களை எளிதில் சென்றடையும். அப்போதுதான் மக்களால் பெரிதும் பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் தமிழ்மொழி இணையத்தில் இடம்பெற வேண்டிய தேவையைக் காலம் ஏற்படுத்தித் தந்தது. இயற்கை மொழிஆய்வு அடிப்படையில் தமிழை நோக்கும் போது மற்ற எந்த மொழிகளை விடவும் தமிழுக்கு அதிக பொருத்தமும், சிறப்பும் இருக்கிறது. இதுவே இணையத்தில் தமிழ் வளரப் பெருந்துணையாக இருக்கிறது.

இணைய இதழியல்

இன்று கல்வி, வணிகம், வங்கி சேவைகள், பொறியியல், மருத்துவம், வேளாண்மை போன்ற பல்வேறு துறைகள் கணினி தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேறி வருகின்றன. இவ்வரிசையில் இதழியல் துறையும் முன்னேறி வருகிறது. அச்சு இதழியல் தொழிற்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கணினி ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிர இணையத்தில் இதழியல் என்ற பிரிவும் தற்போது சிறப்புற நடைபெறுகிறது.

அச்சில் வருகிற இதழ்களைப் போன்றே இணையத்தில் நூற்றுக்கணக்கான இதழ்கள் வருகின்றன. இவற்றை இணைய இதழ்கள் (E-Jourbals/ E-Zines) என்று குறிப்பிடுவர்.

இணையத்தில் இதழ்கள் தோன்றக்காரணம்

அச்சு ஊடகம், ஒலி ஊடகம், காட்சி ஊடகம் என எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டு உருவான இணைய ஊடகத்தின் வளர்ச்சி, கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் மிக சாதாரணமாக கருதப்பட்ட இணைய ஊடகங்கள் கடந்த சில வருடங்களில் உள்ளடக்கம், கட்டமைப்பு என எல்லாவற்றிலும் முன்னேறியிருக்கின்றன. ஊடக மொழிகளில் இணையத்தைப் பயன்படுத்துவதில் தமிழின் பங்களிப்பு சிறப்பானதாகவே உள்ளது. இதற்குப் பெருமளவில் துணை நின்றவர்கள் புலம்பெயர் தமிழர்களும், தொழில் நிமித்தமாக அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழர்களேயாவர். நாடு, இனம், மொழி எனக் கடல்கடந்து சென்றாலும் தம் தமிழர்கள் பண்பாடு, மொழி, கலை போன்றவற்றால் தமக்கான அடையாளத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் தமிழைப் பேசவும், கேட்கவும் வழி இல்லாமல் இருந்த நிலையில் இணயைம் மூலம் கருத்துக்களையும், தகவல்களையும் பரிமாறிக்கொள்ள இணைய தளங்களையும், இணைய இதழ்களையும் தோற்றுவித்தனர்.

“தமிழில் இணைய தளங்கள் உருவாவதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அரசியல் காரணங்களால் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் அயல்நாடுகளுக்குப் பரவி வாழ வேண்டிய தேவை 1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்டது. அதுபோல் தமிழகத் தமிழர்கள் பணியின் பொருட்டு அயல்நாடுகளுக்குச் செல்ல நேரிட்டது. இவ்வாறு தமிழகத்திலிருந்து பிரிந்து சென்ற மக்கள் தாயகத்துடன் தொடர்பு கொள்ளவும் பிற நாடுகளில் வாழுபவர்களுடன் தொடர்பு கொள்ளவும் இணைய தளங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அதுபோல் தாம் வாழும் நாடுகளில் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தினர். அதற்கெனத் தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள், வளர்ச்சி நிறுவனங்களை உருவாக்கினர். தம் பணிகளை வெளிவுலகிற்கு வெளிப்படுத்த இணையதளங்களைப் பயன்படுத்தினர்.

அவ்வகையில் இணையத்தில் தமிழை அயர்நாட்டுத் தமிழர்கள் 1986 முதல் பயன்படுத்தத் தொடங்கினர். முதல் முயற்சியாகத் தாங்கள் உருவாக்கிய தமிழ் எழுத்துருக்களைக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பி, உறவை வளர்த்தனர். தமிழ் எழுத்துருக்களின் உருவாக்கத்தின் தொடர்ச்சியாக தமிழில் இணையதளங்கள், இணைய இதழ்கள் வடிவமைப்பதில் தொழிற்நுட்ப வல்லுநர்களும் தமிழறிஞர்களும் ஈடுபட்டனர்.

இதனால் முதல் தமிழ் இணைய இதழ் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளில் இருந்தும் தமிழ் இணைய இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் உலகளவில் தமிழர்களின் உணர்வுகளையும், படைப்புக்களையும் காணமுடிகிறது.

இதழ்களின் பணிகள்

செய்திகளைப் பெறுவதும், பிறருக்குத் தருவதும் ஆகிய கலையைப் பற்றிச் சொல்வது இதழியல் எனப்படும். தனிமனித விருப்பமும், சமுதாயத் தேவைகளும்தான் இதழ்கள் பிறப்பிற்குக் காரணமாயின. இன்றைய வாழ்வில் செய்தி ஊடகங்களில் இதழ்கள் முதலிடம் பெற்றுத் திகழ்கின்றன. “அச்சுக் கருவியின் சிறந்த உருவாக்கம் இதழ்களே. உலகை ஒன்று சேர்க்கும் வலிமை வாய்ந்த மக்கள் தொடர்புக் கருவி இதழ்களேயாகும்”

பல்வேறு வகையான செய்திகளையும், நாட்டுநடப்புகளையும் ஒருங்கே தருவன இதழ்கள். இத்தகைய இதழ்களுக்கென்று தலையாயப் பணிகள் உண்டு. அவையாவன,

அறிவித்தல்

இதழ்களின் முதன்மைப்பணி மக்களுக்குச் செய்திகளைத் தருவதாகும். அனைத்துச் செய்திகளையும் உடனுக்குடன் உண்மையாகவும், விருப்பு வெறுப்பின்றியும், சிதைக்காமல் முழுமையாகத் தரவேண்டும்.

அறிவித்தல் பணியை இதழ்கள் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அகில இந்தியச் செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் கூட்டம் (All India Newspaper Editor’s Conference) இதழ் குழுவிற்கு அளித்த குறிப்பில் ‘இதழியல் நடப்பு நிகழ்ச்சிகளையும், கருத்துக்களின் போக்குகளையும் மக்களுக்குத் தெரிவிக்கவும், விரிந்து செல்லும் பரப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், சுட்டிக்காட்டவும், பல்வேறு வகையான கருத்துக்களையும் வெளிக்காட்டும் வகையில் நடைமுறைச் சிக்கல்கள் பற்றிய விவாதத்தைத் தூண்டவும் முயலவேண்டும். இவற்றிற்கெல்லாம் செய்திகளையும் (News), கண்ணோட்டங்களையும் (View) துல்லியமாக நடுநிலையில் வெளியிடுவதும், மோதுகின்ற இலட்சியங்களை பற்றின்றி மதிப்பீடு செய்வதும் தேவையானதாகும்’ என்று விளக்கம் கூறியிருக்கிறது.

அறிவுறுத்தல்

எந்தவொரு செய்தியினையும், அதன் விளைவுகளோடு வாசகர்களுக்குத் தெரிவிப்பது இதழ்களின் அறிவுறுத்தல் பணியாகும்.

மகிழ்வித்தல்

இதழ்களின் மற்றொரு பணி வாசகர்கள் சோர்ந்துவிடாமலிருக்கும்படி அவர்களின் உணர்வுகளுக்குத் தக்க செய்தியினைத் தந்து மகிழ்விக்க வேண்டும்.

“இதழ்கள் கண்ணைக்கவரும் வண்ண ஓவியங்களையும் கருத்தைக் கவரும் சிறுகதைகளையும், உணர்வை அள்ளும் கவிதைகளையும், புதுமை மணம் கமழும் கட்டுரைகளையும், நகைச்சுவைகளையும், சமுதாயத்தில் புகழ்பெற்றோரின் பேட்டிகளையும், மக்களை ஆட்டிப்படைக்கும் திரைப்படங்களையும், நடிகர்-நடிகைகளைப் பற்றிய துணுக்குகளையும் நாட்டில் நடைபெறும் விந்தைமிகு செய்திகளையும் வெளியிடுகின்றன

இவை வாசகர்களை மகிழ்விப்பதோடு, இதழ்களின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

வாணிபம் செய்தல்

எந்தவொரு தொழிலும் வாணிப நோக்கத்தோடுதான் செயல்படுகின்றன. அப்போதுதான் அவற்றைத் தொடர்ந்து நடத்த முடியும். ஆதலால் இதழ்கள் வாணிப நோக்கத்தோடும் செயல்பட வேண்டியுள்ளது. ஓரளவு வருவாய் தேடிக்கொள்ளும் இதழ்களால் மட்டுமே துணிச்சலாகக் கருத்துக்களைக் கூறமுடிகிறது. இதழ்களில் விளம்பரங்கள் வெளிவருவது ஒரு வகையில் தங்களது வருவாயைப் பெருக்கிக் கொள்ளத்தான். குறைந்த விலையில் அச்சு இதழ்கள் கிடைப்பதற்கும், இலவசமாக இணையத்தில் பார்வையிட முடிகிற இணைய இதழ்களுக்கும் விளம்பர வருவாய் பெருமளவு துணை செய்கின்றன.

மேலும், இதழ்களுக்கு வாசகர்களைக் கவர பல வழிமுறைகள் உண்டு. ஆனால், அதே நேரம் வாசகர்களின் நலன் கருத வேண்டும். எந்தவித ஐயப்பாட்டிற்குரிய செய்திகளையும் வெளியிடக்கூடாது. மேலும், ஒவ்வொரு இதழுக்கும் பக்கம் சாராமை, பண்பாடு, விளக்கப்பணி, கருத்தை உருவாக்கும் பணி எனப் பல பணிகளுண்டு. இவற்றைக் கருத்தில் கொண்டு வரும் இதழ்களே இலக்கினை அடைகின்றன.

இணையத்தில் மின்னிதழ்கள்

  • தகவல் தொடர்பில் இதழியல் ஓர் அடிப்படைத்தளம். பொதுச் செய்திகளையும், கருத்துக்களையும், பொழுதுபோக்குகளையும் முறையாக நம்பகமான வகையில் பரப்பும் இதழியற் பணிகள் இணையத்தின் வழியே நிகழ்த்தப்படும் பொழுது அவை இணைய இதழ்கள் எனப்படுகின்றன.
  • இணையத்தில் பல்வேறு மின் இதழ்கள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிட்ட ஒரு துறைசார்ந்த இதழ்களும், இலக்கிய இதழ்களும், பல்சுவை இதழ்களும் அடங்கும். இவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஏற்கெனவே மக்களிடையே புகழ்பெற்றக் காகித இதழ்களின் மின்னேற்ற வடிவம். மற்றொன்று மின்னிதழ்களாகவே தோற்றம் பெற்றுப் பல்வேறு அம்சங்களுடன் இணையத்தில் வலம் வரும் இணைய இதழ்கள்.

அச்சிலும் இணையத்திலும் வெளிவரும் இதழ்கள்

அச்சு இதழ்களாக வெளிவரும் இதழ்கள் பெருமளவு வாசகப்பரப்பை அடைய வேண்டும் என்ற நோக்கில் இன்று இணையத்திலும் தம் இதழ் பக்கங்களை வெளியிடுகின்றன. இவ்வாறு அச்சிலும் இணையத்திலும் வெளியிடப்படுகின்ற இதழ்கள் இரண்டு வழிமுறைகளில் வெளிவருகின்றன. ஒன்று அச்சு இதழ் வடிவமைப்பு போலவே அதே வடிவமைப்பில் E-paper என்ற வகையில் வெளியிடுவது. மற்றொன்று இதழ் செய்திகளைத் தொகுத்து நிரல் படுத்தி, தமிழகம், இந்தியா, அரசியல், பொது செய்திகள், சினிமா என்று பகுத்து வழங்குவது.

மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்று வெளிவருகின்ற அச்சிதழ்கள் பெரும்பாலும் இன்றைக்கு இணையத்திலும் தம் பக்கங்களை வெளியட்டுவருகின்றன. அச்சில் வந்து கொண்டிருக்கின்ற நாளிதழ்கள், மாலை இதழ்கள், வார இமழ்கள், மாத இதழ்கள், காலாண்டிதழ்கள் என அனைத்து இதழ்களும் இணைய இதழ்களாக வெளிவருகின்றன.

தினமலர் (www.dinamalar.com)

அச்சில் நாளிதழாக வெளிவருகின்ற தினமலர் இணையத்தில் www.dinamalar.com எனும் இணைய முகவரியில் வெளிவருகிறது. இணைய இதழின் தன்மைக்கு ஏற்ப இருபத்திநான்குமணி நேரமும் உடனுக்குடன் புதிய செய்திகளை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. அரசியல், பொதுவான செய்திகள், கோர்ட், உலகம், தமிழகம், மாவட்டம், விளையாட்டு, வர்த்தகம், சினிமா, டீ கடைபெஞ்சு, டவுட் தனாபலு, இது உங்கள் அடம், பக்க வாத்தியம், சொல்கிறார்கள், காட்டூன்ஸ், ஜோசியம், இதப்படிங்க முதல்ல போன்ற அச்சில் வெளியிடுகிற செய்திகளையும், ‘இ-ஆன்மிகமலர், கல்விமலர், கலைமலர், டெல்லிஉஷ், வீடியோ, கோயில்கள், புத்த மதிப்புரை, உலகத்தமிழர் செய்திகள், நகரத்தில் நடந்தவை, சிறப்புப்பகுதி, காலண்டர், கூடங்குளம் ஸ்பெஷல், செலிபிரிட்டி வண்ணம், இன்றைய செய்திகள், தற்போதைய செய்திகள், தினமலர் செய்தி (வீடியோ), கருத்துக்கணிப்பு, சினிமா கேலரி என்று அச்சு இதழில் வெளியிட முடியாத செய்திகளையும் தம் இணைய இதழில் வெளியிடுகின்றன. அது மட்டுமின்றி வாரம் முழுக்க இணைப்பிதழாக வெளிவருகிற கம்ம்யூட்டர் மலர், சிறுவர் மலர், ஆன்மிக மலர், வார மலர் போன்ற அச்சு இதழையும் இணைத்து வெளிவருகின்றன.

மாலைமலர் (www.malaimalar.com )

அச்சில் தினமும் மாலைநேரங்களில் வெளிவருகிற மாலைமலர் இணையத்தில் www.malaimalar.com எனும் முகவரியில் வெளிவருகிறது. அச்சு இதழைப்போல் இல்லாமல் உடனுக்குடன் செய்திகளை தரவேற்றம் செய்து வருகிறது. தலைப்புச்செய்திகள், உலகச்செய்திகள், தேசியச்செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள் என அச்சில் வெளிவருகிற செய்திகளோடு ‘ஆன்மிகம், ஆரோக்கியம், வீடியோ, காலச்சுவடுகள், ஹலோ FM, E-paper’ போன்று இணைய இதழின் வடிவமைப்போடு செய்திகளை உடனுக்குடன் வெளியிடுகின்றன.

விகடன் (www.vikatan.com)

வார இதழாக அச்சில் வெளிவருகிற ஆனந்த விகடன் இணையத்தில் www.vikatan.com எனும் முகவரியில் வெளிவருகிறது. இணையத்தில் இம்முகவரியில் ஆனந்தவிகடன், ஜுனியர் விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், மோட்டார் விகடன், பசுமை விகடன், டாக்டர் விகடன் என விகடன் குழுமத்தில் இருந்து வெளிவருகிற அனைத்து வார இதழ்களையும் ஒரே இணைய முகவரியில் வாசகர்கள் தேர்வு செய்து படிக்கும் வகையில் வெளிவருகிறது. மற்றும் உடனுக்குடன் செய்திகளையும் பதிவேற்றுகின்றன. ‘செய்திகள், ஹைலைட் செய்திகள், ஒலிவடிவம், விகடன் வெப் டி.வி., இன்றைய கேலரி, யூத் ஃபுல் விகடன்’ என்று இணையத்தில் மட்டும் வெளியிடுகிற செய்திகளையும் வெளியிடுகின்றன.

புதிய தலைமுறை (www.puthiyathalaimurai.com)

அச்சில் வார இதழாக வெளிவருகிற புதியதலைமுறை இதழ் இணையத்தில் www.puthiyathalaimurai.com எனும் முகவரியில் இணைய இதழாக வெளிவருகிறது. இந்த வாரம், சென்ற வாரம், மின்-இதழ்கள், விதைகள், வாசகர் வட்டம், பிரசுரங்கள் எனும் செய்திகளை தலைப்பிட்டு வெளிவருகிறது. மற்றும் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி ஆகிய இரு இதழ்களின் செய்திகளையும் பதிப்பிக்கின்றன.

உலகத் தமிழர் (www.worldtamils.com )

கனடாவில் வார இதழாக வெளிவருகிற உலகத்தமிழர் எனும் இதழ், இணையத்தில் www.worldtamils.com (உலகத் தமிழர் இணையம்) எனும் முகவரியில் நாளிதழாக வெளிவருகிறது. அச்சு இதழின் பதிப்பனை அப்படியே E-paper எனும் பகுதியில் வெளியிடுகின்றது. மற்றும் செய்திகள், கட்டுரைகள், புகைப்படத்தொகுப்பு, கருத்துக்களம், காணொளிகள், உலகச்செய்திகள், இந்தியா, கனடா, விளையாட்டு, விழுதுகள், இராசிபலன், சினிமா, அரசியல், அறிவியல், மருத்துவம் போன்ற செய்திகளை வெளியிடுகின்றன. துயர் பகிர்வுகள் (மரண அறிவித்தல்கள்) எனும் பகுதியில் ஈழத் தமிழர்களின் மரண அறிவிப்புகளை அவர்களின் புகைப்படங்கள், முகவரிகளோடு வெளியிடுகின்றன. உலகமெங்கும் ஈழத்தமிழர்கள் பரவி வாழ்ந்துவருவதால் இலங்கையிலும். புகலிட நாடுகளிலும் உள்ளோர் அறிந்து கொள்ளும் வகையில் இத்தகவலை பதிவு செய்கின்றனர்.

அச்சு இதழ்கள் இணையத்தில் வெளிவரும் போது அச்சில் வருகிற இதழ் செய்தியோடு உடனுக்குடன் செய்திகளை தரவேற்றம் செய்தும், செய்திகள் குறித்த வீடியோக்கள், ஒலி வடிவில் செய்திகளையும் மற்றும் பல்வேறு சிறப்பு பக்கங்கள் பலவற்றையும் இணைத்து வெளிவருகின்றன.

இணையத்தில் அச்சிதழ்கள் பெற்ற மாற்றங்கள்

நாள், வார, மாத இதழ்களாக வரும் அச்சிதழ்கள் இணையத்தில் சில மாற்றங்களைப் பெற்று வெளிவருகின்றன. அவற்றில் முதலாவதாகப் பல்லூடகத் தன்மையை அவை பெறுகின்றன. முதல் பக்கத்திலேயே அனைத்துச் செய்திகளைப் பற்றிய தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் நாம் நேரடியாகத் தலைப்பினைத் தேர்வு செய்து படிக்க முடிகிறது. நாள் முழுவதும் செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்கின்றன. சில செய்திகளுக்கு அதன் முக்கியத்துவம் கருதி வீடியோக்களை வெளியிடுகின்றன. ஒலி வடிவிலும் செய்திகளை வழங்குகின்றன. புகைப்படச் செய்திகள் அனைத்தும் வண்ணத்தில் அமைகின்றன. இதனால் கூர்ந்து படிக்கும் வசதி கிடைக்கிறது. வாசகர்களிடம் இருந்து கருத்துக் கணிப்பில் பெறும் வசதி உள்ளதால் செய்திகளின் முக்கியத்துவம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.

வணிக நோக்கில் அமையும் தேவையற்ற செய்திகளை அச்சு இதழ்கள் இணையத்தில் தவிர்த்து விடுகின்றன. விளம்பரங்கள் அதிகளவில் இடம்பெறுவதில்லை. இவ்வாறு அச்சு இதழ்கள் இணையத்திலும் சில மாற்றங்களைப் பெற்று இணையத்தில் வலம் வருகின்றன.

வகைகள்

செய்திகளை பதிப்பிக்கும் கால அளவீட்டைக் கொண்டு இதழ்களை நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், மாதமிருமுறை இதழ்கள், காலாண்டிதழ்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. அச்சு இதழ்களைப் போன்றே இணைய இதழ்களும் இவ்வகைப்பாட்டுக்குள் அடங்கும்.

‘அச்சில் வெளிவரும் நாளிதழ்கள் காலமுறையில் இரண்டாகப் பகுக்கப்படுகின்றன. காலையில் வெளியிடப்படும் நாளிதழ்கள் “காலை நாளிதழ்கள்” என்றும் மாலையில் வெளியிடப்படும் நாளிதழ்கள் “மாலை நாளிதழ்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன’.

ஆனால் இந்த காலமுறை இணைய நாளிதழ்களுக்குப் பொருந்துவதில்லை. ஏனெனில் இணைய நாளிதழ்கள் நாள் முழுவதும் செய்திகளை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. அதனாலேயே இணைய இதழ்கள் அதிகளவில் பார்வையிடப்படுகிறது.

தினமலர் - www.dinamalar.com

தினமணி - www.dinamani.com

தினத்தந்தி - www.dailythanthi.com

தினகரன் - www.dinakaran.com

தினபூமி - www.dinaboomi.com

மாலைமலர் - www.maalaimalar.com

தமிழ்முரசு - www.tamilmurasu.com

மாலைச்சுடர் - www.malaisudar.com

முரசொலி - www.murasoli.com

நமது எம்.ஜி.ஆர்

தீக்கதிர் - www.theekkathir.com

விடுதலை - www.viduthalai.com

தமிழ்சினிமா - www.tamilcinema.com

தட்ஸ்தமிழ் - www.thatstamil.com

வெப்உலகம் - www.webulagam.com

பிபிசிதமிழ் - www.bbctamil.com

கூடல் - www.koodal.com

தமிழம் - www.tamilam.com

சென்னை ஆன்லைன் - www.chennaionline.com

கோடம்பாக்கம்டுடே - www.kodampakkamtoday.com

தமிழ்மீடியா - www.tamilmedia.com

தங்கம் - www.thangam.com

தமிழ்க்குறிஞ்சி - www.tamilkurinji.com

அதிகாலை - www.athikaalai.com

இந்நேரம் - www.inneram.com

தினஇதழ் - www.dinaedhal.com

வெப்துனியா - www.webthunia.com

வணக்கம் இந்தியா - www.vanakamindia.com

வீரகேசரி - www.veerakesari.com

உதயன் - www.udhayan.com

தினக்குரல் - www.dinakural.com

தமிழ்மிறர் - www.tamilmirror.com

ஈழநாதம் - www.eelanatham.com

தமிழ்முரசு - www.tamilmurasu.com

இன்றைய தமிழகம் - www.indrayathamizhkam.com

அதரதெரண - www.atharathen.lk

இருக்கிறம் - www.erukiromnews.com

உலகத்தமிழர் இணையம் - worldstamils.com

வியப்பு - www.viyappu.com

சுடர்நிலா - www.sudarnila.com

இனியொரு - www.enioru.com

அந்திமழை - www.anthimazhai.com

கலாபம் - www.kalabam.com

புதினப்பலகை - www.puthinapalagai.com

அதிர்வு - www.athirvu.com

இயுதமிழர் - www.eutamilar.com

கனடாமுரசு - www.canadamurasu.com

அலைகள் - www.alaigal.com

நெருடல் - www.nerudal.com

தமிழ்வின் - www.tamilwin.com

தினக்கதிர் - www.dinakathir.com

தமிழோவியம் - www.tamilzhoviam.com

நெய்தல் - www.neithal.com

எழில்நிலா - www.eazhinila.com

தாய்த்தமிழ் - www.thainilam.com

ஈழப்பிரஸ் - www.wwlampress.com

தமிழ்க்கதிர் - www.tamlikkathir.com

சங்கதி - www.sangathi.com

தினசரி - www.thinasari.com

தமிழ்மீடியா24 - www.tamilmedia24.com

மனிதன் - www.manithan.com

நிலவரம் - www.nilavaram.com

தமிழ்லீடர் - www.tamilleader.com

மீனகம் - www.meenagam.com

உயர்வு - www.uyirvu.com

புலர்வு - www.pularvu.com

குளோபல் தமிழ்நியூஸ் - www.globaltamilnews.com

தமிழா - www.tamilzha.com

தாளம்நியூஸ் - www.thalamnews.com

புதிய யாழ்பாணம் - www.newjaffna.com

ஈழம்டைம்ஸ் - www.eelamtimes.com

இன்போதமிழ் - www.infotamil.com

பொங்குதமிழ் - www.ponguthamil.com

2தமிழ் - www2tamil.com

நாதம் - www.naatham.com

உலகத்தமிழ் இணையம் - www.worldtamilweb.com

சிறிலங்கா எக்ஸ்பிரஸ் - www.srilankaxnews.com/tamil/

தினக்கதிர் - www.dinakkathir.com

தாய்நிலம் - www.thainilam.com

விறுவிறுப்பு - www.viruviruppu.com

எதிரி - www.ethiri.com

வினவு - www.vinavu.com

தேனீ - www.theni.com

அலைசெய்திகள் - www.newsalai.com

வெப்ஈழம் - www.webeelam.com

லங்காஸ்ரீ - www.lankasri.com

பெரும்பாலான இணைய நாளிதழ்கள் அச்சிலும் இணையத்திலும் வருகின்றன. அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து இணையத்தில் மட்டும் வெளிவரும் இணைய இதழ்களும், இந்தியாவின் பிற மாநிலங்கள், இலங்கை, உலகின் பல பகுதிகளில் இருந்தும் இணையத்தில் மட்டும் வெளிவரும் இணைய நாளிதழ்களும் வெளிவருகின்றன.

வார இதழ்கள்

அச்சில் வருகிற வார இதழ்களைப் போன்று இணையத்திலும் வாரம் ஒருமுறை செய்திகளை தரவேற்றுகின்ற இதழ்கள் இணைய வார இதழ்கள் எனப்படுகின்றன.

ஆனந்தவிகடன் - www.anandavikatan.com

குமுதம் - www.kumutham.com

கல்கி- www.kalki.com

சினிக்கூத்து - www.cinekoothu.com

சினிமாஎக்ஸ்பிரஸ் - www.cinemaexpress.com

நந்தவனம் - www.nandhavanam.com

த சண்டே இந்தியன் - www.thesundayindian.com

சங்கொலி - www.songoli.com

ஒருபேப்பர்- www.orupaper.com

ஈழமுரசு - www.eelamurasu.com

சுதந்திரன் - www.sudhanthiran.com

திசைகள் - www.thisaigal.com

சல்கண்டு - www.kalkandu.com

கீற்று- www.keetru.com

திண்ணை - www.thinnai.com

உயிரோசை - www.uyiyosai.com

தடாகம் - www.thadagam.com

பதிவுகள் - www.pathivugal.com

சுவிஸ்முரசம் - www.swissmurasam.com

முழக்கம் - www.muzhkkam.com

வார்ப்பு - www.varppu.com

நிலாச்சாரல் - www.nilacharal.com

யாழ்தேவி - www.yaldevi.com

ஷோபாசக்தி - www.shobasakthi.com

நிச்சாமம் - www.nichmam.com

தூமை - www.thoomai.wordpress.com

கட்டுரை - www.katturai.com

தங்கமீன் - www.thangameen.com

புதியதலைமுறை - www.puthiyathalaimurai.com

இணைய வார இதழ்களில் அச்சில் வருகிற வார இதழ்களின் மின் பதிப்பும் வருகின்றன. அது மட்டுமின்றி இணையத்தில் வருகிற இணைய வார இதழ்களும் பெருமளவில் உலகம் முழுவதிலும் இருந்து வருகின்றன. மற்றும் ஜுனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் என வாரமிரு இணைய இதழ்களும் இணையத்தில் வெளிவருகின்றன.

மாத இதழ்கள்

இணையத்தில் நாள், வார இதழ்களைப் போன்று பல்வேறு மாத இணைய இதழ்கள் வெளிவருகிறது.

காலச்சுவடு - www.kalasuvadu.com

உயிர்மை - www.uyirmai.com

மங்கையர்மலர் - www.mangaiyarmalar.com

உண்மை - www.unmai.com

கணையாழி - www.kanaiyazhi.com

காட்சிப்பிழை திரை - www.kaatchippizhai.com

சாந்தமாமா- www.chndamama.com

பெரியார்பிஞ்சு - www.periyarpinju.com

தன்னம்பிக்கை - www.thannambikkai.com

செம்மலர் - www.semmalar.com

கலைகேசரி - www.kalaikesari.com

புதினம் - www.puthinam.com

வரலாறு - www.varalaru.com

மலேசியத்தமிழர்- www.malaysiatamil.com

புதுச்சேரி - www.pudhucherry.com

ஊடறு - www.oodaru.com

கவிமலர் - www.kavimalar.com

விகடன் வழங்கும் மாத இதழ்கள்

அவள் விகடன் - www.vikatan.com/avalvikatan

சுட்டி விகடன் - www.vikatan.com/suttivikatan

சக்தி விகடன் - www.vikatan.com/shakthivikatan

நாணயம் விகடன் - www.vikatan.com/naanayamvikatan

மோட்டார் விகடன் - www.vikatan.com/matorvikatan

பசுமை விகடன் - www.vikatan.com/pasumaivikatan

டாக்டர் விகடன் - www.vikatan.com/doctorvikatan

குமுதம் வழங்கும் மாத இதழ்கள்

குமுதம் ஜோதிடம் - www.kumutham.com/jothidam/

குமுதம் பக்தி - www.kumutham.com/bhakthi/

குமுதம் சிநேகிதி- www.kumutham.com/snegithi/

குமுதம் ஹெல்த்ஸ்பெஷல் - www.kumutham.com/helth/

குமுதம் தீராநதி - www.kumutham.com/theranathi

மற்றும் நக்கீரன் இணைய இதழ் பாலஜோதிடம், ஓம், இனிய உதயம், பொது அறிவு, ஹெல்த் சாய்ஸ் எனும் மாத இதழ்களை வெளியிடுகிறது.

விகடன், குழுதம், நக்கீரன் ஆகிய மூன்று இதழ்களும் தம் நிறுவனத்தால் வெளியடப்படும் வார மாத அச்சிதழ்களை இணையத்திலும் வெளியிடுகிறது. இவ்விதழ்களை பதிவு செய்தே படிக்க இயலும். ஆயினும் சில கட்டுரைகளை இலவசமாக இணையத்தில் இவ்விதழ்கள் வெளியிடுகின்றன.

மாதமிருமுறை வரும் இதழ்கள்

மாதமிருமுறை பதிப்பிக்கப்படும் இணைய இதழ்கள் சில இணையத்தில் வருகின்றன.

முத்துக்கமலம் - www.muthukamalam.com

சொல்வனம் - www.solvanam.com

அகல்விளக்கு - www.agalvilakku.com

பதியம் - www.pathiyam.com

ஆகிய இணைய இதழ்களும் பழ.நெடுமாறன் அச்சில் வெளியிடுகிற தென்செய்தி எனும் மாதமிரு இதழும் இணையத்தில் வெளிவருகிறது.

காலாண்டிதழ்கள்

தமிழமுதம்- www.tamilamutham_singai.blogspot.com

வல்லினம் - www.vallinam.com

காவ்யா - www.kaavya.com

புதுவிசை - www.puthuvisai.com

இணைய இதழ்களை அவை வெளியிடும் செய்திகளின் உள்ளடக்க அடிப்படையில் பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன. “இதழ்களில் வெளிவருகின்ற செய்திகள், படைப்புகள் ஆகியவற்றில் எவை மேலோங்கியிருக்கிறதென்ற அடிப்படையில் இதழ்களைப் பல்வேறு வகைகளில் பிரித்துப்பார்க்கலாம்”13

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்

3.08571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top