பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இணையத்தில் மட்டும் வெளிவரும் இதழ்கள்

இணையத்தில் மட்டும் வெளிவரும் இதழ்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அச்சு இதழ்களின் வடிவமைப்பில் இருந்து மாறுபட்டு பல்லூடகத் தன்மையுடன் இணையத்தில் வருகிற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படுகின்றன. இன்றைய அச்சு இதழ்களில் செய்திகளைக் கணிப்பொறியில் தட்டச்சு செய்வர்; பக்கமாக்குர்; ஒளிப்படம் ஆக்குர்; அதை அச்சு எந்திரத்தில் பொருத்தித் தாளில் அச்சிடுவர். பின்னர் பல்வேறு ஊர்களுக்கு விநியோகிப்பாளர் மூலமாக அனுப்புவர். அவ்வூர் முகவர் வழியாக வாசகரை இதழ்கள் சென்றடையும்.

ஆனால், இணைய இதழானது கணினியில் தட்டச்சு செய்து, அச்செய்திகளுக்குத் தேவையான புகைப்படங்கள், வீடியோ அல்லது அசைவூட்டுப்படங்களை இணைத்து பதிவேற்றுவர். உடனே இது எந்த விநியோகிப்பாளரும் இன்றி நேரிடையாக நம் கணினி, அல்லது செல்பேசி வழியாக வாசகர்களைச் சென்றடைகிறது. சில இணைய இதழ்கள் வானொலியைப் போன்று ஒலிவடிவிலும் செய்திச் சேவையை வழங்குகிறது. இத்தகைய இதழ்களே இணைய இதழ்கள் எனப்படுகிறன.

சென்னை ஆன்லைன் (www.tamil.chennaionline.com)

சென்னை ஆன்லைன் எனும் இணைய இதழ் இருபத்திநான்கு மணி நேரமும் செய்திகளை புதுப்பிக்கும் நாளிதழாகும். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் செய்திச் சேவையை வழங்குகிறது. ‘செய்திகள், சினிமா, கேலரி, பக்கங்கள், ஒளிப்படம், ஆன்மிகம், ஜோதிடம், இலக்கியம், கட்டுரைகள், அங்காடி’ என்று செய்திகளை பகுத்து வழங்குகிறது.

உயிரோசை (www.uyirmmai.com/uyirosai/ )

உயிர்மை மாதஇதழின் இணைய இதழ் முகவரியான www.uyirmmai.com தளத்தில் வார இதழாக இணையத்தில் மட்டும் வெளிவரும் உயிரோசை எனும் இதழ் வெளிவருகிறது. திங்கட்கிழமை தோறும் இவ்விதழ் புதுப்பிக்கப்படுகிறது. ‘கட்டுரை, கவிதை, சிறுகதை’ என வாரந்தோறும் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளைப் பதிவு செய்யப்படுகிறது. மேலும் இவ்விதழில் சாருநிவேதிதா (www.charuonline.com), ஜெயமோகன் (www.jeyamohan.in), எஸ்.ராமகிருஷ்ணன் (www.sramakrishnan.com) ஆகியோரது இணைய பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

நந்தவனம் (www.ilakkiyam.nakkheeran.in)

அச்சிதழான நக்கீரன் தனது இணைய இதழில் இலக்கிய வார இதழாக www.ilakkiyam.nakkheeran.in எனும் முகவரியில் ‘நந்தவனம்’ எனும் இணைய இதழை வெளியிடுகிறது. இவ்விதழில் பல்வேறு ஆளுமைகளின் ‘நேர்காணல்கள், கவிதை, கட்டுரைகள், படித்ததும் பிடித்ததும், நிகழ்வுகள்’ என வெளியிடுகிறது.

அதிர்வு (www.athirvu.com )

கனடாவில் இருந்த வெளிவரும் இருபத்திநான்கு மணி நேர செய்தி நாளிதழ் அதிர்வு. 2005 முதல் இவ்விதழ் தொடர்ந்து இயங்கி வருகிறது. ‘முகப்பு, சினிமா எக்ஸ்பிரஸ், விளையாட்டுசெய்திகள், தொழிற்நுட்பம், இந்தியச் செய்திகள், கனேடியச் செய்திகள், விந்தை உலகம்’ என செய்திகளை வழங்குகிறது. இவ்விதழில் எந்த செய்திகளை வாசகர்கள் அதிகம் படித்தனர் என்றும் பட்டியல் இட்டுள்ளனர். மற்றும் உலகச் செய்திகள், உளவுத்துறை செய்திகள் போன்றவற்றினையும் வழங்குகின்றனர்.

தமிழ்மீடியா24 (www.tamilmedia24.com )

தமிழ்மீடியா24 எனும் இதழ் ‘இலங்கை, இந்தியா, உலகம், சிங்கப்பூர்-மலேசியா’ என்று பகுத்து செய்திகளை வெளியிடும் நாளிதழாகும். இவ்விதழில் ‘செய்திகள், ஜோதிடம், வாழ்த்துக்கள், துயர்பகிர்வுகள், தொழிற்நுட்பம், சிறப்புச் செய்தி, அறிவியல், ஆரோக்கியம், உணவு, மகளிர் பக்கம், கவிதை, சிறுகதை, ரேடியோ’ எனவும் செய்திகளை வழங்குகிறது. மற்றும் இலவசமாக விளம்பரம் செய்திடவும் வாய்ப்பளிக்கிறது. வேலைவாய்ப்புத் தகவல்களையும் தருகிறது.

சொல்வனம் (www.solvanam.com )

மாதமிருமுறை வெளியாகும் இணைய இதழ் சொல்வனம். இவ்விதழில் ‘அரசியல், அறிவியல், இசை, இலக்கியம், சமூகம் எனும் தலைப்பில் கட்டுரைகள் வெளியாகிறது. இலக்கியத் தொடர் கட்டுரைகளையும், மொழிப்பெயர்ப்பு இலக்கியங்களையும் வெளியிடுகின்றன. மற்றும் வாசகர்களிடம் இருந்து அறிவியல், கணிதம், சுற்றுசூழல், பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது என்று அறிவிப்பினையும் வெளியிட்டு editor@solvanam.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்கப்படுகிறது. இத்தகைய அறிவிப்பு பல்வேறு வாசகர்களை படைப்பாளி ஆக்கும் முயற்சியாகும்.

இவ்வாறு இணையத்தில் மட்டும் வெளியாகும் இணைய இதழ்கள் நாளிதழ், வார இதழ்கள், மாத இதழ்கள், மாதமிருமுறை, காலாண்டிதழ்கள் என செய்திகளை வெளியிடும் கால அளவுகளைக் கொண்டு வெளிவருகிறது.

தமிழகத்திலிருந்து வரும் இதழ்கள்

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்து வருவதால் உலகின் பல இடங்களில் இருந்து தமிழில் இணைய இதழ்கள் நடத்தப்படுகிறது. எனவே நிலவியல் அடிப்படையில் இவற்றை நோக்க வேண்டியது அவசியமாகிறது. அவ்வகையில் தமிழகத்திலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள் பின்வருமாறு அமைகிறது.

 • தினமலர்
 • தினமணி
 • தினத்தந்தி
 • தினகரன்
 • தினபூமி
 • மாலைமலர்
 • தமிழ்முரசு
 • மாலைச்சுடர்
 • விடுதலை
 • முரசொலி
 • நமது எம்.ஜி.ஆர்.
 • தீக்கதிர்
 • சங்கொலி
 • கூடல்
 • தமிழம்
 • சென்னை ஆன்லைன்
 • தமிழ்மீடியா
 • தங்கம்
 • தமிழ்ச்குறிஞ்சி
 • அதிகாலை
 • இந்நேரம்
 • தினஇதழ்
 • கோடம்பாக்கம்டுடே
 • என்வழி
 • வணக்கம் இந்தியா
 • சுடர்நிலா
 • அந்திமழை
 • தமிழ்சினிமா
 • அலைசெய்திகள்
 • விகடன்
 • நக்கீரன்
 • சினிக்கூத்து
 • பாலஜோதிடம்
 • ஓம்
 • இனிய உதயம்
 • பொதுஅறிவு
 • ஹெல்த்சாய்ஸ்
 • குழுதம்
 • கல்கண்டு
 • கல்கி
 • மங்கையர் மலர்
 • கீற்று
 • காவ்யா
 • காலச்சுவடு
 • உயிர்மை
 • சினிமா எக்ஸ்பிரஸ்
 • கணையாழி
 • காட்சிப்பிழைதிரை
 • தென்செய்தி
 • புதுவிசை
 • பெரியார்பிஞ்சு
 • தன்னம்பிக்கை
 • செம்மலர்
 • சமையலறை
 • கவிமலர்
 • தமிழ்த்திணை
 • தடாகம்
 • வேளாண்மை
 • தமிழகம்
 • வரலாறு
 • முத்துக்கமலம்
 • அப்புசாமி
 • வினவு
 • சவுக்கு
 • கட்டுரை
 • சொல்வனம்
 • அகல்விளக்கு
 • கீற்று
 • தலித்முரசு
 • பெரியார்முழக்கம்
 • பூவுலகு
 • மண்மொழி
 • தமிழர் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
 • மாற்றுவெளி
 • சமூகநீதித் தமிழ்தேசியம்
 • மாற்று மருத்துவம்
 • புன்னகை
 • மாற்றுக்கருத்து
 • கருஞ்சட்டைத் தமிழர்
 • கனவு
 • உங்கள் நூலகம்
 • சிந்தனையாளன்
 • மக்கள் ரிப்போர்ட்
 • உழைக்கும் மக்கள் தமிழகம்
 • பாசறை முரசு
 • தாமரை
 • அறிவியல் வெளிச்சம்
 • கருக்கல்
 • புதிய புத்தகம் பேசுது
 • இளைஞர் முழக்கம்
 • புதுவிசை
 • அகநாழிகை
 • ஹோமியோ முரசு
 • அணங்கு
 • அடவி
 • அநிச்ச
 • குதிரை வீரன் பயணம்
 • வனம்
 • இன்மை
 • தக்கை
 • சஞ்சாரம்
 • கூட்டாஞ்சோறு
 • புதுஎழுத்து
 • வழி
 • கதைசொல்லி
 • உன்னதம்
 • கவிதாசரன்
 • அணி
 • புதியபோராளி
 • சமூகவிழிப்புணர்வு
 • விடுதலை முழக்கம்

தமிழகத்தில் இருந்து வருகிற இணைய இதழ்கள் பெரும்பாலனவை அச்சு இதழ்களின் மீள்பிரசுரமே. ஏற்கெனவே அச்சில் வந்து மக்களிடையே செல்வாக்கு பெற்றுள்ள பல்சுவை இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் சிற்றிதழ்கள் பெரும்பாலும் இணையத்தில் இதழ்களாக வருகின்றன. கீற்று இணைய இதழ் பல்வேறு சிற்றிதழ்களை தம் இணையப் பக்கத்தில் இலவச இணைப்பிதழாக தருகிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வரும் இதழ்கள்

இந்தியாவில் பிற மாநிலங்களிலிருந்து பல்வேறு இடங்களில் இருந்தும் ஒரு சில இணைய இதழ்கள் நடத்தப்படுகின்றன.

தட்ஸ்தமிழ் (www.thatstamil.oneindia.com )

பெங்களுரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் செய்திச்சேவை நிறுவனம் தமிழ், கன்னடம், செலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இவ்விதழை நடத்துகிறது. ‘செய்திகள், சினிமா, லைப் ஸ்டைல், ஜோதிடம், ஆசிரியர் பக்கம், வீடியோ, கேலரி, கோப்புகள்’ என செய்திகளைத் தருகிறது. இவ்விதழ் ஒரு பொருளில் அடிக்கடி வாசகர்களிடமிருந்து கருத்துக்கணிப்பினையும் நடத்துகிறது. ‘தட்ஸ்தமிழ்’ இணைய இதழில் கோப்புகள் எனும் பகுதியில் 2001-ஆம் ஆண்டிலிருந்து இன்றைய நாள்வரை நாள், கிழமை வாரியாக வெளிவந்த பழைய செய்திகளை (பழைய இதழ்களை) பார்க்கும் வசதியும் உள்ளது. இத்தகைய வசதி இணைய இதழ்களில் மட்டுமே சாத்தியமாகிறது.

தி சண்டே இந்தியன் (www.thesundayindian.com/ta/ )

புதுதில்லியில் இருந்து செயல்படும் ‘தி சண்டே இந்தியன்’ எனும் அச்சு வார இதழ் இணையத்திலும் செயல்படுகிறது. இவ்விணைய இதழில் ‘தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பெங்காளி, கன்னடம், போஜ்பூரி, தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி, அஸ்ஸாமி, ஒரியா, பஞ்சாபி என பதிநான்கு மொழிகளில் செய்திகளைத் தருகிறது. அரசியல், வணிகம், தற்போதைய செய்திகள், வலைப்பூ, விரிவான செய்திகள், காணொளி, வெள்ளித்திரை, கருத்துக் கணிப்பு என இவ்விதழ் இயங்குகிறது. பண்டிகை நாட்களில் சிறப்பிதழையும் வெளியிடுகிறது. மற்றும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ‘சாந்தமாமா’ எனும் சிறுவர் இதழும், மத்திய பிரதேசம், இந்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘வெப்துனியா’ எனும் நாளிதழும் தமிழில் வெளிவருகின்றன.

கல்வி நிறுவனங்கள் நடத்தும் இதழ்கள்

இன்றைக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களுக்கென்று இணையத் தளங்களை வைத்துள்ளன. இத்தகைய கல்வி நிறுவனங்களுள் ஒரு சில தமிழில் இணைய இதழ்களையும் நடத்துகின்றன.

திருச்சிராப்பள்ளியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் (பொறியியல்) www.theautianz.in எனும் முகவரியில் மாணவர்களுக்கென்று கல்வி இதழை நடத்துகிறது. இவ்விதழில் ஆங்கிலம் மற்றும் தமிழில் அறிவியல் கட்டுரைகளை வெளியிடுகின்றது. மற்றும் திருச்செங்கோட்டில் இயங்கிவருகிற கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி www.ksrcasthamizh.blogspot.in எனும் முகவரியில் ‘விடியல்’ எனும் மாத இதழை நடத்துகிறது. இவ்விதழில் ஆசிரியர்களும் மாணவர்களும் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் குறித்த கட்டுரைகளை எழுதி வருகின்றனர்.

இது போன்று தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி www.tanuvas.tn.nic.in எனும் முகவரியில் ‘மீன்வளக்கதிர்’ எனும் காலாண்டிதழையும், ‘கால்நடைக்கதிர்’ எனும் இருமாத இதழையும் நடத்துகிறது.

அமைப்புகளால் வெளியிடப்படும் இதழ்கள்

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் தமிழர்கள் அமைப்புகளைத் தோற்றுவித்து தம் இணையப் பக்கங்களின் வாயிலாக உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு இதழ்களை நடத்திவருகின்றனர்.

ஹாங்காங்

ஜப்பானின் தலைநகர் ஹாங்காங்கில் ‘தமிழ் பண்பாட்டுக் கழகம் ஹாங்காங்’ www.tcahk.com/ta/ எனும் முகவரியில் கழகத்தின் நிகழ்வுகள், உணவு முறைகள், கலாச்சாரம், செய்திகள், இந்திய தூதரகம், ஆண்டு நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றன. 11-07-2000 முதல் ஹாங்காங் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். தம் இதழ் பக்கங்களை தமிழ், ஆங்கிலத்தில் அமைத்துள்ளனர்.

இலண்டன்

இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் இயங்கிவரும் இவ்வமைப்பு உலகத்தமிழர்களின் சுரண்டலுக்கெதிராகவும், குறிப்பாக ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடும் அமைப்பாக செயல்படுகிறது. www.tamilsolidarity.org எனும் முகவரியில் தம் இதழை நடத்துகிறது. தினமும் செய்திகளை பதிவேற்றுகின்றனர்.

பிரான்ஸ்

பிரான்சில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கான அமைப்பு ‘ஈழத்தின் சிறுகதைகள்’. இவ்வமைப்பு www.eelamboys.net எனும் இதழை நடத்திவருகிறது. இலங்கைச் செய்திகள், பிரித்தானியா செய்திகள், இந்தியா, உலகம், கவிதைகள், உங்கள் ஆக்கங்கள் என செய்திகளைப் பகுத்து தருகிறது. இவ்விதழை சமூக வலைதளங்களில் இணைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. தினந்தோறும் செய்திகளை பதிவேற்றுகிறது.

அமெரிக்கா

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைப்பு www.tgte_us.org எனும் முகவரியில் ‘தமிழீழ அரசு’ எனும் இதழை வெளியிடுகிறது. இவ்விதழ் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரனால் நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து வெளிவருகிறது.

சிட்னி

ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் உள்ள தமிழர்கள் www.australiantamilcongress.com எனும் முகவரியில் தம் அமைப்பு குறித்த தகவல்களையும், செய்திகளையும் மாத இதழாக நடத்திவருகின்றனர்.

கனடா

கனடாவில் இயங்கிவரும் தமிழ் இளையோர் அமைப்பு www.canadatyo.org எனும் முகவரியில் தம் இதழ் பக்கத்தை நடத்திவருகிறது. தினமும் ஈழத்தமிழர் குறித்த தகவல்களை பதிவேற்றுகின்றனர். செய்திகள் பதிவேற்றப்படும் நேரத்தையும் குறிப்பிடுகின்றனர். செய்திகள், புகைப்படத் தொகுப்பு, காணொளி, ஆவணங்கள் எனப் பகுத்து செய்திகளை வெளியிடுகின்றனர்.

டென்மார்க்

டென்மார்க்கில் உள்ள தமிழர்களின் அமைப்பு www.tamileelam.dk எனும் முகவரியில் மாத இதழை நடத்துகின்றது. தமிழ் ஈழம், செய்திகள், காணொளி, ஆவணங்கள் என செய்திகளை வெளியிடுகின்றன. இத்தகைய அமைப்புகள் வாயிலாக தமிழர்கள் ஒருங்கிணைக்கப்படுவதுடன் நமது மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுதுகள் அறுந்து விடாமல் பாதுகாத்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து வரும் இதழ்கள்

ஆசியாவில் முதல் வானொலி ஒலிபரப்பைத்தொடங்கிய இலங்கை, தமிழகத்திற்கு அடுத்தபடியாக அதிகளவில் தமிழர்கள் வசிக்கும் நாடாகும். பூர்வீகத் தமிழர்களும், இந்திய வம்சாவழித் தமிழர்களும் உள்ள இலங்கையில் இதழியல் துறையும் சிறப்புற அமைந்துள்ளது. அத்தகைய இலங்கையில் இருந்து பல்வேறு இணைய இதழ்கள் வெளிவருகிறது.

வீரகேசரி (www.virakesari.lk)

இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி அச்சிலும் இணையத்திலும் வெளிவரும் நாளிதழ். முக்கியச் செய்திகள், இந்தியச் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், காணொளிகள், வானொலி செய்திகள், சேவை, இ-பேப்பர், வணிகச் செய்திகள், விஞ்ஞானம்-தொழிற்நுட்பம், இலங்கையின் வடக்கு, கிழக்குச் செய்திகள், சினிமா, பொழுதுபோக்கு, மலையகச் செய்திகள் என செய்திகள் வெளியிடுகிறது.

அததெரண (www.adaderana.lk )

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வெளியாகும் அததெரண www.adaderane.lk எனும் நாளிதழ் தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மும்மொழிகளில் செய்திச் சேவையினை வழங்குகிறது. விசேட செய்திகள், சிறப்புக்காணொளி, நிகழ்வுகள், சந்திப்புகள் (காணொளி), ராசிபலன், கேலிச்சித்திரம், மக்கள் குரல், கருத்துக் கணிப்பு, சினிமா, தமிழகம், விளையாட்டு, வணிகம் என செய்திகள் வெளியிடுகின்றன. நாள் முழுவதும் செய்திகள் புதுப்பிக்கப்படுகிறது.

இருக்கிறம் (www.irukkiramonline.com )

கொழும்புவிலிருந்து வெளியாகும் இணைய நாளிதழ் 2007-ஆம் ஆண்டு மாதமிருமுறை அச்சிதழாக வந்து, பின்னர் வார இதழாக ஆரம்பிக்கப்பட்டு நிதியுதவி இன்மையால் தற்போது இணையத்தில் நாளிதழாக வெளிவருகிறது. தலைப்புச் செய்திகள், சர்வதேசம், விளையாட்டு, மருத்துவம், சினிமா, தொழிற்நுட்பம், அரசியல், காணொளிகள், அரசியல் கட்டுரைகள், உண்மையின் பதிவு, க்ரைம் ஸ்டோரி, விருந்தினர் பக்கம், மாற்று சினிமா, கேலிச்சித்திரம் எனச் செய்திகளை வெளியிடுகிறது. மற்றும் யாழ்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பறை, திருகோணமலை, மலையகம் எனச் செய்திகளை வெளியிடுகிறது.

இவ்வாறு இலங்கையில் இருந்து வெளியாகின்ற இணைய இதழ்கள் தமிழ், ஆங்கிலம், சிங்களம் என செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஏற்கெனவே இலங்கையில் இருந்து வெளிவந்த பல்வேறு இணைய இதழ்கள் இறுதி யுத்தத்திற்குப் பிறகு பல நின்றுவிட்டன. குறைவான இணைய இதழ்களே இன்று வெளிவருகின்றன. அங்கு நிலவுகிற அரசியல் சூழல்களின் பிரதிபலிப்பு இதழ்களின் வழியாக அறிய முடிகின்றது.

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள்

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுள் சிங்கப்பூர் ஒன்றாகும். சிங்கப்பூர் மக்கள் தொகையில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராக இருப்பதால் சிங்கப்பூரில் இருந்து ஒரு சில இணைய இதழ்கள் வருகின்றன.

தமிழ்முரசு (www.tamilmurasu.com.sg)

சிங்கப்பூரில் இருந்து ‘தமிழ்முரசு’ www.tamilmurasu.com.sg எனும் இதழ் அச்சிலும் இணையத்திலும் வெளிவருகிறது. இவ்விதழில் ‘சிங்கப்பூர், இந்தியா, உலகம், இளையர் முரசு, தலையங்கம், திரைச்செய்தி, படங்கள்’ என பகுக்கப்பட்டு செய்திகள் வெளியாகின்றன. தமிழகத்தில் இருந்து சன் குழுமத்தால் வெளிவரும் தமிழ்முரசு இதழுக்கும் இவ்விதழுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தங்கமீன் (www.thangameen.com)

தங்கமீன் எனும் இணைய இதழ் வாரம் ஒரு முறையும், சில நேரங்களில் செய்திகளுக்கு தக்கவாறும் புதுப்பிக்கப்படுகிறது. ‘சிறுகதை, கவிதை, கட்டுரை, நிகழ்வுகள், அறிவிப்புகள், சிறப்பு நிகழ்ச்சி, சமூக நிகழ்ச்சி, குடும்ப நிகழ்ச்சி, கருத்தரங்குகள், இளையர் நிகழ்ச்சி, போட்டி நிகழ்ச்சி, பயிலரங்கக்கவிதைகள், வாசகர் வட்டம் என செய்திகளைப் பதிவிட்டுள்ளது. மற்றும் கடந்த இதழ்களைப் பார்வையிடும் வசதியும் உள்ளது. இவ்விதழ் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தமிழ்மொழி, பண்பாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. தங்கமீன் பதிப்பகத்தாரால் இவ்விதழ் நடத்தப்படுகிறது. மற்றும் சிங்கப்பூரில் இருந்து தமிழமுதம் www.tamilamutham_singai.blogspot.in எனும் காலாண்டிதழும் வெளிவருகிறது.

மலேசியாவிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள்

மலேசியாவில் 2010-ஆம் ஆண்டின் கணக்கின்படி சுமார் 1.5 மில்லியன் தமிழர்கள் வசிக்கிறார்கள். “தொன்று தொட்டே மலேசிய நிலப்பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்புகள் இருந்தாலும் குடியேற்றவாத காலப்பகுதியில் பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் குடிவழியினரே பெரும்பாலான மலேசியத் தமிழர்கள் ஆவார்கள்.”7

இங்கு தேசிய மொழியாக மலாய் இருக்கிறது. மற்றும் மலாய், சீனம், தமிழ் கலந்த மேங்கிலிசு எனும் மொழியாக பேசப்படும் அளவிற்கு தமிழின் செல்வாக்கு உள்ளது. மலேசியாவில் இருந்து ஒரு சில இணைய இதழ்கள் வெளிவருகின்றன.

மலேசிய நண்பன் (www.nanban24.com )

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 1986-இல் தொடங்கப்பட்ட அச்சு நாளிதழ் மலேசிய நண்பன். தற்பொழுது இணையத்திலும் வெளிவருகிறது. ‘செய்திகள், கட்டுரைகள், நிகழ்வுகள், பொழுதுபோக்கு, விளையாட்டுச் செய்திகள், உலகச்செய்திகள்’ என செய்திகளைத் தருகிறது. இவ்விதழைப் படிப்பதில் எழுத்துரு சிக்கல் உள்ளது.

செம்பருத்தி (www.semparuthi.com )

தமிழ், ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய நான்கு மொழிகளில் அச்சிலும் இணையத்திலும் வெளிவருகிறத நாளிதழ் செம்பருத்தி. இவ்விதழ் கடந்த 123 ஆண்டுகளாக அச்சல் வெளிவருகிறது. “தலைப்புச் செய்திகள், கட்டுரைகள், தமிழீழச் செய்திகள், உலகவலம், காணொளி, கலந்துரையாடல், தமிழகம், இந்தியச் செய்திகள், பல்சுவைப் பக்கம் ஆகிய செய்திகளோடு சமூக வலைதளங்களில் இவ்விதழை இணைக்கும் வசதியும் உள்ளது. அடிக்கடி செய்திகளைப் புதுப்பிக்கின்றனர்.

மலேசியத் தமிழர் (www.malaysiatamil.com )

மலேசியாவில் உள்ள ஈழத்தமிழர்களால் நடத்தப்படும் இணைய இதழ் ‘மலேசியத் தமிழர்’ ஆகும். மலேசியத் தமிழர்கள், தமிழீழம், அரட்டை, சினிமா செய்திகள், தமிழகம், உலகச்செய்திகள் என செய்திகள் பதியப்படுகின்றன. தமிழ் நடிகர்-நடிகையர்களுக்கான தனித்தனி தளங்களை இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் விளையாட்டுச் செய்திகள், கவிதைகள், காதலர் பூங்கா, மருத்துவம், சிறப்புப் பார்வை, பொதுவானவை எனச் செய்திகள் வழங்கப்படுகின்றன. சன் டி.வி, கலைஞர் டி.வி, விஜய் டி.வி, ஜெயா டி.வி ஆகிய தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர்களை தினந்தேறும் பதிவேற்றம் செய்கின்றன. இவ்விதழில் சினிமா, தொலைக்காட்சி குறித்த தகவல்களே அதிகம் இடம்பெற்றுள்ளன.

கனடாவிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள்

கனடாவில் 2012-ஆம் ஆண்டு கணக்கின்படி சுமார் 250000 தமிழர்கள் வசிக்கிறார்கள். “பெரும்பாலானத் தமிழர்கள் ரொறன்ரோ நகரத்திலேயே வசிக்கிறார்கள். பிறரும் மொன்றியால், வன்கூவர், கல்கிறி போன்ற பெரும் நகரங்களிலேயே வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 80களின் பின்பு ஈழப் போராட்டம் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள்”8

கனடாவில் 1980 முதற்கொண்டு தமிழில் அச்சிதழ்கள் (உலகத்தமிழர்-வாரஇதழ்) வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது இணைய இதழ்களும் வெளிவருகின்றன.

கனடா முரசு (www.canadamurasu.com )

கனடாவில் இருந்து வெளிவரும் இணைய நாளிதழ் கனடாமுரசு. முக்கியச் செய்திகள், ஒளி, ஒலிப்பதிவுகள், சர்வதேச மற்றும் விளையாட்டுச் செய்திகள், முந்தைய செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், முக்கியச் செய்திகள் என செய்திகளைத் தருகின்றது. இணைப்புகள் எனும் பகுதியில் பல்வேறு இணைய இதழ்களின் முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கலாபம் (www.kalapam.ca )

இவ்விணைய இதழில் உலகச் செய்திகள், இந்தியச் செய்திகள், இலங்கைச் செய்திகள், சினிமா, கலாச்சாரம், ஆரோக்கியம், அறிவியல், வீடியோ, ஆன்மிகம், விளையாட்டுச் செய்திகள், ஜோதிடம், நகைச்சுவை, கெஸ்ட் எழுத்தாளர் என செய்திகள் வெளியிடப்படுகின்றன. பல்சுவை இதழாக வெளிவருகிறது.

நாதம் (www.nathamnews.com )

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சகத்தின் உத்தியோகப் பூர்வ செய்தி இதழான ‘நாதம்’ கனடாவில் இருந்து வெளிவருகிறது. தமிழீழம், தமிழகம், உலகம், காணொளி, உலகத்தமிழர்கள் என செய்திகள் வெளியிடப்படுகின்றன. நாதம் வானொலி செய்திச் சேவையும் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசின் அச்சிதழும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் இணைய இதழ்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை 2006-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 32701 ஆகும். 1970-இல் இருந்து தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவில் புலம்பெயரத் தொடங்கினார்கள். “இலங்கையில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார நோக்கிலும் குடிபெயர்ந்தல் அதிகரித்தமையின் விளைவாகவும் 1983லிருந்து பெருமளவுத் தமிழர்கள் குடியேறத் தொடங்கினர்.”9 ஆஸ்திரேலியாவில் தமிழர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு 1982 முதல் தமிழில் வானொலிச் சேவை தொடங்கப்பட்டது. பின்னர் தமிழில் அச்சிதழ்களும் துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அங்கிருந்து இணைய இதழ்களும் நடத்தப்படுகிறது.

ஈழமுரசு (www.eelamurasu.com )

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் ஈழமுரசு எனும் இவ்விதழ் அச்சிலும், இணையத்திலும் வெளியாகிறது. 32 பக்கங்கள் கொண்ட இவ்விதழ் தம் அச்சிதழ் பக்கங்களை அப்படியே இணையத்தில் பதிவேற்றம் செய்கிறது. மற்றொரு இதழாக ‘தமிழ் ஆஸ்திரேலியன்’ எனும் இதழ் www.tamilaustralian.com எனும் முகவரியில் வெளிவருகிறது.

ஜெர்மனியிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள்

தமிழகத்திற்கும் ஜெர்மனிக்கும் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொடர்புகள் உண்டு. ஏறக்குறைய 60000 தமிழர்கள் அங்கு வசிக்கிறார்கள். அங்குள்ள கோலென் பல்கலைக் கழகம் மற்றும் ஜடல்பேர்க் பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. அங்கிருந்து ஒரு சில இணைய இதழ்கள் வெளிவருகின்றன.

நிலாச்சாரல் (www.nilacharal.com )

ஜெர்மனியிலிருந்து வெளிவரும் இணைய இதழ் நிலாச்சாரல். உலகச் செய்திகள், தமிழகச் செய்திகள், தொடர்கள், கதைகள், கவிதைகள், ஜோதிடம், அறிவியல், ஆன்மிகம், சமையல், நகைச்சுவை எனச் செய்திகளை வெளியிடுகிறது. இவ்விதழைப் பதிவு செய்து படிக்கவேண்டும். மற்றும் உலகெங்கிலுமிருந்தும் எழுத்தாளர்கள் எழுத வரவேற்கின்றனர். தமிழ் நூல்களை மின்பதிப்பாக இவ்விதழ் பதிவேற்றம் செய்துள்ளனர். ஊடறு எனும் பெண்களுக்கான மாத இதழும் ஜெர்மனியிலிருந்து வெளிவருகிறது.

பிரான்சில் இருந்து வெளிவரும் இதழ்கள்

நானூறு ஆண்டுகாலத் தொடர்பு பிரான்சிற்கும் தமிழகத்திற்கும் உண்டு. “பிரான்ஸ் நாட்டிற்கும் பாண்டிச்சேரிக்கும் 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலனித்துவ தொடர்பு உண்டு”10 சுமார் 80000 தமிழர்கள் பிரான்சில் வசிக்கிறார்கள். அங்கிருந்து பல இணைய இதழ்கள் வெளிவருகின்றன.

பாரிஸ்தமிழ் (www.paristamil.com )

பிரான்ஸிலிருந்து வெளிவரும் ‘பாரிஸ்தமிழ்’ எனும் இணைய இதழ் உலகச் செய்திகள், தமிழகச் செய்திகள், இலங்கை, வினோதங்கள், பிரான்ஸ், சினிமா, இந்தியா, விளையாட்டு, சிறப்புக் கட்டுரைகள், நகைச்சுவை, தொழிற்நுட்பம், கவிதைகள், மருத்துவம், சமூகம், சமையல், அறிவியல் என செய்திகளைத் தருகிறது. மற்றும் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள், குழந்தைகள் கதை, குறும்படங்கள், காணொளி எனவும் செய்திகளை வழங்குகின்றன.

சுவிட்சர்லாந்து

ஆறு மில்லியன் மக்கள்தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் 45000 தமிழர்கள் வசிக்கிறார்கள். “சுவிட்சர்லாந்து தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு ஜெனிவாவில் நடைபெற்ற ‘வெல்கதமிழ்’ போராட்ட நிகழ்வில் 10000 மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். பெரும்பான்மையான சுவிட்சர்லாந்து தமிழர்கள் தமிழ்தேசிய போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்”11 தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் சுவிட்சர்லாந்திலிருந்து பல்வேறு இணை இதழ்கள் வெளிவருகின்றன.

தினக்கதிர் (www.thinakkathir.com )

சுவிட்சர்லாந்திலிருந்து வெளிவரும் இணைய நாளிதழ் தினக்கதிர் ஆகும். செய்திகள், கட்டுரை, விளையாட்டு, இந்தியா, உலகம், நிகழ்வுகள், சினிமா, ஐரோப்பிய செய்திகள், அமெரிக்க கனேடிய செய்திகள், தென்னாசிய செய்திகள், ஆசிய பசுபிக் செய்திகள், மத்திய கிழக்கு செய்திகள், ஆப்பிரிக்க செய்திகள் எனச் செய்திகளை பதிவு செய்து வெளிவருகிறது.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் இணைய இதழ்கள்

தமிழ்நாட்டிலிருந்து கல்வி மற்றும் பணிநிமித்தமாக சென்ற தமிழர்கள் அங்கு வசிக்கின்றனர். இனப்பிரச்சனை காரணமாக ஈழத்தமிழர்களும் 1980களின் பின்பு பெரும்பாலும் குடியேறியுள்ளனர். அமெரிக்காவில் வாழும் தமிழர்களால் அங்கிருந்து ஒரு சில இணைய இதழ்கள் வெளிவருகிறது.

தமிழோவியம் (www.tamiloviam.com)

அமெரிக்காவில் வசிக்கும் மீனாகணேஷ் நடத்துகின்ற இணைய இதழ் தமிழோவியம். அமெரிக்கா, அரசியல், கட்டுரை, கதைகள், சினிமா, செய்திகள், ஜோதிடம், நகைச்சுவை, பெண்ணோவியம், விளையாட்டு என செய்திகள் வெளியிடப்படுகின்றது. மற்றும் தீபாவளி, பொங்கல் நாட்களில் சிறப்பிதழும் வெளியாகிறது. மேலும், தென்றல் எனும் இதழ் அச்சிலும் இணையத்திலும் வெளிவருகிறது.

இலண்டனில் இருந்து வெளிவரும் இணைய இதழ்கள்

இலண்டனில் வசிக்கும் தமிழர்களால் அங்கிருந்து பல்வேறு இணைய இதழ்கள் நடத்தப்படுகின்றன.

பிபிசிதமிழ் (www.bbc.co.uk/tamil/)

உலகலாவிய செய்திகளை வழங்கும் இலண்டன் பிபிசி நிறுவனம் இணையத்தின் வாயிலாக செய்திகளை எழுத்துருவில் வழங்குவதோடு எழுத்துருவில் உள்ள செய்திகளை வானோலியில் வழங்குவது போல் ஒலி வசதியிலும் வழங்குகிறது. எனவே இவ்விதழை படிக்கவும் கேட்கவும் முடிகிறது.

“மின்-இதழ்களில் கணினியின் முன் அமர்ந்துள்ளவர்கள், செய்திகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பிபிசி வழங்கும் இணையத்தளத்தில் கணினியை இயக்குபவர் விருப்பத்திற்கேற்ப, ஒலி என்ற குறியீட்டைக் கிளிக் செய்து படிப்பதோடு கேட்டும் மகிழலாம். செய்திகளைக் கேட்டுக்கொண்டே கணினியில் வேறு அலுவல்களையும் கவனிக்கலாம்.”12

மேலும், தொலைக்காட்சிகளில் வருவது போல் தலைப்புச் செய்திகளைப் படித்தும், கேட்டும் அது தொடர்பான நிகழ்ச்சிகளைப் படக்காட்சிகளாய் பார்க்கவும் முடியும்.

நார்வேயிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள்

நார்வேயில் உள்ள தமிழர்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவர். 10000 மேற்பட்ட தமிழர்கள் அங்கு வசிக்கிறார்கள். அங்கிருந்து ஒரு சில இணைய இதழ்கள் வெளிவருக்கின்றன.

நெய்தல் (www.neithal.com )

நார்வேயிலிருந்து நெய்தல் எனும் இணைய இதழ் வெயிவருகிறது. செய்திகள், நேர்காணல், இளையோர் பக்கம், சிநுவர் பக்கம், மருத்துவம், சிறுகதை, கவிதை, நினைவலைகள், அறிவித்தல்கள் எனச் செய்திகளை வெளியிடுகிறது. மற்றும் வானொலி செய்திகளைக் கேட்கும் வசதியும் உள்ளது. மற்றும் நார்வேயிலிருந்து www.norwaytamil.com எனும் இணைய இதழும் வெளிவருகிறது.

டென்மார்க்கிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள்

டென்மார்க்கில் வசிக்கும் தமிழர்களால் ‘அலைகள்’ எனும் இணைய இதழ் நடத்தப்படுகிறது. செய்திகள், டென்மார்க் செய்திகள், முக்கியச் செய்திகள், பழமொழிகள், உலகச்செய்திகள், சிந்தனைத் தொடர்கள், சினிமா, காணொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என செய்திகள் வெளிவருகின்றன. மற்றும் தமிழ் சினிமாக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

அரபுநாடுகளிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள்

துபாயினைத் தலைமையிடமாக் கொண்டு வெளிவரும் இணைய இதழ் ஹைஹோய் (www.tamil.haihoi.com ) ஆகும். இவ்விதழில் அரசியல், விளையாட்டு, சமீபத்திய செய்திகள், புகைப்பட கேலரி என செய்திகள் வெளிவருகின்றன. இவ்விதழ் முழுக்க முழுக்க சினிமா தொடர்பான செய்திகளையே அதிகம் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான தமிழ் சினிமாக்களை இவ்விதழ் வழியே பார்க்கும் வசதி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் எனச் செய்திகளை ஐந்து மொழிகளில் வெளியிடுகிறது.

அறிவியல் இதழ்கள்

அறிவியல் தொடர்பான பல்வேறு துறைகளில் வெளியாகும் இதழ்களை ‘அறிவியல் இதழ்கள்’ என வரையறுக்கலாம். இவ்விதழ்களில் அந்தந்த அறிவியல் துறை சார்ந்த ஆய்வுகள், வளர்ச்சி, புதிய கண்டு பிடிப்பு முதலிய செய்திகள் இடம் பெறுகின்றன. சீன வானொலி நிலையம் அறிவியல் உலகம் எனும் இணைய இதழ் அதிகமான அறிவியல் தகவல்களை வெளியிடுகின்றன. மற்றும் தினசரி, தமிழ்மீடியா24, மனிதன், கீற்று, அறிவியல் ஒளி ஆகிய இணைய இதழ்கள் அறிவியல் செய்திகளை அதிகமாக கட்டுரைகளாகவும் படம், ஒலி, ஒளி காட்சிகளாகவும் வெளியிடுகின்றன.

இத்தகைய அறிவியல் இதழ்கள் வார, மாத இதழ்களாகவும், காலாண்டு இதழ்களாகவும் வெளியாகின்றன. முன்பு ஆங்கில மொழியில்தான் அதிகமான அறிவியல் இதழ்கள் வெளிவந்தன. தற்போது தமிழ் மொழியிலும் அத்தகைய இணைய அறிவியல் இதழ்கள் வெளிவருகின்றன. அறிவியல் இதழ் பெரும்பாலும் அறிவியல் வல்லுநர்கள் அல்லது அந்தந்த துறை சார்ந்த அறிஞர்களால் வெளியடப்படுகின்றன. இவை பொதுமக்கள் ஆதரவைப் பெறவில்லை என்றாலும் அந்தந்த துறைசார்ந்தவர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன

அரசியல் இதழ்கள்

அரசியல் செய்திகளை அதிகளவில் வெளியிடும் இதழ்கள் அரசியல் இதழ்கள் எனப்படுகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கட்சிகளும் தங்களது கட்சிக்கென இதழ்களை நடத்துகின்றன. தமிழகத்திலுள்ள கட்சிகள் பெரும்பாலும் அச்சிலும், இணையத்திலும் இதழ்களை நடத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கருத்துக்களை மட்டும் வலியுறுத்தியும் மாற்றுக் கருத்துக்களை விமர்சித்தும் எழுதப்பட்ட கட்டுரைகள், அந்தந்த கட்சியின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் போன்றவற்றை அரசியல் இதழ்கள் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றன.

நெருப்பு - www.neruppu.com

தமிழ்அலை - www.tamilalai.com

ஈரனல் - www.eeraanal.com

புதினம் - www.puthinam.com

நக்கீரன் - www.nakkheran.com

ஜுனியர்விகடன் - www.vikatan.com/juniarvikatan

குமுதம் ரிப்போர்ட்டர் - www.kumutham.com

விறுவிறுப்பு - www.viruviruppu.com

முரசொலி - www.murasoli.com

நமது எம்.ஜி.ஆர் - www.namathumgr.com

தீக்கதிர் - www.theekathir.com

சங்கொலி - www.songoli.com

நாம் தமிழர் - www.naamthamilar.com

புதினப்பலகை - www.puthinappalagai.com

போன்ற இணைய இதழ்கள் அரசியல் செய்திகள் அதிகமாக வெளியிடுகின்றன. இந்த இணைய இதழ்களில் தமிழக, இந்திய, தமிழ் ஈழ அரசியல் செய்திகள் அதிகளவில் வெளிவருகின்றன. இவற்றில் நாளிதழ்கள், வார இதழ்கள் அடங்கும். பிற இதழ்களைப்போல இந்த அரசியல் கட்சி இதழ்கள் பொது மக்களால் விரும்பிப் படிக்கப்படாவிட்டாலும் அந்தந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் விரும்பிப் படிக்கின்றார்கள்.

ஆன்மிக இதழ்கள்

இந்திய இதழியல் வரலாற்றில் தொடக்க இதழியல் முயற்சிகள் சமயத்தோடு தொடர்புடையவை. “முதலில் கிறித்தவச் சமயமே இதழியல் பணியைத் தொடங்கியது. பின்னர், இந்து சமயத்தில் சைவமும் வைணவமும் கிறித்தவச் சமயத்திற்கு எதிராக இதழியல் பணியைத் தொடர்ந்தன. முஸ்லீம் சமயத்தாரும் இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்”14

இவ்வகை இதழ்கள் பொதுவானதாகவும், குறிப்பிட்ட சமயம் சார்ந்தும், ஆதினங்கள், மடம் முதலிய அமைப்புகள் சார்ந்தும் கோவில்கள் சார்ந்தும் கிறித்தவ அமைப்புகள், இசுலாமிய அமைப்புகள் சார்ந்தும் வெளிவருகின்றன.

இந்துமத இதழ்கள்

தமிழ் ஹிந்து - www.tamilhindu.com

டெம்கிள் டிவைன் சக்சஸ் - www.templevinesuccess.com

சிவசிவ - www.sivasiva.dk

ஓம் - www.nakkheran.com/oom/

சக்தி விகடன் - www.vikatan.com/shakthivikatan

குமுதம் பக்தி - www.kumutham.com/bhakthi

ஆகிய இணைய இதழ்கள் உருவ வழிபாடு, சைவநெறிகள், வழிபாட்டு முறைகள், அருளுரைகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் வரலாறு போன்ற செய்திகள் இடம் பெறுகின்றன.

கிறித்தவ இதழ்கள்

தமிழ் கிறிஸ்டியன்ஸ் - www.tamilchiristians.com

திருமறை தீபம் - www.biblelamp.org

இரட்சிப்பின் வழி - www.thewayofsalvation.org

போன்ற இணைய இதழ்கள் கிறித்துவ மத அடிப்படையிலான தமிழ் வேதாகமக் கருத்துக்கள், கிறித்தவப் பாடல்கள், கிறித்தவக் கொள்கைகள் எனத் தகவல் வெளிவருகின்றன.

இசுலாமிய இதழ்கள்

பள்ளிவாசல்டுடே - www.pallivasaltoday.com

இஸ்லாம் கல்வி - www.islamkalvi.com

சத்தியமார்க்கம் - www.satyamargam.com

இஸ்லாம்குரல் - www.islamkural.com

தமிழ்இஸ்லாம் - www.tamilislam.com

போன்ற இதழ்களில் திருக்குர்ஆன் கருத்துக்கள், இறைத்தூதர்கள், தொழுகை, நோன்புகள், கவிதைகள் போன்ற செய்திகள் வெளிவருகின்றன.

சமூக இதழ்கள்

மனிதனின் வாழ்க்கை அவனைச் சுற்றியுள்ள சூழல் அனைத்துடனும் சேர்ந்து சமுதாயம் எனும் அமைப்பு இயங்குகிறது. “சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த ஒரு மனிதர் கூட்டத்தைக் குறிக்கும்”.15

சமூக அமைப்பு, உறவுமுறை, மெய்யியல், தொன்மவியல், உரிமைகள், சமூகத்தொடர்பு, சமயங்கள், அரசியல் போன்ற தகவல்களை உள்ளடக்கி வெளிவரும் இதழ்கள் சமூக இதழ்கள் எனப்படுகின்றன.

திண்ணை - www.thinnai.com

ஊடறு - www.oodaru.com

தடாகம் - www.thadagam.com

எதிர் - www.ethir.org

நிச்சாமம் - www.nichamam.com

திருநங்கைவித்யா - www.livingsmile.blogspot.com

கீற்றுவில் வெளிவருகிற சமுக இணைய இதழ்கள்

சமூகநீதித் தமிழ்தேசியம்

சிந்தனையாளன்

சமூகவிழிப்புணர்வு

விடுதலை முழக்கம்

கருஞ்சட்டைத் தமிழர்

போன்ற இதழ்கள் சமூக நிகழ்வுகள், சமூக வளர்ச்சிக்கான கட்டுரைகள் போன்றவற்றை வெளியிடுகின்றன.

இலக்கிய இதழ்கள்

சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை முதலிய இலக்கிய வகைகள் பல்வேறுபட்ட படைப்பிலக்கியவாதிகளால் இதழ்களில் படைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை பொழுதுபோக்கு இதழ்களில் இடம் பெற்றாலும் தற்போது ஆழமான இலக்கியத்திற்கு எனத் தனித்த இலக்கிய இதழ்கள் இணையத்தில் அதிகமாக வெளிவருகின்றன.

கீற்று - www.keetru.com

திண்ணை - www.thinnai.com

காலச்சுவடு - www.kalasuvadu.com

உயிர்மை - www.uyirmai.com

தீராநதி - www.kumutham.com/theeranathi/

உயிரோசை - www.uyirosai.com

கணையாழி - www.kanaiuazhi.com

காவ்யா - www.kavya.com

இனியஉதயம் - www.nakkheran.com/ineyaudhayam/

நந்தவனம் - www.ilakkiyam.nakkheran.com

தடாகம் - www.thadagam.com

மற்றும் கீற்று இணைய இதழில் இணைப்பிதழாக வெளிவரும் புதுவிசை, அகநாழிகை, அடவி, வனம், இன்மை, தக்கை, சஞ்சாரம், கூட்டாஞ்சோறு, புதுஎழுத்து, விழி, கதைசொல்லி, உன்னதம், கவிதாசரன் போன்ற இணைய இதழ்கள் பல்வேறு இலக்கியங்களையும் இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள், கட்டுரைகளை வெளியிடுகின்றன.

ஆய்வுஇதழ்கள்

ஆய்வு என்பது அறிவுத்தேடல் எனலாம். அவ்வகையில் தமிழியல் பல்வேறு புதிய களங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. தமிழில் பல்வேறு துறைசார்ந்த ஆராய்ச்சிகள், விவாதங்கள், விளக்கங்கள், புதிய முறைகளை கையாளும் முறைகள் பற்றிய செய்திகளை வெளியிடும் இதழ்களை ஆய்விதழ்கள் எனலாம்.

தமிழ்த்திணை - www.tamilthinai.com

கணியத்தமிழ் - www.kaniyatamil.com

தமிழ்மரபு அறக்கட்டளை - wwwtamilheritage.org

காட்சிப்பிழை திரை - wwwkaatchippizhai.com

மாற்றுவெளி - (கீற்றுவில் இணைப்பிழதாக வெளிவருகிறது)

போன்ற இதழ்கள் பல்வேறு ஆய்வுகள் குறித்த செய்திகளையும் வெளியிடுகின்றன. தமிழ்த்திணை எனும் ஆய்விதழ் தமிழில் இதுவரை செய்யப்பட்டுள்ள முனைவர் பட்ட ஆய்வுகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பகுத்தறிவு இதழ்கள்

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள்:423)16

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள்:355)17

என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப செயல்கள் மற்றும் பொருட்களின் கருத்துக்களின் கூறுகளை நன்கு ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரப்பூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப்படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறைகளையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் மெய்ப்பொருளே பகுத்தறிவு எனப்படுகிறது. அவ்வகையில் பகுத்தறிவுச் செய்திகள், கடவுள் மறுப்பு மற்றும் நாத்திக கருத்துக்களை வெளியிடும் இதழ்க்ள பகுத்தறிவு இதழ்கள் எனப்படுகிறது.

விடுதலை - www.viduthalai.in

பெரியார்குரல் - www.periyarkural.com

பெரியார்திராவிடக்கழகம் - www.periyardk.org

பெரியார் பிஞ்சு - www.periyaypinju.com

பெரியார் முழக்கம் - www.periyarmuzhkkam.com

போன்ற இதழ்கள் பகுத்தறிவு சிந்தனை, சுயமரியாதை, விழிப்புணர்வு, பெண்ணியம், கடவுள் மறுப்பு முதலிய செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

புலனாய்வு இதழ்கள்

செய்திகளின் பின்னணி, அரசியல், சமூகவியல், குற்றங்கள் முதலியவற்றின் பின்னணியைத் துப்பறிந்து வெளியிடும் இதழ்களைப் புலனாய்வு இதழ்கள் என வரையறுக்கலாம்.

சவுக்கு - www.savukku.net

அதிர்வு - www.athirvu.com

மக்கள் ரிப்போர்ட்

ஜுனியர் விகடன்

நக்கீரன்

குழுதம் ரிப்போர்ட்டர்

போன்ற இதழ்கள் செய்திகளின் பின்னணி, குற்றச் செயல்களின் பின்னணி ஆகியவற்றை புலனாய்வு செய்து தகவல்களை வெளியிடுகின்றன.

பெண்கள் இதழ்கள்

பெண்களின் முன்னேற்றம், உடலநலம், வீட்டு பராமரிப்பு, அழகுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், ஆடை வகைகள், பண்டிகைகள் முதலிய செய்திகள் இடம்பெறும் இதழ்களை பெண்கள் இதழ்கள் அல்லது மகளிர் இதழ்கள் எனலாம்.

ஊடறு - www.oodaru.com

பெண்கள் - www.selvakumaran.de/pennkal.html

நம்தோழி - www.namthozhi.com

பெண்கள் - www.pennkal.blogspot.com

அவள் விகடன் - www.vikatan/avalvikatan

குமுதம் சிநேகிதி - www.kumutham.com/snegithi

லீணாமணிமேகலை - www.ulaginazhagiyamuthalpenn.blogspot.in

தூமை - www.thoomai.wordpress.com

போன்ற இணைய இதழ்கள் பெண்ணுரிமை, பெண்கள் முன்னேற்றம், சாதனைப் பெண்கள் போன்ற தகவல்களை வெளியிடுகின்றன.

தலித்திய இதழ்கள்

மனித சமூதாயத்தில் காணப்படும் வேற்றுமைகள், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள், அவர்களுக்கானச் சட்டங்கள், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், சுரண்டல்கள், அக்கிரமங்களை எடுத்துக்கூறும் இதழ்கள் தலித்திய இதழ்கள் எனப்படுகிறது.

தலித்தியம் – www.dalittiyam.com

த்தூ - www.thuuu.net

பெட்டைக்குப்பட்டவை - www.peddai.wordpress.com

தலித்முரசு (கீற்றுவின் இணைப்பிதழ்)

ஆகிய இதழ்கள் தலித்திய சிந்தனைகளை வெளியிடுகிறது.

மார்க்சிய இதழ்கள்

பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளையும் மற்றும் இயங்கியல் பொருள்முதல்வாத கருத்துக்களின் அடிப்படையிலான செய்திகளை வெளியிடும் இதழ்கள் மார்க்சிய இதழ்கள் என வரையறுக்கப்படுகிறது.

தமிழரங்கம் - www.tamilcircle.net

எதிர் - www.ethir.com

வினவு - www.vinavu.com

மார்க்சிஸ்ட் - www.marxists.org/tamil/

மார்க்சிஸ்ட் தமிழ் - www.marxiststamil.blogspot.in

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு – www.wsws.com/tamil/

வினவு இணைய இதழில் இணைப்பிதழாக புதிய ஜனநாயகம, புதிய கலாச்சாரம்

ஆகிய இதழ்கள் மார்க்சிய கருத்துக்களை வெளியிடுகிறது. www.wsws.org எனும் இதழ் தமிழ், ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ரஷ்யன், ஸ்பானிஷ், போர்த்துகீஷ், சோர்போ குரோசியன், துருக்கி, இந்தோநேசியன் ஆகிய மொழிகளில் மார்க்சிய சிந்தனைகளையும் கட்டுரைகளையும் வெளியிடுகிறது.

சமையல் இதழ்கள்

பல்வேறு சமையல் செய்முறைக்குறிப்புகள், உணவினால் நமக்கு கிடைக்கும் சக்திகள், உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் போன்ற தகவல் வெளியிடும் இதழ்கள் சமையல் இதழ்கள் எனப்படுகின்றன.

அறுசுவை - www.arusuvai.com

சமையலறை - www.samaiyalarai.com

அடுப்படி - www.adupdi.blogspot.com

கீற்று - www.keetru.com

தமிழ்ழோவியம் - www.tamiloviam.com

போன்ற இதழ்கள் சைவ, அசைவ உணவுகளின் செய்முறை பற்றியும் இனிப்பு, கால வகைகள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் உணவுமுறைகள் பற்றிய செய்திகளைத் தருகின்றன.

நகைச்சுவை இதழ்கள்

நகைச்சுவைக் கதைகள், துணுக்குகள், படங்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள் என்று நகைச்சுவைக்கான செய்திகளை மட்டும் சில இணைய இதழ்கள் வெளியிட்டு வருகின்றன.

அப்புசாமி - www.appusami.com

கிரிஜா மணாளன் - www.girijamanaalan_humour.blogspot.com

தென்றல் - www.tamilonline.com/thendral

கீற்று-சிரிப்பூ - www.keetru.com

ஆகிய இதழ்கள் சிரிப்பும், மகிழ்ச்சியும் தூண்டும் வகையில் நகைச்சுவை செய்திகளைத் தருகின்றன.

திரைப்பட இதழ்கள்

திரைப்படம் பற்றிய தொழிற்நுட்பம், படப்பிடிப்பு, திரைப்படக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் முதலியன திரைப்பட இதழ்களின் உள்ளடக்கமாகும். பொதுவாக தமிழில் நாள், வார, மாத இதழ்கள் திரைப்படச் செய்திகளுக்கு இடமளிக்கின்றன. ஆயினும் திரைப்படச் செய்திகளை மட்டும் வெளியிடும் இதழ்கள் இணைத்தில் சில வருகின்றன.

தமிழ்சினிமா - www.tamilcinema.com

தமிழ்ஸ்டுடியோ - www.thamilstudio.com

சினிமா உலகம் - www.cineulagam.com

சினிக்கூத்து - www.nakkheran.com/cinikoothu

உன்வழி - www.envazhi.com

கோடம்பாக்கம்டுடே - www.kodampakkamtoday.com

காட்சிப்பிழை திரை - www.kaatchippizhi.com

போன்ற இதழ்கள் திரைப்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் பற்றிய செய்திகளை மட்டும் வெளியிடுகின்றன.

பெரும்பாலும் அச்சில் வருகிற இதழ்களைவிட இணையத்தில் வருகிற திரைப்பட இதழ்கள் திரைப்படங்கள் குறித்த தகவல்களை ஆய்வு, தொழிற்நுட்ப நோக்கில் செய்திகளை வெளியிடுகின்றன.

தொழில்நுட்ப இதழ்கள்

அறிவியலின் வளர்ச்சியால் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வளர்ந்துவருகின்றன. அத்தகைய கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகளை வெளியிடும் இதழ்கள் தொழிற்நுட்ப இதழ்கள் எனப்படுகின்றன.

தொழில்நுட்பம் - www.thozhilnutpam.com

ஈகரை - www.eegarai.com

நிலவரம் - www.nilavaram.com

பதிவுகள் - www.pathivugal.com

தினசரி - www.thinasari.com

போன்ற இதழ்கள் மின்னணுவியல், கணினியியல், பொறியியல், அறிவியல் போன்ற தலைப்புகளில் அதிக அளவில் தொழிற்நுட்பத் தகவல்களை வழங்கி வருகின்றன.

வணிக இதழ்கள்

உலகம் முழுவதும் வரவலாக இருக்கும் பங்கு வர்த்தகம், நிதி முதலீடுகள், சேமிப்பு வழிமுறைகள் உட்பட முக்கியமான சில வணிகத் தகவல்களை முதலீடு செய்வதற்கான ஆலோசனைகள் போன்றவற்றை முக்கியமானச் செய்திகளாகக் கொண்டு சில வணிக இதழ்கள் இணையத்தில் வெளிவருகின்றன.

பங்குவணிகம் - www.panguvanigam.com

தமிழ்மார்க்கெட்டிங் - www.tamilmarketing.blogspot.com

நாணயம் விகடன் -www.vigadan.com/naanayam

சென்னை ஆன்லைன் - www.chennaionline.com

போன்ற இதழ்கள் வணிகச் செய்திகளை வெளியிட்டுவருகின்றன.

சோதிட இதழ்கள்

ஜோதிடம் தொடர்பானச் செய்திகளை வெளியிடும் இதழ்களைச் சோதிட இதழ்கள் எனலாம். அச்சில் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் சோதிடத்துக்கென தனியே இடம் ஒதுக்குகின்றன. இணைய சோதிடத்திற்கென்றே சில இதழ்கள் வெளிவருகின்றன.

ஜோதிடம் - www.joothidam.com

ஞானயோகி - www.gnanayohi.com

குமுதம் ஜோதிடம் - www.kumutham .com/jothidam

பாலஜோதிடம் -www.nakkheran.com/jothidam

தடஸ்தமிழ் ஜோதிடம் - www.thatstamil.com/australogy

ஆகிய இதழ்கள் தினபலன், வாரபலன், சுபமுகூர்த்த நாட்கள், வரத நாட்கள், வாஸ்து தினங்கள், குருபெயர்ச்சி பலன்கள், சனிப்பெயர்ச்சிப் பலன்கள், அதிஷ்ட கற்கள் பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன.

சிறுவர் இதழ்கள்

சிறுவர்களுக்கான இதழ்கள் அனைத்து மொழிகளிலும் வெளிவருகின்றன. படங்கள் நிறைந்ததாகவும், கதைகள் அதிகம் கொண்டவையாகவும் சிறுவர் இதழ்கள் வெளிவருகின்றன. சிநுவர் இதழ்கள் சிறுவர்களது உள்ளத்தை பன்படுத்துகிறது. அறஉணரவ்வு, நீதி போதனை சார்ற்த கதைகள், புராணங்கள், வரலாறு, அறிவியல், கல்வி தொடர்பான கதைகள், கட்டுரைகள் முதலியன எளிய நடையில் வெளியாகின்றன.

சாந்தமாமா - www.chanthamama.com

சிறுவர் உலகம் - www.siruvarulagam.com

மழலைகள் - www.mazhlaigal.com

பெரியார்பிஞ்சு - www.periyarpinju.com

சுட்டிவிகடன் - www.vikaten.com/suttivikatan

போன்ற இதழ்கள் சிறுவர்களுக்காக வெளிவருகின்றன. இவ்விதழ்களில் சிறுவர்கள் வாசகர்களாக மட்டுமின்றி படைப்பாளர்களாகவும் உள்ளனர்.

கவிதை இதழ்கள்

மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் என்று அனைத்து வகையான கவிதைகளை மட்டும் முதன்மையாகக் கொண்டு பல இணைய இதழ்கள் வெளிவருகின்றன.

வார்ப்பு - www.varppu.com

நிலாரசிகன் - www.nilarasikan.com

கவிமலர் - www.kavimalar.com

நிலாசாரல் - www.nilacharal.com

உயிரோசை - www.uyirosai.com

திண்ணை - www.thinnai.com

கவிதைஅலை - www.kavithialai.com

அணி - www.ani.com

போன்ற இதழ்கள் கவிதைகளுக்காக வெளியாகின்றன.

ஓவிய இதழ்கள்

கலைகளுக்கு எனத் தனித்த இதழ்கள் இல்லையென்றாலும், ஒரு சில இணைய இதழ்கள் ஓவியம் குறித்த கட்டுரைகளை வெளியிட்டுவருகின்றன.

தடாகம் - www.thadhagam.com

ஊடறு - www.oodaru.com

வரலாறு - www.varalaru.com

போன்ற இதழ்கள் ஓவியங்கள், ஓவியர்களின் நேர்காணல்கள், ஓவியக் கண்காட்சி பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

நூலகம்

தமிழில் பல புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் ஏராளமான தலைப்புகளின் கீழ் புத்தகங்களை வெளியிட்டு வருகின்றன. இந்த புத்தகங்களை இணைய வழியில் சந்தைப்படுத்த தலைப்புகள், புத்தக ஆசிரியர்கள் ஆகியவற்றின் கீழ் தனித்தனியாகப் பகுத்து அது குறித்த தகவல்களை சில இணைய இதழ்கள் வெளியிடுகின்றன.

சென்னை நூலகம் - www.chennailibrary.com

விருபா - www.viruba.com

கீற்று இணைய இணைப்பிதழான ‘உங்கள் நூலகம்,புதிய புத்தகம் பேசுது’

போன்ற இணைய இதழ்கள் நூல்கள் பற்றியும், புதிய நூல்கள் அறிமுகப்படுத்தியும் வெளியாகின்றன.

மருத்துவம்

உடல்நலம் குறித்த பல்வேறு தகவல்கள், ஆலோசனைகள், பாதுகாப்பு வழிமுறைகள், மனநலம், உணவும்-உடலும், இயற்கை வைத்தியம், மருத்துவச் செய்திகள் போன்ற பல்வேறு தகவல்களை சில இணைய இதழ்கள் வெளியிடுகின்றன.

ஈகரை - www.eegarai.com

நிலவரம் - www.nilavaram.com

செய்தி - www.seithi.com

டாக்டர் விகடன் - www.vikatan.com/doctorvikatan

ஹெல்த் சாய்ஸ் - www.helthchoice.com

குமுதம் ஹெல்த் சாய்ஸ் - www.kumutham.com/helth

கீற்று இணைய இதழில் ‘ஹோமியோமுரசு, மாற்று மருத்துவம், மூலிகைவளம்’’

போன்ற இதழ்கள் மருத்துவத்திற்கென வெளியாகிறது.

கல்வி

பொதுஅறிவுத் தகவல்கள், தேர்வு குறித்த அறிவிப்புகள், கற்றல், கற்பித்தல், நற்சிந்தனைகள், பள்ளிகள், கல்லூரிகள் பல்வேறு தேர்வுக்கான பயிற்சி வினாக்கள் பற்றிய செய்திகளைக் கொண்ட இதழ்கள் கல்வி இதழ்கள் எனப்படுகின்றன.

புதிய தலைமுறை –கல்வி - www.puthiyathalaimurai.com

பொதுஅறிவு - www.nakkheran.com/pothuarivu/

கல்வி மலர் - www.kalvimalar.com

கணியத்தமிழ் - www.kaniyatamil.com/education

போன்ற இதழ்கள் பற்றிய பல்வேறு செய்திகளை வெளியிகின்றன.

பல்சுவை இதழ்கள்

சமூகம், அரசியல், ஆன்மிகம், இலக்கியம், திரைப்படம், கதை, கட்டுரை, கவிதை, பெண்கள், நகைச்சுவை, சோதிடம், சமையல் போன்ற பல தலைப்புகளில் அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கமாகக் கொண்டு சில இணைய இதழ்கள் வெளிவருகின்றன.

நிலாச்சாரல் - www.nilacharal.com

தமிழோவியம் - www.tamiloviam.com

தமிழ்சிகரம் - www.tamilsikaram.com

இதயநிலா - www.edhanila.com

முத்துக்களம் - www.mutthukalam.com

குமுதம் - www.kumutham.com

ஆனந்தவிகடன் - www.anandhavikatan.com

சென்னை ஆன்லைன் - www.chennaionline.com

தட்ஸ்தமிழ் - www.thatstamil.com

போன்ற பல்சுவை இணைய இதழ்கள் வெளிவருகின்றன.

பாலியல் உறவுகள் பற்றிய இதழ்கள்

ஆண்-பெண் பாலியல் உறவுகளுக்கான தகவல்களை நாகரீகமான முறையில் மருத்துவ வழியில் சில இணைய இதழ்கள் வெளியிடுகின்றன.

சூத்திரம் - www.tamil.indiansutras.com

மைஒப்பேரா - www-mu.opera.com/nalamananba/

கீற்று-பாலியல் - www.keetru.com

ஈகரை - www.eegarainet.com

ஹாய்நலமா - www.hainalama.blogspot.com

போன்ற இணைய இதழ்கள் தாம்பத்தியம், பெண்களின் விருப்பங்கள், உறவும்-உணவும், பாலியல் கேள்வி-பதில்கள், மதுவினால் ஏற்படும் குறைபாடுகள், பாலியல் நோய்களும்-தீர்வுகளும் எனத் தகவல்களை வெளியிடுகின்றன.

சங்க அமைப்புகள்

குறிப்பிட்ட நோக்கத்துடன் பலர்கூடி அமைக்கும் ஒரு குழு ‘சங்கம்’ என அழைக்கப்படுகிறது. இதன்படி தமிழ், தமிழர் வளர்ச்சியை நோக்கமாகக்கொண்டு அமைக்கப்படும் சங்கங்கள் தமிழ்ச்சங்கங்கள் எனப்படுகின்றன. இவ்வாறான தமிழ்ச்சங்கங்கள் பல தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. இச்சங்கங்கள் தம் இணைப் பக்கங்களில் இதழ்களையும் நடத்துகின்றன.

மதுரைத் தமிழ்ச்சங்கம் - www.madhuraitamilsangam.com

கரந்தைத் தமிழ்ச்சங்கம் - www.karanthaitamilsangam.com

பெங்களுர் தமிழ்ச்சங்கம் - www.bangaloretamilsangam.com

தில்லி தமிழ்ச்சங்கம் - www.delhitamilsangam.com

கொழும்பு தமிழ்ச்சங்கம் - www.colombutamilsangam.com

யூ.ஏ.இ தமிழ்ச்சங்கம் - www.uaetamilsangam.com

இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் - www.netamilsangam.com

மிக்சின் தமிழ்ச்சங்கம் - www.mitamilsangam.com

மினசோட்டோ தமிழ்ச்சங்கம் - www.minnesotatamilsangam.org

தென்புளோரிடா தமிழ்ச்சங்கம் - www.sfts.org

வி. தமிழ்ச்சங்கம் - www.wisconsintamilsangam.com

இரியாத்துத் தமிழ்ச்சங்கம் - www.riyatamilsangam.com

சிக்காக்கோ தமிழ்ச்சங்கம் - www.chicagotamilsangam.com

பஹ்ரைன் தமிழ்ச்சங்கம் - wwwtamilmandram.com

நொய்டா தமிழ்ச்சங்கம் - www.avvai;tamilsangam.com

ரிச்மாண்ட் தமிழ்ச்சங்கம் - www.richmondtamilsangam.org

அட்லாண்டா தமிழ்ச்சங்கம் - www.gatamilsangam.com

தமிழ்மொழி, தமிழா, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இச்சங்கங்கள் அரும்பணி ஆற்றி வருகின்றன.

விவசாய இதழ்கள்

தமிழில் விவசாயம் குறித்து சில இணைய இதழ்கள் வெளிவருகின்றன.

வேளாண்மை - www.velanmai.com

பசுமைவிகடன் - www.vikatan.com/pasumaivikatan

இவ்விதழ்கள் இயற்கை விவசாயம், விவசாயப் பண்ணைகள், அரசின் நலத்திட்டங்கள், இயற்கைப் பாதுகாப்பு, மூலிகைகள், கால்நடைகள் குறித்த தகவல்களை வெளியிடுகின்றன.

திரட்டிகள்

தமிழில் வருகிற இணைய இதழ்களின் செய்திகளையும், வலைப்பூக்களில் வெளியாகும் படைப்புகளில் இருந்தும் குறிப்பிட்ட படைப்புகளைத் திரட்டித் தரும் தகவல் தொகுப்பே திரட்டிகள் எனப்படுகின்றன.

தமிழ்10 - www.tamil10.com

தேன்கூடு - www.theenkodu.com

சுரதா - www.suratha.com

சிபிதமிழ் - www.cbtamil.com

தமிழ்டெய்லி - www.tamildaily.com

பாரத்குரு - www.bharatkuru.com

தமிழ்மணம் - www.tamilmanam.com

சங்கமம் - www.sangamam.com

திரட்டி - www.thiratti.com

தமிழ்வெளி - www.tamilveli.com

இவையனைத்தும் அனைத்துச் செய்திகளையும் ஒரே இடத்தில் காணும் வகை செய்கின்றன.

இணைய இதழ்களின் சிறப்புகள்

இணைய இதழ்கள் உலகம் தழுவியது. இணைய இதழ்களில் அச்சு வேலை கிடையாது. எல்லாவற்றையும் கணினி மூலமாகவே தயாரித்துக் கொள்ளலாம். இணைய இதழ்களில் வெளிவரும் செய்திகள் உலக மக்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படுவதால் பரந்துபட்ட வாசக பரப்பு எல்லையை உடையதாக உள்ளது. பிற ஊடகங்கள் ஒவ்வொன்றிலும் பெறக்கூடிய தனிப்பட்ட வசதிகள் அனைத்தையும் ஒருங்கே பெற முடிகிறது.

“பல்ஊடகத் தன்மை மின் இதழ்களின் தனித்தன்மையாகும். இதனால் எழுத்தாளர், பல்ஊடக வல்லுநர்கள் முதலியோர் இணைந்து இதழ் பக்கங்களை உருவாக்குகின்றனர். வாசகர்கள் தாம் விரும்பும் வண்ணம் தாவிச்சென்று படிப்பதற்கு வசதியாகவும் மினஇதழ் பக்கங்கள் வடிவமைக்கப்படுகின்றன. வாசகர்களுக்கு துணை புரியும் வண்ணம் மீ-தொடர்புகள் இடம் பெறுவதும் மின்னிதழ்களுக்கு இன்றியமையாததாகும்.”

பார்வையாளரின் தேர்வுத் தன்மையை இணைய இதழ்கள் முழுமையாக நிறைவு செய்கின்றன. இணைய இதழ்களைப் பார்வையிடும் ஒருவர் தனக்குத் தேவையான செய்திகளை மட்டுமே பார்வையிட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் செய்திகளைப் பெறுவதில் பார்வையாளரின் நேரம் சேமிக்கப்படுகிறது.

இணையத் தளங்களின் பரிமாற்றத் தன்மை மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பாகும். இதழ்களைப் பார்வையிடுபவர், உடனுக்குடன் தனது கருத்துக்களை இதழ் நிர்வாகத்துடன், சக பார்வைளார்களுடனும் பரிமாறிக்கொள்ள முடிகிறது. இதழ் நிர்வாகமும் தமது செயல்பாடுகள் பற்றிய பின்னூட்டக் கருத்துக்களை உடனடியாகப் பெற முடிகிறது.

பிற இதழியல் ஊடகங்கள் நிலவியல் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மக்களைச் சென்றடைவதையே நோக்கமாகக்கொண்டு செயல்படுகிறது. இணைய இதழியலின் தொழிற்நுட்பம் இத்தன்மையை அழிக்கின்றன.

ஊடக நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்ற காலத்தின் அல்லது நேரத்தில்தான் ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கத்தின் தகவலைப் பெற முடியும். சான்றாக, அச்சிதழ்கள் காலை நேரம், மாலைநேரம், வானொலி மற்றும் தெலைக்காட்சி ஒரு குறிப்பிட்ட காலவேலைகளில் செய்திகளை வெளியிடுகிறது. ஆனால் இணைய ஊடகம் இத்தகைய காலக்கட்டுப்பாட்டைத் தகர்த்துள்ளது. பார்வையாளன் எந்த நேரத்திலும் தேவையான செய்திகளைப் பெறமுடிகிறது. அது மட்டுமின்றி முந்தையகால இதழ்களையும் உடனடியாகத் திரைக்குக் கொண்டுவந்து பார்வையிட்டுக்கொள்ளலாம்.

செய்திகளின் அவசியத்திற்கு ஏற்ப வீடியோ வடிவிலும் இணைய இதழ்கள் சேவை வழங்குகிறது. ஒலி வடிவிலும் செய்திகளை கேட்கும் வசதி உள்ளது. முகப்பு பக்கத்திலேயே இதழ் முழுமைக்குமான உள்ளடக்க அட்டவணை உள்ளதால் தேவையான செய்திகளைத் தேர்ந்தெடுத்து விரைவாக படிக்க முடிகிறது. இதனால் காலவிரையம் தவிர்க்கப்படுகிறது. பல்வேறு இதழ்களையும் கணினி மூலம் ஒரே இடத்தில் வாசிக்க கிடைப்பதால் பண விரையமும் மிச்சமாகிறது.

எனவே இணைய இதழ்களானது தொலைத்தொடர்பு ஊடகங்களான அஞ்சல் துறை, தொலைப்பேசி மற்றும் வானொலி, தொலைக்காட்சி, அச்சிதழ்கள் போன்ற அனைத்து ஊடகங்களின் சிறப்புப் பண்புகளைப் பெற்ற பன்முக ஊடகத்தன்மையுடன் விளங்குகிறது. செய்திகளை வெளியிடுவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது, வாசகன்-ஊடகம் இடையேயான தகவல் தொடர்பு போன்ற கூறுகளின் பிற ஊடகங்களைக் காட்டிலும் விரைவான சேவையை இணைய இதழ்கள் மூலம் பெறமுடிகிறது.

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்

2.52380952381
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top