பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள் / இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அணுகுமுறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அணுகுமுறைகள்

இந்திய இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நான்கு முனை அணுகுமுறை மாதிரியை பற்றிய குறிப்புகள் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள இரண்டாவது நாடான இந்தியாவில், தடுமாற்றம் ஏற்படுத்தும் வயதுப் பிரிவில் 600 மில்லியன் பேர் உள்ளனர். அதாவது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமான மக்கள் சராசரியாக 25 வயதில் உள்ளனர்.

தங்கச்சுரங்கம் போன்ற இந்த மக்கள்தொகை பிரிவினர் இந்தியாவின் மொத்த தேசிய வருமானத்தில் 34%க்குப் பொறுப்பானவர்களாக உள்ளனர். இவர்கள் தங்களின் கல்விக்கான சரியான உள்கட்டமைப்பு வசதிகள், தேவையான தொழில்திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், வேலை கிடைப்பதற்கு ஏற்ற போதுமான வாய்ப்புகள் அல்லது தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் போன்ற கோரிக்கைகளை கட்டாயமாக முன் வைப்பார்கள். இந்தக் கோரிக்கைகளை இவர்கள் தங்களது சொந்த வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் சமூக, தேசிய வளர்ச்சியை முன் வைத்தும் எழுப்புவார்கள்.

மக்கள் தொகைப் பங்கீடு (உழைக்கும் வயதுடையோரின் கூடுதல் சதவிகிதம்) எந்த ஒரு நாட்டுக்கும் சுமையாக இருப்பதில்லை. மாறாக இது வாய்ப்புகளுக்கான ஒரு ஜன்னலாகவே இருக்கிறது. அத்தகைய மக்கள்தொகை பிரிவினரின் திடீர் அதிகரிப்பே மக்கள் தொகைப் பங்கீடு எனப்படுகிறது. அண்மைக்காலங்களில் கொரியக் குடியரசு போன்ற கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றில் இந்த மக்கள்தொகைப் பங்கீடு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆனால் இந்த இளையோர் பிரிவு வலுப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

அதிகாரம் அளித்தல்

கல்வி கற்கும் ஒருவருக்கு அவரது வாழ்வை அவரே முன்னெடுக்கக் கூடிய வகையில் மதிப்புகளை அவருக்குள் உருவாக்கும் வழிமுறையே அதிகாரம் அளித்தல் என்பதாகும். இத்தகைய வாழ்வு தனிநபர் என்ற முறையில் அவருக்குத் திருப்தி அளிப்பதோடு, சமூகத்தின் மதிப்புகள் மற்றும் லட்சியங்களுக்கு இணைந்த வகையிலும் இருக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது அதிலும் குறிப்பாக இந்தியப் பின்புலத்தில், தேசிய வளர்ச்சிக்கு என்று மட்டும் இல்லாமல் தனிநபர் மேம்பாட்டுக்கும் முக்கியமானதாகும். இளையோர் உரிமைகள், இளையோரின் ஈடுபாடு மற்றும் சமுதாயம் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலமே மேலே கூறியவை சாத்தியமாகும்.

இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தலின் முக்கிய கூறு என்பது அவர்களுக்கு கல்வி அளிப்பதும் வேலை பெறத் தகுதியானவர்களாக அவர்களை மாற்றுவதுமே ஆகும். தம் நாட்டு இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான பங்கேற்பு இல்லாமல் ஒரு நாடு நீடித்த நிலையான வளர்ச்சி குறித்துப் பேச முடியாது. இதற்கு இளைஞர்களின் உழைப்பும் சிந்தனையும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பது கண்கூடாகும். வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பது என்பது அவர்களை சமுதாயத்தில் ஒன்றும் செய்யாமல் பயனற்றவர்களாக உட்கார்ந்து இருக்கச் செய்வதற்கு ஒப்பானதாகும். இது ரெயிலே வராத ரெயில் நிலையத்தில் ரெயில் பாதை ஒரம் ரெயிலுக்காக காத்திருப்பது போன்றதாகும்.

இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தலின் அடிப்படைத் தூண்கள்

இந்தியாவில் இளைஞர்களுக்கு நீடித்த அதிகாரம் அளித்தலைச் செய்வதற்கு கீழ்வரும் நான்கு அடிப்படைத் தூண்கள் வலுவாக இருக்க வேண்டும்:

  1. கல்வி
  2. தொழில் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு
  3. முழுமையான மனநிலை மாற்றங்கள்
  4. அரசாங்கக் கொள்கைகள் மற்றும் முன்னோடிச் செயல்பாடுகள்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (எம். ஹெச்.ஆர்.டி) செயல் முழக்கமான “அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி’ என்பதால் மட்டுமே “இந்தியாவை உருமாற்றுதல்” என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய முடியும். எந்த ஒரு கல்வி அமைப்பிலும் இருக்க வேண்டிய அடிப்படை குணாம்சங்களை பொருத்தமான முறையில் நமது கல்வி அமைப்பு கொண்டிருந்தால் மட்டுமே வளர்ந்து வரும் நமது நாட்டை உண்மையான புதுத்தோற்றத்திற்கு மாற்ற முடியும். அணுகுதல், சமநிலைத்தன்மை, தரம் போன்ற குணாம்சங்களே அவையாகும். இவற்றைத் தொடர்ந்து தனிநபர் திறம் மற்றும் தொழில்திறன் மேம்பாடு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்தியாவில் உயர்கல்விக்காக மாணவர் சேரும் விகிதம் தற்போதைய சூழலில் 22%ஆக உள்ளது. உலக சராசரியான 2.8% என்பதோடு ஒப்பிட இது குறைவாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளான சீனா (28%), பிரேசில் (36%) மற்றும் யு.கே (59%) போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டாலும் நமது நாடு பின்தங்கியே உள்ளது. அடுத்து வரும் சில ஆண்டுகளில் (அதாவது 2020ஆம் ஆண்டில்) உலகிலேயே 25 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலாவதாக இருக்கும் நாம் நமது மாணவர் பொது சேர்க்கை விகிதத்தை (ஜி.இ.ஆர்) 30% என்ற அளவுக்கு மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளோம். உயர் கல்வியில் சேர்வதற்கு அடிப்படையாக இருக்கின்ற மூன்றாம் நிலை கல்வி நிலையங்களை குறைந்த பட்சம் இரண்டு மடங்காக்கினால்தான், கூறிய குறிக்கோள் அளவை அடைய முடியும். குறிக்கோளுக்கும் உண்மைக்கும் இடையிலான இடைவெளியானது கனவை நனவாக்க விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறது. காளான்கள் போல பொறியியல் கல்லூரிகளும் , பல்கலைக் கழகங்களும் பெருகினாலும்கூட, இந்தியாவில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களின் எண்ணிக்கையானது உலக நாடுகளோடு ஒப்பிட குறைவாகவே உள்ளது. “தரமான கல்வி’ என்பது “அனைவருக்குமான கல்வி’ என்பதன் வழியாகத்தான் அடையப்பட வேண்டும்.

மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக நாடாக இருக்கும் அதே வேளையில் ஜாதி, பாலினம், இடவியல்பு, வயது போன்றவற்றால் இந்தியா சிதறுண்டு இருக்கிறது. இதுவே நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைப்பதைத் தடுக்கிறது. எனவே விரும்புகின்ற விளைவுகளை நம் நாடு பெற முடியாமல் போகிறது. தரமான கல்வி என்று நாம் விவாதிக்கத் தொடங்குவதற்கு முன்பு இந்த ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும். உயர்கல்வியில் மாணவர்கள் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் போது சமநிலை இன்மை மறுபக்கத்தில் இருந்தும் உருவாகிறது. அதிகம் விரும்பித் தேர்ந்தெடுக்கப்படும் பாடங்களின் தரவரிசையானது கீழ்வருமாறு உள்ளது:

  • கலை மற்றும் மானிடவியல் பாடங்கள் (தோராயமாக 35 - 40%)
  • வணிகவியல் மற்றும் மேலாண்மை (தோராயமாக 20 - 25%)
  • அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல்கள் (தோராயமாக முறையே 19 - 25% மற்றும் 15 - 16%).

அறிவியல் பாடங்களுக்கான விருப்பம் என்பது கடைசியாகவே உள்ளது. மாணவர்களின் பாடத் தேர்ந்தெடுப்பில் ஏன் இத்தகைய பாகுபாடு எனக் காரணங்களை ஆராய்ந்தால், அவை ஆச்சரியம் அளிப்பவையாக உள்ளன. இந்தக் காரணங்களைத் தெரிந்து கொள்வது அரசாங்கத்துக்கும் கொள்கை வகுப்பவர்களுக்கும் உண்மையை வெளிப்படுத்துவதாக அமையும். பாடங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது பல கூறுகளைக் கொண்டதாகும். பாடத்திட்ட நெகிழ்வுத் தன்மை, திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்பு, கல்வி வளாகத்துக்குள் மற்றும் வளாகங்களுக்கு இடையில் மாணவர்களின் நடவடிக்கை, பணிசார்ந்த உலகில் பொருத்தப்பாடு மற்றும் இவை அனைத்திற்கு மேலாக வேலை வாய்ப்பு போன்ற கூறுகள் முக்கியமானதாக விளங்குகின்றன.

தற்போதைய கல்வி நிலை

கடந்த இருபதாண்டுகளில் தொழிற்கல்வி பட்டம் பெறுவது அதிகரித்து உள்ளது கண்கூடாகும். ஏ.ஐ.சி.டி.இ. யு.ஜி.சி. மற்றும் பிற நெறிமுறைப்படுத்தும் அமைப்புகள் ஆகியவற்றால் மோசமான தரமற்ற தொழில்கல்வியை வழங்கிய மிகப்பெரிய கட்டிடங்களின் வாயில்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன. தொழில்கல்வி நிலையங்களின் அதிகரிப்பு, அரசின் முன்னோடி நடவடிக்கைகளால்தான் நிகழ்ந்தது. அதாவது தொழில்நுட்ப மற்றும் தொழில்நிபுணத்துவ புத்தாக்கம் மற்றும் படைப்பாக்கத்தால் நாட்டின் வளர்ச்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இலக்கை அடைய அரசு இப்பெருக்கத்துக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் விரும்பிய இலக்கை நாடு அடைய முடியாமல் போகக் காரணம் தரமற்ற கல்விநிலையே ஆகும். இன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது சேவைப் பிரிவுகளின் அடிப்படையிலேயே (66.1%) முதன்மையாக அமைந்துள்ளது. இதற்குத் தனிநபர் வெளிப்பாட்டுத் திறன்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இப்போது மேலெழுந்து வரும் தொழில்நுட்பப் பிரிவுக்கு (9.2%) இந்தத் தனிநபர் வெளிப்பாட்டுத் திறன்கள் மற்றும் தொழில் திறன்கள் இரண்டும் தேவைப்படுகின்றன. ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள் தங்களுக்கு வேலை அளிப்பவர்களை முழுவதுமாகத் திருப்திபடுத்தும் அளவிற்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டு இருக்கவில்லை. இந்தியப் பொறியியல் பட்டதாரிகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்கள் மற்றும் அடிப்படை விஞ்ஞானம், இதர பாடங்கள் படித்தவர்களில் சுமார் 5% பேர் மட்டுமே வேலைக்கான தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதுதான் நமது கல்வியின் மதிப்பு மிகுந்த இரு பாடப்பிரிவுகள் தங்கள் மதிப்பை இழந்து வருவதற்கான காரணமாகும்.

அணுகுதல் மற்றும் சமநிலை என்ற இரண்டு முக்கிய அளவு குறித்த காரணிகளுக்குப் பிறகு மூன்றாவதாக வருவது தரம் குறித்த காரணியாகும். நமது நாட்டின் தர மதிப்பீடுகள் குறைவாக இருக்கின்ற கல்வி அமைப்பில் நிலவும் சூழலை வளர்ந்த நாடுகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் நாடுகளில் மேற்படிப்பு படிக்கின்ற வாய்ப்பை இந்திய மாணவர்களுக்கு வழங்குகின்றன. வளர்ந்த நாடுகள் இந்தியாவின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதோடு அறிவையும் சுரண்டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தரமான கல்வியைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்கின்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள கல்வி அமைப்பில் சில திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இந்நிலைமையை எளிதில் சரி செய்து விடலாம். பழமையான அதே சமயம் மிகப்பெரிய கல்வி அமைப்பினை மறுஅமைப்பாக்கம் செய்வதற்கு என்றே கூடுதலான புத் தாக்கமும் படைப் பாக்கமும் தேவைப்படுகின்றன. இதன் மூலம் காலத்துக்கேற்ற தரமான கல்வியை எந்த நாட்டுக்கும் இணையாக நம்மால் தர முடியும். இந்தியாவில் தற்போது இருக்கும் கல்வி அமைப்பானது எண்ணற்ற தடைகளைத் தாண்டி தடையேட்டம் போடுகின்றது. அவை:

  • ஈடுபாடு இன்மை
  • பங்குதாரர்கள்
  • தொழிற்சாலை வேலை அளிப்போர்
  • காலத்துக்கு ஒவ்வாத பழமை பாடத்திட்டம்
  • ஆய்வுக்கூடம் & உபகரணங்கள்
  • ஆசிரியர்கள்
  • நிதி மற்றும் தன்னாட்சி

நெருக்கடிகள்

  • தரமான மற்றும் ஊக்கமான ஆசிரியர்கள் மற்றும் புரவலர்களின் பற்றாக்குறை, எதிர்கால வளமை இல்லாமை, குறைவான ஊதியம் மற்றும் நாட்டில் ஆசிரியர் தொழில், மதிப்புக் குறைவான தொழிலாகக் கருதப்படுதல்
  • ஆசிரியர்களுக்கு ஏற்படும் நெருக்கடி அல்லது தற்காலிக நியமனப் போக்கு, நாட்டில் மிக உயரிய கல்வி நிறுவனங்கள் பலவற்றிலும் நிரந்தரப் பேராசிரியர் பதவிகள் காலியாக இருத்தல், தேவை ஏற்படும் போது ஆசிரியர்களை மற்றும் அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களை நியமதித்தல்,
  • ஆசிரியர் பணியிடங்களில் 3ல் 1 பங்கு இடம் காலியாக இருத்தல்.
  • நிதிப் பற்றாக்குறை, குறிப்பாக மாநில அரசு நடத்தும் கல்வி நிலையங்களில் நிதிப் பற்றாக்குறைதான் மிகப்பெரிய இடைவெளியாகவும் குறைபாடாகவும் உள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் உள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட மாநில அரசு கல்வி நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்கின்றார்கள்.
  • அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் தலையீடு மற்றும் அளவுக்கு அதிகமான அதிகாரம் செலுத்துதல்
  • மூத்த கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் காலத்துக்கு ஏற்ப தங்களது பார்வையை செயல்படுத்த முடியாது இருத்தல்.

பழங்கால கல்வி முறையாக மாற்றும் காரணிகளும் அதன் பாதிப்புக்களும்

  • காலத்திற்கு ஒவ்வாத பழமையான, இறுக்கமான மற்றும் ஒரே சீராக இல்லாத பாடத்திட்டங்கள். இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப முறையில் கற்பித்தலை மேற்கொள்ள முடியாமல் உள்ள பாரம்பரியமான கற்பித்தல் முறையின் போதாமை. ஆய்வுக்கூடம் சார்ந்த கல்வி சுருக்கப்படுதல், அதிலும் குறிப்பாக அடிப்படை விஞ்ஞானப் படிப்புகள் சுருக்கப்படுதல். இவையெல்லாம் சேர்ந்து கல்வி முறையை பழங்காலம் சார்ந்ததாக மாற்றி விடுகின்றன. இத்தகைய நவீனத்துவம் இல்லாத கல்வி முறையை முன்னெடுக்கும் போது இளைஞர்கள் தமக்குள் பொதிந்துள்ள ஆர்வத்தை இழக்கின்றனர். உயர்கல்வியில் அடிப்படை அறிவியல் படிப்புகளில் பொதுச்சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்) மிக வேகமாகக் குறைந்து வருவதற்கான முதன்மைக் காணரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
  • குறுகிய வட்ட அணுகுமுறையுடன் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டமானது இன்றைய இளைஞர்களைக் கற்றவர்களாக மாற்றுகிறது. ஆனால் முழுமையான மாற்றத்துக்கான வளர்ச்சியை இக்கற்பித்தல் முறையானது அவர்களிடம் ஏற்படுத்துவதில்லை. கல்வி கற்பித்தலில் பல்துறை இணைந்த அணுகுமுறை இல்லாததால், இளைஞர்கள் நடைமுறையில் தங்களது அறிவை செயல்வடிவில் பிரயோகிக்க இயலாமல் தடுமாறுகின்றனர்.
  • மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெறும் கல்வி நிலையங்கள் தவிர மற்ற கல்வி நிறுவனங்கள் போதுமான வசதிகளுடன் இல்லாமல் இருத்தல்
  • பாடத்திட்டத்தை உருவாக்குவதில் வேலை அளிப்பவரின் பங்கேற்பு ஏதும் இல்லை. அதாவது வேலை அளிப்பவர் தங்கள் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டத்தை உருவாக்கும் முறை இந்தியாவில் இல்லை. பாடத் திட்டம் என்பது மூத்த கல்வியாளர்களால் உருவாக்கப்படுகிறது.

சில சமயங்களில் அதிகாரிகளேகூட பாடத்திட்டத்தை உருவாக்குகின்றனர். இதுவே பல ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து வரும் நடைமுறை ஆகும். இவர்கள் படித்து முடித்தவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்பவர்கள் இல்லை. பாடத்திட்டத்தை வகுப்பதில் தொழிற்சாலையினர், ஆய்வுக்கூடத்தினர், வர்த்தகப்பிரிவினர், வணிகப் பிரிவினர் அல்லது வேலை சார்ந்த இதர பங்குதாரர்கள் என எவரையுமே கலந்து ஆலோசிப்பதில்லை. இதுவே கல்வி கற்ற இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வேலையில்லாமல் இருப்பதற்கு வழிவகை செய்கிறது. இதன் விளைவாக இளைஞர்கள் நாட்டின் சொத்தாக இல்லாமல் சுமையாக மாறுகிறார்கள்.

இத்தகைய பின்னடைவுகள் பல இருந்தபோதிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலைகள் மற்றும் மானிடவியல் கற்கும் நமது இளைய சமுதாயத்தினர் முன்னேற்றம் அடைந்தே வருகின்றார்கள். ஐ.ஐ.டி., ஏ.ஐ.ஐ.எம். ஐ.ஐ.எஸ்.இ.ஆர். ஐ.எம்.டெக், ஐ.ஐ.எஸ்சி, ஐ.ஐ.எம் முதலான உச்சநிலை கல்வி நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்விநிலையங்களின் தர வரிசைப் பட்டியலில் இடம் பெறாமல் இருப்பதற்குக் காரணம் இங்கு பணிபுரியம் ஆசிரியர்களே; மாணவர்கள் இல்லை. 2002-2016ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் நம் நாட்டில் விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகளின் வெளியீடு ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது. வலிமையான அடித்தளத்துடன் உள்நாட்டு தொழில்நுட்பங்களை நாம் உருவாக்கி நிறுவியுள்ளோம். உதாரணமாக விண்வெளித் தொடர்பியல், ஐ.டி.பிரிவு, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம், மருந்தியல், நோய் அறிதல் முதலான துறைகளில் இவ்வாறு உருவாக்கி உள்ளோம். இவற்றில் அடிப்படை அறிவியலின் ஆதாரக் கருத்துகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பழமையான அமைப்பை புதுப்பிக்கும் சட்டகத்தை உருவாக்குவதில் அரசு ஆக்கப்பூர்வமான பங்கினை செய்து வருகிறது. மிகச் சிறந்த கொள்கைகள், சீர்திருத்தங்கள், புதிய திட்டங்களுக்கான தொடக்க நடவடிக்கைகள், திட்டங்கள், தொலைநோக்கு இலக்குகள் ஆகியவற்றை அரசு முன்னெடுத்து வருகிறது. பரந்துபட்ட நமது நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள இளைஞர்களுக்கு தரமான கல்வி கிடைக்க கல்வி நிலையத்துக்குள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு வெளியில் என அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. பல்வேறு வகையிலான தொடக்க நடவடிக்கைகள் மூன்று முதன்மைக் காரணிகளின் அடிப்படையில் அமைகின்றன. அவை அணுகுதல், சமநிலை மற்றும் தரம் ஆகும். இவற்றில் பெரும்பாலானவை அடிப்படை அறிவியல் மற்றும் மானிடவியல் மாணவர்களுக்குச் சமமான பலன்களைத் தருகின்றன நாட்டில் உயர்கல்விக்கான உயிர்ச்சூழலில் இந்தச் சமநிலைதான் முதன்மைக் காரணமாகும்.

ஒவ்வொரு நிலையிலும் இளைஞர்களுக்கான கல்வியை விரிவாக்கம் செய்ய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.இ.ஆர். ஏ.ஐ.ஐ.எம்.எஸ், மத்தியப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலானவற்றை அரசு புதிய இடங்களில் திறந்து வருகின்றது. மேலும் கல்வி நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நிறுவனங்கள்

குளோபல் இனிஷியேட்டிவ் ஆஃப் அகாடெமிக் நெட்வொர்க்ஸ் (ஜி.ஐ.ஏ.என்)

சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர்களை நமது நாட்டில் உள்ள உயர்கல்விக்கான நிலையங்களில் ஆய்வுப் பணியிலும் கல்விப்பணியிலும் ஈடுபட வைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு ஜியாந் எனப்படும் குளோபல் இனிஷியேட்டிவ் ஆஃப் அகாடெமிக் நெட்வொர்க்ஸ் (ஜி.ஐ.ஏ.என்) செயல்படுகிறது. சர்வதேச தகுதிக்கு ஏற்றாற்போல இந்தியாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப திறமையை மேம்படுத்துவதற்காகத் தற்போது இருக்கின்ற கல்விப்புல மூலவளங்களைப் பெருக்குவதே இதன் உள்நோக்கமாகும்.

இம்பிரிண்ட் எனப்படும் இம்பாக்டிங் ரிசர்ச் இன்னோவேஷன் அன்ட் டெக்னாலஜி, இந்தியா - என்ற அமைப்பு சமூகத்துக்குப் பயன்படக்கூடிய, அல்லது பொருத்தமான பிரிவுகளில் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் நேரடி ஆராய்ச்சி மேற்கொள்ளச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

உச்தார் ஆவிஷ்கர் அபியான் (யு.ஏ.ஒய்)

தொழிற்சாலைக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட தேவையை நிறைவு செய்யக்கூடிய ஆராய்ச்சியை அபிவிருத்தி செய்வதற்காக உச்தார் ஆவிஷ்கர் அபியான் (யு.ஏ.ஒய்) தொடங்கப்பட்டுள்ளது. அதாவது சர்வதேசச் சந்தையில் இந்தியத் தொழிற்சாலைகள் போட்டியைச் சமாளித்து நிலை நிற்பதற்கு இது உதவும்.

தேசிய கல்வி நிலையங்களைத் தரவரிசைப்படுத்துதல் முறைச்சட்டகம் (என்.ஐ.ஆர்.எஃப்) - என்பது ஆண்டுதோறும் உயர்கல்வி அளிக்கும் கல்வி நிலையங்களைத் தரவரிசைப்படுத்துகிறது. தரத்தை மேம்படுத்த உதவும் தற்சார்பில்லாத மற்றும் சோதித்துப் பார்க்கக் கூடிய காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை மேற்கொள்ளப்படுகிறது.

உயர் கல்விக்கான நிதி ஏஜென்சியை (ஹெச்.இ.எஃப்.ஏ) நிறுவுதல் - வசதிகள் நிறைந்த உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் உந்துதல் தரும் வகையில் மூலதனச் சொத்துகளை ஏற்படுத்துவதற்காக இது நிறுவப்பட்டுள்ளது.

நேஷனல் அகாடெமிக் டெபாசிட்டரி (என்.ஏ.டி)

டிஜிட்டல் பாதுகாப்பு பெட்டக முறையில் கல்விச் சான்றிதழ்களைப் பராமரிக்கும் வகையில் இது தொடங்கப்பட்டு உள்ளது. சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் அணுக, தேவையான போது பெற மற்றும் நீக்க இந்த அமைப்பு உதவும். மேலும் போலிச் சான்றிதழ்கள் மற்றும் போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் போன்ற மோசடி நடைமுறைகளை இதனால் நீக்கிவிட முடியும். மேலும் உத்திரவாதத்தைப் பரிசீலிக்கும் நடைமுறைக்கும் உதவும்.

ஸ்வயம் பிரபா - 24x7 அடிப்படையில் 32 டீடிஎச் சானல்கள் மூலம் தரமான கல்விக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் ஒரு திட்டமாக இது செயல்படுகிறது.

ஸ்வயம் - பெருவாரியான மாணவர்களுக்கு திறந்தநிலை ஆன்லைன் படிப்புகளை (எம்.ஓ.ஒ.சி) முன்வைப்பதற்கான உள்நாட்டு ஐ.டி.பிளாட்ஃபாரம் இதுவாகும். நாட்டின் தொலைதூரங்களில் உள்ள கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்காக அனைத்துப் பாடங்கள் மற்றும் படிப்புகளை உள்ளடக்கிய தரமான கல்வி இதன் மூலம் வழங்கப்படும். தேசிய டிஜிட்டல் நூலகம் - தேசிய சொத்தாக அறிவுப் பொக்கிஷத்தைத் தொகுத்து அனைவரும் அணுகிப் பயன்படுத்தும் வகையில் இது கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தில் அறிவு சேகரிப்பானது புத்தகங்கள், இ-கற்றல், கலைக்களஞ்சியங்கள், பருவ இதழ்கள், தனிப்பொருளுக்கான ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள், ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள் போன்ற வடிவங்களில் இருக்கும். இது கற்பவர்கள் / தொழில் நிபுணர்கள் / ஆய்வாளர்கள் மற்றும் பிற ஆர்வமுள்ள நபர்களுக்கு உதவும். வளாக இணைப்பு - கல்வி வளாகத்துக்குள் வைஃபி இணைப்பு வழங்குதல். அதாவது பல்கலைக்கழகங்களுக்கு 1ஜிபிபிஎஸ் இணைப்பு மற்றும் கல்லூரிகளுக்கு 10எம்.பி.பீ.எஸ் இணைப்பு வழங்குதல். உயர்கல்வி குறித்த அனைத்திந்திய கணக்கெடுப்பு (ஏ.ஐ.எஸ்.ஹெச்.இ) - இதில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அடங்கும். கொள்கை முடிவுகளையும் ஆராய்ச்சிகளையும் முன்கூட்டி தெரிந்து பங்கேற்க இது உதவும். வடிவமைப்பியல் புத்தாக்கத்துக்கான தேசிய முன்னோடி நடவடிக்கை - இணையத்தில் பாடத்திட்டம் மற்றும் இதர விவரங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அதிக எண்ணிக்கையில் நபர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிகள் பற்றி தெரிவிப்பது இதன் நோக்கமாகும்.

முனைவர் பட்டத்துக்குப் பிறகான மேல் ஆய்வு உதவித்தொகை - அறிவியல் மற்றும் மானிடவியல் பிரிவுகளில் வளரும் அறிவார்ந்த இளைய ஆராய்ச்சியாளர்களுக்கு கற்பித்தல் / ஆராய்ச்சி வேலையை உருவாக்கித் தருதல். இதன் மூலம் ஒருவர் புதிய தொழில்திறன்களைப் பெற முடியும். ஆய்வுப் பரப்பு விரிவடையும், பல்துறை ஆய்வாக மேற்கொள்ள உதவும்.

யூ.ஜி.சிபிஎஸ்.ஆர் ஆசிரியர் உதவித்தொகைதிட்டம் பல்கலைக்கழகங்களில் அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சியை வலுப்படுத்த இத்திட்டம் உதவுகிறது. ஓய்வு பெறும் வயதை நெருங்கும் தகுதிவாய்ந்த அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பப் படிப்பு சார்ந்த ஆசிரியர்கள் தங்களது ஆராய்ச்சியைத் தொடர்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அறிவியல் சார்ந்த உயர் கல்வியையும் ஆராய்ச்சிகளையும் வலுப்படுத்துவதற்கான திட்டம் - ஆராய்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் உயர்கல்வியில் ஆராய்ச்சியின் தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டு உள்ளது.

திறன் இந்தியா - இது நமது பிரதம மந்திரியின் மிகச் சிறந்த முன்னோடி திட்டமாகும். வேலை இல்லாத இளைஞர்கள், விளிம்பு நிலையில் உள்ள பெண்கள் மற்றும் ஊரகப் பகுதியினருக்குத் தேவையான தொழில்திறன்களை வழங்கும் திட்டமாக இது உள்ளது. இந்தப் பிரிவினர்கள் தங்களது வாழ்க்கைத் தரங்களை உயர்த்துவதற்குத் தேவைப்படும் வேலைவாய்ப்புகளையும் நீடித்த வாழ்வாதாரங்களையும் வழங்க இத்திட்டமானது உதவுகிறது.

ராஷ்ட்ரிய உச்சதார் சிக்ஷா அபியான் (ரூசா ஆர்.யூ.எஸ்.ஏ) - கல்வி என்பது மாநில அரசின் ஒதுக்கீடாக இருந்தாலும் கூட மாநில அரசின் கல்வி அமைப்புகளின் தரத்தை உயர்த்த ரூசா என்ற இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி உதவி செய்கிறது.

விருப்பத்தின் அடிப்படையில் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் முறை (சி.பி.சி.எஸ்)

மாணவர்களை மையப்படுத்தி பாடதிட்டத்தை மறுவடிமைப்பு செய்யும் அற்புதமான அணுகுமுறையை இது கொண்டிருக்கிறது. பல்துறை சார்ந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை இது தருகிறது. மாநிலத்துக்குள், தேசிய அளவில் மற்றும் உலகக் கல்விப்புலச் சூழலுக்குள் எனப் பல திசைகளிலும் மாணவர்கள் பயணிக்க முடியும். தேர்வுத்தாள் மதிப்பீட்டு முறை மீதான இழுக்கை நீக்கவும் வேலைவாய்ப்புக்கான தடைகளை நீக்கவும் இந்த அமைப்பானது உதவும்.

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றால் கல்வி அமைப்பில் திட்டமிட்ட சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன. அதிலும் குறிப்பாக கலை மற்றும் மாடவியல் துறைகள், அடிப்படை அறிவியல் பாடப் பட்டங்களில் மாற்றங்கள் வேண்டும். வளரும் நாடு என்ற நிலையில் குறைவான மூலவளத்தோடு இருக்கின்ற நாம் செயல்பாட்டில் உள்ள நடப்பு அமைப்புகளையும் கொள்கைகளையும் முறையாக ஒருங்கிணைத்தோமானால், அது பல அற்புதங்களைச் செய்யும்.

முனைகொண்ட நேர்மறையான அணுகுமுறை

  1. மாணவர்களை மையப்படுத்தி அமையும் கல்வி அமைப்புகள் (சி.பி.சி.எஸ்),
  2. வேலை அளிப்போரின் தேவைகளின் அடிப்படையில் அமையும் பாடத்திட்டம் (என்.பி.சி.எஸ்),
  3. தனது கொள்கைகள் மற்றும் இயக்கங்கள் மூலம் அரசு உதவிக்கரம் நீட்டுதல்,
  4. பயிற்சி பெற்ற மற்றும் திறமையான இளைஞர்களைச் சமூகமும் வேலை அளிப்போரும் அங்கீகரித்தல்.

இவை இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு நாட்டுக்கும் அதிகாரம் அளிப்பவையாக இருக்கும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.22222222222
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top