பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பதிவை சரிபார்க்க வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை சரிபார்க்க வாய்ப்பு பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களுக்கு, தங்களது பதிவை சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரி மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வேலைதேடும் இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதிகளை புதிதாக பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதியை பதிவு செய்தல், பதிவு அட்டையின் நகலை பதிவிறக்கம் செய்தல் போன்ற பணிகளுக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குச் செல்லாமல் இணையதள வழியாக தாங்கள் விரும்பும் இடத்திலேயே மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் தங்களது பதிவு விவரங்களை உடன் மேற்கூறப்பட்ட இணையதள முகவரியைப் பயன்படுத்தி பதிவு அடையாள அட்டையை, பதிவிறக்கம் செய்து ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பதிவு விவரங்களில் விடுபாடுகள் அல்லது முரண்பாடுகள் ஏதேனும் காணப்பட்டால் உடனடியாக அனைத்துக் கல்வி, ஜாதி சான்று, முன்னுரிமை சான்று, இதர சான்றுகள், குடும்ப அட்டை, தங்களுடைய ஆதார் எண், கைப்பேசி எண், இணையதள மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் இந்த அறிவிப்பு வெளியான ஒருமாதத்துக்குள் தாங்கள் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு சரி செய்துகொள்ளலாம்.

பின்னர் திருத்திய பதிவு அடையாள அட்டை பெற்றுக்கொண்டு தேவைப்பட்டால் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம்.  வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் செம்மையான சேவை பெறஇணையதளத்தில் தங்களது பதிவு விவரங்கள் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.

ஆதாரம் : கல்வி மலர்

2.96551724138
G.deepa May 02, 2019 09:38 AM

முகவரி திருத்தம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top