பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பெற்றோருக்கான யோசனைகள் / குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம்

குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம்

தொலைபேசி நாகரீகம் என்பது பலரும் பெரிதாக நினைக்காத ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், அது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, அந்தப் பண்பை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

  • தொலைபேசியில் பேசத் தொடங்கும்போது, ஹலோ அல்லது வணக்கம் என்ற வார்த்தைகளுடன் தொடங்குவது அவசியம். பிறரை நாம் அழைக்கும்போதும் சரி அல்லது நம்மை பிறர் அழைக்கும்போதும் சரி, இந்தப் பண்பாட்டை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
  • முதன்முதலில் ஒருவரிடம் பேசும்போது, தன்னை எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டு பேச வேண்டும்.
  • அதேபோன்று, புதிய நபரிடம் பேசும்போது, தாங்கள் பேசும் நபர்களைப் பற்றிய அறிமுகத்தைப் பெற வேண்டும்.
  • பிறருக்கு வந்த அழைப்பை நாம் பெற நேரும்போது, பேசியவரை, தயவுசெய்து காத்திருக்கச் சொல்லி, சம்பந்தப்பட்டவரை அழைத்து வருவதாக கூற வேண்டும். அதை செய்யாமல், தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டே, கூப்பிட வேண்டிய நபரை சத்தமாக அழைக்கக்கூடாது.
  • தொலைபேசியில் ஒரு விஷயத்தை கேட்டுக் கொள்ள நேர்ந்தால், அதை மிகவும் கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும். கவனக் குறைவாகவும், அரைகுறையாகவும் கேட்டுக் கொண்டு தவறான தகவல்களை தந்துவிடக்கூடாது.
  • பேசிவிட்டு, தொலைபேசியை வைக்கும்போது, நன்றி என்று மறக்காமல் கூறிவிட்டு வைக்க வேண்டும்.

ஆதாரம் : தினமலர் கல்விமலர்

3.09756097561
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top