பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / எம்.பி.ஏ - எகனாமிக்ஸ் படிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

எம்.பி.ஏ - எகனாமிக்ஸ் படிப்பு

எம்.பி.ஏ - எகனாமிக்ஸ் படிப்பு பற்றிய குறிப்புகள்

எம்.பி.ஏ - எகனாமிக்ஸ்

எம்.பி.ஏ - எகனாமிக்ஸ் படிப்பு, உற்பத்தி பகுப்பாய்வு மற்றும் ஆய்வு, பொருட்களின் பகிர்மானம் மற்றும் நுகர்வு மற்றும் ஒரு நாட்டில் மற்றும் ஒரு நிறுவனத்தில் இருக்கும் வணிக சேவைகள் ஆகிய பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்டதாகும்.

நாடு அல்லது வணிக நிறுவனங்களின் நிலையை தீர்மானிக்கும் சந்தை நிலவரங்களை முன்கூட்டியே கணித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கியதுதான் எம்.பி.ஏ., எகனாமிக்ஸ் படிப்பு. எந்தவொரு வணிக நடவடிக்கைக்குமே, பொருளாதாரமே பிரதானம் என்பதால், இந்த எம்.பி.ஏ. படிப்பு பலராலும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது.

ஒரு வணிகத்தில், நட்டம் ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அந்த நட்டத்தை முற்றிலும் நிறுத்துவது அல்லது குறைப்பது என்ற நோக்கங்களுக்காக பொருளாதாரப் படிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

எம்.பி.ஏ., எகனாமிக்ஸ் படிப்பானது, மேக்ரோ அல்லது மைக்ரோ எகனாமிக்ஸ், இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. இந்தப் படிப்பு, பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியுள்ளதால், இப்படிப்பை மேற்கொள்ளும் ஒருவர், பல்வேறான பணி வாய்ப்புகளை பெறுகிறார்.

நாட்டினுடைய பொருளாதார நிலையை ஆய்வுசெய்வதில், முக்கியப் பாத்திரத்தை வகிப்பதிலிருந்து, கார்பரேட் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளை ஏற்பது வரை, பல்வேறான வாய்ப்புகள், இந்த பொருளாதாரப் படிப்பில் உள்ளன.

 • சந்தை நிலவரம் மற்றும் சந்தையில் என்ன நடக்கிறது என்பது குறித்து எப்போதும் விழிப்புடன் இருப்பதற்கு கற்றுக் கொள்ளலாம்.
 • தொடர்ச்சியான சந்தை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வின் மூலம், பொருளாதார நிலையை சிறப்பாக புரிந்துகொள்வதற்கு கற்றுக்கொள்ள முடிகிறது.

உயர்கல்வி

MBA., Economics படிப்பை மேற்கொள்பவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள், பிஎச்.டி. படிப்பை மேற்கொள்கிறார்கள். பிசினஸ் எகனாமிக்ஸ், அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ், லேபர் எகனாமிக்ஸ், பைனான்சியல் எகனாமிக்ஸ், இன்டஸ்ட்ரியல் எகனாமிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி. படிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 • மார்க்கெட் அனலிஸ்ட்
 • எகனாமிஸ்ட்
 • பைனான்சியல் அட்வைசர்
 • பைனான்ஸ் லா கன்சல்டன்ட்
 • மார்க்கெட் போர்காஸ்டர்
 • பப்ளிக் பாலிசி மேக்கர்
 • லோன் ஆபிசர்
 • லாயர்

ஆதாரம் : தினமலர் கல்விமலர்

2.97872340426
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top