பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / வேதிப் பொறியியல் / தொழில்நுட்பவியல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேதிப் பொறியியல் / தொழில்நுட்பவியல்

வேதிப் பொறியியல் / தொழில்நுட்பவியல் (Chemical Engineering/Technology) பற்றிய குறிப்புகள்

கிளைப்பிரிவுகள்

  • பாலிமர் பொறியியல் (Polymer technology)
  • பிளாஸ்டிக் / ரப்பர் தொழில்நுட்பவியல் (Plastic/Rubber Technology)
  • வேதியியல் மற்றும் மின் வேதியியல் பொறியியல்(Chemical and Electro chemical Engineering)
  • பெட்ரோலியம் பொறியியல் (Petroleum Engineering)
  • பெட்ரோகெமிக்கல் பொறியியல் (Petrochemical  Engineering)
  • செராமிக் பொறியியல் (Ceramic  Engineering)
  • டெக்ஸ்டைல் தொழில்நுட்பவியல் (Textile Technology)
  • டெக்ஸ்டைல் (ஃபேஷன்) தொழில்நுட்பவியல் (Fashion Technology)
  • டெக்ஸ்டைல் வேதியியல் (Textile Chemistry)
  • கார்ப்பெட் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பவியல் ( Carpet and Textile Technology)
  • மெட்டலர்ஜிகல் பொறியியல் (Metallurgical Engineering)
  • மெட்டலர்ஜி மற்றும் மெட்டீரியல்ஸ் பொறியியல்(Metallurgical & Materials Engineering)
  • பல்ப் மற்றும் பேப்பர் தொழில்நுட்பம் ( Pulp and Paper Technology)
  • பயோகெமிக்கல் பொறியியல் (Biochemical Engineering)
  • மருந்தியல் தொழில்நுட்பவியல் (Medical Technology)
  • உணவுத் தொழில்நுட்பம் (Food Technology)
  • தோல் தொழில்நுட்பம் (Leather Technology)

வேதிப்பொறியியல் / தொழில்நுட்பவியல் பிரிவில், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியியல், உயிரி வேதியியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி கணிதம், பொருளாதாரம் ஆகியவற்றின் துணைகொண்டு மனிதகுலத்திற்குத் தேவையான வேதிப்பொருட்களை உற்பத்தி செய்தல், வினியோகித்தல், பயன்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இத்துறை வல்லுநர்கள் வேதிப்பொருட்கள், தாதுக்கள், உயிரணுக்கள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றின் ஆற்றலைப் பெரிய அளவில் பயன்படுத்தும் முறைகளைக் கண்டு, கருவிகளை வடிவமைத்து உருவாக்குவார்கள். தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் பிறந்த வெங்கடராமன் ராமகிருஷ்ணன் 2009ல் நோபல் பரிசு பெற்றது வேதியியலின்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துறை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளில் மட்டுமின்றி, சென்னை ஐஐடி உள்ளிட்ட பல ஐஐடிகளில் ஒரு முக்கியப் பிரிவாக வழங்கப்படுகிறது.

பாடத்திட்டத்தில் பொதுவாக, Organic Chemistry, Process Calculations, Physical Chemistry, Chemical Engineering Thermodynamics, வெப்பப் பரிமாற்றம், சுற்றுச்சூழல் பொறியியல், வேதி எதிர்வினைப் பொறியியல், Material Science and Technology, பொருள் திணிவுப் பரிமாற்றம், Plant Safety and  Risk  Analysis, Process Instrumentation, Dynamics and Control, Process Economics, Process Equipment Design முதலியவை உண்டு. ஆராய்ச்சி, பொருள் உற்பத்தி, கிரிஸ்டலோகிராபி, சாயங்கள், தொழிற்கூட/ஆய்வுக்கூட மேலாண்மை, ப்ராஜெக்ட் மேலாண்மை ஆகிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறைகளிலும், வேதிய மனித நலம், ஆபத்தான கழிவுப் பொருள் கையாளுதல், தர உறுதி, Toxicology ஆகிய தரக்கட்டுப்பாட்டுத் துறைகளிலும், வேதியியல் தகவல் மற்றும் மேலாண்மை, மனித வளம், பொதுத்தகவல், தொழில்நுட்பத் தகவலும் தகவல் பரிமாற்றமும் போன்ற உதவி (Support) துறைகளிலும், விற்பனை, Formulation / Process Chemistry ஆகிய தயாரிப்புத் துறைகளிலும் இப்பொறியாளர்களுக்குப் பணிகள் காத்திருக்கின்றன.

குறிப்பாக உணவுப் பதனிடல், உரம், சர்க்கரை, மருந்து, சிமென்ட், செயற்கை நூலிழை, கனிமங்கள், செராமிக்ஸ், பெட்ரோலியம் முதலியவற்றின் தயாரிப்பு தொடர்பான வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்புத் துறைகளில் இத்துறைப் பொறியாளர்கள் தேவைப்படுவார்கள். உணவுப் பதனிடலில் 100 சதவீத வெளிநாட்டு முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவிருப்பது கவனிக்கத்தக்கது. அணு உலைகள், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, ஊர்திகள் தொடர்பான நிறுவனங்களில் உள்நாட்டிலும் அதைவிட அதிகமாக வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புகள் உண்டு. பாலிமர் டெக்னாலஜி பிற்காலத்தில் தோன்றிய துறைகளில் ஒன்று. மிகுந்த ஆற்றலும், துரு மற்றும் வேதிப்பொருள்களால் தாக்கப்படாத தன்மையும் கொண்டது என்பதால் பாலிமர் பல முக்கிய பயன்களைக் கொண்டது. சமையல் பாத்திரங்கள் முதல் விண்வெளி ஓடங்கள், தானூர்திகள், மின்தளவாடங்கள் எனப் பலவற்றில் பயன்படுவது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்பைத் தரவல்லது. பிளாஸ்டிக், ரப்பர், பெயிண்ட்ஸ், ஃபோம், adhesives, sealants அனைத்தும் பாலிமர்களே. இப்பிரிவுக்கான பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழலியல், மெட்டீரியல் சயின்ஸ், ஆர்கானிக் வேதியியலும் தொழில்நுட்பவியலும், பாலிமர் வேதியியல், மோல்டிங் எஞ்சினியரிங், பாலிமர் பொருட்கள், Polymer Rheology and Fluid Mechanics, Polymer Compounding, Process Technology, Thermoset and Composites, Mould and Die Design, Polymer Testing, Rubber Processing, Polymer Blends and Alloys, Polymer Product Design, ரப்பர் பொருட்களின் தயாரிப்பு, பாலிமரின் சிறப்புப் பயன்கள் முதலியன இடம்பெறும். Moulding Technician, Moulding Machine/Assembly Operator, Project Engineer, Maintenance Technician, Tool Maker முதலிய பணிகளும், R&D, Production, Process Engineering முதலிய பிரிவுகளில் பணிவாய்ப்புகளும் உண்டு.

வேதியியல் மற்றும் மின்வேதிப் பொறியியல் (Chemical and Electro chemical Engineering) பாடப்பிரிவு, வேதிப் பொருட்களின் தொகுப்பு (Synthesis), உலோகங்களைத் தூய்மைப்படுத்துதல், பாட்டரிகள், எரிசெல்கள், உணர்பொறிகள், மின்படிவு, துரு முதலிய மின்வேதி வினைகளின் தொழில்நுட்பப் பயன்பாடுகளைப் பற்றியது. மின்னியல், வேதியியல் இரண்டும் இணைந்தது. சார்லஸ் ஃபிரடரிக் பர்கஸ் இத்துறையின் ஆரம்பகால அறிவியலாளரில் ஒருவர். வாக்னர், லெவிச் ஆகியோரின் முயற்சியால் வேதிப் பொறியியலிருந்து இத்துறை உருவானது என்பர். CSIR அமைப்பின் கீழ் இயங்கும் 40 அகில இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான காரைக்குடி மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) இப்பாடப் பிரிவுக்காகத் தனிப்பெயர் பெற்றது.

இப்பிரிவில் Molecular Physical Chemistry, Chemical Process Calculations, Chemical Reaction Engineering, Materials Technology, Principles of Electro chemistry, Corrosion Engineering, Electrochemical Process Technology, Electrodes and Electrocatalysis, Electrochemical Reaction Engineering, Industrial Metal Finishing, Instrumentation, Process Dynamics and Control, Process Modeling and Simulation, Transport Phenomena, Electrometallurgy and Thermics, Electrochemical Energy Conversion and Storage, Surface Science முதலியவை கற்பிக்கப்படும்.

இப்படிப்பை முடித்தவர்கள், Bioelectric Medicine Electrical Engineer, Battery Research and Development Engineer, Research Engineer, Medical Device Engineer, Fuel cell and Electrolyzer Development Engineer, Process Development Engineer, Energy Storage Scientist, Material Scientist, Electrochemical Instrumentation Sales Representative Water Treatment Engineer முதலிய பணிகளுக்குச் செல்லலாம். ஏராளமான தனியார், அரசு நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. CECRI-யில் ஏறத்தாழ 100% campus placement நடந்துவிடுகிறது.

வேதிப் பொறியியலிலிருந்து கிளைத்த வேறு இரு முக்கியப் பாடப் பிரிவுகள் பெட்ரோலியம் பொறியியலும், பெட்ரோகெமிக்கல் பொறியியலும். சுத்திகரிக்கப்படாத பெட்ரோலியத்திலிருந்து நேராகவோ மறைமுகவாகவோ பெறப்படும் ஆர்கானிக் வேதிப்பொருள்களையே பெட்ரோ கெமிக்கல்ஸ் என்பார்கள். பெட்ரோலியப் பொறியியலை மேலொழுக்குப் பகுதி (Upstream sector) கீழொழுக்குப் பகுதி (Downstream sector) என இரண்டாகப் பிரிக்கலாம். நிலத்தடி வாயுக்கள், எண்ணெய் ஆகியவற்றைக் கண்டறிதல், வெளிக்கொணர்தல் ஆகியவை மேலொழுக்குப் பகுதியிலும், அப்பொருட்களைச் சுத்திகரித்தல்,  சந்தைப்படுத்துதல், வினியோகித்தல் ஆகியவை கீழொழுக்குப் பகுதியிலும் வகைப்படுத்தப்படும்.

இதற்கான B.E./B.Tech. பாடத்திட்டத்தில் பொதுவாக, எலெக்ட்ரோ ப்ராசஸ் கணக்கீடு, இயல் வேதியியல், இன்டஸ்ட்ரியல் வேதித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழலியல்,  பொருள் திணிவுப் பரிமாற்றம், பெட்ரோலியம் அகழ்வும் பயன்பாட்டு உத்திகளும், வேதி எதிர்வினைப் பொறியியல், இயற்கைவாயுப் பொறியியல், Material Technology, Process Dynamics and Control தளவாட வடிவமைப்பு, பெட்ரோலியம் பதனிடும் தொழில்நுட்பம், நீர் சுத்திகரிப்பும் மேலாண்மையும்,  Instrumentation and Instrumental Analysis, Transport Phenomena,  Petrochemical Unit Process, Refinery Process Design, Process Engineering Economics, safety and Risk Management முதலியவை இடம்பெறும். பெட்ரோ கெமிக்கல் பொறியாளர்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், R&D நிறுவனங்கள் ஆகியவற்றில் அதிகம் தேவைப்படுவார்கள். Petroleum Geologists, நீர்த்தேக்கப் பொறியாளர்கள், உற்பத்திப் பொறியாளர்கள் முதலிய பலவற்றிலும் உலக அளவில்  இவர்களுக்குப் பணி வாய்ப்பு உண்டு. இப்பாடப்பிரிவு அண்மையில்தான் தோற்றுவிக்கப்பட்டது. இத்துறை பட்டதாரிகளுக்கு வளைகுடா நாடுகளில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

ஆதாரம் : முனைவர் ப.வே.நவநீதகிருஷ்ணன்

3.05
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top