பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குறை தீர்க்கும் மையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் விண்ணப்பதாரர்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு தொடங்கப்பட்ட குறை தீர்க்கும் மையம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் விண்ணப்பதாரர்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு குறை தீர்க்கும் மையம் 01.02.2012 அன்று தொடங்கப்பட்டது. அதன் பணிகள் பின்வருமாறு:

தொலைபேசி வாயிலாக

பொதுத் தொலைபேசி வாயிலாக விண்ணப்பதாரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் தொடர்பு கொண்டு உடனுக்குடன் பதில் தெரிவிக்கப்படுகிறது. (இலவச அழைப்பு எண்: 1800 425 1002)

நேரடியாக

குறை தீர்க்கும் மையத்திற்கு நேரடியாக வரும் விண்ணப்பதாரர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதற்குண்டான படிவங்களைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அன்றைய தினமே பதில் அளிக்கப்படுகிறது.

அஞ்சல் வாயிலாக

அஞ்சல் மூலமாக வரும் விண்ணப்பதாரர்களின் கடிதங்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு. மூன்று தினங்களுக்குள் பதிலை மேற்படி பிரிவுகள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு அதன் நகலை குறை தீர்க்கும் மையத்திற்கு வழங்கப்படுகிறது.

மின்னஞ்சல் வாயிலாக

மின்னஞ்சல் வாயிலாக வரும் கேள்விகளை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு பதில் பெறப்பட்டு அன்றைய தினமே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு பதில் அளிக்கப்படுகிறது. (Email: contacttnpsc@gmail.com)

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

2.66666666667
R.காட்டுராஜா Aug 22, 2016 10:10 PM

9ஆண்டுகளாக மின் இணைப்பு எழுதிவைத்துவிட்டு இன்னும் வரவில்லை அனல் 25000ஸகிமுஎன்று சொன்னார் இன்னும் வரவில்லை இதுக்கு பதில் உண்டா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top