பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாதிரி வினா-விடை – 25

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  1. தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் - அசோகர் தர்மசக்கரம்
  2. இந்திய அரசின் சின்னமான நான்முகச் சிங்கம் எதில் அமைந்துள்ளது - சாரநாத் கல்தூண்
  3. தேசிய கீதம் இயற்றப்பட்ட நாள் - 24.01.1950
  4. தேசிய கீதம் பாடி முடிக்க வேண்டிய காலம் - 52 விநாடிகள்
  5. தேசிய பாடல் - வந்தே மாதரம்
  6. தேசிய சின்னம் - அசோக சக்கரம்
  7. தேசிய பறவை - மயில்
  8. தேசிய விலங்கு - புலி
  9. தேசிய மரம் - ஆலமரம்
  10. தேசிய கனி - மாம்பழம்
  11. தேசிய மலர் - தாமரை
  12. நமது தேசியக்கொடியின் மத்தியில் தர்மச்சக்கரம் உள்ளது. அது 24 ஆரங்கள் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோட்பாட்டை விளக்குகிறது.
  13. அவை:
    • அன்புடைமை
    • அருளுடைமை
    • அறமுடைமை
    • அறிவுடைமை
    • அழுக்காறின்மை
    • ஆசையின்மை
    • இனிமையுடைமை
    • இன்னா செய்யாமை
    • ஈதல்
    • ஊக்கமுடைமை
    • ஊரோடு ஒழுகல்
    • ஒற்றுமை
    • ஒழுக்கம் உடைமை
    • களவு செய்யாமை
    • கல்வியுடைமை
    • காமம் கொள்ளாமை
    • பண்புடைமை
    • மது உண்ணாமை
    • பொது உடைமை
    • பொருளுடைமை
    • பிறனில் விழையாமை
    • பொய் சொல்லாமை
    • போர் இல்லாமை
    • சூது கொள்ளாமை.
  14. உலகிலேயே மிகவும் நீளமான தேசிய கீதம் உடைய நாடு - கிரேக்கம் (128 வரி)
  15. உலகிலேயே மிகவும் சிறிய தேசி கீதம் கொண்ட நாடு - ஜப்பான் (4 வரிகள்)
  16. இரண்டு தேசிய கீதங்கள் பாடப்படும் நாடு - ஆஸ்திரேலியா
  17. ஒரே தேசிய கீதத்தை இசைக்கும் இரண்டு நாடுகள் - கேப் வெர்ட், கினியாபிஸ்சவு
  18. இந்தியாவின் நைல் நதி - சிந்து நதி
  19. மேற்கு வங்க மாநிலத்தின் பிரபல துறைமுகங்கள் - கொல்கத்தா, ஹால்டியா
  20. வாசனைப் பொருட்களின் தோட்டம் - கேரளா
  21. பச்சை தங்கம் - யூக்கலிப்டஸ்
  22. கருப்பு தங்கம் - நிலக்கரி
  23. திரவ தங்கம் - பெட்ரோலியம்
  24. மனித உடலில் ரத்தம் பாயாத பகுதி - கருவிழி
  25. முதன் முதலில் கண் வங்கி ஏற்படுத்தப்பட்ட நகரம் - மும்பை
  26. சூரியன் மறையும்போது பச்சை நிறமாக காணப்படும் நாடு - ஆண்டார்டிகா
  27. வானவில்லை விமானத்தில் பயணம் செய்யும்போது - முழுவட்டமாக காணலாம்.
  28. அரசியல் அமைப்பின் 20-வது பாகம் விளக்கும் செயல் - திருத்தங்கள்
  29. இந்திய அரசியல் அமைப்பு முகவுரையில் சோசலிசம் என்ற வார்த்தையை சேர்ந்த அரசியல் அமைப்பு திருத்தம் - 42வது திருத்தம்
  30. வழிகாட்டும் நெறிக் கொள்கைகள் எந்த நாட்டு அரசியல் அமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது - அயர்லாந்து
  31. இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட நாள் - நவம்பர் 26.1949
  32. இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை நோக்கங்களும்  குறிக்கோள்களும் இடம் பெற்றுள்ள பிரிவு - முகவுரை
  33. இந்திய அரசியல் அமைப்பில் மதச்சார்பின்மை என்பதன் பொருள் - அரசாங்கம் மதம் என்பதல்ல
  34. அடிப்படைக் கடமைகள் அரசியல் அமைப்பில் இடம் பெற்ற திருத்தம் - 42
  35. அரசியல் அமைப்பின் தலைவர் - ராஜேந்திர பிரசாத்
  36. அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவர் - அம்பேத்கார்
  37. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
  38. முப்படைகளின் தலைவர் - குடியரசுத் தலைவர்
  39. தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்து - அரசியில் அமைப்பு ஆணையம்
  40. வாக்காளர்களை பதிவு செய்யும் பொறுப்பு கொண்டவர் - தேர்தல் ஆணையம்
  41. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250
  42. இந்திய சுதந்திர நாள் ஜனவரி 26 என இந்திய தேசிய காங்கிரஸ் அனுசரித்த ஆண்டு - 1930
  43. சமுதாய வளர்ச்சித் திட்டம் துவங்கும் ஆண்டு - 1952
  44. அசோக் மேத்தா குழு அறிக்கை சமர்பித்த ஆண்டு - 1977
  45. மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் - உள்ளாட்சி அமைப்பு தேர்தல்
  46. ஊராட்சிகளுக்கு அரசியல் அமைப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பு திருத்தம் - 73-வது திருத்தம்
  47. ஊராட்சி நிர்வாக முறையை 1959-ல் கொண்டு வந்த முதல் மாநிலம் - ராஜஸ்தான்
  48. முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1977
  49. மன்னர் மானியத்தை ஒழித்த அரசியல் அமைப்பு திருத்தம் - 26

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி

3.03125
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top