பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி / எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு IISc-ல் உதவித்தொகையுடன் பயிற்சி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு IISc-ல் உதவித்தொகையுடன் பயிற்சி

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு IISc-ல் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி பற்றிய தகவல் இங்கு தரப்பட்டுள்ளன.

அறிவியல், பொறியியல் படிப்புகளைப் படித்துவரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (Indian Institute of Science) கல்வி நிலையத்தில் உதவித்தொகையுடன் கோடைகாலப் பயிற்சி பெறலாம். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். அத்துடன், புத்தகங்கள் வாங்குவதற்கான ரூ.1500 வழங்கப்படும். இந்தப் பயிற்சிக்காக பெங்களூரு வந்து போக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும் வழங்கப்படும். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் விடுதியில் இலவசமாகத் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

யாரெல்லாம் சேரலாம்?

பயாலஜிக்கல், பிசிக்கல், கெமிக்கல், மேத்மேட்டிக்கல் சயின்ஸ் பாடங்களில் எம்.எஸ்சி, முதல் ஆண்டு படிக்கும் மாணவர்களும் பி.இ., பி.டெக், படிப்புகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மட்டுமே இந்தப் பயிற்சியில் சேரமுடியும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.iisc.ernet.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை பிரி்ன்ட் அவுட் எடுத்து பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, தபால் உறையின் மேற்பகுதியில் `IISC Summer Fellowship in Science and Engineering for SC/ST Students-2016’  எழுதி Deputy Registrar, Indian Institute of Science, Bangalore-560012, INDIA என்ற முகவரிக்கு ஏப்ரல் 20ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மேலுள்ள இணையதளத்தைப் பார்க்கலாம்.

பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் ஆங்கிலப் பயிற்சிகள்

பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பு, சென்னை, டெல்லி, கொல்கத்தா மையங்களில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குப் பல்வேறு வகையான ஆங்கில மொழிப்பயிற்சியினைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது. இந்தாண்டுக்கான கோடைகாலப் பயிற்சி அறிவிப்புகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மே மாதம் பயிற்சிகள் தொடங்குகின்றன. இந்தக் கோடைகாலப் பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம் ஆங்கில மொழிவளத்தை வளர்த்துக் கொள்வதுடன், ஆங்கிலத்தில் எளிமையாகப் பேசவும், பயன்படுத்தவும் முடியும். மூன்று வகையான பயிற்சிகள் சென்னை, பிரிட்டிஷ் கவுன்சில் இந்தக் கோடைகாலப் பயிற்சிகளை வயது வந்தவர்கள் (Adults), இளம் பயிற்சியாளர்கள் (Young Learners), ஆசிரியர் பயிற்சி (Teacher Training) எனும் மூன்று வகையாகப் பிரித்து அளிக்க இருக்கிறது.

வயது வந்தவர்கள் (Adults) எனும் பிரிவில் Evoluation, Impact, Executive, IELTS  Regular, IELTS -  Intensive என்று ஐந்து வகையான பயிற்சிகள் அளிக்கப்படும். இளம் பயிற்சியாளர்கள் (Young Learners) பிரிவில் 8 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள், 11 முதல் 12  வயதுக்குட்பட்டவர்கள், 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்று மூன்று வயதுப் பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சிகள் அனைத்தும் குழந்தைகளுக்கு ஏற்றதாக, Games, Puzzles, Songs, Rhymes, Stories and Other Activities எனும் வழிகளில் வழங்கப்படவிருக்கின்றன. ஆசிரியர் பயிற்சி (Teacher Training)  எனும் பிரிவில் TKT Intensive, IELTS TTT, BEC TTT எனும் மூன்று பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும், தனித்தனியாகக் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு பயிற்சிக்கும் தனித்தனியான பயிற்சிக் கட்டணங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கில மொழித்திறனை அதிகரித்துக் கொள்ள விரும்புபவர்கள், வயது வந்தவர்கள், இளம் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் எனும் மூன்று பிரிவுகளிலிருக்கும் பல்வேறு ஆங்கில மொழிக்கான பயிற்சிகளில் தங்களுக்கு ஏற்ற ஒரு பயிற்சியினைத் தேர்வு செய்து படித்துப் பயன்பெறலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு www.britishcouncil.in எனும் இணையதளத்தைப் பார்க்கலாம். அல்லது 044 - 4205 0688 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது British Council Division, British Deputy High Commission, 737 Anna Salai, Chennai, Tamil Nadu 600 002 எனும் முகவரிக்கு நேரடியாகச் சென்றோ அறிந்து கொள்ளலாம்

ஆதாரம் : பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம்

2.73469387755
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
mouniga s Dec 10, 2016 01:19 AM

Sir/madam now I'm doing B.Tech final year.... am I eligible or not for this course

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top