பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி / தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்

தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்

தொழிலாளர் தமிழக அரசின் அயல்நாட்டு நிறுவனம்

அமைச்சகத்தின் நம்பகமான சான்றிதழுடன் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி இந்தியர்கள் வெளிநாடுகளில் புரிந்து வரும் செயல்திட்டங்களுக்கும் இங்கிருந்து ஆட்களை அனுப்பி வைக்கிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு விபத்து மற்றும் உடல்நல காப்பீடுகளையும் வழங்குகிறது.

மேலும், வெளிநாட்டு பணிக்காக அனுப்பி வைக்கப்படும் நபர்களின் நிலை குறித்து அவ்வபோது ஆராய்வதாகவும் அதன் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். இவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல், பதிவு செய்தல், அவ்வபோது நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொள்ளச் செய்தல் போன்றவற்றையும் மேற்கொள்வதாக இதன் நிர்வாக அலுவலர் கூறுகிறார்.

விவரங்களை பதிவு செய்வதற்கு செய்ய வேண்டியவைகள்

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள்.

தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தாங்கள் பணிக்கு செல்ல விரும்பும் துறைகளில் 2 வருட அனுபவம் இருப்பது நல்லது. 18 வயதை பூர்த்தி செய்தவர்கள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்தால் இமிக்ரேஷன் தொல்லை இருக்காது.

விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் விலை 600 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை மாறும். இவற்றோடு சேவை வரியும் வசூலிக்கப்படும்.

இது தொடர்பான விளக்கங்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Overseas manpower Corporation ltd, முதல் மாடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம், No.48, Dr.முத்துலக்‌ஷ்மி சாலை, அடையாறு, சென்னை - 600 020.

மேலும் விண்ணப்பங்களை 2 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை 044 24464267அல்லது 044 24464268 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்தை காணலாம்.

உதவிகள் பெற தொடர்பு கொள்ளவும்

வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்லும் இந்தியர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களையும் வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் பணி புரியும்போது உதவிக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை அழைத்து கூடுதல் தகவல்கள் பெறலாம்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்து கவுன்சிலிங்கை பெற விரும்புபவர்கள், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:- எண். D-19, Okhla Industrial Area, Phase - I, New Delhi-110019. என்ற முகவரியை அணுகலாம்.

தாங்கள் அணுகும் ஏஜென்சி உண்மையானதா என்று அறிய www.moia.gov.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை காணுங்கள்.

3.0
சிவராமன் Jul 06, 2017 08:39 PM

ஐயா நான் ஐடிஐ யில் மெக்கானிக் படித்து nlc யில் apprantice முடித்து இருக்கேன் வேலை இருந்தால் தெரியப்படுத்தவும்

ஜெகநாதன் Jun 18, 2017 11:52 AM

ஐயா ஐந்து வருடத்திற்கும் மேலாக வயரிங் பிளம்பிங் வேலை செய்து வருகிறேன் இந்த துறையில் வேலை இருந்தால் தெரிய படுத்தவும்

பவுல் Apr 01, 2017 09:34 PM

என் மகள் +2 தற்போது முடிந்து உள்ளது. வெளிநாட்டில் பணியாற்றி அதிக மரியாதை பெற என்ன படிக்கவேண்டும்.98*****42.

சதீஷ் குமார்.வீ Mar 18, 2017 08:46 PM

ஐயா நான் b.sc chemistry "முடித்துள்ளேன் வெளிநாட்டில் வேலை உள்ளதா இருந்தால் விளக்கவும் *****@gmail.com அல்லது 86*****73 தெரியப்படுத்துங்க ஐயா

தினேஷ் Mar 17, 2017 09:27 PM

ஐயா நான் கடந்த 5 ஆண்டுகளாக ஐவளி துறையில் பணிபுரிந்துள்ளேன் எனக்கு ஏதேனும் பணி உள்ளதா என எனக்கு கூற வும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top