பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகளின் உரிமைகள் / கல்வி-அடிப்படை மனித உரிமை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வி-அடிப்படை மனித உரிமை

கல்வி என்பது அடிப்படை மனித உரிமை. அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் இங்கு விவரித்துள்ளனர்.

அடிப்படை கொள்கைகள்

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி கற்க உரிமை உண்டு. நமது அடிப்படைக் கொள்கைகளில் சில வருமாறு

1.குறைந்தபட்சம் ஆரம்பம் மற்றும் அடிப்படை கட்டங்களில் ஆரம்பக் கல்வி இலவசமாக அளிக்கப்பட்டது.

2.ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது.

3.தொழிற்கல்வி பொதுவாக அனைவரும் கற்கும் வகையில் இருக்கும்படி செய்யப்பட்டது.

4.உயர்கல்வி, தகுதியின் அடிப்படையில் அனைவருக்கும் சமமான முறையில் பெறும்படி வழிவகை செய்யப்பட்டது. மனிதனின் ஆளுமை முழுவளர்ச்சி பெறும் வகையிலும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவற்றை மதிக்கும் எண்ணத்தை வலுவூட்டும் வகையிலும் கல்வி இருக்க வழிசெய்யப்பட்டது.

5.தங்களது குழந்தைகளுக்கு எந்த வகையான கல்வியை அளிக்க வேண்டும் என்பது பற்றிய உரிமை பெற்றோர்களுக்கு இருக்கிறது.

அனைவருக்கும் கல்வி

அனைவருக்கும் கல்வி என்ற இயக்கம், உலகளாவிய கடமை உணர்வுடன், அனைத்து குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆகியோர்களுக்கு தரமுள்ள அடிப்படைக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக செயல்படுகிறது. 1990ம் ஆண்டில் நடந்த ‘அனைவருக்கும் கல்வி’ என்பது குறித்த உலக மாநாட்டின்போது இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

இவை அனைத்திற்கும் முன்னணித் தொடர்பு இயக்கமான யுனெஸ்கோ, சர்வதேச அளவிலான முயற்சிகளை ஒன்று திரட்டி, அனைத்தையும் இணைத்து அனைவருக்கும் கல்வி என்ற பணியிணை ஒருங்கிணைக்கிறது. அரசாங்கங்கள், வளர்ச்சிப்பணிக்கான நிறுவனங்கள், அரசு சாரா இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் ஆகிய அமைப்புகள் இதற்காக பணிபுரிந்து வருகிறது.

அனைவருக்கும் கல்வி சம்பந்தமான குறிக்கோள்களை எட்டும் முயற்சிகள் உலகளாவிய வகையில் நடத்து வரும் எட்டு மில்லினியம் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் பெருமளவில் உதவி புரிவதாய் அமையும்.

கிராம மக்களிடையே, கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி அறியச் செய்யும் வகையில் பிரச்சாரம் செய்வது, முக்கியத் தேவையாக உள்ளது. கீழ்க் காணும் விஷயங்கள், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்பு காண உதவும்.

1. பெண் குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பது

2. குழந்தை தொழிலாளர்களுக்குக் கல்வி மற்றும் இணைப்புக் கல்வித் திட்டங்கள் செயல்பாடு

3. எஸ்.சி., எஸ்.டி., பி.ஸி மற்றும் சிறுபான்மையினருக்குக் கல்வியறிவு அளிப்பது

4. தனித்திறன் படைத்த, உடல் ரீதியாக சவாலைச் சந்திக்கும் குழந்தைகள், சிறப்புக் குழந்தைகள் ஆகியோர்களுக்குக் கல்வியறிவு அளிப்பது

5. பெண்களுக்கு கல்வி அளிப்பது

3.11320754717
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
பட்டுராஜ் Dec 25, 2017 01:24 PM

அனைத்து அரசு பள்ளிகளில் தரமான கல்வி கற்றுத்தர வேண்டும் கல்வியின் மூலம்தான் நம் தேசத்தை வலுப்படுத்த முடியும்

கவி Mar 06, 2017 08:34 AM

வகுப்பில் பேசியதால் 10 நாள் இடை நீக்கம் செய்வது சரியா

kaliraj Jan 19, 2017 05:26 PM

நன்று

TASNA Apr 04, 2016 11:55 AM

இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி அனைவரும் கல்வி பயில்வது அவசியமாகும். மேலும் விவரங்களுக்கு விகாஸ்பீடியாவில் உள்ள "இலவச கட்டாய கல்வி சட்டம்" என்ற தகவலை படிக்கவும்

சிவா Apr 02, 2016 02:07 PM

ஒரு மாணவியின் கல்லூரி
படிப்பை தொடர்வதை தடூப்பதூ
குற்றமா

mari yappan Sep 09, 2014 10:15 AM

கிராமந்தோறும் இரவு பாடசாலை திட்டத்தின் மூலம் மாணவர்களை முன்னேற்றலாம்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top