பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியாவின் வளர்ச்சி

மின்சாரம் குறித்த திட்டங்களில் இந்தியாவின் வளர்ச்சி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் மின்சாரம் திட்டம்

நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாக இன்னமும் இருளில் இருக்கும் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தி தரும் லட்சியத் திட்டத்தை இந்தியா உருவாக்கி உள்ளது. இந்திய சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மின்சாரம் இல்லா எல்லா கிராமங்களுக்கும் இன்னும் ஆயிரம் நாட்களில் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

வெளிப்படைத்தன்மை

ஊரக மின் மயமாக்கல் திட்டம் பரவலாக விரைந்து மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு வெளிப்படைத் தன்மையாகவும் நேர்மையாகவும் திட்டம் செயல் வடிவம் பெறுகிறது. எந்தெந்த கிராமங்கள் மின் இணைப்பு பெற்றுள்ளது என்ற விவரங்கள் செல்போன் செயலி (மொபைல் ஆப்ஸ்), வலைத்தளம் பயன்பாடு மூலமும் தெரிந்து கொள்ள முடியும். அதுவும் அந்த கிராமத்திற்கு மின்சாரம் சென்றடைந்த பின்னர் தான் தகவல் வரும். கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு, எதிர்பார்ப்பு, கனவுகள் ஆகியவற்றை நிறைவேற்றும் முக்கிய அம்சமாகவும் இத்திட்டம் செயல்படுகிறது.

மின் உற்பத்தி வளர்ச்சி புள்ளிவிவரங்கள்

அனைவருக்கும் மின்சாரம் திட்டத்தினை செயல்படுத்த கடினமாக உழைக்கும் இந்த அரசு, இதற்காக மாசற்ற மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் மூலம் 175 கிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 100 கிகாவாட் மின்சாரம் சூரியசக்கி மின்சாரமாகும்.

அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் இலக்கினை எட்டுவதற்காக நீண்டகால, ஏற்புடைய செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. வளர்ச்சியின் எண்ணிக்கைக்கு முதுகெலும்பாக இருப்பது மின்சார உற்பத்திதான். இந்திய தொழில் உற்பத்தி குறியீடான ஐ.ஐ.பி. படி, மின் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், அதே போல் கோல் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சி 2014-15ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 9 சதவீதமாக அதிகரித்தது என்றும் தெரிவிக்கிறது. இதேபோல 2015-16ம் ஆண்டில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிறுவனங்களின் மின் உற்பத்தியும் 12.12 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இதுவரை இல்லாத வளர்ச்சியாகும்.

ஒரு தேசம் ஒரு மின் தொகுப்பு ஒரு அலைவரிசை

மின் உற்பத்தி மிகை மாநிலங்களில் இருந்து பற்றாக்குறை மாநிலங்களுக்கு மின்சாரத்தை வினியோகத்திற்காக கொண்டு செல்வதிலும் பல சிக்கல்கள் இருந்தன. இதற்கு தீர்வுகாணும் வகையில் தெற்கு மின்கோபுரத் தொகுப்பையும், ஒரு தேசம் ஒரு மின் தொகுப்பு- ஒரு அலைவரிசை என்ற கோட்பாட்டின்படி ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

உதய் திட்டம்

மின் மதிப்புத்தட சங்கிலியில் பலவீனமான இணைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண உதய் திட்டம் கொண்டுவரப்பட்டது. மாநிலங்களின் முதலமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகார அமைப்பினருடனும், வங்கிகளுடனும், கட்டுப்பாட்டாளர்களுடனும் கலந்துபேசி உருவாக்கப்பட்ட சவுகர்யமான திட்டமாகும். இத்திட்டம் மின் விநியோகத்தில் மின் விநியோக துறை நிறுவனங்களான டிஸ்காமுக்கு நீடித்த மின்சாரம் வருவதற்கான பாதைக்கு வழி ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று மின்சார கட்டணத்தினையும் குறைப்பதற்கு மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் மூலம் அடுத்த 2018-19ம் ஆண்டில் அனைத்து டிஸ்காம் நிறுவனங்களும் லாபத்தில் இயங்க வழிவகை செய்யும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதய் திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள் மூலம் டிஸ்காமிற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர கூட்டு அணுகுமுறை, திறன் மேம்பாட்டில் கூடுதல் கவனம், மின் உற்பத்தி செலவு குறைப்பு, போன்றவற்றால் உதய் திட்டம் மின்துறையில் பெரும் சீர்திருத்தத்தை ஏற்படுத்தும்.

மின் திறன் மேலாண்மையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குமிழ் பல்புகளுக்கும் பதிலாக எல்.இ.டி பல்புகளை பொருத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது- 2018ம் ஆண்டுக்குள் 77 கோடி எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்படும்.

வீடு மற்றும் தெருவிளக்குகள் பயன்பாட்டில் எல்.இ.டி பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் அதிக மின் தேவையுள்ள நேரங்களில் மின்சார பயன்பாட்டின் தேவையை 22 கிகாவாட் குறைக்க முடியும். அத்துடன் 11 ஆயிரத்து 400 கோடி மின்சாரத்தை சேமிக்க முடியும். அதன் மூலம் ஆண்டுதோறும் எட்டரை கோடி டன் கார்பன் டையாக்சைடு மாசு வெளியேற்றத்தை குறைக்க முடியும். 22 கிகாவாட் மின்சார சேமிப்பு என்பது மிகப்பெரிய சாதனையாகும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் அமையும்.

ஆதாரம் : http://www.pmindia.gov.in/ta/

2.92857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Has Vikaspedia helped you?
Share your experiences with us !!!
To continue to home page click here
Back to top