பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / நீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

நீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்திய நீர்வள நிலவளத் திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றி கண்டதையடுத்து, இந்த திட்டத்தின் கீழ் வராத மேலும் அறுபத்தாறு துணைபடுகைகளில் விவசாயத்துக்கான பாசனமுறையை நவீனமயமாக்க உலக வங்கியின் உதவியை நாடியுள்ளது. இம்மாதிரியின் குறிக்கோள், பலதுறை ஒருங்கிணைப்பு மற்றும் பிணைப்பு மற்றும் நீர்வள நிலவளத் திட்டத்தின் பொதுவான அங்கங்களை பின்பற்றுவதும் ஆகும். தநா- நீர்வள நிலவள திட்டத்தின் -2 கீழ் வருவன :

  • உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் அனைத்துவித பருவநிலை மாற்றங்களின்போதும் நீர்ப்பாசன வசதிக்கு வழிசெய்தல்.
  • நீர் மேலாண்மைக்கான திட்டங்களை புதுப்பித்தல்.
  • உழவர் மற்றும் உழவு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் முன்னேற்றத்துக்காக விவசாயம் மட்டுமின்றி, தோட்டவளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு போன்றவற்றில் அவர்களை ஊக்குவிப்பது.

மேற்கண்ட திட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்களைக்கொண்டு மாறும் சூழலுக்கு ஏற்பவும், தேவைகளுக்கு ஏற்பவும் மாநிலத்தின் நீர்பாசனம், விவசாயம், தோட்டவளர்ப்பு மற்றும் அதைச் சார்ந்த பணிகள், கால்நடை மற்றும் மீன்வளர்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்த புதியவடிவத்தின் கீழ் இயங்க உள்ளது. இத்திட்டம் மூன்று முக்கிய அம்சங்களாக பகுக்கப்பட்டுள்ளது.

நீர்பாசனம் மற்றும் நீர் மேலாண்மை

இதன் கீழ் முழுமையான அளவில் நீர்ப்பாசனம் மற்றும் மேம்பாடு விளக்கப்படுவதுடன் நீர்வளத் தேவை மற்றும் அதை ஈடு செய்வதற்கான வழிகள் ஆராயப்படும். இவை நான்கு விதமாக பகிரப்பட்டுள்ளன :

  • குழுவை வலுப்படுத்துதல் மற்றும் நீர்வள மேம்பாட்டிற்கான திறனை உருவாக்கல்
  • நீர்ப்பாசன முறைகளை நவீனமயமாக்கல்
  • பங்கேற்புடன் நீர்ப்பாசன மேம்பாடு
  • மேலாண்மையான சேவையை வழங்க ஒருங்கிணைத்தல்

விவசாய உற்பத்தியை விரிவாக்குதல், பன்முகத்தன்மையுடன் இருத்தல்,

  • தீவிர விவசாயம் மற்றும் விவசாய பொருட்களில் பன்முகத்தன்மை.
  • கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு மூலம் வாழ்வாதாரத்தை சீரமைத்தல்.
  • விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல், அவற்றுக்கு மதிப்புக் கூட்டுதல் மற்றும் அறுவடைக்கு பிறகான மேம்பாடு.

திட்ட மேலாண்மை ஆதரவு

  • இந்த தநா நீர்வள நிலவளத் திட்டம்-2 செயல்பாட்டுக்கு கொண்டுவர எட்டு துறைகள் பல்துறை திட்டக்குழுவின் கீழ் இயங்கும். இந்த பல்துறை திட்டக்குழுவுக்கு, வழிகாட்டும் திட்டக் குழு (பிஎஸ்சி) தநா. நீர்வள நிலவளத்திட்டம்-2 திட்டத்தின் செயல்பாடுகளை குறிப்பிட்ட இடைவேளைகளில் கவனித்து சிறப்பாக செயல்படுவதற்காக ஆலோசனைகளை வழங்கும்.
  • நீர்வள ஆதாரத்துறையின் சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் மற்றும் குறிப்பிட்ட துறையின் சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் தமக்கு கீழ் வரும் ஒவ்வொரு துணை படுகைகளிலும் பகுதிவாரியாக திட்டத்தை செயல்படுத்தும் குழுவாக செயல்படுவர்.
  • நீர்வள ஆதாரத் துறையின் மூத்த சுற்றுச்சூழல் நிபுணர் திட்டத்திற்கான தொழில்நுட்ப உதவிகளை பல்வேறு தளங்களிலிருந்து வழங்குவார். மேலும், இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தை அறிவதுடன், சுற்றுச்சூழல் சார்ந்த வழிகாட்டுதல்களுடன் திட்டத்தை அமலாக்குவதும், மேற்பார்வையிடுவதும், பல்வேறு பகுதிகளில் உள்ள திட்டத்தை செயல்படுத்தும் குழுக்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதும் இவரது பொறுப்பாக இருக்கும். அத்துடன், தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் பகுதிகளை உதவிகரமாக இருப்பதும், சமூக மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குவதும் இந்த மூத்த சுற்றுச்சூழல் நிபுணரின் பணியாக இருக்கும்.
  • இதுபோன்ற ஒவ்வொரு முன்னேற்றத் திட்டத்திலும் இஎஸ்ஏ-வின் பங்கு அதன் வெற்றியை கணித்து, விளக்குவது, திட்டம் சிறப்பான முறையில் செயல்படுவதற்கு ஏற்ப பாதகமான சூழலை குறைப்பது மற்றும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள சட்டதிட்டங்களின் கீழ் செயல்படுவதை உறுதிசெய்வது, சுற்றுச்சூழல் மற்றும் சமூக மதிப்பீடு ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை கட்டமைப்பு பின்வரும் நோக்கங்களை உள்ளடக்கியுள்ளது
  • இந்த திட்டம் செயல்படுத்தப்படும்போது குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அளவில் சாத்தியமான, குறிப்பிடத்தக்க, நீண்டகால மற்றும் மீள இயலாத அளவிலான மாற்றங்களை அடையாளம் காண்பது
  • சுற்றுச்சூழலை சிறப்பாக்க ஏற்ற சாத்தியமான வாய்ப்புகளை அறியவும் மற்றும் திட்டத்துக்காக செய்யப்படும் முதலீடுகளால் சமூக நிலைமை நிலையடையவும், பசுமைக்குடில் வாயு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தவும் முறையான வழிகளை அடையாளம் காண்பது.
  • சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை கட்டமைப்பை உருவாக்குதல்.
  • சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை திட்டங்களுக்கான கையேடுகளைத் தயார் செய்தல்
  • சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை திட்டத்தை ஒருங்கிணைத்து படிப்படியான செயல்பாடுகளை பரிந்துரைப்பது. இந்த முன்மொழியப்பட்ட திட்டத்தின் தாக்கம் பல்வேறு விதமானதாக அமையலாம். செயல்பாட்டின் பல்வேறு தளங்களில் (எ.கா.) கட்டுமானத்துக்கு முன்னர், கட்டுமானத்தின்போது அல்லது இயக்கத்தின் போது மாறலாம்.

திட்டத்தின் சிறப்பான பின்விளைவுகள்

  • இந்த திட்டத்தின் மூலம் பயிர்களின் உற்பத்தி கூடும்.
  • இந்த திட்டத்தின் மூலம் பயிர் உற்பத்தி கூடுவதால் நீர்பாசன அடர்த்தியும் அதிகரிக்கும்.
  • இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் சேமிக்கப்படும் மற்றும் அதிகரிக்கும்
  • இந்த திட்டத்தின் மூலம் காய்கறிகளும் பாதுகாக்கப்படும்
  • இந்த திட்டம் நாட்டின் தற்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கி நல்ல சூழலை உருவாக்கி பொருளாதார வளர்ச்சியடையவும் உதவும்.
  • இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது மண்ணரிப்பின் அளவு கட்டுக்குள் வரும்.
  • இதனால் வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன், சமூக மூலதனம் மற்றும் தேவைகள் பூர்த்தியடைய வழிபிறக்கும்.
  • பெண்கள், விவசாயிகள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ள குழுக்கள் போன்றோரின் சமூக பொருளாதார நிலை மேம்படும்.
  • உள்ளூரின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு துணைப் படுகையிலும் உத்வேகத்துடன் எதிரொலிக்கும்.

இந்தத் திட்டத்தின் கட்டுமான அளவில் ஏற்படலாம் என கணிக்கப்படும் எதிர்மறையான பக்கவிளைவுகள் பின்வருமாறு :

  • மண்ணரிப்பு.
  • வாகன போக்குவரத்து சற்றே அதிகரிப்பு.
  • தொழிலாளர் குடியிருப்பின் திட கழிவு அதிகரிப்பு.
  • நீரோடை வண்டலாகுவது அதிகரிக்கலாம்.
  • கட்டுமான சிதைவு மேற்கண்ட எதிர்மறை விளைவுகள் பின்வருவனவற்றை கட்டுபடுத்தினால் மட்டுப்படுத்தப்படலாம்.

பூச்சிக்கொல்லி / உரத்தின் அதீத பயன்பாடு

  • துணைப் படுகைகளில் ஏற்கனவே இருக்கும் பூச்சி மற்றும் களைகளைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில் நுட்பம் மற்றும் நடைமுறையில் இயற்கையான உரம் (மண்புழு உரம் போன்றவை) பயன்படுத்தப்படவேண்டும்.
  • மண்ணின் தரத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் குறைந்த அளவிலான விவசாய ரசாயனங்களை உபயோகிக்கவேண்டும்.
  • கடற்கரை சார்ந்த ஈரநிலப்பகுதிகளை மீன்வளர்ப்பு பகுதிகளாக மாற்றுவது வீட்டுப்புற கழிவுநீர், கால்நடைகளை கழுவுவதால் நீர் மாசுபாடு, தரைகளை சுத்தப்படுத்துதல்.
  • இஎஸ்ஏ-வின் ஆய்வறிக்கைப்படி தநா-நீர்வள நிலவள-2 திட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்வளம் மீட்பு மற்றும் மேலாண்மை மேலும் இவை சம்பந்தமான சமூக நலன்கள் போன்றவற்றை அடைய ஏதுவான கூறுகள் மற்றும் செயல்முறைகள் சிறப்பான முறையில் உள்ளன என்பதில் ஏதும் ஐயமில்லை.
  • முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டுள்ளபடி இந்தத் திட்டத்தில் நேர்மறை தாக்கத்துக்கான வாய்ப்புகளே அதிகம். இத்திட்டத்தினால் ஏற்படும் நன்மைகள் அனைத்து விதமான விவசாயிகள், விவசாய கூலியாட்கள் மற்றும் அது சார்ந்த பணியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கப்பெறும்.
  • குறிப்பிட்ட பகுதியில் தரிசாக இருக்கும் நிலமும், விவசாயத்துக்கு ஏதுவானதாக மாறி அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் என தெளிவாகின்றது. நீர்பாசனத்தால் காய்கறி மற்றும் மரங்களின் வளர்ச்சி கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே, குறிப்பிடப்பட்ட பகுதியின் பல்லுயிர்களும் அதிகரிக்கும்.
  • தரிசு நிலங்கள் மற்றும் தனிப்பயிர்கள் விதைக்கப்படும் நிலங்கள் தொடர்ச்சியாக பயிரிடப்படுவதால் அவை மண் சேர்ப்பானாக செயல்பட்டு மண்ணரிப்பை சிறிது சிறிதாக குறைக்கும்.
  • இந்த குறிப்பிட்ட திட்டம் நிலத்தடி நீரின் பயன்பாட்டை குறைக்க உதவும். நீர்பாசன மேம்பாட்டினால், நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு அதிகரிக்கவும் உதவும். தண்ணீர் தட்டுபாடு என்ற நிலை மாறி அதிகரித்த நிலத்தடி நீரால் மேற்படி விவசாயம் வளரவும், நீர்பாசனம் மேம்படவும் காரணியாகும். சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாட்டு கட்டமைப்பின்படி கட்டுப்பாட்டு அளவைகள் ஐபிஎம் மற்றும் ஐஎன்எம் அளவீடுகள் தீர்மானிக்கப்படும்
  • அத்துடன் நீர்பாசனப் பகுதிகளில் எஃப் ஒய்எம் மற்றும் இயற்கை உரத்தை பயன்படுத்துவதன் நன்மை குறித்து பறைசாற்றப்படும். இம்முறையான செயல்பாடுகள் உற்பத்தியை அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழல் மீது குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுததும்.
  • இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பதால் நகரம் நோக்கி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளடைவில குறையும். விவசாயக் கூலிகள் மற்றும் பலவீனமான குழுக்களைச் சார்ந்தோருக்கு பணிக்கான வாய்ப்புகள் அதிகரிப்பதால் அவர்களின் வருமானமும் கூடும்.
  • தொடர்ந்து தேவை சார்ந்த பயிற்சி வகுப்புகள் இத்திட்டத்தின் மூலம் நடத்தப்படுவதால் விவசாயிகள் புதிய வகை விவசாய முறையில் சிறப்பாக செயலாற்றவும் மீண்டும் நலிவடையாமல் இருக்கவும் இயலும்,
  • இந்த திட்டத்தினால் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதால் வீட்டுச்செலவுகள் போக மீதிப் பணத்தில் விவசாயத்துக்கான மூலக்கூறுகளை வழங்கவும், நவீனமயமான விவசாயத்தில் பங்கெடுக்கவும் முடியும். இதனால் செலவு போக உற்பத்தித்திறன் அதிகரித்து, வருமானம் ஈட்ட உதவும்.
  • இத்தகைய விவசாயிகளை பகுதி சார்ந்த குழுவாக இணைக்கும்போது திட்டத்தை வழிநடத்த சிறப்பான ஒருங்கினைப்பைப் பெறலாம். இது நீர்பாசன மேம்பாடு மற்றும் விவசாயிகளே தமது உற்பத்திப் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கும் ஒத்துழைப்புடன் செயலாற்ற உதவும்.
  • இந்த திட்டத்தின் மூலம் பாலினம் சார்ந்த அக்கறையுடன் பெண் விவசாயிகளையும் சிறப்பாக செயலாற்ற வைத்தால், அவர்களது சமூக பொருளாதார நிலை சீரடைய உதவ முடியும்.

நீர்வள நிலவளத் திட்டம்-2ல் பிறதுறைகளின் பணிகள்

வேளாண் துறை

  • இயற்கை வேளாண்மை (INM மற்றும் IPM) நடைமுறைப்படுத்துதல்
  • வேளாண் இடுபொருட்களையும் கருவிகளையும் உரிய காலத்தில் வழங்குதல்
  • ஆண்கள் பெண்களுக்குத் தேவையான பயிற்சி அளித்தல்

நீர்வள ஆதாரத்துறை / பொதுப்பணித்துறை

  • நீடித்த நீர்வள மேலாண்மைக்கான நல்ல செயல்களையும் முடிவெடுக்க துணைபுரியும் அமைப்பையும் வளர்த்தல்
  • நீர்வள மேலாண்மைப் பணியாற்றும் நிறுவனங்களை செழுமைப்படுத்துதல்

தோட்டக்கலைத் துறை

  • வருவாயை அதிகரிக்கவும் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவதற்குமான தோட்டக்கலை தொழில் நுட்பங்களை பிரபலப்படுத்துதல்
  • தோட்டக்கலைப் பயிர்களுக்கான மிகச் சரியான வேளாண் முறையைப் பிரபலப்படுத்துதல் மற்றும் அதற்கான பயிற்சியை வழங்குதல்

வேளாண் பொறியியல் துறை

  • சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம், சூரிய வெப்ப சக்தியில் இயங்கும் இரவைகள் போன்ற நீரைச் சேமிக்கும் பாசன முறைகளைக் கண்டறிந்து விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துதல்
  • மழைநீர் சேகரிப்பு முறைகளைப் பிரபலப்படுத்துதல்

வேளாண் விற்பனைத்துறை

  • சிறிய அளவு பதப்படுத்தும் அலகுகள், சேமிப்புக் கிடங்குகள், சூரிய சக்தியில் இயங்கும் உலர் கருவிகள், விற்பனை மையங்கள் போன்றவற்றினை உருவாக்குதல்.
  • உலர்த்துதல், பதனிடுதல் மூலம் மதிப்புக்கூட்டுதல்.
  • வேளாண் தொழில் முனைவோர்களை உருவாக்குதல்

தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம்

  • மிகச் சரியான விவசாய முறைகளை மேம்படுத்துதல்,
  • விலையை முன் கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்குதல்
  • மாதிரி விதை கிராமத்தை உருவாக்கி அதன் மூலம் தரமான கலப்பின விதைகளைப் பெருக்குதல்

கால்நடைத்துறை

  • கால்நடைகளின் உடல்நலத்தைப் பேணுதல்
  • கனிமக் கலவையை பகிர்ந்தளித்தல்
  • பசுந்தீவனத்தின் தேவை மற்றும் இருப்பு ஆகியவற்றிற்கிடையே உள்ள இடைவெளியைக் குறைத்தல்

மீன் வளத்துறை

  • பண்ணைக் குட்டைகளில் மீன் வளத்தைப் பெருக்குதல்
  • மீன் குஞ்சு வங்கி மற்றும் அலங்கார மீன்களை அதிகப்படுத்துதல்,
  • விவசாயக் குளங்களில் மீன் வளத்தைப் பெருக்குதல்

இந்த திட்டத்தில் எதிர்மறை பட்டியலில் உள்ள செயல்பாடுகளுக்கு வங்கி கடனுதவி தராது. சுற்றுச் சூழல் மற்றும் சமூக பாதிப்புகளை அறிய உதவவே இத்திட்டம். மேலும் வகைப்படுத்தித் தேர்வு செய்யும் கருவியாகவும் பயன்படும்.

வேளாண்மைக்கு நேரும் இடர், அதைத் தடுப்பதற்கான திட்டம், பூச்சி மேலாண்மைத்திட்டம், பாலின சமத்துவம் போன்றவையும் கணக்கில் கொள்ளும். தவிர, திட்ட செயல்பாடுகளை கண்காணித்தல், திறன் மேம்பாட்டிற்கான பயிற்சித் திட்டம், இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வரவு செலவு கணக்கையும் கொண்டிருக்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை

2.8
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top