பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / உயிர்ம பொருள் ஆற்றல் / உயிர்ப்பொருட்கள் சார்ந்த மின் உற்பத்தி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உயிர்ப்பொருட்கள் சார்ந்த மின் உற்பத்தி

உயிர்ப்பொருட்கள் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் மாதிரிகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

உயிர்ம எரிபொருள் (பையோமாஸ்) மூலம் ஆற்றல் உற்பத்தி

  • இந்தியா வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் காடுகள் செயல்பாடுகள் மூலம் மிக அதிகமான பையோமாஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. சில புள்ளிவிவரங்களின்படி, ஒரு வருடத்திற்கு 500 மில்லியன் டன் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழிற்சாலை கழிவுகள் வெளியாகின்றன.
  • இந்த அளவில் உள்ள வெப்ப எரிசக்தியானது, 175 மில்லியன் டன் எரிபொருள் எண்ணையில் உள்ளதுக்கு சமமானதாகும்.
  • இதில் ஒரு பகுதி தீவனம் மற்றம் எரிப்பொருளாக கிராமபுறத்தில் பயன்படுகிறது. ஆனால், 150-200 மி.டன் பையோமாஸ் எந்தவித உபயோகமான செயல்பாட்டிற்கும் பயன்படுத்தபடுவதில்லை. ஆனால், குறைந்த முதலீட்டைக் கொண்டு, இவற்றை பயனுள்ள செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.
  • இவைகளில் பெரும்பாலானவை தவிடு மற்றும் வைக்கோல் ஆகும். இந்த பொருளைக் கொண்டு 15,000-25,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
  • கூடுதலாக, உபயோகமற்ற நிலங்கள், வீதியோரம் மற்றும் தண்டவாளங்கள் ஓரம் வளர்ந்த செடிகளின் உயிர்ம பொருள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் 70,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
  • எனவே உயிர்ம பொருள் ஆற்றல் மூலம் 100,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.

தொழில்நுட்பம்

உயிர்ம பொருளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம், நிலக்கரி சார்ந்த எரிசக்தி ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்பத்தை போன்றதாகும். உயிர்ப் பொருளை கொதிகலனில் எரிக்கும் போது உண்டாகும் நீராவியானது, டர்போ ஆல்டர்னேடரை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

பலன்கள்

  • உயிர்ம எரிபொருளை நாம் சேகரித்து, மின்சாரம் தேவைப்படும்போது அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
  • நிலக்கரிசார்ந்த எரிசக்தி ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்பத்தை ஒத்து இருப்பதால் இதற்கென்று தனியான கருவிகளை தயாரிக்க தேவையில்லை.
  • உயிர்ம பொருள் அதிகமாக கிராமபுறங்களில் கிடைப்பதால், அப்பகுதிகளில் மின்சார விநியோக தரத்தை மேம்படுத்த முடியும்.
  • பலதரப்பட்ட உயிர்ம பொருளை ஒரே அமைப்பைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.

செலவு

உயிர்ம பொருளிலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூபாய் 3 கோடியிலிருந்து 4 கோடி வரை மூலதன செலவு ஆகும். உயிர்ம பொருளின் விலை, உயிர்ம பொருள் அளவு மற்றம் மின்சாரமாக மாற்றப்படும் திறனை பொறுத்து மின்சார உற்பத்தியின் செலவு வேறுபடும்.

வெப்ப மற்றும் மின்சக்தி தேவைகளுக்கு பயன்படும் உயிர்ம எரிவாயு உற்பத்தி

உயிர்ம எரிவாயு உற்பத்தி என்றால் என்ன ?

தேவையான காற்றைவிட குறைந்த காற்றினைக் செலுத்தி, உயிர்ம எரிபொருளை எரித்து, கட்டியான உயிர்மப் பொருளை, உற்பத்தி எரிவாயுவாக (ப்ரட்யூசர் காஸ்) மாற்றுவது ஆகும். எரிவாயுவில் சாதாரணமாக,

  • கார்பன் மோனாக்ஸைடு - 18 % – 20 %
  • ஹைட்ஜைன் - 15 % – 20 %
  • மீதேன்- 1 % – 5 %
  • கார்பன்டை ஆக்ஸைடு- 9 % – 12 %
  • நைட்ரஜன் - 45 % – 55 %
  • கலோரிபிக் திறன் - 1000 - 1200 கி.கலோரி/மீ3

ஏன் உயிர்மப் பொருளை எரிவாயுவாக மாற்ற வேண்டும்?

  • இந்த எரிவாயுவை, டீசலுக்கு பதிலாக அத்ற்கென வடிவமைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஜெனரேட்டருடன் கூடிய இயந்திரங்களில் மின்சார உற்பத்திக்கு உபயோகிக்கலாம்
  • பல தொழிற்சாலைகளில், வெப்ப தேவைக்காக மரபுவழி எண்ணெய் உபயோகிக்கும் இடத்தில் இந்த எரிவாயுவை பயன்படுத்தலாம்
  • எரிவாயுவாக உயிர்மப்பொருளை மாற்றும் போது, அதன் பயன்பாடு சுற்றுபுற சூழலை மாசுபடுத்துவதில்லை.
  • தற்போது உபயோகிக்கப்படும் டீசல் ஜெனரேட்டர்களில், சம அளவு உற்பத்தி எரிவாயுவை உபயோகிப்பதன் மூலம், குறிப்பிட்ட அளவு பணம் சேமிக்கலாம்.

எவ்வித உயிர்மப்பொருளை எரிவாயுவாக்கலாம் ?

பெரும்பாலும் மரம் அல்லது மரம் சார்ந்த பொருட்கள், உமி, போன்றவை உபயோகிக்கப்படுகிறது. மரம் அல்லாதவைகளையும் உபயோகிக்கலாம். இவ்வாறு உபயோகிக்கும் போது, இதற்காக வடிவமைக்கப்பட்ட எரிவாயு உற்பத்தி கலனை உபயோகிக்க வேண்டும்.

எவ்வாறு எரிவாயு கலன் வேலை செய்கிறது ?

எரிவாயு கலனில், "அப் டிராப்ட்" மற்றும் "டவுன் டிராப்ட்" என இருவகை உண்டு. இரண்டாம் வகையில் எரிபொருள் மற்றும் காற்று ஒரே திசையில் செல்லும். ஆனால் முதல் வகையில் எரிப்பொருள் மற்றும் காற்று மாற்று திசையில் செல்லும். இருப்பினும் அடிப்படையில் எரிவாயு உற்பத்தி பொதுவான முறையே ஆகும்.

எரிபொருள், வாயு உற்பத்திக்கலனின் மேற்புறத்திலிருந்து போடப்படும். இது, கீழே செல்லும் போது உலர்த்தி, எரிக்கப்படும். ஆக்சிடேஷன் பகுதியில், காற்று செலுத்தப்பட்டு 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எரிக்கப்படும். இதனால் தாவர பொருளில் உள்ள ஹைடோரோகார்பன் பிரிக்கப்படும். இவை ரிடக்சன் பகுதியில் செல்லும் போது, கார்பன்டை ஆக்ஸைட் மற்றும் நீராவி மூலம் எரிவாயுவாக (ப்ரட்யூசர் காஸ்) மாற்றப்படும். சுத்தமற்ற மற்றும் வெப்பம் மிகுந்த எரிவாயு, பின்னர் குளிர்பான் மற்றும் வடிப்பான் மூலம் சுத்திகரிக்கப்படும்.

எரிவாயுக் (ப்ரட்யூசர் காஸ்) கொண்டு என்ன செய்யலாம் ?

சுத்தமான எரிவாயுவினைக் (ப்ரட்யூசர் காஸ்) கொண்டு, டூயல் ப்யூல் எஞ்சீன் கொண்டோ அல்லது ஸ்பார்க் எஞ்சீன் கொண்டோ, மின்சாரம் உற்பத்தி செய்யலாம். வெப்பம் தேவைப்படும் சிறிய கொதிகலன், பர்னேஸ், வெப்பக்காற்று ஜெனரேட்டர், உலர்ப்பான் ஆகியவற்றிற்கு வெப்பமேற்றக்கூடிய எரிபொருளாக பயன்படுத்தலாம்.

கொள்திறன்

உயிர்ம எரிவாயு சார்ந்த மின்சார உற்பத்தியில், சில கிலோவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அமைப்பிலிருந்து பல மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அமைப்புகள் உள்ளது

விலை

ஒரு MWe மின்சார உற்பத்திக்கு, உற்பத்திகலன் அமைக்க ரூபாய் 4 கோடியிலிருந்து 5 கோடி வரையில் செலவாகும். மின்சார உற்பத்திக்காகும் செலவு, உயிர்ம எரிப்பொருள், செலுத்தும் அளவு பொருத்து மாறுபடும். ஒரு kWh உற்பத்திக்கு, ரூபாய் 2.50-ல் இருந்து ரூபாய் 3.50 வரை செலவாகும். வெப்பம் சார்ந்த தேவைகளுக்கு, ஒரு மில்லியன் கிலோ கேலரி கொள்திறன் உற்பத்திக்கு, 0.5 - 0.7 கோடி ரூபாய் செலவாகும்.

கரும்பு சக்கை மூலம் இணை மின்சார உற்பத்தி

இணை மின்சார உற்பத்தி என்பது, ஒரு எரி பொருளை கொண்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆற்றலை அடுக்காக உற்பத்தி செய்வதாகும். சில தொழிற்சாலைகளில், நீராவி மற்றும் மின்சாரம் இணைந்து உற்பத்தி செய்யப்பட்டால் அது எரிசக்தி பொருள் உபயோக திறனை மேம்பட செய்யும். வெப்பம் மற்றும் மின்சாரம் குறிப்பிட்ட அளவுகளில் ஒருசேர பயன்படுவது, இணை மின்சார உற்பத்திக்கு அவசியமான ஒன்றாகும். இந்த சூழ்நிலை சர்க்கரை ஆலையில் காணப்படுகிறது. சாதாரண மின்சார உற்பத்தியில், அதிக அளவிளான வெப்பம் வீணாக்கப்படும். காற்று மண்டலத்தக்கு செலுத்துவதால், 70% வெப்பம் வீணாகிவிடும். ஆனால் இணை மின்சார உற்பத்தியில், இந்த வெப்பமானது வீணடிக்கப்படாமல் சூடாக்கும் செயல்பாட்டுக்கு உபயோகிக்கப்படும்.

சாதனம்

இந்த திட்டத்திற்கு தேவைப்படும் முக்கிய சாதனங்கள் ஆவது, கரும்பு சக்கை பயன்படுத்தி எரிக்கப்படும் அதிக அழுத்த கொதிகலன், நீராவியில் சுழலும் டர்பைன் மற்றும் மின்கட்டமைப்புகள் ஆகும். இவை அனைத்தும் நம் நாட்டிலேயே செய்யகூடியவைகளாகும்..

இதனால் எரிசக்தி உபயோகிப்பு திறனை 60% அல்லது அதற்கு மேலோ அடைய முடியம். சில கிலோவாட்டில் இருந்து பல மெகாவாட் வரை உற்பத்தி திறன் கொண்ட, இணை மின்சார உற்பத்தி நிலையத்தை நிறுவ முடியம். கூடவே சில நூறு கிலோவாட் வெப்பத்திலிருந்து பல மெகாவாட் வெப்பம் வரை உற்பத்தியாகும்.

செலவு

சர்க்கரை ஆலையில், நிறுவப்படும் இணை மின்சார உற்பத்தி திட்டத்திற்கான முதலீட்டு செலவு ஒரு மெகாவாட்டிற்கு 3 கோடி ரூபாயிலிருந்து 4 கோடி ரூபாய் வரை ஆகும். ஒரு வருடத்தில் 160 தினங்கள் கரும்பு பிழிய வாய்ப்புள்ள சர்க்கரை ஆலைகளில், இணை மின்சார உற்பத்தியை நிறுவினால், இலாபத்தை அளிக்கும்.


மூலம் : புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம்., இந்திய அரசின் "பையோமாஸ்" புத்தகம்

3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top