பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / காற்றாற்றல் / காற்றாற்றல் மூலம் நீர் இறைத்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காற்றாற்றல் மூலம் நீர் இறைத்தல்

காற்றாற்றல் மூலம் நீர் இறைத்தலை பயன்படுத்தும் பல்வேறு மாதிரிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்கள் மற்றும் காற்று அதிகமாக வீசும் பகுதிகளில், நீர் உந்துவது மற்றும் பிற சிறிய மின்சார தேவைகளுக்கும், நீர் உந்தும் காற்றாலை, ஏரோ ஜெனரேட்டர் மற்றும் காற்று ஆற்றலுடன் சூரிய ஆற்றல் இணைந்த அமைப்புகள் மிக உதவியாக இருக்கும்.

நீர் உந்தும் காற்றாலை

இந்த காற்றாலையானது நீரை கிணறு, குளம் மற்றும் போர்வெல் ஆகியவற்றிலிருந்து உந்தி, குடிப்பதற்கு பயன்படுத்துவதற்கும், சிறிய பாசனத்திற்கு, உப்பு தயாரிக்கும் உப்பளங்களிலும், மீன் பண்ணை போன்றவற்றிற்கு பயன்படும். இது, நேரடி உந்துதல் மற்றும் கியர் வகை என இருவகைப்படும்.

பொதுவாக, காற்றாலைகளில் 10-20 மீட்டர் உயரமுள்ள ஸ்டீல் டவர்கள் இருக்கும். 3-5.5 மீட்டர் நீள வட்டமுள்ள ரோட்டருடன், 12 - 24 தகடுகள் இணைக்கப்பட்டு, இது முழவதும் டவரின் மேல் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த ரோட்டர் 50 - 150 மி.மீட்டர் நீள வட்டமுள்ள பம்புடன் கம்பி மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வகை மோட்டார்கள் காற்றின் வேகம், மணிக்கு 8 - 10 கிலோ மீட்டர் இருக்கும் பொழுது, நீரை உந்தச் செய்யும். பொதுவாக காற்றின் வேகம், நீரின் ஆழம் மற்றும் காற்றாலையின் வகை பொறுத்து மணிக்கு 1000 - 8000 லிட்டர் நீரை உந்தும்.

காற்றாலைகள் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள நீரை உந்தக் கூடியவை. இந்த காற்றாலைக்கு எரிசக்தி தேவையில்லை. ஆதலால் மரபுவழி ஆற்றல் பெற இயலாத தொலைதூர கிராமங்களில், இவற்றை பயன்படுத்தி எளிதாக நீரை உந்தலாம். இருப்பினும் இந்த காற்றாலையை மித வேக காற்று (மணிக்கு 12 - 18 கிலோ மீட்டர்) உள்ள பகுதிகளில் மட்டுமே உபயோகிக்க முடியும். மேலும் காற்றை தடுக்கும் கட்டிடங்கள், மரங்கள் இல்லாத இடத்தை தேர்ந்தெடுத்து, இதை நிறுவ வேண்டும். இதை நிறுவுவதற்கு அதிக செலவு ஆவதால், தனிநபர்கள் இதனை நிறுவ இயலாது.

செலவு

வகையைப் பொறுத்து நீர் உந்தும் காற்றாலையின் விலை ரூ.45,000 லிருந்து ரூ.1,50,000 வரை இருக்கும். மேலும் அடித்தளம், நீர் தேக்கத் தொட்டி மற்றும் காற்றாலையினை நிறுவுவதற்கு ரூ.10,000-லிருந்து, ரூ.20,000 வரை செலவாகும். இந்த அமைப்பில், சுழலும் பகுதிகள் அதிகம் உள்ளதால் அடிக்கடி பராமரிப்பு தேவைப்படும். ஒரு வருடத்திற்கு ரூ. 2000 வரை பராமரிப்பு செலவு ஆகும்.

நேரடி உந்தும் வகை, கியர் வரை மற்றும் AV-55 ஆரோவில் வகை போன்ற காற்றாலைகளுக்கு ரூ.20,000, ரூ.30,000 மற்றும் ரூ.45,000 முறையே உச்சவரம்பிட்டு 50% மானியத்தை, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றலின் அமைச்சகம் அளிக்கிறது. மின்சார மயமாக்கப்படாத பகுதிகளுக்கு ரூ.30,000, ரூ.45,000 மற்றும் ரூ.80,000 முறையே உச்சவரம்பிட்டு 90% மானியத்தை அளிக்கிறது.

ஏரோ ஜெனரேட்டர்

ஏரோ ஜெனரேட்டர் ஆவது, 30 kW மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு சிறிய காற்றாற்றல் மின்சார ஜெனரேட்டர் ஆகும். இவை பொதுவாக தானியங்கியாகவோ அல்லது சூரிய மின்சக்தி அமைப்புடனோ சேர்ந்து நிறுவப்பட்டிருக்கும். மின்சாரம் இல்லாத அதிக காற்றுள்ள பகுதிகளில் இவைகள் மின்சார உற்பத்திக்கு உபயோகமானது. இதில், 1- 10 மீட்டர் விட்டம் உள்ள ரோட்டர், ரோட்டருடன் 2 - 3 தகடுகள் பொருத்தப்பட்டு, நிரந்தர காந்த ஜெனரேட்டர், காற்று திசைக்கு டர்பனை மாற்றும் தொழில்நுட்பம், டவர், பேட்டரி ஆகியன இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 9 -12 கிலோமீட்டர் இருக்கும் பொழுது, ஏரோ ஜெனரேட்டரின் ரோட்டர்கள் சுழல தொடங்கும். இருப்பினும், காற்றின் வேகம் மணிக்கு 40 - 45 கிலோ மீட்டர் இருக்கும் பொழுது தான் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதனால் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து உபயோகிக்கலாம். ஒரு கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஏரோ ஜெனரேட்டரிகளின் விலை ரூ.2 -2.50 இலட்சம். நிறுவுவதற்கு (கட்டுமான பணிகளை சேர்த்து) ரூ 5000/கிலோ வாட் ஆகும். பராமரிப்பு செலவு, ஒரு வருடத்திற்கு ரூ.2000/கிலோவாட் ஆகும்.

காற்றாற்றல் மற்றும் சூரிய சக்தி இணைந்த அமைப்புகள்

ஏரோ ஜெனரேட்டர் மற்றும் சூரிய மின்சக்தி அமைப்பு இணையும் போது மின்சார உற்பத்தி இரண்டிலிருந்தும் பெறப்படுவதால், இந்த அமைப்பு ஒரு நம்பத்தகுந்த சிக்கனமான மின்சாரத்தை அளிக்கும். இந்த அமைப்பானது ஒன்று அல்லது இரண்டு ஏரோஜெனரேட்டருடன் SPV பேனலுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவற்றுடன், இன்வெர்டர், சார்ஜ் கண்ட்ரோலர், பேட்டரி பேங் ஆகியனவும் இருக்கும். தொலைதூர மின்கட்டமைப்பு இல்லாத மின்சார மயமாக்கப்படாத பகுதிகளில் மின்சார தேவையை, இது பூர்த்தி செய்யும். காற்றாற்றல் மற்றும் சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சராமானது பேட்டரியில் சேமிக்கப்பட்டு தேவையானபொழுது உபயோகிக்கப்படும். இந்த அமைப்பின் விலை ரூ.2.50 - 3.50 இலட்சம் /கிலோ வாட் ஆகும். நிறுவுவதற்கு ரூ.10,000/கிலோவாட் ஆகும். ஒரு வருடத்திற்கு பராமரிப்பு செலவு ரூ 3000/ கிலோவாட் ஆகும். தனிநபர், தொழிற்சாலைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1.25 இலட்சம்/ kW உச்சவரம்பிட்டு, 50% மானியம் அளிக்கப்படுகிறது. சமுதாய உபயோகம், மத்திய மற்றும் மாநில அரசு துறைகள் இராணுவ உபயோகம் ஆகியவற்றிற்கு ரூ.2,00,000/- உச்சவரம்பிட்டு 75% மானியத்தை, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றலின் அமைச்சகம் அளிக்கிறது. மின்சாரமயமாக்கப்படாத பகுதிகளுக்கு ரூ.2.4 இலட்சம்/ kW உச்சவரம்பிட்டு 90% மானியத்தை அளிக்கிறது.

3.1
சரவணன் Feb 20, 2016 05:03 PM

உபயோகம் உள்ளது.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top