பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காற்றாலை மின் உற்பத்தி

காற்றாலை மின் உற்பத்தியின் தொழில்நுட்பங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் காற்று ஆற்றலைக் கொண்டு, மின்சாரம் உற்பத்தி செய்வது, ஒரு முக்கியமான செயல்பாடாக உருவெடுத்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் கோட்பாடு, மிக எளிமையானதாகும். அடிக்கும் காற்று, டர்பனின் தகடுகளை சுழற்றும் போது, அதனால் ஜெனேரட்டரில் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. இந்த தகடும் ஜெனரேட்டரும் (நெசல் என்றும் அமைப்பில் பொருத்தப்பட்டிருக்கும்) ஒரு உயரமான டவரின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்..

தொழில்நுட்பம்

பொதுவாக டர்பனில் காற்று வீசும் போது, சுழலக்கூடிய மூன்று தகடுகள் நேரடியாக ஜெனேரட்டர் உடனோ அல்லது கியர் பாக்ஸ் மூலமோ இணைக்கப்பட்டிருக்கும். சுழலக்கூடிய மூன்று தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும் தலையானது நெசலின் உள் அமைக்கப்பட்டிருக்கும் ஜெனேரட்டருடன் இணைக்கப்படும். வேறு பல மின்னனுவியல் பகுதிகளையும், காற்று திசையை, டர்பைன் எதிர் கொள்ளும் விதத்தில் திருப்பும் இயந்திர நுட்பத்தையும் நெசலினுள் அமைக்கப்பட்டிருக்கும். காற்று திசையை அறிந்து கொள்ள உணரிகள் அமைக்கப்பட்டு, டவரின் தலைபகுதியை காற்று திசைக்கு ஏற்ற வகையில் திருப்பப்படும்.

ஜெனேரட்டரினால் உற்பத்தியாகும் ஆற்றல், காற்றின் வேகத்திற்கு ஏற்ப தானாகவே கட்டுபடுத்தப்படும். ரோட்டரின் விட்டம் 30 மீ - 90 மீட்டர் வரையும், டவரின் உயரம் 25 - 80 மீட்டர் வரை வேறுபடும். வட்டார கிரிடுக்குக் செலுத்தும் வகையில் உற்பத்தியான மின்சாரம் சரிபடுத்தப்படும். ஒரு காற்றாலை ஜெனேரட்டர் கொண்டு 225 kW மின்சாரத்திலிருந்து 2 மெகாவாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யலாம். மேலும் இவைகளை, ஒரு நொடிக்கு 2.5 மீட்டரிலிருந்து 25 மீட்டர் வரை வீசக்கூடிய காற்றின் வேகத்தில் இயக்கலாம்

காற்றாலை நிறுவுதல்

காற்றாலை நிறுவ தகுந்த இடங்களின், 3-4 வருட காற்று வேகத்தின் புள்ளி விவரங்களை சேகரித்து, நிறுவுவதற்கான தகுந்த இடத்தை தேர்வு செய்து பின்னர், நிறுவுவதற்கு இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் ஆகலாம். இரு காற்றாலைக்களுக்கிடையே ஆன இடைவெளி நிர்ணயிக்கப்படுகிறது. காற்றாலை கருவியினை நிறுவனங்கள் சோதித்து, குறிப்பிட்ட தரம், தேவைக்குறிப்பு செயற்பாங்கு ஆகியன இருப்பதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும். காற்றாலைகளை நிறுவியதற்கு பின்னர், அதன் உற்பத்தியாளரே அதனை பராமரிக்க வேண்டும்.

காற்றாலை திட்டத்திற்கான செலவு

காற்றாலை மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூபாய் 4லிருந்து ரூபாய் 5 கோடி வரை செலவாகும். இயந்திரங்களை பராமரிக்க செலவு ஒரு kWh க்கு ரூபாய் 0.25லிருந்து ரூபாய் 0.60 ஆகும். திட்டம் ஆரம்பித்து ஐந்தாம் வருடத்திலிருந்து எட்டு வருடத்திற்குள் முதலீட்டை திரும்ப எடுத்துவிடலாம்.


காற்றாலை மின் உற்பத்தி

மூலம் : புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றலின் அமைச்சகம், இந்திய அரசு

3.10714285714
மாணிக்கம் Aug 05, 2018 08:25 AM

காற்றாலை ஆரம்பிக்க நிலம்
டெபாசிட் தொகை எவ்வளவு

இரா.கிருஷ்ணபிரபு Jan 18, 2017 11:51 AM

காற்றாலை அமைப்பதால் நிலத்தடி நீர்குறையுமா? எந்த மாதிரி நிலங்களில் அமைக்க வேண்டும்

குணா Aug 02, 2016 11:05 AM

Alternator காற்றின் திசையை அறிந்து எப்படி திரும்புகிறது

சூ.ராஜேஷ் Feb 15, 2016 02:49 PM

சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு முக்கியதுவம் கொடுத்து மானியத்துடன் வழங்க வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top