பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / மின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள்

காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி செய்தல் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

காற்றாலை மின் உற்பத்தி இயந்திரங்கள்

காற்றாலை மின்உற்பத்தி இயந்திரம் என்பது காற்று சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சிறு மின் நிலையம் ஆகும். இதில் 30 மீட்டர் உயரம் உள்ள இரும்பிலான கோபுரத்தின் உச்சியில் காற்று மின் உற்பத்தி இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். காற்றாலை மின் உற்பத்தி இயந்திரத்தில் (அ) சுழலும் இறக்கைகள் (ஆ) கியர் பெட்டி (இ) ஜெனரேட்டர் எனப்படும் மின் உற்பத்தி இயந்திரம் ஆகிய மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. காற்றின் விசை இறக்கைகள்மீது படும்போது அவை சுழன்று காற்று சக்தியை இயந்திர சக்தியாக மாற்றுகின்றன. இவ்வியந்திர சக்தி மின் உற்பத்தி இயந்திரத்தை இயங்க வைத்து மின் உற்பத்தி செய்கின்றது. காற்றாலை மின் இயந்திரம் உற்பத்தி செய்யும் மின்சாரம் மின் கலனில் சேமிக்கப்படுவதில்லை; நேரடியாக மின் வாரியத்தின் மின்கட்டமைப்புக்கு செலுத்தப்படுகின்றது. கோபுரத்தின் அடியில் தானாக இயங்கும் ஒரு மின்னணு கட்டுப்பாட்டு கருவி அமைத்து மின்காற்றாலையின் முழு இயக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

(i) காற்று வளம் மிக்க பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் இக்காற்றாலை மின் இயந்திரங்கள் நிறுவப்படுகின்றன. அத்தகைய இடங்களின் பட்டியல் இணைப்பு - 1 ல் கொடுக்கப்பட்டுள்ளது.

(ii) 225 கி.வா.முதல் 750 கி.வாட் வரை பலவகைக் கொள்திறன் (தற்பொழுது 2 மெகா வாட் வரை) கொண்ட இயந்திரங்கள் உள்ளன.

(iii) காற்றின் சக்தியிலிருந்து அதிக மின் சக்தி பெற 30 மீ முதல் 50 மீ உயரம் வரை கோபுரம் அமைக்க வேண்டும்..

(iv) 250 கிலோ வாட் திறுனுள்ள ஒரு காற்றாலை மின் இயந்திரம் ஓராண்டில் சுமார் 4 இலட்சம் முதல் 6 இலட்சம் யூனிட் வரை மின் உற்பத்தி செய்யும். (காற்றாலை நிறுவப்பட்ட பகுதியில் வீசும் காற்றின் அளவைப் பொறுத்து மின் உற்பத்தி மாறுபடும்).

காற்றாலை மின் இயந்திரம் அமைக்க ஆகும் செலவு

225 கிலோவாட் அல்லது 250 கிலோ வாட் திறனுள்ள ஒரு மின் காற்றாலை அமைக்க நிலக்கிரையம் நீங்கலாக ஏறத்தாழ ரூ.1.0 கோடி செலவாகும். இத்தகைய இயந்திரங்களுடன் கூடிய ஒரு மெகா வாட் திறனுள்ள காற்றாலை அமைக்க சுமார் ரூ.5.0 கோடி வரை செலவாகும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களும் இதில் அடங்கும்.

மைய அரசு வழங்கும் உதவிகளும், சலுகைகளும்

(i) மின் காற்றாலை இயந்திரம் வருமான வரிச்சலுகை கோரும் ஆண்டில் குறைந்தது ஆறுமாதம் பயன்படுத்தப்பட்டிருந்தால் வருமான வரிக் கணக்கில் 80 சதவீதம் வரை தேய்மான சலுகை அளிக்கப்படுகிறது.

(ii) பொது உரிமத்தின் கீழ் (டீழுடு) புதிய காற்றாலை மின் இயந்திரத்தை இறக்குமதி செய்யலாம்.

(iii) காற்றாலை மின் இயந்திரங்கள் இறக்குமதி மற்றும் சில முக்கியமான நான்கு உதிரி பாகங்களுக்கு சுங்கவரிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன

(iv) காற்றாலை இயந்திரம் நிறுவுவோருக்கு அதனை இயக்குவதன் மூலம் கிடைக்கும் இலாபத்திற்கு, முதல் பத்தாண்டுகளுக்கு வருமானவரி விலக்கு தரப்படுகிறது.

தமிழக அரசு வழங்கும் உதவிகளும் சலுகைகளும்

(i) 15.5.2006க்கு முன்பு செயலிலுள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம், யூனிட்டுக்கு ரூ.2.75 வீதம் தற்பொழுதுள்ள ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்ட நாளிலிருந்து பெற்றுக் கொள்கிறது. 15.5.2006 க்குப் பிறகு செயல்படும் காற்றாலைகளுக்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.2.90 வீதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் புதிய ஆணைப்படி வழங்குகிறது.

(ii) காற்றாலை உரிமையாளர்கள் காற்றாலை மின்சாரத்தைத் தங்களது சொந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்: உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 5 சதவீதம் மட்டும் மின்வாரியத்திற்கு கட்டணமாக வழங்க வேண்டும்.

(iii) காற்றாலை மின்சாரத்தை மின்வாரியக் கட்டமைப்பில் சேமித்து வைத்து அந்த நிதி ஆண்டிலேயே பயன்படுத்த உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 5 சதவீதம் மட்டும் மின் வாரியத்திற்கு கட்டணமாக வழங்க வேண்டும்.

(iv) காற்று சக்தி ஆதாரங்கள் பற்றிய தகவல், மின் உற்பத்திக்கு உகந்த இடங்களிலுள்ள மின் உற்பத்தித்திறன் ஆகிய விவரங்கள் தமிழ் நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதன் விபரங்கள் இணைப்பு 1 மற்றும் 2 ல் கொடுக்கப்பட்டுள்ளது.

காற்றாலைகளை யாரெல்லாம் அமைக்கலாம்?

மாநில அரசின் மின்சார வாரியங்கள் மற்றும் மின் உற்பத்தித் தொழிலில் மாநில அரசின் மின்சார வாரியங்கள் மற்றும் மின் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் காற்றாலைகளை அமைத்துக் கொள்ளலாம்.

•இலாபம் ஈட்டக்கூடிய தொழில் நிறுவனங்கள், தங்களுடைய மின் தேவைக்காக காற்றாலைகளை அமைப்பதுடன் வருமானவரிச் சலுகைகளையும் பெறலாம்.

•நிதி நிறுவனங்கள் போன்ற தொழில் சாராத நிறுவனங்களும் காற்றாலைகளை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்து, மாநில மின்வாரியத்திற்கு விற்பனை செய்வதுடன், வருமான வரிச் சலுகைகளையும் பெற முடியும்.

காற்றாலைகளை எவ்வாறு அமைப்பது?

(i) காற்றாலைகளை அமைக்க விரும்புவோர் தமிழ் நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அல்லது தமிழ்நாடு மின்சார வாரியம் அல்லது பிற ஆலோசனை மையங்களின் உதவியுடன் காற்றாலை மின் உற்பத்திக்கு முதலில் திட்டமிடவேண்டும்.

(ii) தகுதியான நிலத்தை, காற்று வளமிக்க பகுதிகளில் தெரிவு செய்து வாங்க வேண்டும்.

(iii) தமிழ் நாடு மின்சார வாரியத்திற்குப் பின்வரும் விவரங்களுடன் இசைவு கடிதம் வழங்கக் கோரி நேரடியாகவோ அல்லது தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

(அ) மின் காற்றாலை இயந்திரம் நிறுவப்படவுள்ள நிலத்தின் மாதிரி வரைவு (அருகிலுள்ள மின் காற்றலை இயந்திரம் அமைத்துள்ள எல்லையிலிருந்து போதுமான இடம் விட்டு)

(ஆ) கிராமப் படம்

(இ) நிலக்கிரயப் பத்திரம்

(iv) மின் கட்டமைப்புடன் மின் காற்றாலையை இணைக்க, தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த மின் காற்றாலை இணைப்பை நிறுவுபவர் தமிழ் நாடு மின்சார வாரியம் குறிப்பிடும் தரத்தின்படி அமைக்க வேண்டும். இந்த இணைப்புக்கான மொத்த செலவில் 11 விழுக்காடு தொகையை நிர்வாகச் செலவுக்காக தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு இணைப்பு வேலைகளை ஆரம்பிக்கும் முன்பே செலுத்த வேண்டும்.

(v) பின்னர் மின் காற்றாலை இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் மூலம் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(vi) காற்றாலை மின்சாரத்தை மின் கட்டமைப்பில் செலுத்த, கட்டமைப்பின் திறனையும் பிற வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இதற்காக தமிழ் நாடு மின்சார வாரியம் ஒரு மெகா வாட்டிற்கு ரூ.25.75 இலட்சம் என கட்டணம் நிர்ணயித்துள்ளது. இத்தொகையை காற்றாலை உரிமையாளர்கள் மின்சார வாரியத்திற்குச் செலுத்த வேண்டும்.

(vii) அரசின் தலைமை மின் ஆய்வாளரை அணுகி, காற்றாலையை ஆய்வு செய்யக் கோர வேண்டும். அவரிடமிருந்து பாதுகாப்புச் சான்று (ளுயகநவல உநசவகைiஉயவந) பெற வேண்டும்.

(viii) இதன் பின்னர், நிறுவப்பட்ட மின் காற்றாலை இயந்திரங்களை மின் கட்டமைப்புடன் இணைத்து, மின் உற்பத்தியினைத் தொடங்கலாம்.

(ix) வருமான வரிச் சலுகை பெற மின் காற்றாலை இயந்திரங்களை செப்டம்பர் 30 க்கு முன்போ அல்லது மார்ச் 15 க்கு முன்போ அமைக்க வேண்டும்.

நீர் இறைக்கும் காற்றாலை

நீர் இறைக்கும் காற்றாலை 12 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தின் உச்சியில் 12 முதல் 18 இறக்கைகளும், ஒரு நீர் இறைக்கும் சாதனமும் (பம்ப்) கொண்ட இரும்பிலான அமைப்பு ஆகும். காற்று சுழற்சி, கோபுரத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ள இறக்கைகள் மீது படும்போது அது இயந்திர சக்தியாக மாறுகிறது; இவ்வியந்திர சக்தி பம்பை இயக்கி (கை பம்புகள் செயல்படுவது போல்) திறந்த கிணறு அல்லது குழாய்க் கிணறுகளிலிருந்து தண்ணீரை மேலேற்றுகிறது.

சிறப்பு அம்சங்கள்

(i) இக்காற்றாலையை, காற்றின் வேகத்தைத் தடை செய்யக்கூடிய உயர்ந்த கட்டிடங்கள், மரங்கள் இல்லாத எல்லா இடங்களிலும் நிறுவலாம்.

(ii) மணிக்கு சுமார் 18 கி.மீ. காற்று வேகம் உள்ள இடங்களில் இயக்கலாம். 9 கி.மீ. வேகம் உள்ள இடங்களில் இயக்கக் கூடிய கியர்வகை காற்றாலைகளும் உள்ளன.

(iii) இக்காற்றாலை அமைப்பின் உயரத்தை காற்றாலை நிறுவும்போது, அந்தந்த இடத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம்.

(iஎ) இக்காற்றாலையில் அசைந்து இயங்கும் பாகங்கள் எண்ணிக்கைக் குறைவாக உள்ளதால் அவற்றை நன்கு பராமரித்தால் காற்றாலை நீண்ட நாளுக்குப் பயன் அளிக்கும்.

காற்றாலைகளின் வகைகள்

கியர் வகைஏ.வி. 55 வகை
கோபுரம் 30’ மீட்டர் உயரம் கோபுரம் 13.5 முதல் 19.5 மீட்டர் உயரம்
10’ சுற்றளவு 18 பிளேடுகள் 5.5. மீ சுற்றளவு 24 பிளேடுகள்
பம்பு 2” முதல் 4” வரை பம்பு 3” முதல் 5” வரை
காற்றின் வேகம் மணிக்கு 9 கி.மீ. காற்றின் வேகம் மணிக்கு 18 கி.மீ.
கிணற்று நீரின் ஆழம் 20 மீட்டரில் இருந்தால் போதும் கிணற்று நீரின் ஆழம் 15 மீட்டர் ஆழத்தில் இருந்தால் நன்கு இயங்கும்
நீர் இறைக்கும் திறன் மணிக்கு 1000 லிட்டர் மணிக்கு 4000 லிட்டர் நீர் இறைக்கும்
விலை ஒன்றுக்கு ரூ.82,000/- ரூ.1,45,000/-
மைய அரசு மானியம் ரூ.30,000 /- ரூ. 45,000/-

காற்று மின்னாக்கி மற்றும் இரு சாதனங்கள் இணைந்த முறை

இது தனித்து இயங்கக்கூடியச் சாதனமாகும். காற்று சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து அந்த மின்சாரத்தை 30 கி.வாட்வரை மின்கலத்தில் சேமித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ள முடியும். இதையே இரு சாதனங்கள் இணைந்த முறையிலும் அமைக்கலாம். இதில் காற்று மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், பகல் மற்றும் இரவிலும் கூடுதலாக மின்சக்தி பெற முடியும். விலை ஒரு கிலோ வாட்டிற்கு சுமார் ரூ. 2.50 இலட்சம் ஆகும்.

மைய அரசு மானியம்

(அ) சமுதாய அமைப்புகள், மத்திய மற்றம் மாநில அரசு நேரடியாகப் பயன்பெறுவதற்கு அமைப்பின் விலையில் 75 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.2 இலட்சம்.

(ஆ) தனிநபர்கள், தொழில் பயனாளிகள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்குலூ அமைப்பின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஒரு கிலோவாட்டிற்கு ரூ.1.25 இலட்சம்.

காற்றாலையை நிறுவுவதற்கான வழிமுறைகள்

• மாதிரி விண்ணப்ப படிவம் இணைப்பு 5 ல் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் இப்படிவத்தைப் பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, பிணைத்தொகையாக நீர் இறைக்கும் காற்றாலை என்றால் ரூ.5,000/-க்கும் அல்லது காற்று மின்னாக்கி என்றால் ரூ.8,000/- க்கும் வங்கி வரைவினை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும்.

• விண்ணப்ப படிவத்தில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட காற்றாலை உற்பத்தியாளர்களில் ஒருவரை தேர்வு செய்து அவருடைய பெயர் மற்றும் விவரத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். பட்டியல் இணைப்பு 4 ல் கொடுக்கப்பட்டுள்ளது.

• விண்ணப்பதாரரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்ப அடிப்படையில் காற்றாலை உற்பத்தியாளருக்கு இடத்தை ஆய்வு செய்து விண்ணப்பதாரர் குறிப்பிட்டுள்ள இடம் காற்றாலை அமைக்கத் தகுதி வாய்ந்த இடம்தானா என்பதற்கான அறிக்கை கிடைக்கப் பெற்று, தகுதி வாய்ந்த இடம் என்று தெரிந்தால் அரசின் மானியத்துக்கு விண்ணப்பம் பரிந்துரைக்கப்படும்.

• மானிய அனுமதி கிடைக்கப் பெற்றதும் விண்ணப்பதாரருக்கும், காற்றாலை உற்பத்தியாளருக்கும் தகவல் தெரிவித்து காற்றாலை நிறுவுவதற்கானஅனுமதி அளிக்கப்படும்.

• விண்ணப்பதாரர் மானியத் தொகை மற்றும் பிணைத் தொகை நீங்கலாக மீதி தொகையை காற்றாலை உற்பத்தி நிறுவனத்துக்கு செலுத்தியதும் காற்றாலை உற்பத்தி நிறுவனம் விண்ணப்பதாரர் தெரிவு செய்த இடத்தில் காற்றாலையை நிறுவ வேண்டும்.

• காற்றாலை நிறுவி செயல்படத் தொடங்கியதும், இம்முகமை (தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை) அலுவலர்கள் காற்றாலையின் செயல்பாட்டைப் பார்வையிட்டு காற்றாலை நன்கு செயல்படுகிறது என்ற அறிக்கை சமர்ப்பித்தவுடன் மைய அரசின் மானியம் மற்றும் விண்ணப்பதாரரின் பிணைத்தொகை, நேரடியாக காற்றாலை உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்கப்படும்.

சூரிய சக்தி (வெப்பம்)

சூரிய வெப்பச் சுடுநீர் அமைப்பு விவரம்

சூரிய வெப்ப சுடுநீர் அமைப்பானது சூரிய சக்தியிலிருந்து (80 டிகிரி செல்ஸியஸ் வரை) சுடுநீர் தயாரித்து வழங்கும் ஒரு அமைப்பாகும். இது மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டது. அவை, (i) சூரிய சக்திச் சேகரிப்பான், (ii) இன்சுலேட் செய்யப்பட்ட சுடுநீர்ச் கொள்கலன் (iii) தேவைப்படும் குளிர்ந்த நீர் தொட்டி மற்றும் இன்சுலேட் செய்யப்பட்ட சுடுநீர் பைப்லைன்கள் மற்றும் துணைக் கருவிகள்.

சூரிய சக்திச் சேகரிப்பான்

அடிப்படையில் இக்கருவி சூரிய வெப்பத்தை ஈர்த்து, குளிர்ந்த நீரை சுடுநீராக்கும் ஓர் அமைப்பாகும். தாமிர உலோகத்தினாலான ரைசர் மற்றும் ஹெட்டர் பைப்பையும் சூரிய சக்தி ஈர்ப்புத் தகடுகளையும் கொண்ட இந்த உபகரணம் சூரிய சக்தி மூலம் குளிர்ந்த நீரைச்சூடுபடுத்துகிறது.

வெப்பம் கட்டுப்படுத்தப்பட்ட சுடுநீர்த் தொட்டி

சூரிய வெப்பச் சேகரிப்பான் மூலம் கிடைக்கப் பெறும் வெந்நீரின் அடர்த்தி, குளிர்ந்த நீரின் அடர்த்தியை விடக் குறைவாக இருப்பதால், சிறு குழாய்கள் மூலம் மேலேற்றி இன்சுலேட் செய்யப்பட்ட சுடுநீர் தொட்டியில் ஒன்று சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கப்பெறும் சுடுநீர் மாறுபட்ட தட்பவெப்ப நிலையிலும் 30 மணி நேரம் வரை சூடுநீரின் வெப்பத்தைப் பாதுகாக்கும். பொதுவாக இந்த சுடுநீர்த் தொட்டி துருப்பிடிக்காத உலோகத்தால் (ளவயiடேநளள ளவநநட) ஆனது. இதன் மூலம் சுத்தமான வெந்நீரை மருத்துவமனை மற்றும் விடுதிகளிலுள்ளவர்களுக்கு வழங்க இயலும்.

குளிர்ந்த நீர் மற்றும் சுடுநீர்ப் பைப் லைன்கள்

இந்த சுடுநீர் அமைப்புக்கு தண்ணீரைத் தொடர்ச்சியாக வழங்குவது இன்றியமையாததாகும். இந்த சுடுநீராக்கி மூலம் கிடைக்கப் பெறும் சுடுநீர், இன்சுலேட் செய்யப்பட்ட சுடுநீர்க் குழாய்கள் மூலம் வெவ்வேறு இடங்களின் தேவைக்காக அனுப்பப்படுகிறது. நிழல் விழாத இடங்கள், உயர்ந்த தரம் வாய்ந்த இன்சுலேசன்கள், நல்ல பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் இத்தகைய சுடுநீர்ப் பைப்புகளை நன்றாகப் பயன்படுத்த முடியும்.

முக்கிய பயன்கள்

வீடுகளுக்கான சூரிய வெப்பச் சுடுநீர் அமைப்புகள் (300 லிட்டர் வரை)

தொழிற்சாலைகளுக்கான சூரிய வெப்பச் சுடுநீர் அமைப்புகள் (300 லிட்டருக்கு மேல்)

(i) குளியல் கொதிகலன்களுக்கு இவ்வமைப்பின் மூலம் சூடாக்கப்பட்டச் சுடுநீர் செலுத்தலாம்.

(ii) பாத்திரம் சுத்தம் செய்தல்

(ii) பால் பண்ணைகளில் பால் கேன்களை சுத்தம் செய்யலாம்.

(iii) தேநீர் தயாரித்தல்

(iii) மருத்துவ மனைகளில் கிருமி நீக்கம் செய்யலாம்.

(iv) சிற்றுண்டிச் சாலைகளில் சமைப்பதற்கும், தேநீர் தயாரிப்பதற்கும், பாத்திரங்களை சுத்தப்படுத்தவும்பயன்படுத்தலாம்

(v)சாயமிடுதல் மற்றும் அச்சிடும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தலாம்.

சலுகைகளும் மானியங்களும்

தற்பொழுது மானியம் எதுவும் வழங்கப்படுவதில்லை குறிப்பிட்ட சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி நிறுவனம் மூலம் குறைந்த வட்டியில் பயனாளிகளுக்குக் கடன் வழங்கப்படுகிறது

சில வகை கட்டிடங்களில் சூரிய சக்திக் சுடுநீர் கலன் நிறுவுதல் அவசியம்:

அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிததாகக் கட்டப்படும் சிலவகையான கட்டிடங்களில் சூரிய சக்தி சுடுநீர்க் கலன் நிறுவுவதை கட்டாயமாக்கி தமிழ்நாடு அரசு கீழ்க்கண்ட ஆணைகளைப் பிறப்பித்துள்ளது.

சூரிய வெப்பச் சுடுநீர் அமைப்புகளை எவ்வாறு நிறுவலாம்?

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையிடம், சூரிய வெப்பச் சுடுநீர் கலன்களைத் தயாரிப்போர்/விநியோகிப்பாளர்கள் பட்டியல் உள்ளது. சூரிய வெப்பச் சுடுநீர் கலன்களை நிறுவ விரும்பும் நிறுவனங்கள் இணைப்பு -6ல் உள்ள தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு சூடுநீர் கலன்களை அமைத்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையை அணுகலாம்

சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்பு

சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்பு காற்றின் வெப்பத்தை 30 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்துகிறது. இவ்வாறு சூடாக்கப்பட்ட காற்று வழக்கத்திலுள்ள சூடாக்கிகளில் செலுத்தி உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படுவதால் மின்சாரம் அல்லது விறகு, கரி போன்ற எரிபொருட்கள் 25 சதவிகிதம் வரை சேமிக்கப்படுகிறது. இந்த சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்புகள் தற்போது, தேயிலையை உலர்த்துதல், பழங்களைப் பதப்படுத்தல், காய்கறிகள் மற்றும் தானியங்களை உலர வைத்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இது போன்று நிறுவப்பட்ட 46 அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்புகள் தற்பொழுது மீன் உலர வைத்தல், பருப்புகள், வாசனைப் பொருட்கள், தோல் மற்றும் தொழிற்கூட பிற பொருட்களை உலர்த்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

சிறப்பம்சங்கள்

(i) இவ்வமைப்பு தொழிற்சாலைகளின் கூரைமீது அமைக்கப்படுவதால் கூடுதல் இடம் தேவைப்படுவதில்லை; செலவும் குறைகிறது.

(ii) உலர வைக்க வேண்டிய தேயிலை, பழங்களில் உள்ள ஈரத்தன்மையைச் சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்புகள் மூலம் 40 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்க முடியும்.

(iii) சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்பின்மூலம் கிடைக்கும் ஒரே சீரான வெப்பத்தினால் உலர வைக்கப்பட வேண்டிய பொருட்களின் தரம் பாதுகாக்கப்படுகிறது.

(iv) சுமார் 25 சதவிகிதம் வரை எரிபொருள் சிக்கனப்படுத்தலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

விலை மற்றும் மானிய விவரம்

ஒரு சூரிய வெப்ப சுடுகாற்று அமைப்பிற்கு ஒரு சதுர மீட்டருக்கு சுமார் ரூ.8000/- செலவாகும். அலுமினியத் தகடுகள், கண்ணாடி, உள்வாங்கும் பொருட்கள், இன்சுலேஷன், ப்ளோயர் மற்றும் பிற துணைக் கருவிகள் ஆகியவற்றின் விலை மற்றும் அமைப்பதற்காகும் செலவும் இதில் அடங்கும். இதை நிறுவ வணிக நோக்கில்லாத நிறுவனங்களுக்கு விலையில் 50 சதவீதம் அல்லது சதுர மீட்டருக்கு ரூ.2,500 வரையும், பிற நிறுவனங்களுக்கு விலையில் 35 சதவீதம் அல்லது சதுர மீட்டருக்கு ரூ.1,750 வரையும் மானியம் மைய அரசால் வழங்கப்படுகின்றது.

சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்பினை நிறுவ விரும்பும் நிறுவனங்கள் இணைப்பு-7ல் உள்ள தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்பினை நிறுவிக் கொள்ளலாம்.

சூரிய அடுப்புகள்

சமையல் அறையில் பயன்படும் சாதாரண அடுப்புகள் போன்ற இந்த சாதனம் சூரிய வெப்ப சக்தியினைப் பயன்படுத்தி சமையல் செய்ய உதவுகிறது. எனவே இதற்கு சமையல் வாயு, மண்ணெண்ணெய் அல்லது கரி, விறகு போன்ற எரி சக்தித் தேவை இல்லை; இவுற்றுக்கு மின்சாரமும் தேவை இல்லை. சூரிய அடுப்புகள் சூரிய வெப்ப சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றன. இதில் புகை ஏதும் வருவது இல்லை; அதனால் பாத்திரங்களில் கறை படிவது இல்லை. சுற்றுப்புறமும் தூய்மையும் பாதுகாக்கப்படுகிறது. சமையல் செய்பவர்களின் உடல் நலத்திற்கும் கெடுதல் எற்படுவதில்லை மற்றும் தீப்பிடிக்கும் அபாயமும் இல்லை. இதில் பலவித அமைப்புகள் உள்ளன. சமையல் செய்ய வேண்டிய நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.

பெட்டி வடிவ சூரிய அடுப்பு

பெட்டி போன்ற அமைப்பில், உட்புறம் கருப்பு நிற பெயிண்ட் அடித்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கண்ணாடி போன்ற மூடிகளால் மூடப்பட்டு, வெப்பம் உள்ளிருந்து வெளியே செல்லாமல் தடுக்கப்படுகிறது. இந்த அமைப்பில் சமையலுக்குத் தேவையான 140 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் பெறப்படுகிறது. 0.6 சதுர மீட்டர் அளவுள்ள, 12 கிலோ கனமுள்ள இந்த அடுப்பு, 2 கிலோ அளவு உணவு தயாரிக்கும். இதனால் ஆண்டிற்கு 3 அல்லது 4 சிலிண்டர் சமையல் எரிவாயு மிச்சமாகும். சூரிய ஒளி இல்லாதபோது சமைப்பதற்கு ஏதுவாக மின் இணைப்பு சாதனமும் இதில் பொருத்திக் கொள்ளலாம். இதற்கு குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும். இதன் விலை ரூ.5,000/-. மின் இணைப்பு இல்லாத அமைப்பின் விலை ரூ.4,000 ஆகும். இதற்கு அரசு மானியம் கிடையாது. ஆனால் மைய அரசின் ஏற்பாட்டின்படி அதிக எண்ணிக்கையில் பயன்படுத்த முன்வரும் பயனாளிகளுக்கு, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் மற்றும் சில வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.

தட்டு வடிவ சூரிய அடுப்பு

இது ஒருமுகப் படுத்தும் பாரபோலிக் வடிவம் கொண்ட தட்டு வடிவ சூரிய அடுப்பாகும். (ஊடிnஉநவேசயவiபே உடிடிமநசள). இது வெப்பக் கதிர்களை நடுப்பகுதியில் குவிக்கும் வகையில் அலுமினியத் தகடுகளால் செய்யப்பட்டுள்ளது. இதில் 10 அல்லது 15 நபர்களுக்கு சமைக்கலாம். இதன் விலை சமார் ரூ.7,000/-. தனிநபர் மற்றும் தெருஓரக் கடைகளுக்குப் பயன்படும். இதற்கு மைய அரசு இதன் விலையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1,500/- வீதம் மானியம் கிராமப் பகுதிகளுக்கு வழங்குகிறது.

சமுதாயச் சூரிய அடுப்புகள்

35 அல்லது 40 நபர்களுக்குத் தேவையான உணவை இதில் தயாரிக்கலாம். இதன் விலை சுமார் ரூ.50,000/-. சமூகச் சார்பு அமைப்புகள், ஆசிரமங்கள், உணவுக் கூடங்கள், பள்ளிகளிலுள்ள உணவுக் கூடங்கள் ஆகிய அமைப்புகளுக்குப் பயன்படும். மைய அரசு விலையில் 30 சதவீதம் அல்லது ரூ.15,000/- வரை மானியம் கிராமப் பகுதிகளுக்கு வழங்குகிறது.

சூரிய நீராவி அடுப்புகள்

இதில் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரை நீராவியாக்கி, அது சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அடுப்பு மவுண்ட் அபுவிலுள்ள பிரம்ம குமாரிகளின் அமைப்பில் நிறுவப்பட்டுள்ளன. தினமும் இரண்டு முறை 10,000 நபர்களுக்கு சமைக்கலாம். இதன் விலை சுமார் ரூ.55 இலட்சம், இந்த அமைப்பினை பிற அமைப்போடு இணைத்து ஃபர்னஸ் ஆயிலிலும், கொதிகலனோடு சேர்த்தும் அமைக்கலாம். 1,000 நபர்களுக்கு ஏற்ற சிறிய அமைப்பும் உள்ளது. மைய அரசு அடுப்பின் விலையில் ரூ.50 வரை மானியம் வழங்குகிறது. சூரிய அடுப்புகளை உற்பத்தி செய்பவர்களின் பட்டியல் இணைப்பு 8- ல் கொடுக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி (சூரிய ஒளி)

சூரிய ஒளி மின் சாதனங்களின் முக்கிய பாகங்களாவன

(i) சூரிய ஒளி மின் மாட்யூல்கள் / தகடுகள்

(ii) மின்கலன்

(iii) மின்னணு சுற்றுக்கள் (இன்வர்ட்டர் மற்றும் சார்ஜ் கண்ட்ரோலர்)

(iv) பயன்பாட்டுக்குரிய மின்சாதனங்கள் (அதாவது மின் விசிறிகள், மின் விளக்குகள், பம்ப்புகள்)

சூரிய ஒளி மின் சாதனம் எவ்வாறு இயங்குகிறது?

சூரிய ஒளி மின் மாட்யூல்களிலுள்ள சிலிகான் செல்களின் மீது சூரிய ஒளி படும்போது அது நேர் மின்சாரமாக மாற்றப்படுகிறது. சூரிய ஒளி மின் மாட்யூல்கள் 37 வாட், அல்லது 74 வாட் ஆகிய திறன்களில் உள்ளன. பல மாட்யூல்களை ஒன்றாக இணைத்துத் தேவையான வாட்ஸ் திறனை பெற முடியும். சூரிய ஒளி மின் மாட்யூல்களால் உற்பத்தி செய்யப்பட்ட நேர் மின்சாரத்தைப் பயன்படுத்தி நேரடியாக டி.சி மின்சார மோட்டார் பம்பு செட்டுகளை இயக்கி, நீர் இறைக்கலாம்.

மேலும், சூரிய ஒளி மின்மாட்யூல்களினால் உற்பத்தி செய்யப்பட்ட நேர் மின்சாரத்தை, மின்கலன்களில் சேமித்து, மின் அணு சுற்றுகளால் (இன்வர்ட்டர் மற்றும் சார்ஜ் கண்ட்ரோலர்) ஏ.சி. மின்சாரமாகவும் மாற்றலாம். இந்த ஏ.சி மின்சாரத்தை மின் விசிறிகள், மின் விளக்குகளை இயக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழ்நாடு மின்வாரியக் கட்டமைப்பிற்கு வழங்கலாம். வணிக ரீதியாக தற்போது பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள் பின் வருமாறு.

* சூரிய ஒளி லாந்தர்

* சூரிய ஒளி வீட்டு விளக்குகள்

* சூரிய ஒளி தெரு விளக்குகள்

* சூரிய ஒளி மின் பம்புகள்

* சூரிய ஒளி மின் நிலையம் - தனித்து இயங்குவது மற்றும் மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.

சூரிய ஒளி லாந்தர்

சூரிய ஒளி லாந்தர் எவ்வாறு வேலை செய்கிறது?

சூரிய ஒளி லாந்தர் வெளிச்சம் கொடுக்கும் ஒரு சாதனமாகும். இது 10 வாட் திறனுள்ள சூரிய ஒளி மின் மாட்யூல்கள் மற்றும் மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய மின் கலம், 5 வாட் அல்லது 7 வாட் திறனுள்ள சிறிய குழல் விளக்கு மற்றும் மின்னணு சுற்றுகள் (இன்வெர்ட்டர் மற்றும் சார்ஜ் கண்ட்ரோலர்) ஆகியவற்றைக் கொண்டதாகும். சூரிய ஒளியானது மின் மாட்யூல்களின்மீது படும்போது அது நேர்மின்சாரமாhக மாற்றப்படுகிறது. இந்த நேர் மின்சாரம் மின்கலனில் சேமிக்கப்பட்டு மின்னணு சுற்றுகளின் உதவியால் ஏசி மின்சாரமாக மாற்றப்படுகிறது. இந்த ஏசி மின்சாரம் சிறிய குழல் விளக்கிற்கு மின்சாரம் வழங்கி எரியச் செய்கிறது

சிறப்பு அம்சங்கள்

• இது எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய சாதனமாகும்

• வீட்டு விளக்கிற்கு உபயோகிக்கலாம்

• நாளொன்றுக்கு 4 மணி நேரம் வரை எரியக்கூடியதாகும்

• கையில் எடுத்துச் செல்லக் கூடியதாக இருப்பதால் வெளி உபயோகத்திற்கும் பயன்படும்

நன்மைகள்

மின் வசதி இல்லாத தொலைதூர மலைப் பகுதி கிராமங்களில் சூரிய ஒளி லாந்தர் ஒரு வரப்பிரசாதமாகும். வணிகக்கட்டிடங்களிலும் வீடுகளிலும் மின்சாரம் தடைபடும்போது அவசரகால விளக்காகவும் பயன்படுத்தலாம். மேலும், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் இவ்விளக்கு மிகவும் பயன்படும். இதன் விலை சுமார் ரூ.3,000 ஆகும்.

மானியம் / ஊக்கத் தொகை

இதற்கு தற்பொழுது மானியம் வழங்கப்படுவது இல்லை. சூரிய ஒளி லாந்தரை வாங்க விரும்புவோர் இணைப்பு 6-ல் கொடுக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு லாந்தர் விளக்குகளை வாங்கிக் கொள்ளலாம்.

சூரிய ஒளித் தெருவிளக்கு

சூரிய ஒளி தெருவிளக்குகள் எவ்வாறு வேலை செய்கின்றன?

சூரிய ஒளி தெருவிளக்கு தனித்து இயங்கும் சாதனம் ஆகும். இதில் இரண்டு 37 வாட் திறனுள்ள மாட்யூல்கள், திரும்பவும் சார்ஜ் செய்யக்கூடிய மின்கலம், 11 வாட் திறனுள்ள சிறு குழல் விளக்கு, மின்னணு சுற்றுகள் (இன்வர்ட்டர் மற்றும் சார்ஜ் கண்ட்ரோலர்)) மற்றும் உலோகக் கம்பம் ஆகியவை அடங்கி உள்ளன. சூரிய ஒளியானது மின் மாட்யூல்களின்மீது படும்போது அது நேர்மின்சாரமாக மாற்றப்படுகிறது. இந்த நேர் மின்சாரம் மின்கலனில் சேமிக்கப்பட்டு மின்னணு சுற்றுகளின் உதவியால் ஏ.சி, மின்சாரமாக மாற்றப்படுகிறது. இந்த ஏ.சி. மின்சாரம் சிறு குழல் விளக்குகளை எரியச் செய்து ஒளி தருகிறது.

பயன்கள்

• இது ஒரு தனித்து இயங்கும் தெரு விளக்கு சாதனம். எங்கு வேண்டுமானாலும் எளிதில் நிறுவலாம் .

• இது தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை எரியக் கூடியது.

நன்மைகள்

• மின்வசதி இல்லாத இடங்களிலும் மின் கம்பிகளைக் கொண்டு செல்ல முடியாத இடங்களிலும் சூரிய ஒளி தெரு மின் விளக்கு மிகவும் பயன்தரும்

• இந்த விளக்கை இயக்குவதற்கு, பணியாளர்கள் உதவி தேவையில்லை

• இந்த விளக்கு மாலையில் தானாகவே எரியத் தொடங்கி காலையில் தானாகவே அணைந்து விடும்.

விலை விபரம்:

சூரிய ஒளித் தெரு விளக்கு ஒன்றின் விலை சுமார் ரூ.30,000/- ஆகும்.

ஊக்கத்தொகை / மானியம்

மைய அரசின் புதிய மற்றம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மானியமாக தெருவிளக்கு ஒன்றிற்கு அதிகபட்ச விலை அல்லது அடக்க விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.9,600/- (இவற்றில் எது குறைவோ) அதனை கிராமப்புறங்களுக்கு மானியமாக வழங்குகிறது. இந்த மான்யம் இலாபமில்லாத வணிக ரீதியில் அல்லாத நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது. மானியம் ஒவ்வொரு ஆண்டும் மாறுதலுக்குட்பட்டது.

சூரிய ஒளி தெருவிளக்கை எவ்வாறு நிறுவுவது?

மானியம் போக மீதி விலையை ஏற்று சூரிய ஒளித் தெருவிளக்கை நிறுவத் தயாராக இருக்கும் பயனாளிகள் / நிறுவனங்கள், அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அல்லது நகராட்சியை அனுகலாம். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் வழிமுறைக்கேற்ப, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் ஒதுக்கீட்டின்படி தேவைப்படும் சாதனங்களை வாங்கி அளிப்பார்கள். மைய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப மானியம் வழங்கப்படும்.

சூரிய ஒளி வீட்டு விளக்குகள்

இது வீட்டிற்குள் நிலையாக பொருத்தப்படும் சூரியஒளி மின் விளக்கு அமைப்பாகும். மைய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மான்யம் வழங்கும் திட்டத்தில் 5 வகையான அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்பில் உபயோகப்படுத்தப்படும் 7( அ) 9 (அ) 11 வாட் திறன் கொண்ட சிறிய குழல் விளக்குகள் மூலம் குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்தி 25 (அ) 40 (அ) 60 வாட் திறன் கொண்ட சாதாரண விளக்குகளுக்குச் சமமாக வெளிச்சம் பெறலாம். இந்த அமைப்பில் இரு 37 வாட் அல்லது 74 வாட் திறன் கொண்ட மின் மாட்யூல்கள், 12 வோல்ட், 40 அல்லது 75 ஆம்பியர் ஹவர் (ஹழ) திறன் கொண்ட ஒரு மின்கலன் இருக்கும். இது நாள்தோறும் 2 முதல் 4 மணி நேரம், நிறுவப்பட்டுள்ள அமைப்பிற்கு ஏற்றவாறு இயங்கும்.

வகைகள் மற்றும் தோராயமான விலை

1) 18 வாட் மாட்யூல் - 1 விளக்கு - ரூ. 8,000/-

2) 37 வாட் மாட்யூல் - 2 விளக்குகள் - ரூ. 14,000/-

3) 37 வாட் மாட்யூல் - 1 விளக்கு 1 மின் விசிறி) - ரூ.16,000/-

4) 74 வாட் மாட்யூல் - 2 விளக்குகள் 1 மின் விசிறி - ரூ.30,000/-

5) 74 வாட் மாட்யூல் - 4 விளக்குகள் - ரூ.30,000/-

மையஅரசு மானியம் (ஊரகப் பகுதிகளுக்கு)

அடக்க விலை அல்லது அதிக பட்ச விலையில் 50 சதவீதம் அல்லது மாடல் 1க்கு ரூ.2,500 உம், மாடல் 2 முதல் 5 வரை ரூ.4,800 (இவற்றில் எது குறைவோ) அந்தத் தொகை வழங்கப்படுகிறது. மானியம் பெறத் தகுதியுடையோர் தனிநபர், இலாப நோக்கு இல்லாத சேவை நிறுவனங்கள். (தனிநபருக்கு ஒரு அமைப்புக்கு மேல் மானியம் வழங்கப்பட மாட்டாது.)

பின் குறிப்பு: சூரிய ஒளி வீட்டு விளக்குகள் நிறுவுவதற்கு, சூரிய ஒளித் தெரு விளக்குகள் வாங்குவதற்கான முறையையேப் பின்பற்றலாம்.

சூரிய ஒளி மின்பம்புகள்

சூரிய ஒளி மின் மாட்யூல்களின் மீது சூரிய ஒளிபடும்போது அது நேர் மின்சாரமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் நேர்மின்சார மோட்டார் பம்ப்செட்டையோஅல்லது இன்வர்ட்டர் மூலமாக ஏ.சி. மோட்டார் பம்ப்செட்டையோ இயக்கி, கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து விவசாயத்திற்கும் குடிதண்ணீர்த் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

• 600 வாட் முதல் 3000 வாட் வரை வெவ்வேறு திறன்களில் பம்ப்கள் கிடைக்கின்றன.

• மிதக்கும் வகை, தரையில் நிறுவும் வகை, மற்றும் நீரில் மூழ்கத்தக்க வகை என மூன்று வகைகள் உள்ளன.

• மொத்தம் 30 அடி ஆழம் வரை இறைக்கவல்லது (சக்ஸன் ஆழம் மற்றும் டெலிவரி உயரம் உட்பட)

• தேவைப்படும் இடத்திலேயே மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த முடிகிறது,. எனவே மின்சாரத்தை ஓரிடத்தில் உற்பத்தி செய்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் போது ஏற்படும் மின் இழப்பு ஏற்படுவது இல்லை.

விலை விபரம்:

• 10 மீட்டர் ஆழத்திலிருந்து நீர் இறைக்கும் 900 வாட் திறனுள்ள ஏ.சி மேற்பரப்பு பம்ப் ஒன்றின் விலை சுமார் ரூ.1.70 இலட்சம் ஆகும்.

• 30 மீட்டர் ஆழத்திலிருந்து நீர் இறைக்கும் 1,800 வாட் திறனுள்ள ஏ.சி நீரில் மூழ்கத்தக்க பம்பு ஒன்றின் விலை சுமார் ரூ.4.10 இலட்சம் ஆகும்.

ஊக்கத் தொகை

• இந்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி நிறுவனம் அதிகபட்சம் 90 சதவீதம் வரை, பயனாளிகள் மற்றும் இடைத் தரகர்கள் உற்பத்தியாளர்கள் மூலம் முறையே ஆண்டுக்கு 5 சதவீதம் மற்றும் 2.5 வட்டி மானியத்துடன் கடன் வசதி பெறலாம்.

சூரிய ஒளி பம்பினைப் பெறுவது எவ்வாறு?

மைய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் தற்போதைய வழிகாட்டுதல்கள்படி, பம்பிற்கான விலையில் மானியம் நீங்கலாக மீதமுள்ள செலவை பயனாளி செலுத்தி சூரிய ஒளி பம்பு அமைக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட சூரிய ஒளி பம்பு தயாரிப்பாளர் / விநியோகிப்போர் பட்டியலிலுள்ள ஒரு நிறுவனத்தை அணுக வேண்டும். சூமற்படி நிறுவனத்தினர், கிணற்றை ஆய்வு செய்து சூரிய ஒளி மின்பம்பு பொருத்த தகுதியானதுதானா என்பதைக் கண்டறிந்த பின்னர், இந்திய புதுப்பிக்த்தக்க எரிசக்தி வளர்ச்சி நிறுவனத்திற்குக் அனுப்பிவைப்பர். மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையை அணுகலாம்.

சூரிய ஒளி மின் நிலையங்கள்

சூரிய ஒளி மின் நிலையம் எவ்வாறு இயங்குகிறது?

சிறிய அளவிலான சூரிய ஒளி மின் நிலையத்தில், சூரிய ஒளி மின் மாட்யூல்கள் (மொத்தத் திறன் 1 கிலோ வாட்டும் அதற்கு மேலும்) மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய மின்கலம், பவர் கண்டிசனிங் யூனிட் (இன்வர்ட்டர் மற்றும் சார்ஜ் கண்ட்லோரர்) ஆகியவை அடங்குகின்றன. சூரிய ஒளிக்கதிர்கள் மின் மாட்யூல்களின் மீது விழும்போது நேர் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த நேர் மின்சாரம் மின்கலன்களில் சேமிக்கப்படுகிறது. மின்கலனில் சேமிக்கப்பட்ட நேர் மின்சாரத்தை பவர் கண்டிசனிங் யூனிட் ஏ.சி மின்சாரமாக மாற்றுகிறது. இந்த ஏ.சி மின்சாரம் கட்டிடத்திலுள்ள மின் விசிறி, மின் விளக்குகளை இயக்கப் பயன்படுத்தலாம்.

சிறப்பு அம்சங்கள்

இத்தகைய சூரியஒளி மின் நிலையம் மின் கட்டமைப்பிலிருந்து மின் வசதி பெறாத பகுதிகளில் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கு மின்சாரம் வழங்கும் வகையில் வடிவமைக்கலாம். (அதிக நேரத்திற்கு மின்வசதி அளிக்கும் வகையிலும் வடிவமைத்துக் கொள்ளலாம்; அதற்கேற்ப செலவு அதிகமாகும்). இதில் நகரும் அல்லது ஓடும் பாகங்கள் இல்லை.

விலை விவரம்

தோராயமான விலை ஒருகிலோ வாட்டிற்கு ரூ.3.5 இலட்சம்

மானியம் / ஊக்கத்தொகை

மைய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நிர்ணயித்துள்ள அதிக பட்ச விலை அல்லது ஒரு கி.வாட் திறனுக்கு அதிகமாக உள்ள நிலையங்களுக்கு வாட்டிற்கு ரூ.1.25 இலட்சமும் 10 கி.வாட் திறனுக்கு அதிகமாக உள்ள நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் கம்பிகள் உட்பட, ஒரு கி.வாட்டிற்கு ரூ.1.50 இலட்சமும் ஆகிய இரண்டில் குறைவான தொகை மானியமாக அளிக்கப்படும்; இம்மானியம் ஊரகப் பகுதிகளில் உள்ள இலாபமில்லா நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியில் இல்லாத நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்படும். இம்மானியம் பெறுவதற்கான ஒவ்வொரு கருத்துருவும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படவேண்டும்.

சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள்

சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இணைப்பு 6-ல் உள்ள தயாரிப்பாளரில் ஒருவரைக் கலந்தாலோசித்து, தங்களின் இடம் மின் நிலையம் அமைக்க பொருத்தமானதுதானா என்பதை ஆய்வு செய்து தயாரிப்பாளர்கள் மூலம் தமிழ் நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். (தயாரிப்பாளர் பட்டியல் மற்றும் விண்ணப்பபடிவம் இணைப்பு 6-ல் கொடுக்கப்பட்டுள்ளன.) அதன்பேரில் அமைச்சகத்திற்கு முன் மொழிவு அனுப்பி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

அக்ஷ்ய ஊர்ஜா கடைகள்

மைய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களில் அக்ஷ்ய ஊர்ஜா கடைகள் நிறுவ பின்வரும் உதவிகளை அளித்து வருகின்றது. இந்த கடைகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சாதனங்களை விற்பதற்கும், சீராக்கப் பணிகளுக்கும் தேவையான வசதிகள் இருக்கும்.

அ) இதற்கான செலவில் 85 சதவீதம் வரை 7 சதவீத வட்டியில் வங்கிகள் மூலம் கடன் வசதி, அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை, 5 ஆண்டு திருப்பிச் செலுத்தப்படலாம்.

ஆ) மாதாந்திரச் செலவிற்காக மாதம் ரூ.5,000 மானியம்

இ) மாதத்திற்கு குறைந்த பட்ச விற்பனையாக முதல் ஆண்டில் ரூ.1 இலட்சமும் இரண்டாவது ஆண்டில் ரூ.1 இலட்சமும் காட்டினால், மாதத்திற்கு ரூ.5,000 ஊக்கத் தொகை அளிக்கப்படும். தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ள கடைகளின் பட்டியல் இணைப்பு-6 ல் கொடுக்கப்பட்டுள்ளது.

நகரப்பகுதிகளுக்கான மைய அரசின் திட்டங்கள்

சூரிய ஒளித் தெரு விளக்குகள் / பூங்கா விளக்குகள்

74/75 வாட் சூரிய ஒளி மாட்யுல், 11 வாட் / 18 வாட் சிறு குழல் விளக்கு - மானியம் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10,000 - 11 வாட் சிறுகுழல் விளக்கு / ரூ.12,000 - 18 வாட் சிறு குழல் விளக்கு.

தெரு விளக்குகளைக் கட்டுப்படுத்தும் சூரிய ஒளி அமைப்பு

100 தெரு விளக்குகளைக் கட்டுப்படுத்தும் 5 வாட் சூரிய ஒளி மாட்யுல் அமைப்பு ஒன்றிற்கு விலையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியம் 20

விளம்பரப் பலகைகள்

1 கி.வாட் வரை சூரிய ஒளி மாட்யுல் கொண்ட அமைப்பு - 2 சதுர மீட்டர் விளம்பரப் பலகையை குறைந்தது 6 மணி நேரம் எரிய வைக்கும் - விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 100 வாட் அமைப்பு ஒன்றிற்கு ரூ.15,000 வீதம் மானியம்.

சூரிய ஒளி ரோட்ஸ்டட்கள்

விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1,000 மானியம்

சூரிய ஒளி பிளிங்கர்கள்

37 வாட் மாட்யுல் - 24 மணி நேரம் விளக்கு எரிய வைக்கும் அமைப்பு – விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7,500 மானியம்

சூரிய ஒளி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு

500 வாட் மாட்யுல் - 4 வழி பாதை அமைப்பிற்கு - விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.5 இலட்சம் மானியம்.

பிற திட்டங்கள்

கட்டிடங்களுடன் இணைந்த சூரிய ஒளி அமைப்புகள்

5 கி.வாட் மாட்யுல் அமைப்புடன் குறைந்ததது ஒரு வாட்டிற்கு 10 சதுர மீட்டர் கூரை / சுவர் அளவிற்கு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 இலட்சம்.

சூரிய ஒளி மின் அமைப்பு

வங்கிகள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு குறைந்தது 6 மணி நேரம் எரியும். 1 கி.வாட் அமைப்பிற்கு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் மானியம்.

உயிரியல் சக்தி

நிலம் மற்றும் நீரில் வளரும் தாவரப்பொருட்கள் மற்றும் பிற உயிர் பொருட்களும் தாவர உயிர் சக்தியில் அடங்குகின்றன. தாவரங்களிலிருந்து ஒளிச் சேர்க்கை (ஞாடிவடிளலவோநளளை) மூலம் தாவர சக்தியை உருவாக்குகின்றன. தாவரப் பொருட்கள் எரிக்கப்படும்போது வெப்ப சக்தி கிடைக்கிறது. அந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உற்பத்தி செய்து மின்சாரம் தயாரிக்கலாம்.

தாவர உயிர்ச் சக்திகளைப் பயன்படுத்தும் பிற முறைகள் பின்வருமாறு:

சாண எரிவாயுக் கலன்

சாண எரிவாயுவினை எரிசக்தியாகப் பயன்படுத்தலாம். மேலும் கால்நடைகளின் சாணம், தாவரக் கழிவுகள், உணவுக் கூடங்களின் கழிவுகள், சர்க்கரை ஆலைகளின் கழிவு மூலம் சாண எரிவாயு தயாரிப்பது தொழில் ரீதியாக எளிதானதாகவும் , சிக்கனமானதும் ஆகும்.

கலன்களில் பயன்படும் பொருட்கள்

கால்நடைகளின் சாணம், தாவரக் கழிவுகள் மற்றும் எஞ்சியவைகள் உணவுக் கூடங்களின் கழிவுகள், சர்க்கரை ஆலைக் கழிவுகள், பேப்பர் கழிவுகள், குப்பைகள் போன்றவை இக்கலன்களில் பயன்படும் சில பொருட்களாகும்.

சாண எரிவாயு உற்பத்தி

சாண எரிவாயு என்பது 55 முதல் 65 சதவிகிதம் மீத்தேன் வாயு, 30 முதல் 40 சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றால் ஆனது. இவை கால்நடைகளின் சாணம், தாவரக் கழிவுகள், மனிதக் கழிவுகள் ஆகியவற்றை நீருடன் கலந்து ஆக்ஸிஜன் வாயு இல்லாத நிலையில், வேதியல் மாற்றங்களின் மூலம் வெளிப்படுகின்றன. மேலும் அழுகிப் போகும் தாவரப் பொருட்கள், வனக் கழிவுகள், குப்பை, உணவுக் கூடங்களின் கழிவுகள், காகிதக் கழிவுகள், சர்க்கரை ஆலையின் வீழ்படிவுகள் (ஞசநளளஅரன) ஆகியவற்றைப் பயன்படுத்தியும் சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். 50 சதவீதத்ற்கு மேற்பட்ட மூலப் பொருட்கள் எந்தவித உபயோகமும் இல்லாமல் வீணடிக்கப்படுவதை மாற்றி அவற்றை எரிவாயு தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

பயன்கள்

• சாண எரிவாயுவை நேரடியாக சமையலுக்கும், விளக்கெரிப்பதற்கும் பயன்படுத்தலாம்.

• இதனை விறகுகள், எண்ணெய் வாயு போன்றவற்றிற்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

• எரிவாயு பெறப்பட்ட பின் மூலப் பொருட்களின் தன்மை மேம்பட்டு சத்தான எரு உருவாகிறது.

• சாண எரிவாயுவின் மூலம் மின் சக்தி உற்பத்தி செய்யலாம்.

• மேம்பாடு அடைந்த சுகாதாரச் சூழ்நிலை உருவாக்க உதவுகிறது.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம் நிறுவுதல்

நிறுவனங்களுக்கான சாண எரிவாயுக் கலன்களை மற்றும் கழிப்பறையுடன் இணைந்த எரிவாயுக் கலன் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் ஏற்பாட்டின்படி, கதர் கிராமத் தொழில் வாரியத்தின் அமைப்பின்படி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அமைக்கலாம்.

மேலும் மனிதக் கழிவுகளால் இயங்கும் எரிவாயுக் கலன்களை நிறுவவும் அரசு ஊக்கமளிக்கிறது. இந்தத் திட்டம் மைய அரசிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது. கழிப்பறையுடன்இணைக்கப்பட்ட (மனித கழிவு) சாண எரிவாயுக் கலன்கள் அமைப்பதற்கு அதன் செலவில் மூன்றில் ஒரு பங்கை மாநில அரசு அளித்துள்ளது.

25 கனமீட்டர் கலன் ஒன்று அமைக்க சுமார் ரூ.5.5. இலட்சம் செலவாகும் தகுதியான நிறுவனங்கள் - அரசு, தனியார், கூட்டுறவு, டிரஸ்ட் பள்ளிகள், தங்கும் விடுதிகள் போன்றவை.

தாவரக் கழிவுகளின் மூலம் மின் உற்பத்தித் திட்டங்கள்

தாவர சக்தி என்பது சேமிக்கப்பட்ட சூரிய ஆற்றலாகும். தாவரக் கழிவுகளின் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு தற்போது பல்வேறு நாடுகளிலும் முன்னுரிமை தரப்படுகிறது. தாவரக் கழிவுகளின் மூலம் மின்சாரம் தயாரிப்பது தொழில் நுட்ப ரீதியாக சாத்தியமானதாக உள்ளது.

இந்தியா விவசாயம் சார்ந்த நாடு என்பதால் தாவரக் கழிவுகள் எளிதில் கிடைக்கின்றன. எனவே பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள தாவரக் கழிவுகளின் மூலம் மின்சாரம் தயாரித்து மின்சாரத் தேவையை நிறைவு செய்ய இயலும். நம் நாட்டிலுள்ள தாவரக் கழிவுகளைப் பயன்படுத்தி 17,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தேவைப்படும் பொருட்கள்

பயனற்ற தரிசு நிலங்களில் எரிசக்திக்கு உகந்த தாவரங்களைப் பயிர் செய்வதன் மூலம் விறகுகள் / எரிபொருளைப் பெற முடியும். மேலும், நெல் உமி, தேங்காய் ஓடுகள், விவசாயக் கழிவுகளையும் மூலப் பொருட்களாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம்.

தொழில் நுட்பம்

அனல் மின் நிலையங்களில் நீராவி உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் தொழில் நுட்பமே இதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இத்தொழில் நுட்பத்தில் சுற்றுச் சூழல் மாசுபடும் பொருட்கள் வெளியாவதில்லை.

தாவர திடப்பொருட்களின் வளம் மற்றும் மதிப்பீட்டு ஆய்வு

தொழில் முனைவோர் மூலம் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, தமிழ் நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை 49 வட்டங்களில் உபரியாக உள்ள தாவரத்திடப் பொருட்களின் அளவினைக் கணக்கிடுவதற்கும் மற்றும் அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான திறன் பற்றியும் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் தாவரப் பொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தவும், தாவர எரிவாயுக் கலன்கள் நிறுவுவதற்கு உதவியாக இருக்கும்.

தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் இத்தகைய ஆய்வு செய்வதற்கு நிதி உதவி கோரி, மைய அரசிற்கு கருத்துரு அனுப்பப்பட்டது. மைய அரசு இதற்கு ஒப்புதல் அளித்து இந்தப் பணியை, அண்ணா பல்கலைக் கழகத்தின் எரிசக்தி ஆய்வு நிறுவனத்திற்கு அளித்தது.

தற்பொழுது இப்பணி முடிவுற்று வரைவு அறிக்கை மைய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி தமிழ்நாட்டில் உபரி தாவரத் திடப் பொருட்களின் அளவு எல்லா மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 487 மெகா வாட்டாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், தொழில் முனைவோருக்கும் உதவுவதற்காக அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, மைய அரசிடமிருந்து மானியங்களைப் பெறுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உதவுகின்றது.

தகுதியுள்ள பயனாளிகள்

தனி நபர்கள், நிறுவனங்கள், தொழில் முனைவோர், அரசுச் சார்பற்ற அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள் போன்றவை.

அரசின் நிதியுதவி

தொழில் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் இயந்திரங்களுக்கான முதலீட்டில் 80 சதவீதம் வரை தேய்மானச் சலுகையாக வருமான வரிக்கணக்கிலும் மற்றும் சுங்கத் தீர்வையிலும் சலுகை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஒரு மெகா வாட்டிற்கு ரூ.20 இலட்சம் வீதம் அதிகபட்சமாக 5 மெகாவாட் திட்டத்திற்கு மைய அரசு மானியம் அளிக்கிறது.

• உபரியாக உள்ள மின்சாரத்தை, தமிழ்நாடு மின்சார வாரியம் பெற்றுக் கொண்டு ஒரு யூனிட்டிற்கு ரூ.3.15 வீதம் கட்டணம் வழங்குகிறது. உற்பத்தியாகும் மின்சாரத்தை சொந்தமாகப் பயன்படுத்துவதற்கு 25 கிமீ தூரத்திற்குள் சலுகைக் (வீலிங்) கட்டணமாக 3 சதவீமும் அதற்கு மேல் 6 சதவீத கட்டணமும் வசூலிக்கப் படும்.

கரும்புச் சக்கை மூலம் இணைமின் திட்டங்கள்

அதிக அழுத்தத்தில் நீராவி தயாரித்து அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்த பின்னர் அதே நீராவியை (குறைந்த அழுத்தத்தில்) தொழிற்சாலைகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவது இணைமின்திட்டமாகும். தமிழ்நாட்டிலுள்ள சர்க்கரை ஆலைகளில் இணை மின்திட்டம் 1997 ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் அடவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் கிடைக்கும் கரும்பு சக்கையை, பருவ காலத்தில் கொதிகலனில் எரிபொருட்களாக பயன்படுத்தப்படுகிறது; மற்ற பருவத்தில் நிலக்கரி அல்லது பிற தாவரப் பொருட்ளைப் பயன்படுத்தி நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. 2,500 டன் (ஒரு நாளுக்கு) திறன் கொண்ட ஒரு கரும்பு ஆலையில் 15 மெகா வாட் திறனில் இணை மின்திட்டம் செயல்படுத்தலாம். தமிழ்நாட்டிலுள்ள 3 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளில் இணை மின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 213 மெகா வாட் உபரி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

பயன்பாடு

உற்பத்தியாகும் மின்சாரத்தை தொழிற்சாலையின் சுய தேவை போக, மீதமுள்ள மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கி, சர்க்கரை ஆலைகள் கூடுதல் வருவாய் பெறலாம். உபரி மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு யூனிட்டிற்கு ரூ.3.15 வீதம் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்கிறது. உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சொந்தமாக பயன்படுத்துவதற்கு 25 கி.மீ. தூரத்திற்குள் சலுகை (வீலிங்) 3 சதவீதமும், அதற்கு மேலுள்ள தூரத்திற்கு 6 சதவீதமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல்

நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்வசதி பெறவும், மற்ற ஒப்புதல்கள் பெறவும் மத்திய அரசிடமிருந்து சலுகைகள் பெறவும் ஒரு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். இதற்காக, இணைப்பு 12-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசகர்களை அணுகலாம்.

தாவர எரிவாயுக் கலன்

திடப் பொருட்களான மரங்கள், மரக் கழிவுகள், தாவரக் கழிவுகளை தாவர எரிவாயுச் கலன்களில் எரித்து எரிவாயு உற்பத்தி செய்யலாம். இந்த வாயுவிலிருந்து மின்சாரம் தயாரித்து மோட்டார் பம்புகளை இயக்கவும் மற்றும் பிற மின்சார தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்; வாயுவினை நேரடியாக சமையல் செய்வதற்கும், தொழிற்சாலைகளில் வெப்ப சக்திக்கும் பயன்படுத்தலாம்.

எரி பொருட்கள்

தரிசு நிலங்களில் எரிசக்தி தரும் மரங்களைப் பயிரிடுவதன் மூலம் தாவர எரிபொருட்களை பெற முடியும். மேலும், அனைத்துத் தாவரக் கழிவுகளான நெல் உமி, தேங்காய் ஓடு போன்றவற்றையும் எரிபொருட்களாக தாவர எரிவாயு கலன்களில் பயன்படுத்தலாம்.

பயன்பாடுகள்

தொழிற்சாலைகளில் வெப்ப சக்தி பெற இக்கலன்கள் உதவும். சிறு அளவில் மின்சாரம் உற்பத்தி செய்து மின் மோட்டார்களை இயக்கவும், விளக்கு எரிக்கவும் பயன்படுத்தலாம்.

நன்மைகள்

• அதிக திறன், எரிபொருள்களில் இணக்கம், குறைந்த பராமரிப்பு போதும்.

• உற்பத்தியாகும் வாயுவினை வெப்ப சக்தி தேவைக்கும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தி செலவைக் குறைக்கலாம்.

• இதர தொழில் நுட்பங்களைவிட குறைந்த செலவே ஆகிறது.

• இச்சாதனத்திற்கு குறைந்த அளவு இட வசதி போதுமானது. தாவர எரிவாயுக் கலன்கள் நிறுவுவதை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஊக்குவிக்கிறது. இது சம்பந்தமான மைய அரசின் மானியங்களை பெற்றுத்தர உதவி செய்கிறது.

தகுதியுள்ள பயனாளிகள்

நிறுவனங்கள், பள்ளி விடுதிகள், திருமண மண்டபங்கள், விடுதிகள், சிற்றுண்டிச் சாலைகள், தொழிற் கூடங்கள் ஆகியவை.

மானிய உதவி

மைய அரசு திட்டத்தின்கீழ் 300 கிலோவாட் (வெப்பசக்தி) திறன்கொண்ட அமைப்புக்கு ரூ.2.00 இலட்சம் வீதமும், 100 கி வாட் (மின்சார) திறனுள்ள இரு எரிபொருள் என்ஜின் உடைய அமைப்புக்கு ரூ.2.50 இலட்சம் வரையும் மான்யமாக வழங்குகிறது. தனியார் முதலீட்டாளர்களுக்கு 100 கிலோ வாட் (மின்சார) திறனுள்ள தாவர மற்றும் புரோட்யூசர் கேஸ் என்ஜின் அமைப்பிற்கு ரூ.10.00 லட்சமும் மற்றும் 100 கிலோவாட் திறனுள்ள புரோட்யூசர் கேஸ் என்ஜினுக்கு மட்டும் ரூ.8.00 இலட்சமும் மானியம் வழங்குகிறது. மேலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கமற்று இயங்கும் சார்பு அமைப்புகளுக்கு 100 கிலோ வாட் மின்சார திறனுள்ள தாவர எரிசக்தி இயந்திரம் மற்றும் புரோடுயூசர் கேஸ் என்ஜினுக்கு ரூ.15.00 இலட்சமும் மற்றும் 100 கிலோ வாட் திறனள்ள புரோட்யூசர் கேஸ் என்ஜினுக்கு மட்டும் ரூ.10.00 இலட்சம் மத்திய அரசு மானியம் அளிக்கிறது. 100 கிலோ வாட் (வெப்பசக்தி) திறன் கொண்ட தாவர எரிவாயுக் கலனின் விலை ரூ. 10 இலட்சம் ஆகும்; அதே அளவில் மின்சாரம் தயாரிக்கும் திறனுக்கு ரூ.45 இலட்சம் வரை செலவாகும். (கூடுதலாக தேவைப்படும் உதிரிக் கருவிகளின் விலை, ஆகியவை இதில் அடங்காது.)

நிறுவுதல் தாவர எரிவாயுக் கலன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பட்டியல் இணைப்பு-13 ல் பொடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை மற்றும் பிற கழிவுகளிலிருந்து எரிசக்தி

அ. தொழிற்சாலை மற்றும் வணிக சம்பந்தமான கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுகளிலிருந்தும் மாநகராட்சிக் கழிவுகளிலிருந்து அனரோபிக் கலன் மூலம் எரிவாயு தயாரிக்க முடியும். இந்த எரிவாயுவை வெப்பப் பயன்பாட்டிற்கும் மின் தயாரிப்புக்கும், அந்த வாயுவை வடிகட்டிகள் மூலமாக சுத்தப்படுத்தி, மின் உற்பத்திக்கும் பயன்படுத்தலாம். மேலும், சேலத்தைச் சுற்றிலும் ஏறத்தாழ 50 மரவள்ளிக் கிழங்கு மாவு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற் சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீரிலிருந்து எரிவாயு தயாரிக்கலாம்; எரிவாயு எடுத்த பின் கழிவு நீரில் மாசு குறைந்த அளவே உள்ளது.

பயன்படத் தக்க கழிவுப் பொருட்கள்

மரவள்ளிக் கிழங்கு தொழிற்சாலைகள், எரிசாராயம் ஆலைகள், காகித ஆலைகள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் திட மற்றும் திரவக் கழிவுகள், சர்க்கரை ஆலைக் கழிவுகள், கால்நடைக் கழிவுகள், மற்றும் நகராட்சிக் கழிவுகள், கோழி எச்சம் ஆகியவை.

தொழில் நுட்பம்

பல்வேறு கழிவுகளிலிருந்தும் அவற்றின் வேதியியல் தன்மைக்கேற்ப பயோமத்தனேஷன், பெல்லமைசேஷன், எரிவாயு உற்பத்தி, பயோரலிஸ், எரித்தல் போன்ற பலவகையான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி எரிசக்தி தயாரிக்கலாம் அல்லது மின் உற்பத்தி செய்யலாம்.

நகரக் கழிவுகள்

மையஅரசின் இத்திட்டத்தை நகராட்சிகள், பிற நகர உள்ளாட்சிகள் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் செயல்படுத்தலாம்.

நகரத் திடக் கழிவுகளைக் கொண்டு வணிகத் திட்டங்கள்

நகரத் திடக் கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி இரண்டு கட்டங்களாகச் செயல்படுகின்றது. முதலில் நகரத் திடக் கழிவுகளிலிருந்து ஆர்.டி.எப் என்ற எரிபொருளாக மாற்றி கொதிகலனில் எரித்து நீராவி தயாரித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

குறிப்பிட்ட நகரங்களுக்கு இத்திட்டத்தை தயாரித்து செயல்படுத்தலாம். இத்திட்டத்திற்கான முனைவோர்கள் போட்டி ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு குறைந்தபட்ச நிதி உதவியை, மொத்த உச்சவரம்பான ஒரு மெகா வாட்டிற்கு ரூ.1.50 கோடிக்குள் அளிக்கப்படும்.

அதிகபட்ச வீத மீதேன் உற்பத்தி தொழிற் நுட்பத் திட்டங்கள்

நகரத் திடக் கழிவுகளிலிந்து அதிகபட்ச வீத மீதேன் உற்பத்தித் தொழிற் நுட்பம் மூலம் மின் உற்பத்தித் திட்டத்திற்கு ஒரு மெகா வாட்டிற்கு ரூ.2 கோடி மானியம் அளிக்கப்படும்.

செயல் விளக்க அடிப்படையில் நகரத்திடக் கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி

எரிவாயு உற்பத்தி / பய்ரோலினிஸ் மற்றும் ப்ளாஸ்மா ஆர்க் போன்ற தொழிற் நுட்பங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் செயல் விளக்கத் திட்டத்திற்கு மொத்தத் திட்டச் செலவில் 50 சதவீதம் வரை அதிக பட்சமாக ஒரு மெகா வாட்டிற்கு ரூ.3 கோடி வரை மானியம் அளிக்கப்படும்.

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின் உற்பத்தி

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மீதேன் (பயோ கேஸ்) எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு, திட்டச் செலவில் 40 சதவீதம் அதிகபட்சமாக ஒரு மெகா வாட்டிற்கு ரூ.2 கோடி மானியம் அளிக்கப்படும். திட்டச் செலவில் என்ஜின், எச்2 எஸ் பிரித் தெடுக்கும் அமைப்பு போன்றவற்றிற்கான செலவும் அடங்கும்

பிற நகரக் கழிவுகள் மூலம் மின் உற்பத்தி

பயோமத்தனேஷன் தொழில் நுட்பம் மூலம் மாட்டுச் சாணம், காய்கறிக் கழிவு, மாமிசக் கழிவு, மனிதக் கழிவு மற்றும் எந்த ஒரு நகரக் கழிவின் மூலம் மின் உற்பத்திக்கு,50 சதவீதத் திட்டச் செலவு, அதிகபட்சமாக ஒரு மெகா வாட்டிற்கு ரூ.3 கோடி அளிக்கப்படும்.

மாட்டுச் சாணம் பயன்படுத்தும் திட்டம் 250 கிலோ வாட் மற்றும் அதற்கு மேலுள்ள திறனுக்கு வழங்கப்படும். சாண எரிவாயு மூலம் வெப்பப் பயன்பாட்டிற்கு ஒரு மெகா வாட்டிற்கு ரூ.1 கோடி அளிக்கப்படும்.

மின் கட்டமைப்புடன் இணைந்த / பகிர்வு முறையில் சாண எரிவாயு மூலம் மின் உற்பத்தி

ஊரகப் பகுதிகளில், ஏதாவது கிராமப் பகுதி அமைப்பு, நிறுவனம், தனி முதலீட்டளர்கள் மின் உற்பத்தி செய்யும் தனிநபர்கள், சமுதாயத்திற்கு அல்லது மின் கட்டமைப்பிற்கு ஒருவருக்கு ஒருவர் சம்மதத்துடன் வழங்கும் திட்டத்திற்கு ஒரு கிலோ வாட்டிற்கு அதிகபட்சமாக ரூபாய் 30,000 முதல் 40,000 வரை, 3 கி.வாட் முதல் 250 கி.வாட் திறன் கொண்ட மின் உற்பத்தித் திட்டச் செலவில் 40 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படும்.

கட்டமைப்பிற்கேற்ற மின் உற்பத்தித் திட்டங்கள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு அரசு / தனியார் / இணை கூட்டுறவு / அரசு சார்பில்லாத நிறுவனங்கள் துறைகளில் கட்டமைப்பிற்கேற்ற உற்பத்தித் திட்டங்களுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் கீழ்கண்டவாறு மானியம் வழங்குகிறது.

தொலைதூர மின்வசதித் திட்டம்

மின்வசதி அளிக்கப்படாதவை என கணக்கெடுக்கப்பட்ட (ஊநளேரள) தொலைதூர கிராமங்கள் மற்றும் மின்வசதி அளிக்கப்பட்ட கணக்கெடுக்ப்பட்ட கிராமத்திலுள்ள தொலைதூர மின்வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு எங்குமின் கட்டமைப்பின் வசதி அளிக்க முடியாதோ அல்லது ஏற்புடைய செயலில் முடியாதோ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் வசதி அளிக்கும் திட்டங்களுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளுக்கான செலவில் (5 ஆண்டு பராமரிப்பு செலவு உட்பட) 90 சதவீதம் கீழ்க்கண்ட அதிகபட்ச அளவு மானியம் வழங்கப்படும்.

பிற திட்டங்கள்

எரிசக்தி பூங்கா

கல்வி நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்புகள், அரசுச் சார்பில்லாத சிறந்த நிறுவனங்கள் ஆகியவை புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சாதனங்களைக் கொண்ட எரிசக்திப் பூங்கா அமைத்து மக்களுக்கு செயல் விளக்கம் அளிப்பதற்கு மைய அரசு ஊக்குவித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பூங்காக்கள் அமைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சாதனங்களின் பயன்களையும், அதன் செயல் முறைகளையும் விளக்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நிதி உதவி அளிக்கிறது. 10 ஆண்டு பராமரிப்புச் செலவையும் சேர்த்து, ஒரு பூங்காவிற்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச செலவு ரூ.10 இலட்சம் ஆகும். ஒரு மாவட்டத்தில் நிறுவப்படும் முதலாவது பூங்காவிற்கு75 சதவீதம் வரையும், இரண்டாவது பூங்காவிற்கு 50 சதவீதம் வரையும் மானியமாக அளிக்கப்படுகிறது. மீதிச் செலவை பூங்காவை நிறுவும் அந்த நிறுவனமே ஏற்க வேண்டும்.

மின்கலம் மூலம் இயங்கும் ஊர்திகள்

நம்நாட்டிலுள்ள எண்ணெய் வளத்தின் பயன்பாட்டினைக் குறைப்பதற்காகவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், மின் கலன்களால் இயங்கும் ஊர்திகளுக்கு, சுங்கவரி மற்றும் விற்பனை வரி நீங்கலாக உள்ள செலவில் 33 சதவீதம்வரை மைய அரசு மானியமாக வழங்குகிறது. இந்த ஊர்திகளை இயக்க பெட்ரோல் தேவை இல்லை; இவை சப்தம் எழுப்பாது, சுற்றுச் சூழலின் தூய்மையும் பாதுகாக்கப்படும். இவ்வகை ஊர்திகள் நெரிசலான பகுதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலை வளாகங்கள், வனவிலங்குப் பூங்கா, விமான நிலையங்கள் கல்வி நிலையங்கள் மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பயன்படுத்தலாம். நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4 (அ) 8 (அ) 10 அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணம் செய்வதற்கு ஏற்ற மின்கலன்கள் மூலம் இயங்கும் ஊர்திகளுக்கு மட்டும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த ஊர்தியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கிமீ முதல் 90 கி.மீ. அளவுக்கும், ஒரு மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் செல்லக் கூடியவையாக இருக்க வேண்டும்.

ஆதாரம் : http://marxist.tncpim.org/

2.93442622951
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top