பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சூரிய உலர்த்தி

இத்தலைப்பில் சூரிய உலர்த்தியின் வகைகள், பயன்கள் மற்றும் அதன் பிற சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சூரிய சக்தியின் மூலம் கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தி காற்றை சூடுபடுத்தி, அந்த வெப்பக்காற்றை உலர்த்துவதற்கு பயன்படுத்தலாம். சூரிய உலர்த்திகள் சூரிய வெப்ப சக்தி சேகரிப்பான் மூலம் காற்றை சூடுபடுத்துகிறது. உலர்த்தும் வெப்பக் காற்றை நம் தேவைக்கேற்ப அடுக்கு வகை உலர்த்திகளாக அமைத்துக் கொள்ளலாம்.

சூரிய உலர்த்தியின் வகைகள்

ஒருங்கிணைந்த சூரிய உலர்த்திகள்

இவ்வகையான சூரிய உலர்த்திகள் சூரிய வெப்பசக்தியை சேகரிப்பதும் மற்றும் உலர்த்தும் செயல் நடப்பது ஆகியவற்றை ஒரே ஒரு சாதனத்தில் நிகழ்த்துகிறது. பெட்டி வகை உலர்த்திகள், அலமாரி வகை உலர்த்திகள், கூடார உலர்த்திகள், பசுமைக்குடில் உலர்த்திகள் மற்றும் பல அடுக்கு அலமாரி வகை உலர்த்திகள் ஆகியவை வரிசையில் ஒருங்கிணைக்கப்பட்ட உலர்த்திகளின் வரிசையில் அமைகிறது. பொதுவாக, இந்த மாதிரியான உலர்த்திகள் அளவில் மிகவும் சிறியதாக மற்றும் தனித்து செயல்படக்கூடியதாக இருக்கும்.

பங்கீட்டு வகை சூரிய உலர்த்திகள்

இந்த வகை சூரிய உலர்த்திகளில் சூரிய சக்தியை சேகரிப்பது மற்றும் உலர்த்தும் செயல் ஆகியவை தனித்தியாக நடக்கிறது. இந்த வகை உலர்த்திகளை இரு பகுதிகளாகப் பரிக்கலாம்.

இம்மாதிரியான சூரிய உலர்த்திகளை நம் தேவைக்கேற்ப காற்றின் வெப்பநிலை, காற்று செலுத்தும் வீதம், உலர்த்தக்கூடிய பொருட்களின் வகை ஆகியவற்றை பொருத்து வெவ்வேறு கொள்ளளவுக்குத் தகுந்தவாறு அமைத்துக் கொள்ளலாம்

கலப்பு சூரிய உலர்த்திகள்

இம்மாதிரியான உலர்த்தியில் காற்று சூடுபடுத்தி மற்றும் உலர்த்தும் பகுதி ஆகிய இரண்டு பகுதிகளிலும் சூரிய வெப்ப சக்தியை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. ஆனால் உலர்த்தும் செயல் உலர்த்தும் பகுதியில் மட்டும் நடைபெறுகிறது. இந்த மாதிரியான சூரிய உலர்த்திகளை கலப்பு மாதிரி சூரிய உலர்த்திகள் என்று அழைக்கலாம். இந்த வகை உலர்த்தியில், சூரிய சக்தியான தட்டையான தகடு போன்ற சேகரிப்பானின் மூலமும், மேலும் உலர்த்தும் அறையின் மேற்தரப்பின் மூலம் வெப்பம் சேகரிக்கப்படுகிறது. பொதுவாக, மிகப் பெரிய அளவில் தொழிற்சாலைகளில் சூரிய சக்தி மற்றும் மரபு சார்ந்த சக்திகளின் உட்கொள்ளும் அளவை வெகுவாகக் குறைக்கச் செய்யலாம்.

சூரிய உலர்த்திகளின் பயன்கள்

சூரிய உலர்த்திகள் பல்வேறு வகையான தேவைகளுக்கு வேளாண் பொருட்களை உலர்த்தப் பயன்படுகிறது. மேலும் அவை அதிகமாக தொழிற்சாலைகளில் குறிப்பாக ஜவுளி, மரம், பழங்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல், காகிதம், மருந்து மற்றும் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு பயன்படுகிறது.

 • புழுக்கத்தில் இருக்கும் மரபு சார்ந்த எரிபொருட்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் உலர்த்திகளை விட சூரிய உலர்த்திகள் மிகவும் சிக்கனமானது.
 • இம்முறையில் உலர்த்தும் பதன் செய் செயலானது முற்றிலும் சுகாதாரமானதாகவும் மற்றும் சுற்றுப்புறத்திற்கு நன்மை விளைவிக்கக் கூடியதாகவும் அமைகிறது.
 • சூரிய வகை உலர்த்திகளுக்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு செலவு குறைவு.
 • அதிகநாள் நீடித்து உழைக்கக்கூடியது. சாதாரணமாக ஒரு சூரிய உலர்த்தி குறைந்த பராமரிப்புடன் 15 முதல் 20 வருடங்கள் வரை உழைக்கக்கூடியது.

வரம்புகள்

 • சூரிய ஒளி இருக்கும் காலங்களில் மட்டும் உலர்த்தும் பணியை மேற்கொள்ள முடியும். அவ்வாறு இல்லையெனில், இதை மரபு சார்ந்த புழக்கத்தில் உள்ள உலர்த்திகளுடன் இணைத்து செயல்படுத்தலாம்.
 • பொதுவாக, புழக்கத்தில் உள்ள எரிபொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் உலர்த்திகளை ஒப்பிட்டுப் பார்த்தால் சூரிய சக்தி மற்றும் வெப்ப சேகரிப்பு வரம்புகளினால் இதன் செயல்பாடு மெதுவாகவே இருக்கும்.
 • பொதுவாக, சூரிய உலர்த்திகள் 50 முதல் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவிற்கு உலர்த்தும் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேளாண் பொருட்களை உலர்த்தும் சூரிய உலர்த்திகள்

வேளாண் உற்பத்தி பொருட்களை தகுந்த காலம் வரை சேமித்து வைக்க ஒரு குறிப்பிட்ட ஈரப்பதம் வரை உலர்த்தியை பாதுகாத்து வைக்க வேண்டும். அவ்வாறு உலர்த்த, வீடுகளுக்கு மற்றும் பண்ணைகளுக்கு தேவையான கொள்ளளவுகளில் சூரிய உலர்த்திகள் இருக்கின்றன. அதை நம் தேவைக்கேற்ப அமைத்து உணவு தானியங்களையும், பழங்களையும் மற்றும் காய்கறிகளையும் சூரிய வெப்பத்தின் மூலம் உலர்த்தி நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். நடைமுறையில் உள்ள இரண்டு உலர்த்திகள் பின்வருமாறு.

 1. வீடுகளுக்கான சூரிய உலர்த்தி
 2. பண்ணைகளுக்கான சூரிய உலர்த்தி

வீடுகளுக்கான சூரிய உலர்த்தி

வீடுகளில் பயன்படுத்தப்படும் உணவு தானிய வகைகள், மிளகாய், வத்தல் போன்ற பொருட்களை நம் தேவைக்கேற்ப பாதுகாத்துக் கொள்ள சூரிய உலர்த்திகள் மூலம் உணவுப் பொருட்களை நேர்த்தியான முறையில் சரியான ஈரப்பதத்திற்கு உலர்த்தி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பயன்படுத்த வீடுகளுக்கு தேவைப்படும் அளவில் சூரிய உலர்த்திகள் உள்ளன.

உலர்த்தியின் அளவுகள்
 • திறந்த மேற்பரப்பு - 0.36 ச.மீ
 • உலர்த்தும் தட்டுகளின் எண்ணிக்கை - 3
 • உலர்த்தியின் வெளிப்புற அளவுகள் - 620 x 620 x 350 மி.மீ.
 • உலர்த்தியின் கொள்ளவு - 1-2 கிலோ (அடர்த்தியை பொருத்து)
 • உலர்த்தியின் சாய்வு அமைப்பு - நிரந்தரம் ஃ மாற்றக்கூடியது
 • உலர்த்தக்கூடிய பொருட்கள் - சப்போட்டா, மிளகாய், பாகற்காய்
உலர்த்தியின் சிறப்பு அம்சங்கள்
 • உலர்த்தும் திறன் அதிகம் (25 முதல் 30 சதவீதம்)
 • எளிதாகவும், சிறியதாகவும், எடை குறைவாகவும் இருப்பதால் பயன்படுத்துவதில் சிரமமில்லை.
 • குறைந்த பயன்பாட்டு செலவு மற்றும் சிக்கனமானது.
 • வீடுகளுக்கு சிறந்த முறையில் பொருந்தும்
 • உலர்த்திய பிறகு, பொருட்களின் தரம் மேன்மை அடைகிறது.
 • இதனுடைய விலை சுமார் ரூ. 5000

சிறு பண்ணைகளுக்கான சூரிய உலர்த்தி

உலர்த்தியின் அளவீடுகள்
 • திறந்த மேற்பரப்பு - 3.34 ச.மீ.
 • உலர்த்தும் தட்டுகளின் எண்ணிக்கை - 3
 • உலர்த்தியின் வெளிப்புற அளவுகள் - 1830 x 1839 x 330 மி.மீ.
 • உலர்த்தியின் கொள்ள்ளவு - 15-30 கிலோ (அடர்த்தியை பொருத்து)
 • உலர்த்தக்கூடிய பொருட்கள் - தானிய வகைகள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் கருவேப்பிலை.
சிறப்பம்சங்கள்
 • பழங்கள் மற்றும் காய்கறிகளை உலர்த்த பயன்படுகிறது.
 • உலர்த்தும் திறன் அதிகம் (25 முதல் 30 சதவீதம்)
 • ஒரே சீரான முறையில் பொருட்களை உலர்த்துகிறது.
 • அதிகப்படியான வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் கிடைக்கிறது.
 • உலர்த்தும் பொருட்களை பொருத்து 10-15 மணி நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
 • எளிதாக உள்ளே பொருட்களை வைக்கவும் எடுக்கவும் ஏதுவாகிறது.
 • கிராம மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு பொருந்தும்
 • விலை சுமார் ரூ. 8000

இங்கு சில சூரிய உலர்த்திகள் பற்றி விபரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. உலர்த்தும் பொருள், அதன் அளவு ஆகியவற்றிற்கு ஏற்ப உலர்த்திகள் தேர்வு செய்யப்பட்டு வடிவமைக்கப்பட வேண்டும். குறிப்பான பயன்பாட்டிற்கு ஏற்ப, உயிர் சக்தி துறையை கலந்தாலோசித்து சூரிய உலர்த்திகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

மூலம்:வளரும் வேளாண்மை, அக்டோபர் 2008

மேலும் விவரங்களுக்கு :

உயிர் சக்தி துறை,

வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,

கோயம்புத்தூர் – 641 003

போன் : 0422 – 6611276

3.0350877193
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top