உங்களுடைய பொருட்கள் அல்லது சேவைகளுக்கு சிறப்பான சந்தை வாய்ப்புகள் பெற இந்த இணையவழிச் சேவை உதவுகிறது. விவசாய விளைபொருட்கள், கால்நடைகள், விதை, மின்னணுப் பொருட்கள், நிலம் போன்ற எந்தப் பொருளைப் பற்றியும் நீங்கள் இங்கு அறிவிக்கலாம். வாடகை மற்றும் ஆலோசனை சேவைகள் பற்றிய விபரங்களையும் நீங்கள் அறியலாம்.
குறிப்பிட்ட துறைகள் தொடர்பான வல்லுனர்களின் தீர்வுகளை இந்த இணையவழித் தளம் வழங்குகிறது. உபயோகிப்பாளர், தங்களுடைய சொந்த மொழியில் கேள்விகள் கேட்டு, வல்லுனர்களிடமிருந்து ஆலோசனைகளை மின்னஞ்சல் மூலம் பெறலாம்.
குழந்தைகள் தங்களுடைய பொது அறிவை பரிசோதித்துக் கொள்ளவும், தங்களுடைய செயல்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் இந்த இணையவழி வினா-விடை பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளலாம்.
பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, முக்கிய நிதி நடவடிக்கைகளை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் ஞாபகப்படுத்தி, நிதி நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள, இந்த இணையவழி சேவை உதவுகிறது.
இந்தியாவெங்கும் உள்ள பொதுச்சேவை / மக்கள் கணினி மையங்களை நடத்தும் கிராமப்புற தொழில்முனைவோருக்குத் தேவையான தகவல் வளங்களை இத்தளம் வழங்குகிறது. மக்கள் கணினி மைய முகவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் இத்தளம் வாய்ப்புகளை அளிக்கிறது.
பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பின்தங்கிய குழுக்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த, பல்வேறு படிப்புகள் தாய்மொழிகளில் வழங்கப்படுகிறது
இந்த மென்பொருள் மூலம், கர்ப்பிணி, பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு சம்பந்தமான தகவல்களை, குறிப்பிட்ட பயனாளிக்கு கைப்பேசி வழியாக குரல் அழைப்பு வடிவில் வழங்கப்படுகிறது