பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நீர் மின் நிலையங்கள்

தமிழகத்தில் உள்ள நீர் மின் நிலையங்கள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குந்தா மின் உற்பத்தி வட்டம்

காடம்பாறை மின் உற்பத்தி வட்டம்

மின்நிலையங்களின் சிறுவிளக்கத்தொகுப்பு

முன்னுரை

தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் ஆனைமலைப் பகுதியில் உள்ள ஆறுகளில் குறிப்பாக ஆழியாறு, சோலையாறு ஆகியவற்றின் நீரைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யவும், பின்பு நீரை நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தவும், பரம்பிக்குளம் ஆழியார் நீர் மின்திட்டம் 1966-72 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டது. பிறகு காடம்பாறை நீரேற்று மின் திட்டம் 1987-88ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது மற்றும் நீர்மின்சார உற்பத்தியை பெருக்க சிறிய நீர் வளம் மிக்க இடங்களை உபயோகப்படுத்தும் வகையில் பூனாச்சி சிறுபுனல் நீர்மின்திட்டம் 1992ஆம் ஆண்டிலும் திருமூர்த்தி மின்திட்டம் 2004ஆம் ஆண்டிலும் ஆழியார் சிறுமின் திட்டங்கள் 2005ஆம் ஆண்டிலும் மற்றும் அமராவதி சிறுபுனல் மின்திட்டங்கள் 2006ம் ஆண்டிலும் மின்உற்பத்தியை தொடங்கின. காடம்பாறை மின்உற்பத்தி வட்டத்தின் கீழ் இயங்கும் ஒன்பது நீர்மின் திட்டங்கள் வருமாறு.

சர்க்கார்பதி மின் நிலையம்

சர்க்கார்பதி மின்நிலையம் பரம்பிக்குளம் - ஆழியார் நீர்மின்திட்டத்தின் முதலாவது மின்நிலையமாக 1966ல் நிறுவப்பட்டது. இந்த மின்நிலையத்தில் மின்உற்பத்திக்குத் தேவையான நீர் கேரள மாநிலத்தில் உள்ள பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட பரம்பிக்குளம் அணையிலிருந்து பெறப்படுகிறது. இம்மின்நிலையத்தின் மின்உற்பத்தி நீர்ப்பாசன தேவையுடன் இணைந்து செயல்படுவதால் பொதுப்பணித்துறையின் அனுமதியுடன் நீர் பாசனத்தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது. பொதுவாக இம்மின்நிலையம் ஜூலை மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை இடைவிடாமல் இயக்கப்படுகிறது. நீர் மின்நிலையத்தில் இருந்து சமமட்ட கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு அனுப்பப்படுகிறது.

இம்மின்நிலையத்தின் 31.03.2011 வரையிலான மொத்த உற்பத்தி 5053.47 மில்லியன் யூனிட்கள். இம்மின்நிலையத்தின் சராசரி மின்உற்பத்தி செலவு ஒரு யூனிட்டுக்கு 10 பைசா தான் ஆகிறது.

ஆழியார் மின் நிலையம்

ஆழியார் மின்நிலையம் ஆழியார் ஆற்றின் குறுக்கே மேல்ஆழியாரில் கட்டப்பட்டுள்ள அணையிலிருந்து தண்ணீர் எடுத்து மின்உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. பூனாச்சி நீர்ப்பிடிப்பில் இருந்தும் மேல்ஆழியார் அணைக்குத் தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது.

மேல்ஆழியார் அணையில் உள்ள நீரை காடம்பாறை நீரேற்று மின்நிலையத்தில் இருந்து நீரேற்றம் மூலம் காடம்பாறை அணைக்கு அனுப்பவும் பயன்படுகின்றது.

இந்த மின்நிலையத்தின் மூலம் மின்உற்பத்தி செய்யவும் மற்றும் மின் அழுத்தத்தைச் சீர்படுத்த கன்டென்சர் ஆகவும் இயக்கக்கூடிய அமைப்பைப் பெற்றுள்ளது.

இம்மின்நிலையத்தின் 31.03.2011 வரையிலான மொத்த உற்பத்தி 6547 மில்லியன் யூனிட்கள். இம்மின் நிலையத்தின் சராசரி மின்உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு 18 பைசா தான் ஆகிறது.

சோலையார் மின்நிலையம் 1 மற்றும் 2

சோலையார் மின்நிலையம் 1 மற்றும் 2 ஆகிய மின்நிலையங்கள் 1971 முதல் இயக்கப்படுகிறது. சோலையார் ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டுள்ள சோலையார் அணையில் தண்ணீர் எடுக்கப்பட்டு இம்மின் நிலையங்களின் மின்உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. சோலையார் மின்நிலையங்களை இயக்கித் தண்ணீரை பரம்பிக்குளம் அணைக்கோ அல்லது கேரள மாநிலத்திற்கோ அனுப்புவதைத் தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் ஏற்படுத்தியுள்ள தண்ணீர் பங்கீடு ஒப்பந்தத்தின்படி முடிவு செய்யப்படுகிறது.

சோலையார் மின்நிலையம் 1ன் மூலம் 31-03-2011 வரையிலான மொத்த உற்பத்தி 9734 மில்லியன் யூனிட்கள் சோலையார் மின்நிலையம் 2 மூலம் 309.2008 வரையிலான மொத்த உற்பத்தி 2398 மில்லியன் யூனிட்கள். சோலையார் மின்நிலையத்தின் சராசரி மின்உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு 7 பைசா மற்றும் சோலையார் மின்நிலையம் 2ன் சராசரி மின்உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு 15 பைசா ஆகிறது.

காடம்பாறை மின்நிலையம்

காடம்பாறை மின்நிலையம் விசையேற்ற நீர்மின்திட்டமாக தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட முதல் திட்டமாகும். நாள்தோறும் தமிழ்நாட்டில் ஏற்படும் உச்ச கட்ட மின்தேவையை ஒரளவு சரிசெய்யவும் மற்றும் அனல் மின் நிலையங்களிலிருந்து பெறப்படும் மின்திறன் தேவைக்கு அதிகமாக இருக்கும் காலங்களில், அதாவது குறிப்பாக இரவு நேரங்களில் பயன்படாது உபரியாக உள்ள மின்திறனை நீரேற்றத்திற்காகவும் காடம்பாறை மின்நிலையம் மூலம் பயன்படுத்தப்பட்டு நீர் மேல் அணையில் சேமித்து வைக்கப்படுகின்றது.

- இம்மின்நிலையம் தமிழ்நாடு மின்வாரியத்தின் முதல் விசையேற்ற நீர்மின்திட்டம் மற்றும் நிலவறை (Underground Power House Cavern) மின்நிலையத்தையுடையதாகும். இம்மின் நிலையத்தின் மின்உற்பத்திக்குத் தேவையான தண்ணீர் தமிழ்நாடு மின்வாரியத்தால் கட்டப்பட்டுள்ள காடம்பாறை அணையிலிருந்து பெறப்படுகிறது.

மின்னாக்கி ஒவ்வொன்றும் 100 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்டதாகும்.

இம்மின் நிலையத்தின் மூலம் 31.03.2011 வரையிலான மொத்த உற்பத்தி 5360 மில்லியன யூனிட்டுகள் ஆகும். மின்நிலையம் 2ன் சராசரி மின்உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு 2265 பைசா ஆகிறது.

பூனாச்சி சிறுபுனல் மின்நிலையம்

ஒரு மெகாவாட் மின்திறன் கொண்ட இரண்டு மின்இயந்திரங்கள் நவம்பர் 1992 மற்றும் டிசம்பர் 1992 முதல் இயக்கப்படுகிறது. பூனாச்சி கால்வாய் தண்ணீரை திருப்பி பூனாச்சி சிறிய நீர் மின் தேக்கத்தில் நிரப்பி பிறகு அதிலிருந்து பூனாச்சி சிறுபுனல் மின்திட்டத்தின் மின்உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்து மின்உற்பத்திக்குப்பின் மீண்டும் நீர் மேல்ஆழியாறு அணையில் சேருகிறது.

தண்ணீரின் வரவுக்கேற்ப இம்மின்நிலையம் இயக்கப்படுகிறது. இம்மின்நிலையத்தின் 31.03.2011 வரையிலான மொத்த உற்பத்தி 424 மில்லியன் யூனிட்டுகள் ஆகும்.

திருமூர்த்தி அணை சிறுபுனல் நிலையம்

திருமூர்த்தி மின்நிலையத்தில் மூன்று 650 கிலோவாட் மின்திறன் கொண்ட மின் இயந்திரங்கள் இயக்கப்படுகின்றது. மின்நிலையத்திற்கு தேவையான தண்ணீர் திருமூர்த்தி அணையிலிருந்து பயன்படுத்தப்படுகின்றது. திருமூர்த்தி அணை பொதுப்பபணித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது.

இம்மின்நிலையத்தின் மின்உற்பத்தி நீர்ப்பாசன தேவையையும் இணைத்து செயல்படுவதால் பொதுப்பணித் துறையின் நீர்ப்பாசனத் தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது.

ஆழியாறு சிறுபுனல் நிலையம்

ஆழியாறு அணை மின்நிலையத்தில் இரண்டு 1250 கிலோவாட் மின்திறன் கொண்ட மின்இயந்திரங்கள் செப்டம்பர் 2002 முதல் இயக்கப்படுகிறது. மின்நிலையத்தில் ஆழியாறு அணையிலிருந்து நீர்பாசனத்திற்காக வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வணை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இம்மின்நிலையம் பொதுப்பணித்துறையின் நீர்பாசனத் தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது.

அமராவதி சிறு புனல் மின்நிலையம்

அமராவதி அணை மின்நிலையத்தில் இரண்டு 2000 கிலோவாட் மின்திறன் கொண்ட மின்இயந்திரங்கள் முறையே செப்டம்பர் 2006 மற்றும் நவம்பர் 2006 முதல் இயக்கப்படுகிறது. தண்ணீர் அமராவதி அணையிலிருந்து நீர்பாசனத்திற்காக வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வணை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இம்மின்நிலையம் பொதுப்பணித்துறையின் நீர்பாசனத் தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது.

மின் உற்பத்தி வட்டம்/ ஈரோடு

அணை மின் நிலையம் /மேட்டூர்

மேட்டூர் அணை மின் நிலையம் காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டேன்லி நீர்தேக்கத்திற்கு அருகில் சேலத்திலிருந்து 50 கீ.மி தொலைவில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 4 இயந்திரம் X 12.5 மெ.வாட் = 50 மெகாவாட் ஆகும். இதன் நீர் சுழலி இரட்டை சூழல் கொண்ட நீளவாக்கில் அமைந்த பிரான்சிஸ் சுழலி ஆகும். இங்கு உள்ள இயந்திரங்கள் 1937 முதல் 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட போது அதன் மின்திறன் 10 மெ.வாட் ஆகும். 2002 முதல் 2004-ம் ஆண்டில் அதன் மின் திறன் 12.5 மெ.வாட ஆக உயர்த்தப்பட்டது. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 94.00 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொது பணித்துறையினரால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.

சுரங்க மின் நிலையம் / மேட்டுர்

மேட்டூர் சுரங்க மின் நிலையம், காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டேன்லி நீர்தேக்கத்திற்கு, சுரங்கம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. அது சேலத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மின் திறன் 4 இயந்திரம் X 50 மெ.வாட் = 100 மெகாவாட் ஆகும். இதன் நீர் சுழலி பிளேடுக்குள் நகரக்கூடிய கெப்ளான் சுழலியாகும். இங்குள்ள இயந்திரங்கள் 1965 முதல் 1966 ஆம் ஆண்டு காலம் வரை நிறுவப்பட்டுள்ளன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 493.10 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொது பணித்துறையினரால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.

கதவணை மின் நிலையம்.1 /செக்கானுார்

செக்கானுார் கதவணை மின் நிலையம்.1 காவிரி ஆற்றின் குறுக்கே, செக்கானுார் கிராமத்தில், பவானியிலிருந்து 36 கி.மீ. தொலைவில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2 இயந்திரம் X 15 மெ.வாட் = 30 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி பிளேடுகள் நகரக்கூடிய பல்பு வகை சுழலி ஆகும். இந்த மின் நிலையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 18 கதவணைகள் மூலம் சுமார் 9 மீட்டர் உயரம் அளவு நீர் தேக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்குள்ள இயந்திரங்கள் 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 110.54 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொதுப்பணித்துறையினரால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.

கதவணை மின் நிலையம்.2 /நெரிஞ்சிப்பேட்டை

நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின் நிலையம்.2 காவிரி ஆற்றின் குறுக்கே, நெரிஞ்சிப்பேட்டை கிராமத்தில், பவானியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2 இயந்திரம் X 15 மெ.வாட் = 30 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி பிளேடுகள் நகரக்கூடிய பல்பு வகை சுழலி ஆகும். இந்த மின் நிலையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 18 கதவணைகள் மூலம் சுமார் 9 மீட்டர் உயரம் அளவு நீர் தேக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்குள்ள இயந்திரங்கள் 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 106.50 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொதுப்பணித் துறையினரால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.

கதவணை மின் நிலையம்.3 /குதிரைக்கல்மேடு

குதிரைக்கல்மேடு கதவணை மின் நிலையம்.3 காவிரி ஆற்றின் குறுக்கே, கோனேரிப்பட்டி கிராமத்தில், பவானியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2 இயந்திரம் X 15 மெ.வாட் = 30 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி பிளேடுகள் நகரக்கூடிய பல்பு வகை சுழலி ஆகும். இந்த மின் நிலையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 18 கதவணைகள் மூலம் சுமார் 9 மீட்டர் உயரம் அளவு நீர் தேக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்குள்ள இயந்திரங்கள் 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 92.36 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன்மின் உற்பத்தி பொதுப்பணித் துறையினரால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.

கதவணை மின் நிலையம்.4 /ஊராட்சிக்கோட்டை

ஊராட்சிக்கோட்டை கதவணை மின் நிலையம்.4 காவிரி ஆற்றின் குறுக்கே, ஊராட்சிக்கோட்டை கிராமத்தில், பவானியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2 இயந்திரம் X 15 மெ.வாட் = 30 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி பிளேடுகள் நகரக்கூடிய பல்பு வகை சுழலி ஆகும். இந்த மின் நிலையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 18 கதவணைகள் மூலம் சுமார் 9 மீட்டர் உயரம் அளவு நீர் தேக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்குள்ள இயந்திரங்கள் 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 79.50 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொதுப்பணித் துறையினரால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.

பவானிகட்டளை கதவணை மின் நிலையம் -1 /சமயசங்கிலி

சமயசங்கிலி பவானிகட்டளை கதவணை மின் நிலையம் -1 காவிரி ஆற்றின் குறுக்கே, சமயசங்கிலி கிராமத்தில், ஈரோட்டியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2 இயந்திரம் X 15 மெ.வாட் - 30 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி பிளேடுகள் நகரக்கூடிய பல்பு வகை சுழலி ஆகும். இந்த மின் நிலையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 21 கதவணைகள் மூலம் சுமார் 9 மீட்டர் உயரம் அளவு நீர் தேக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்குள்ள இயந்திரங்கள் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 95 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன்மின் உற்பத்தி பொதுப்பணித் துறையினரால் காவிரி மற்றும் பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.

நுண்புனல் மின் நிலையம் /பவானிசாகர்

பவானிசாகர் நுண்புனல் மின் நிலையம் பவானி ஆற்றின் குறுக்கே, சத்தியமங்கலத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் கீழ் பவானி அணையின் அருகே அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 4 இயந்திரம் X 2 மெ.வாட் = 8 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி செங்குத்தான செமி கெப்ளான் ஆகும். இங்குள்ள இயந்திரங்கள் 1990 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 36 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொதுப்பணித் துறையினரால் பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.

வலதுகரை வாய்க்கால் மின் நிலையம் /பவானிசாகர்

பவானிசாகர் வலதுகரை வாய்க்கால் மின் நிலையம் பவானி ஆற்றின் வலதுகரை வாய்க்காலின் குறுக்கே, சத்தியமங்கலத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2 இயந்திரம் X 4 மெ.வாட் = 8 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி "S" மாதிரி நீளவாக்கில் அமைந்த முழுகெப்ளான் ஆகும். இங்குள்ள இயந்திரங்கள் 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 7.70 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொதுப்பணித்துறையினரால் பவானி வலதுகரை வாய்க்கால் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.

சாத்தனுார் அணை மின் நிலையம் /சாத்தனுார்

சாத்தனுார் அணை மின் நிலையம் தென்பண்ணை ஆற்றின் குறுக்கே, திருவண்ணாமலையிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 1 இயந்திரம் X 7.5 மெ.வாட் - 7.5 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி செங்குத்தான கெப்ளான் வகை நீர் சுழலி ஆகும். இங்குள்ள இயந்திரங்கள் 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 14.0 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொதுப்பணித்துறையினரால் தென்பண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.

திருநெல்வேலி நீர் மின் உற்பத்தி வட்டம்

பாபநாசம் மின்நிலையம்

இம் மின் நிலையத்தில் 4x8 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். இதற்குத் தேவைப்படும் நீர் தாமிரபரணி அணையிலிருந்து கொண்டு வரப்படுகிறது. மின்சார நிலைத்திலிருந்து 12.8 கி.மீ. தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த மின்நிலையம் 1942ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மின்நிலையம் நெல்லை மாவட்டத்திலிருந்து மீண்டும் 45 கிமீ தொலைவில் அம்பாசமுத்திரம் நகரின் அருகே அமைந்துள்ளது. மேலும் இம்மின்நிலையம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு நவீனப் படுத்தப்பட்டும் நீர் சுழலியின் திறனையும் அதிகப்படுத்தியும் 7 மெகாவாட் திறன் அளவிலிருந்து 8 மெகாவாட் அளவிற்கு உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

சேர்வலார் மின்நிலையம்

சேர்வலார் மின் நிலையம் சேர்வலார் அணையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதில் 1 X 20MW அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சேர்வலாறு மின் நிலையம் பாபநாசத்தில் இருந்து 9 கிமீ துாரத்தில் உள்ளது.

கோதையார் மின்நிலையம் - 1

குட்டியார் அணை. சின்ன குட்டியார் அணையிலிருந்து நீா கோதையாரின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கு கொண்டு வரப்பட்டு அந்நீரைக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் திறன் 1X60 மெகாவாட் ஆகும். மின்உற்பத்தி 1970ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த மின்நிலையம் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அருகாமையில் உள்ள நகரம் நாகர்கோவில். மின் உற்பத்திக்கு பிறகு இந்த நீர் கோதையார் அணை-2க்கு செல்கிறது. கோதையார் மின் நிலையம் 2ல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோதையார் மின்நிலையம் 2

கோதையார் மின்நிலையம் 1இல் மின்உற்பத்திக்கு பிறகு வரும் நீர் தான் இதன் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது. இந்த மின்நிலையத்தின் திறன் 1X40 மெகாவாட். இந்த மின்நிலையம் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பக்கத்தில் அமைந்து இருக்கும் நகரம் நாகர்கோவில். இந்த மின்நிலையத்தின் உபரி நீர் பேச்சிப்பாறை நீர் நிலைக்கு சென்று பாசனத்துக்கு பொதுப்பணி துறையால் விடப்படுகிறது. இந்த மின்நிலையத்தின் மின்உற்பத்தி 1971-ம் ஆண்டு தொடங்கியது.

வைகை மின்நிலையம்

மதுரை மாவட்டத்தில் ஆண்டிப்பட்டியில் 7 கிமீ தொலைவில் வைகை மின்நிலையம் அமைந்துள்ளது. தேனி இரயில் நிலையம் இதில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது. வைகை மின்நிலையத்தின் திறன் 2x3 மெகாவாட். வைகை அணை வைகையாற்றின் குறுக்கே 1958ல் கட்டப்பட்டது. நீர் மின்உற்பத்திக்கு பிறகு நீர்பாசனத்திற்கு செல்கிறது. மின்நிலையம் 1990இல் மின்உற்பத்தியை தொடங்கியது.

பெரியார் மின்நிலையம்

பெரியார் மின்நிலையம் தேனி மாவட்டத்தில் கூடலூரில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இதன் மின்திறன் 4X35 மெகாவாட் இங்கு முதல் முன்று இயந்திரங்களில் 1958-59 லும் நான்காவது இயந்திரம் 1965-லும் மின் உற்பத்தியை தொடங்கியது. பெரியார் ஆற்றின் குறுக்கே கேரள மாநிலத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த நீர் சுரங்கம் வழியாக மின்உற்பத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. அருகில் தேனி இரயில் நிலையம் உள்ளது. இந்த மின்நிலையத்தின் இயந்திரங்கள் சீரமைக்கப்பட்டு 4X42 மெகாவாட் உற்பத்திக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது.

சுருளியார் மின்நிலையம்

இந்த மின்நிலையம் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுருளியார் மற்றும் அதன் கிளை நதிகளாகிய highwavys, மணலார், வென்னியார் மற்றும் இரவங்கலார் அணைகளில் நீர் தேக்கப்பட்டு 1X35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 1978ல் தொடங்கப்பட்டது. உபரி நீர் வைகை ஆற்றில் கலந்து நீர்ப்பாசனத்துக்காக செல்கிறது.

அருகில் தேனி இரயில் நிலையம் உள்ளது. லோயர் கேம்ப் மற்றும் மின்நிலையம் வண்ணாத்திப்பாறையில் அமைந்துள்ளது. இது தேனி -குமுளி நெடுஞ்சாலையிலிருந்து 10கிமீ தொலைவில் உள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

3.0
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top