பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி சேமிப்பு / குழந்தைகளுக்கான எரிசக்தி சேமிப்புக் குறிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகளுக்கான எரிசக்தி சேமிப்புக் குறிப்புகள்

நமது தினசரி வாழ்கையில் எரிசக்தி சேமிப்பதற்கான சில பயனுள்ள குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மறுசுழற்சி மூலம் உருவாகும் தாள்களை பயன்படுத்துங்கள்

மறுசுழற்சித் தாள்களை, குறைவான இயற்கை வளஆதாரங்களையும் குறைவான விஷத்தன்மையுள்ள வேதிப் பொருட்களையும் பயன்படுத்தித் தயாரிக்க முடிகிறது. வீனான தாள்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு டன் பேப்பர்

  • பதினைந்து மரங்களைக் காப்பாற்றுகிறது
  • 2500 கிலோ வாட் மணிகள் அளவுள்ள எரிசகக்தியை சேமிக்கிறது
  • 20,000 லிட்டர்தண்ணீர் சேமிக்கப்படுகிறது
  • 25 கிலோகிராம் அளவுமாசுகள் காற்றில் கலப்பது குறைகிறது

குழந்தைகளுக்கு - பசுமைக்கான குறிப்புகள்

1. காகிதங்களை வீணடிக்காதீர் - நாம் காகிதங்கள் தயாரிப்பதற்கு மரங்களை வெட்டுகிறோம். இதனால், காகிதங்களை குறைத்து பயன்படுத்தினால், மரங்களை பாதுகாக்கலாம்.

2. பள்ளிகளுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ அல்லது பேருந்திலோ செல்லவும். இதனால் எரிசக்தியை மிச்சப்படுத்துவதுடன், சுற்றுப்புறம் மாசுபடுவதையும் தவிர்க்கலாம்.

3. பல் விலக்கும் பொழுதும், குளிக்கும் பொழுதும், தேவை இல்லாத நேரங்களில் குழாயை மூடவும். இதனால் நீர் சேமிக்கப்படும்.

4. பள்ளிகளில் இயற்கை எரு தோட்டங்களை தொடங்கி அதற்கு தேவையான எரு குழிகளை உருவாக்குங்கள் - இதன் மூலம் இயற்கை வளங்களை எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதை அறிவீர்கள்.

5. உபயோகிக்காத போது விளக்குகள் மற்றும் மின்சார பயன்பாட்டு சாதனங்களை நிறுத்தவும். இதனால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.

6. பருவகால பழங்களை உண்ணுங்கள் - இதனால் இயற்கையை மற்றும் பணத்தை சேமிக்கலாம்.

7. மரங்களை நடுங்கள். இவை உங்கள் சுற்றுபுறத்தை பசுமையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளும்.

8. பாக்கெட் பொருள்களை குறைவாக பயன்படுத்தி கழிவுகளை குறைத்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்.

9. உங்கள் நேரத்தை வீடியோ கேம் மற்றும் தொலைகாட்சியில் செலவிடாமல் இயற்கையுடன் கழியுங்கள் - இதனால் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதுடன், நீங்களும் உடல் நலமாக இருக்கலாம்.

10. இயற்கையை பாதுகாப்பதற்கு துாதுவராக இருங்கள் - அப்படி இருக்க, இந்த குறிப்புகளை உங்கள் நண்பரிடம் பரப்புங்கள்.

3.08571428571
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top