பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சமைத்தல்

வீடுகளில் சமைக்கும் போது எரிசக்தி சேமிப்பது பற்றி இத்தலைப்பில் விவரித்துள்ளனர்.

சமைக்கும் போது எரிசக்தி சேமிப்பதற்கான எளிய குறிப்புகள்

  • எரிசக்தியைக் குறைவாக பயன்படுத்தும் அடுப்புகளைப் பயன்படுத்துங்கள்
  • சமைக்கும்போது, பாத்திரங்களை மூடிவைப்பதனால் சமைக்கும் நேரமும் எரிசக்தி உபயோகமும் குறைகிறது
  • சமைப்பதற்கு முன்னால் உணவுப் பொருட்களை ஊறவையுங்கள்.

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) மற்றும் அதன் உபயோகம்

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன?

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன்களில் திரவமாக மாற்றப்பட்டு இருப்பதே ஆகும். எளிதில் சேமிக்கவும், எளிதில் எடுத்துச்செல்லுவதற்கு ஏற்றவாறு இவ்வாறு செய்யப்படுகிறது. இவை இயற்கை வாயு அல்லது கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும்போதும் பெறப்படுகின்றன. பியூட்டேன் மற்றும் புரொப்பேன் போன்றவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவிலுள்ள முக்கியமான ஹைட்ரோகார்பன்களாகும். மற்ற ஹைட்ரோகார்பன்களான ஐசோ பியூட்டேன், பியூட்டலின், புரொப்பைலீன் மற்றும் என்-பியூட்டேன் போன்றவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவில் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும்.

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவின் (LPG) உபயோகங்கள் என்ன

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பாதுகாப்பான, சிக்கனமான, சுற்றுப்புறசூழலுக்கு ஏற்ற, ஆரோக்கியமான சமையலுக்கு ஏற்ற எரிபொருளாகும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமன்றி இந்த எரிவாயு பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிகரீதியான உபயோகத்திற்கும் ஏற்ற நல்ல எரிபொருளாகும்.

சந்தையில் கிடைக்கும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியவாயு (LPG) சிலிண்டர்கள் அளவுகள் என்ன?

பொதுவாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்கள் கிராமப்புற பகுதிகளுக்கும், மலைப்பிரதேசங்களுக்கும் தொலைதூரப்பகுதிகளுக்கும் ஏற்றவாறு 5 கிலோ எடையிலும், பொது உபயோகத்திற்காக 14.2 கிலோ எடையிலும் கிடைக்கிறது. வணிகரீதியான மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்கு 19 கிலோ மற்றும் 47.5 கிலோவில் இவ்வாயு சிலிண்டர்கள் கிடைக்கின்றன. சில தனியார் நிறுவனங்கள் 12 கிலோ எடை கொண்ட இந்த எரிவாயு சிலிண்டர்களை பொது உபயோகத்திற்காக விற்கின்றன

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) இணைப்பு வாங்குவதற்கான செயல்முறைகள் என்ன?

வீட்டு உபயோகத்திற்கு இணைப்பு பெறுவதற்கு மேற்கூறிய நிறுவனங்களின் விநியோகஸ்தரை அணுகவேண்டும். உங்களுடைய அருகாமையிலுள்ள விநியோகஸ்தரைக் கண்டுபிடிக்க மேற்கூறிய நிறுவனங்களின் இணையதளத்தை பார்க்கவும்.

புதிய இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை இருப்பிடச்சான்றாக காண்பிக்கவேண்டும்.

குடும்ப அட்டை, மின்சார இரசீது, தொலைபேசி இரசீது, பாஸ்போர்ட், வேலையளித்தவரின் சான்றிதழ், அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது பெறப்பட்ட கடிதம், வீட்டு பதிவு பத்திரம், எல்.ஐ.சி பாலிசி, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வாடகை இரசீது, வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட நிரந்தர கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவையாகும். இதுதவிர சில மாநிலங்களில் குடும்ப அட்டை, எரிவாயு இணைப்பு பெற கட்டாயமாக காண்பிக்கப்படவேண்டும்.

காஸ் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டருக்கான வைப்பு தொகை செலுத்தப்பட வேண்டும். இவ்வைப்பு நிதி கட்டியவுடன் இணைப்பு ரசீது (Subscription voucher) கொடுக்கப்படும். இந்த இணைப்பு ரசீது பிற்கால செயல்பாடுகளுக்கு தேவைப்படுவதால், இதனை கவனமாக வைத்துக்கொள்வது அவசியம்.

எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கும்போது பொதுவான குறிப்புகள் என்ன?

காலி சிலிண்டர் இணைப்பினை துண்டிக்கும்போது

  • எரிந்து கொண்டிருக்கும் வாசனை பத்திகள், மெழுகுவர்த்தி மற்றும் பூஜை விளக்கு போன்றவற்றை சமையலறை மற்றும் அதன் அருகிலுள்ள அறைகளில் அணையுங்கள்
  • எரிவாயு அடுப்பிலுள்ள அனைத்து திறப்பான்களையும் மூடவும்
  • ரெகுலேட்டரிலுள்ள திறந்துள்ள நாப்பினை மூடவும்
  • ரெகுலேட்டரை நன்றாக பிடித்துக்கொண்டு அதன் அடிப்பகுதியினை மேல்நோக்கித் தள்ளி ரெகுலேட்டரைத் தூக்கவும். இப்பொழுது ரெகுலேட்டர் சிலிண்டரிலிருந்து எடுத்துவிடலாம்
  • சிலிண்டர் மீதுள்ள வால்வின் மீது பிளாஸ்டிக் பாதுகாப்பு மூடியினை அழுத்தி மூடவும். இப்பொழுது காலி சிலிண்டரை எடுத்துவிடலாம்

எரிவாயு நிரம்பிய சிலிண்டரை அடுப்புடன் இணைக்கும்போது

  • சிலிண்டர் மீதுள்ள பாதுகாப்பு மூடியினை அழுத்தி அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கயிற்றினை இழுத்து அந்த மூடியினை சிலிண்டரிலிருந்து தூக்கவும்
  • சிலிண்டரிலுள்ள வால்வில் பாதுகாப்பு வளையம் சரியாக இருக்கிறதா என உங்கள் சுண்டுவிரலை உபயோகித்து பரிசோதிக்கவும். இவ்வாறு வளையம் இல்லை என்றால் பாதுகாப்பு மூடியினைக்கொண்டு சிலிண்டரை மூடி, உங்கள் விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு வேறு சிலிண்டரை தருமாறு கேட்கவும்
  • ரெகுலேட்டரை எரிவாயு நிரம்பிய சிலிண்டர் மீது மாட்ட கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்
  • ரெகுலேட்டரிலுள்ள நாப்பினை ‘ஆஃப்’ செய்யவும்
  • ரெகுலேட்டரை நன்றாகப் பிடித்துக்கொண்டு அதன் பிளாஸ்டிக் புஸ்ஸினை மேல்நோக்கி இழுக்கவும்
  • ரெகுலேட்டரை செங்குத்தாக சிலிண்டரின் வால்வு மீது வைத்து மெதுவாக அதன் விளிம்புப்பகுதி வால்வின் அறுங்கோணப்பகுதியினை தொடுமாறு அமுக்கி பிளாஸ்டிக் புஸ்ஸினை கீழ்நோக்கி விடவும். இப்பொழுது ‘கிளிக்’ எனும் சத்தம் கேட்கும்
  • இப்பொழுது ரெகுலேட்டர் சிலிண்டரில் பொருத்தப்பட்டுவிட்டது

எரிவாயு அடுப்பிலிலுள்ள எரிப்பானை எரியச்செய்யும்போது

  • ரெகுலேட்டரிலுள்ள நாப்பினை கடிகார திசைக்கு எதிர் திசையில் திருகி ‘ஆன்’ செய்யவும்
  • தீக்குச்சியினை பற்றவைத்து அடுப்பிலுள்ள எரிப்பானுக்கு அருகில் கொண்டு சென்று அடுப்பிலுள்ள நாப்பினை ‘ஆன்’ செய்யவும்

மற்றவை

  • சமைக்கும்போது நைலான் உடைகளையோ அல்லது அதுபோன்ற துணிகளால் ஆன உடைகளையோ அணியாதீர்கள்
  • சமைக்கும்போது அடுப்பினை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்
  • எப்பொழுதும் எரிவாயு இணைப்பினை நீங்களாகவே பழுதினை சரிசெய்யவோ அல்லது மாற்றவோ அல்லது ஆய்வோ செய்யாதீர்கள்
  • இரவு நேரங்களிலும், சமைத்து முடித்தபின்பும் ரெகுலேட்டரை அணைக்காமல் இருக்காதீர்கள்
  • எரிவாயு அடுப்பினை பற்றவைக்கும்போது எப்பொழுதும் வாயுவின் நாற்றம் வருகிறதா என பரிசோதியுங்கள்
  • எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் போன்றவை இல்லாமல் முடிந்தவரை சமையலறையினை சுத்தமாக பராமரியுங்கள்

நுகர்வோருக்கான பொதுவான பாதுகாப்புக்குறிப்புகள் என்ன?

எரிவாயு அடுப்புடன் இணைக்கப்பட்ட இரப்பர் குழாய் மற்றும் அழுத்த ரெகுலேட்டரைப் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியது

  • மேற்கூறிய பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட தரம் வாய்ந்தவையாக இருக்கவேண்டும் (ISI/BIS)
  • BIS அங்கீகரித்த இரப்பர் குழாய்களையும், எரிவாயு ரெகுலேட்டர்களை அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து மட்டுமே வாங்கவேண்டும்
  • இரப்பர்குழாய் முடிந்தவரை குறைந்த நீளம் கொண்டதாக இருக்கவேண்டும். அதன் அதிகபட்ச நீளம் 1.5 மீட்டர் இருக்கவேண்டும்
  • நீங்கள் உபயோகிக்கும் எரிவாயு அடுப்பிலுள்ள எரிவாயு செல்லும் குழாயின் துளை, எரிவாயு அடுப்பினை சிலிண்டருடன் இணைக்கும் இரப்பர் குழாயின் துளை மற்றும் ரெகுலேட்டரின் துளையின் அளவே இருக்கவேண்டும்
  • இவை எளிதில் ஆய்வு செய்வதற்கு ஏற்றவாறு இருக்கவேண்டும்
  • ரெகுலேட்டர் மற்றும் இரப்பர் குழாயினை வெப்பம் மற்றும் தீயிலிருந்து தள்ளி வைக்கவேண்டும்
  • எரிவாயு அடுப்பிலுள்ள துளையிலும், ரெகுலேட்டரிலுள்ள துளையிலும் இரப்பர் குழாயினை முழுவதுமாக சொருகவேண்டும்
  • இரப்பர்குழாய் பர்னரினால் சூடேராதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இது தவிர இக்குழாய் முடிச்சு போடாதவாறும், முறுக்காதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்
  • இரப்பர்குழாயினை ஈரத்துணி கொண்டே சுத்தம் செய்யவேண்டும். அதனை அடுப்பிலுள்ள துளையினுள் பொருத்த சோப்பு உபயோகப்படுத்தக்கூடாது
  • இரப்பர்குழாயில் வெடிப்பு, ஒட்டை, இளக்கம் ஆகிய குறைபாடுகள் குறிப்பாக அதன் இரண்டு முனைகளிலும் இருக்கிறதா என குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதிக்கவேண்டும்
  • இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இரப்பர்குழாயினை மாற்றவேண்டும்
  • வலை அல்லது எந்த பொருளாலும் இரப்பர் குழாயை சுற்றக்கூடாது

எரிவாயு சிலிண்டருடன் இணைக்கப்பட்டுள்ள அழுத்த ரெகுலேட்டரும் முக்கியமாகும். இது சிலிண்டரின் வாயு வெளிவரும் வால்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சிலிண்டரிலிருந்து வெளிவரும் எரிவாயுவின் அழுத்தத்தினை ஒழுங்குபடுத்துவதோடு, எரிவாயு அடுப்பின் பர்னருக்கு ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் எரிவாயுவினை செலுத்தும்.

எரிவாயு சிலிண்டரை வாங்கும் போது கவனிக்கவேண்டியவை

  • சிலிண்டரை வாங்கும்போது அதில் விற்பனை நிறுவனத்தின் முத்திரை இருக்கிறதா என்றும் அதன் பாதுகாப்பு மூடி நன்றாக மூடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்
  • எரிவாயு சிலிண்டரை உபயோகிப்பது பற்றி சரியாக தெரியவில்லை எனில் அதனை விநியோகிக்கும் நபரிடம் செய்முறை விளக்கம் தருமாறு கேட்கவும்
  • எரிவாயு சிலிண்டர் தரைமட்டத்தில், ஒரு சமமான தரையில் இருக்குமாறு வைக்கவேண்டும்

சிலிண்டரை உபயோகிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை

  • சிலிண்டர் வால்வுக்கு உள்ளே வட்ட வடிவ பாதுகாப்பு வளையம் இருக்கிறதா எனப் பரிசோதிக்கவும்
  • சிலிண்டரில் எதாவது எரிவாயு கசிவு இருக்கிறதா என்பதை நன்றாக ஆய்வு செய்வதன் மூலமோ அல்லது சோப்பு நீர் மூலமோ அல்லது வாசனை மூலமோ பரிசோதிக்கவும்
  • பற்றவைக்கப்பட்ட தீக்குச்சிகளை எரிவாயுக்கசிவு இருக்கிறதா எனப்பரிசோதிக்க உபயோகித்தல் கூடாது
  • எரிவாயு சிலிண்டரை எப்பொழுதும் செங்குத்தாக தரைமட்டத்தில் காற்றோட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் வைக்கவும்
  • மூடப்பட்ட அலமாரியில் எரிவாயு சிலிண்டரை வைக்கவேண்டாம்
  • சமையலறையில், எரிவாயு அடுப்பு எப்பொழுதும் சிலிண்டரை விட உயரத்திலிருக்குமாறு வைக்கவேண்டும்
  • வெப்பம் உண்டாக்கும் பொருட்களிலிருந்து எரிவாயு சிலிண்டரை தூரத்தில் வைக்க வேண்டும்

எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கும்போது கவனிக்கவேண்டியவை

  • சிலிண்டர் உபயோகிக்காதபோது ரெகுலேட்டர் நாபினை அணைத்து வைக்கவும்
  • காலி சிலிண்டர்களை காற்றோட்டம் அதிகமுள்ள, குளிர்ந்த இடத்தில் அதன் பாதுகாப்பு மூடியினைப்போட்டு வைக்கவும்
3.04545454545
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top