பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியாவில் ஷேல் எரிவாயு

இந்தியாவில் ஷேல் எரிவாயு -சவால்களும் வாய்ப்புகளும் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

எரிசக்தித் துறை ஒரு பார்வை

எரிசக்தி நுகர்வில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது (ஆதாரம்: Ha புள்ளியியல் ஆய்வு, 2016) என்ற போதிலும் இங்கு அதிக அளவிலான எரிசக்தி ஆதாரங்கள் இல்லை. இறக்குமதி செய்யப்பட்ட எரிசக்தியை அதிக அளவில் நம்பியிருக்க வேண்டியிருப்பதால் அது நிலையான தன்மையை பாதிப்பதுடன் எரிசக்தி விலைகளில் ஏற்ற இறக்கத்தை அளித்து, எரிசக்தி பாதிப்பிலும் பெரும் இடர்பாட்டை ஏற்படுத்துகிறது. 8 முதல் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான எரிசக்தித் தேவைகள் மற்றும் மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதும் ஒரு பெரிய சவாலை அளிக்கிறது. எரிசக்தி தேவை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் எரிசக்தித் திறனை அதிகரிக்கும் வகையில் நீடித்த முயற்சிகள் இதற்காக தேவைப்படுவதுடன், இயன்ற வரையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் இறக்குமதிகளை நியாயமான அளவில் வைக்க வேண்டும்.

எரிசக்தி தேவைக்கான வளர்ச்சியை கட்டுக்குள் வைப்பது என்பது உற்பத்திக்கான எரிசக்தி தேவையையும், விளக்கூட்ட/வெப்ப மூட்ட/குளிரூட்ட மற்றும் போக்குவரத்துக்கான நேரடி இறுதி நுகர்வையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் எரிசக்தி தேவையின் தீவிரத்தைக் குறைப்பதில் நமது திறனை சார்ந்துள்ளது. எரிசக்தி தீவிரத்தில் பெட்ரோலியத் துறைக்கு ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது ஏனெனில் 2011-12ல் 73 சதவிகிதமாக இருந்த நமது இறக்கு மதியை சார்ந்திருக்கும் நிலையானது 12ஆம் திட்டக்காலத்தின் இறுதியில் (2016-2017) 80 சதவிகிதகமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. பெட்ரோலியம் பயன்படுத்தப்படும் பல்வேறு இடங்களில் அதற்குப் பதிலாக நாம் வேறு இதர எரிபொருட்களைப் பயன்படுத்த முடியாது என்ற உண்மை இதற்கு மேலும் வலுசேர்க்கிறது. வாகனங்களின் எரிபொருள் திறனை குறிப்பாக கனரக வாகனங்களின் எரிபொருள் திறனை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பது இந்தியாவில் மிக முக்கியமாகும்.

இந்தியா பொருளாதாரம் சீராக பராமரித்து வருகின்ற போதிலும், முதன்மையான எரிசக்தி நுகர்வு குறைவதற்கான வாய்ப்பு இல்லை. 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்மை எரிசக்தி நுகர்வு வளர்ச்சி முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 5.2 சதவிகிதமாக இருந்த வளர்ச்சியை நிலையில், சீனா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பானில் வளர்ச்சி விகிதம் முறையே 1.2 -19 -3.3 மற்றும் -12 சதவிகிதமாக இருந்தது. பெட்ரோலியத்தைப் பொருத்தவரையில் இந்தியா 2015ஆம் ஆண்டில் வரலாற்றிலேயே அதிகமாக சுமார் 1 சதவிகித உயர்வைச் சந்தித்தது. இது உலகம் முழுவதும் காணப்படும் போக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் போது எரிவாயுவின் பங்களிப்பும் அதிக அளவில் இருப்பதாலும், விற்பனை செய்யப்படுவதாலும், அதன் சுற்றுச்சூழலுக்கு உகந்த இயல்பினாலும் அதிகரிக்கும். சர்வதேச எரிசக்தி முகமையின் படி, அது முன்வைத்துள்ள தங்க விதிகளை தொழில்துறை பின்பற்றினால், உலகளாவிய எரிசக்திக் கலவையில் எரிவாயுவின் பங்கு தற்போதுள்ள 23 சதவிகிதத்தில் இருந்து 2035ஆம் ஆண்டில் 25 சதவிகிதமாக உயர்ந்து நிலக்கரியின் பங்களிப்பையும் (24 சதவிகிதம்) விஞ்சி எண்ணெய்க்கு அடுத்தபடியாக (27 சதவிகிதம்) அதிக அளவில் பயன்படுத்தப்படும் முதன்மையான எரிசக்தி ஆதாரம் என்ற நிலையை எட்டும். 2012ஆம் ஆண்டு வெளியீடு ஒன்றில் இந்த உலகம் எரிவாயு என்ற பொற்காலத்திற்குள் நுழைவதாக சர்வதேச எரிவாயு முகமை கூறியுள்ளது. இயற்கை எரிவாயுவில் மரபுசாரா எரிவாயுவின் பங்களிப்பு 2010ம் ஆண்டில் இருந்த 14 சதவிகிதம் என்ற அளவில் இருந்து 2035ம் ஆண்டில் 32 சதவிகிதமாக உயரும். இதே போல் எரிவாயுவுக்கான வழக்கமற்ற ஆதாரங்கள்மீது குறிப்பாக ஷேல் எரிவாயுவுக்கு இந்தியாவில் சிறப்பு தொடர்பு உள்ளது. உள்நாட்டு எரிசக்தி விநியோகத்தை அதிகரிக்கச் செய்ய இந்த எரிசக்திக்கான ஆதாரத்தை பெறுவதற்கான நவீன தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கு ஒரு இணக்கமான கொள்கையை உருவாக்குவதற்கு கொள்கைகளைத் திட்டமிடுவதற்கான குழு உறுதி பூண்டுள்ளது.

மரபுசாரா எரிவாயு ஆதாரத்தில் உலகளாவிய போக்குகள்

மரபு சாரா ஆதாரங்கள் என்பது இதர ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்வதை விட அதிக முயற்சிகள் தேவைப்படும் தேக்கங்களாகும். அவற்றின் குறிப்பிடத்தக்க இயற்கையான சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றுக்கு சிறப்பான தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. பாரம்பரியமாக கீழ்காணும் எரிவாயு ஆதாரங்கள் தான் மரபு சாராதவையாக வகைப் படுத்தப்பட்டுள்ளன.

  • நிலக்கரி படுகை மீத்தேன் (சிபிஎம்)
  • நிலக்கரி சுரங்க மீத்தேன் (சிஎம்எம்)
  • ஷேல் எரிவாயு
  • டைட் எரிவாயு

உலகளாவிய எரிவாயு தேவை 2010 மற்றும் 2035ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 50 சதவிகித அளவுக்கு அதிகரிக்க உள்ள நிலையில் இதில் 2035ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பகுதி மரபு சாரா ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் எனத் தெரிகிறது.

சர்வதேச அளவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் எரிசக்தி எதிர்கொள்வதில் மரபு எரிசக்தி முக்கியப் பங்கு எதையும் வகிக்கவில்லை. அமெரிக்காவில் ஷேலில் இருந்து எரிவாயு உற்பத்தி செய்வது விரைவாக அதிகரித்ததைத் தொடர்ந்து உலகளாவிய அளவில் மரபு சாரா எரிவாயு ஆதாரங்கள் மீது ஆர்வம் புதுப்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 2000வது ஆண்டில் உற்பத்தியே இல்லை என்ற நிலையில் இருந்து 2010ஆம் ஆண்டில் ஷேல் எரிவாயு உற்பத்தி 23 சதவிகிதம் என்ற அளவை எட்டியதுடன், 2035ஆம் ஆண்டில் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தியில் பாதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதர மரபு சாரா எரிவாயு ஆதாரங்களான, முக்கியமாக நிலக்கரி படுகை மீத்தேன் மற்றும் டைட் எரிவாயு ஆகியவற்றுடன் அனைத்து மரபு சாரா எரிவாயு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் உற்பத்தி 2035ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 70 சதவிகிதமாக இருக்கும். இந்தப் புதிய எரிவாயு ஆதாரம் உருவாகி இருப்பது அமெரிக்கா எரிவாயு இறக்குமதியாளர் என்ற நிலையில் இருந்து எரிவாயு ஏற்றுமதியாளர் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஷேல் எரிவாயு தவிர இதர மரபு சாரா எரிவாயு ஆதாரங்கள் குறித்து இந்தியா தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு வகையான படிமப் பாறைகளில் இயற்கை எரிவாயு படிந்திருக்கிறது, உதாரணத்திற்கு மணல் கற்கள், சுண்ணாம்புக் கற்கள் மற்றும் ஷேல்களில் உள்ளன. மணல் கல்பாறைகளில் பெரும்பாலும் உயர் அளவிலான ஊடுருவும் திறன் இருக்கும் என்பதால் அந்தப் பாறைகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் மூலம் பாறைகளில் உள்ள எரிவாயு எளிதாக வெளியே வர முடியும். இதற்கு நேர் மாறாக ஷேல் பாறைகளில் உள்ள எரிவாயு தேங்கி பெரிய அளவில் பாறை முழுவதும் தேங்கியிருக்கின்ற போதிலும், மிகக் குறைந்த அளவிலேயே ஊடுருவும் என்பதால் எரிவாயு உற்பத்தி குழப்பம் நிறைந்ததாகவும் அதிக செலவு கொண்டதாகவும் இருக்கும்.

கிணற்று துளைகளைச் சுற்றி செயற்கையாக அதிக அளவில் முறிவுகளை ஏற்படுத்துவதற்கு ஹைட் ராலிக் ஃபிராக்சரிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட நவீன மேம்பாடுகள் காரணமாக சமீப ஆண்டுகளில் ஷேல் எரிவாயு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படிமப் படுகைகளில் ஷேல் இருப்பதுடன், துளையிடப்படும் கிணற்றில் அது 80 சதவிகித அளவுக்கு இருக்கும். இதன் காரணமாக இயற்கை வளமிக்க ஷேல்கள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எந்த ஷேல்களில் எரிவாயு அல்லது எண்ணெய் அல்லது இரண்டும் கலந்து உள்ளன என்பதை போதுமான அளவு தெரிந்து கொள்வதற்கு போதுமான அளவுக்கு புவியியல் வரலாறு நமக்குத் தெரிந்திருக்கிறது. இருந்த போதிலும் ஏராளமான கிணறுகள் தோண்டப்பட்டு சோதனைகள் நடத்தப்படும் வரை வாய்ப்புள்ள மண்டலத்தில் உள்ள எரிவாயுவின் அளவு, அதன் விகிதாச்சாரம் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஏற்றதாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். எரிவாயுவில் உள்ள ஆவியின் அளவு பொருளாதார ரீதியான உற்பத்தியில் ஏற்படும் முக்கிய பாதிப்புகளைக் கொண்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறுபடலாம். எரிசக்தி சந்தைகளில் இந்த ஆவிகளுக்கு உயர் விலை கிடைக்கும்.

ஷேல் எரிவாயு உற்பத்தியை பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக ஆக்கும் வகையில் வந்துள்ள அம்சங்கள்

  • கிடைமட்டத் தோண்டலில் தொழில்நுட்ப மேம்பாடுகள்
  • ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்
  • உலகளாவிய சந்தையில் இயற்கை எரிவாயு விலை உயர்வு.

கிடைமட்டத் தோண்டல் மற்றும் ஹைட் ராலிக்ஃபிராக்சரிங் ஆகியவை அமெரிக்காவில் தினசரி உற்பத்தி விலையை மேம்படுத்தி இருப்பதுடன் தனிப்பட்ட கிணறுகளில் இருந்து கிடைக்கும் மொத்த மீட்பை 54 சதவிகித அளவுக்கு உயர்த்தியுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் பெரிய நாடுகளில் ஷேல் எரிவாயு உற்பத்திக்கான வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்க எரிசக்தித் தகவல் நிர்வாகத்தின் ஜூன் 2013 அறிக்கையின்படி உலகம் முழுவதும் ஷேல் எரிவாயு ஆதாரங்கள் 7576 டிரில்லியன் கன அடியாகவும் உலகம் முழுவதும் 48 நாடுகளில் இவை உள்ளன என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கீழே அளிக்கப்படுகின்ற முதலாவது அட்டவணையில் தொழில்நுட்ப ரீதியாக மீட்கப்படக்கூடிய ஷேல் எரிவாயுவில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் கடந்த ஆண்டு வரை இருந்த அமெரிக்கா தற்போது நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மொத்த அன்னிய முதலீடுகளில் கூட்டு நிறுவனங்களில் சீனாவின் முதலீடு 20 சதவிகிதமாக உள்ளது. இது சீனாவுக்கு மதிப்புமிக்க நிபுணத்துவத்தை அளித்துள்ளதால் அந்த நாடு அதனைத் தனது உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்தி அதன் மூலம் மேம்பாட்டுச் செலவுகளைக் குறைக்கலாம்.

அட்டவணை 1 தொழில்நுட்ப ரீதியாக மீட்கப்படக்கூடிய ஷேல் எரிவாயு ஆதாரங்களைக் கொண்ட முன்னணி நாடுகள்

2012ல் ஷேல் எரிவாயு ஆய்வினை ஊக்குவிக்க சீன அரசு நான்கு ஆண்டு, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 1.80 டாலர் அளவுக்கு சீன நிறுவனங்களுக்கு மானிய திட்டத்தை அறிவித்து ஷேல் எரிவாயுவை வர்த்தக ரீதியாகத் தயாரிக்க உதவியது. 2015 மத்தியில் இந்த மானியங்கள் 2020 வரை குறைந்த விகிதத்தில் நீட்டிக்கப்பட்டது.

ஷேல் எரிவாயு ஆய்வில் பெரும் சவால்கள்

இதர எரிவாயு ஆதாரங்களை ஆய்வு செய்வதை விட ஷேல் எரிவாயு ஆய்வு பெரும் சவால்களை அளிக்கிறது. மரபு சார்ந்த எரிவாயு ஆதாரங்களில் இருந்து அவை மாறுபட்டதாக இருப்பதுடன், ஷேல் எரிவாயு ஆய்வு முழுவதும் நிலத்தில் மேற் கொள்ளப்படுவதாலும் பெரும் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த ஆதாரங்களில் உற்பத்தி செய்வது என்பது மிகவும் சவால் நிறைந்தது. தேக்கங்களின் இறுக்கம் காரணமாக இவற்றுக்கு கிடைமட்டமாக ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் தேக்கத்தின் அதிகப் பகுதியில் செய்ய வேண்டியிருப்பதுடன், சில சமயங்களில் பல அடுக்கு ஃபிராக்சரிங் மற்றும் அடிக்கடி தூண்டுதல் தேவைப்படும். முதல் 1-2 ஆண்டுகளில் ஷேல் எரிவாயு அதிக அளவில் கிடைக்கும் என்பதுடன், பின்னர் பல ஆண்டுகளில் அதன் ஒட்டம் மிக மெதுவாகவே இருக்கும். இதற்காக அதிக எண்ணிக்கையில் கிணறுகள் தோண்டப்பட வேண்டும் என்பதால் உள்ளூர் சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் முயற்சிகளை அதிக அளவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஷேல் எரிவாயு உருவாக்கத்தின் பல்வேறு நிலைகள், வாழ்க்கை சுழற்சி, இதனுடன் தொடர்புடைய இதர விவகாரங்கள் கீழே கொடுக்கப்படுகின்றன.

டிரில் பேட் கட்டுமானம் மற்றும் செயல்பாடு ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் மற்றும் தண்ணீர் நிர்வாகம்

  • நிலத்தடி நீர் மாசடைதல்
  • புளோஅவுட்கள் மற்றும் தகர்ப்புகள்
  • தண்ணிர் நுகர்வு மற்றும் வினியோகம்
  • மணல் மேலாண்மை மற்றும் மேற்பரப்பு நீர் பாதுகாப்பு
  • வளிமண்டலக் கசிவுகள்
  • சுகாதார பாதிப்புகள்

ஷேல் எரிவாயுவை ஆய்வு செய்வதில் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் பணி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். ஃபிராக்சரிங் திரவம் / பிராப்பல்லண்ட் உயர் அழுத்தத்துடன் தேக்கத்திற்குள் செலுத்தப்படுகிறது. கிடைமட்ட ஷேல்களில் சிக்கியுள்ள வாயுவைப் பெறுவதற்காக ஷேல் எரிவாயு மண்டலங்களில் கிடைமட்டத் துளை போடப்படுகிறது. உயர் அழுத்த நீருடன் மணல்/செராமிக் பயன்படுத்தப்படுவது ஷேல்களை உடைப்பதற்கு உதவித் துறைகள் திறந்து எரிவாயு கிடைமட்டக் கிணறுகளில் வெளியேறுவதற்கு உதவுகிறது. ஃபிராக்சர் செய்வதற்கு திரவத்திற்கு இத்தகைய அம்சங்களை அளிக்க ரசாயனக் கலவைகளும் பயன்படுத்தப்படுகிறது. இது வாழ்வை ஆதரிக்கும் தேக்கங்களில் கலப்படம் என்ற கண்ணோட்டத்தில் உண்டாகிற மணல் மற்றும் ஃபிராக்சர்களாகும். இந்த ஃபிராக்சர்கள் தவறாகப் போகும் போது ஆழமான மட்டத்திற்கு சென்று அதன் காரணமாக ரசாயனக் கலவை ஏற்படும். இந்த ஃபிராக்சர்கள் மூலம் வாயு தப்பிக்கும் அச்சமும் நிலத்தடி நீர் மாசடைவதும் கவலையை ஏற்படுத்தும் அம்சங்களாகும்.

நீர் மாசடையும் முக்கிய கவலையைத் தவிர, ஷேல் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியில் இதர பல்வேறு சவால்களும் உள்ளன. சில ஆயிரங்கள் முதல் 20 ஆயிரம் கன மீட்டர் வரையிலான அதிகபட்ச தண்ணிர் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் செய்யத் தேவைப்படும். உள்ளூர் சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் ஃபிராக்சரிங் பணிக்குப் பின்னர் தண்ணிர் இருப்பு மற்றும் தண்ணிர் விநியோகம் ஆகியவை சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலைத் தரும்.

ஷேல் எரிவாயுவுக்கு மரபு சார்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயுவுடன் ஒப்பிடுகையில் பரந்த நிலம் தேவைப்படும் என்பதால் நிலத்தின் மீது பெரும் அழுத்தம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் இதுவும் ஒரு சவாலாகும். வழக்கமாக ஒரு கிணறு 10 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இருந்து ஹைட்ரோ கார்பன்களை வறண்டு போகச் செய்யும் என்பதால், 100-500 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உரிமம் பெற்ற பகுதி தேவைப்படும் என்ற நிலையில் ஷேலுக்கு பல மடங்கு கூடுதலாக நிலம் தேவைப்படும் என்பதை நாம் 25000 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட அமெரிக்காவின் மார்செலஸ் ஷேல்-ல் பார்த்தோம். பல அடுக்கு ஃபிராக்சரிங் (10-20 நிலைகள்) கிணறு ஒன்றுக்கு 1000 முதல் 4000 டன் பிராபண்ட்கள் தேவைப்படும். இத்தனை அதிக அளவு உட்செலுத்தப்படும் போது பூகம்பம் ஏற்படுவதற்கான அச்சமும் உள்ளது. இது ஷேல் ஆய்வுக்கு ஒப்புதல் அளிப்பதில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதுடன், சமீபத்திய ஆய்வு ஒன்றில் இருந்து ஜெர்மனியில் இயற்கை எரிவாயு உற்பத்தி கடந்த ஆண்டில் சுமார் 6 சதவிகிதம் அளவுக்கு குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது. ஷேல் எரிவாயு மற்றும் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் சர்ச்சைகள் மரபு சார்ந்த எரிவாயு உற்பத்தியையும் தடுக்கிறது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஷேல் எரிவாயு குறித்த விவாதங்கள் மரபு சார்ந்த எரிவாயு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைப்பதை தடுத்துள்ளது.

எனவே ஷேல் எரிவாயு ஆய்வில் ஈடுபடும் ஒவ்வொரு நாடும் போதிய வரன்முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தைத் திட்டமிட்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்ட கால பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் தண்ணிர் பற்றாக்குறை ஆதாரமாக இருப்பதால் தண்ணிர் தரம் மற்றும் தண்ணீர் இருப்பு ஆகியவற்றை கண்காணித்தல் குறித்து அடிப்படையான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்த அழைப்பு விடுகிறது.

இந்தியாவில் ஷேல் எரிவாயு ஆதாரங்கள்

உண்மையான ஆதாரங்கள் நிறைந்த பாறைகளான ஷேல் பாறைகள் தற்போது ஒரு தேக்கமாக அல்லது உற்பத்திக்கான உருவாக்கமாக ஆகியிருப்பதைப் புரிந்து கொண்டுள்ள நிலையில் ஒவ்வொரு ஹைட்ரோ கார்பன் உற்பத்தி நாட்டிலும் வெவ்வேறு அளவுகளில் ஹைட்ரோ கார்பன் கொண்ட ஷேல்கள் இருப்பதற்கான வாய்ப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். உற்பத்தி அல்லாத படுகைகளில் உள்ள ஷேல்களிலும் ஹைட்ரோ கார்பன்கள் இருக்கும் என்பதால் அதற்கான வாய்ப்புகளை பரிசீலிப்பது 7 உற்பத்தி படுகைகள் மட்டும் இன்றி அனைத்து 26 படுகைகளிலும் வாய்ப்பு உள்ளது என்பது சுவாரஸ்யமானதாகும். ஷேல்களில் இருந்து எண்ணெய்/எரிவாயு உற்பத்தி செய்வதற்கு முன் அதன் புவியியல் அம்சங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஆய்வு அல்லது உற்பத்தி தொடங்குவதற்கு முன் அந்த நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்பது ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில ஆதாரங்களில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்விலும் உற்பத்தியிலும் இந்தியாவுக்கும் நீண்ட அனுபவம் உள்ளதும், ஆழத்தில் ஷேல் பாறைகள் இருப்பதும் பெரிய அளவில் 7 உற்பத்தி படுகைகளில் பரவலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம் தெரிகிறது. ஷேல் எண்ணெய் / எரிவாயு குறித்து உறுதியான கணிப்புகள் இல்லை. பட்டியல் 2ன்படி பல்வேறு முகமைகள் மாறுபட்ட கணிப்புகளை அளித்துள்ளன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மிகக் குறைந்த மதிப்பீடாக 3 படுகைகளில் 6.1 டிசிஎப் என வெளியிட்டுள்ளது. ஜூன் 2013 வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஷேல் எரிவாயு இருப்பு 584 டிசிஎப் எனவும், தொழில் நுட்பரீதியாக மீட்கப்படக்கூடியஷேல் எரிவாயு 96 டிசிஎப் (காம்பே, கிருஷ்ணா-கோதாவரி, காவேரி, தாமோதர் பள்ளத்தாக்கு, அப்பர் அசாம், ப்ரன்ஹிதா-கோதாவரி, ராஜஸ்தான் மற்றும் விந்திய பள்ளத்தாக்குகள்) என கூறப்பட்டுள்ளது. இரண்டு அமெரிக்க முகமைகள் அளித்த இந்த மதிப்பபிடுகளில் காணப்படும் பெரும் வேறுபாடுகள் இந்திய நிர்வாகத்தில் இருப்பவர்களை குழப்பத்திற்கு ஆளாக்கி, இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ளது. யுஎஸ்ஜிஎஸ் அறிக்கை எரிவாயு ஆதாரங்களைக் கண்டுபிடித்தது என்ற நிலையில் யுஎஸ் இஜஏ அறிக்கை மீட்கக்கூடிய மொத்த ஆதாரங்களை வெளியிட்டது என்பதாலும் இந்த இரு அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பதை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். நிரூபிக்கப்பட்ட இருப்புக்களில் இருந்து கண்டறியப்படாதது மற்றும் கண்டறியப்பட்டு உருவாக்கப்படாத ஆதாரங்களில் இருந்து பிந்தையது வேறுபடுகிறது. மரபு சாரா எரிசக்தியைப் பொருத்த வரையில், உண்மையான கண்டுபிடிப்பு நடைமுறை இல்லை என்ற போதிலும் அது வெறும் மதிப்பீட்டு நடைமுறைதான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் காரணமாக கண்டறியப்படாத மற்றும் கண்டறியப்பட்டு உருவாக்கப்படாதது இடையே உள்ள வேறுபாடு தெளிவற்றதாகும்

இந்தியாவில் தேசிய எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் நிலப்பரப்பு ஆய்வுகளை கடந்த பல தசாப்தங்களாக மேற்கொண்டு வருகின்றன. உற்பத்திப் பகிர்வு ஒப்பந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அந்த நிறுவனங்களுக்கு தனியார் நிறுவனங்களும் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் பல ஆயிரம் கிணறுகளை குறிப்பாக காம்பே, கேஜி மற்றும் காவேரிப் படுகைகளில் தோண்டியுள்ளனர் என நம்பப்படுகிறது. இந்தக் கிணறுகள் ஆழமான தகவல் சொத்தை உருவாக்கியிருப்பதுடன் பல்வேறு வண்டல் படுகைகளில் ஷேல் உருவாக்கத்தின் இயல்புகளையும் கண்டுள்ளன. எனினும் இதர நிலப்படுகைகளில் ஷேல் இருப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. இந்த கிணறுகளின் கருக்கள் வடி கெரோஜென் உள்ளடக்கத்திற்கான மதிப்பீட்டுக்காக உரியமுறையில் பாதுகாக்கப்படவில்லை. புதிய ஆய்வு உரிமக் காலகட்டத்தின் கீழும் இதற்கு முந்தைய ஒப்பந்தங்களிலும் ஏராளமான நிலப் பகுதி கிணறுகள் தோண்டப்பட்டு அதன் விவரங்கள் ஹைட்ரோகார்பன் தலைமை இயக்குநகரத்தில் நாட்டின் சராசரியை மேம்படுத்துவதற்காக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்தத் தகவல் உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டு நாட்டில் நிலவும் ஷேல் எரிவாயு வளம் குறித்த ஒரு முழுமையான தெளிவு உருவாக்கப்பட வேண்டும். ஒஎன்ஜிசியின் தகவல் களஞ்சியமான இபிஐஎன்இடி (ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு இணையானது) ஏற்கெனவே தங்களது நெட்வொர்க்குகளில் ஏராளமான தகவல்களை வெளியிட்டுள்ளது. மேற்கூறப்பட்ட தகவல் வங்கிகள் என்ஒசிகளின் தீவிர ஈடுபாட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டு ஷேல் எரிவாயு ஆய்வுத் திட்டங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

சரியான ஃபிராக்சரிங் நுணுக்கத்தை கண்டறிய வேண்டியது தான் ஷேலின் பரவல் குறித்த பெரிய சிக்கல். ஷேல் தேக்கங்கள் என்பது ஒரு புள்ளியியல் விளையாட்டு என கூறப்படுவதால், இதனை புரிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் அதிக அளவு கிணறுகள் தேவைப்படும். மரபு சாரா எரிவாயு ஒரு யூனிட்  உற்பத்திக்கு அதிக செலவாகும் என்பதால் (35-40 சதவிகிதத்திற்கும் குறைவான குறைந்த ஒட்டுமொத்த மீட்பு மற்றும் கிணற்றின் அதிக செலவு காரணமாக அமெரிக்காவில் உள்ள சில கிணறுகளின் மீட்பு விகிதங்கள் 8 முதல் 19 சதவிகிதம் வரை உள்ளன) இந்த இருப்புக்களின் பொருளாதார அளவு தொழில்நுட்பம் மற்றும் விலை அடிப்படையில் ஒரு பெரிய சிக்கலாகும். எனினும் இந்த பிளாக்குகளை ஏலம் விடுவதற்கு ஷேல் இருப்பு குறித்து மதிப்பீடு செய்வது இன்னமும் ஒரு சவாலாகவே உள்ளது.

ஷேல் எரிவாயு சவால்களைப் போக்க இந்தியாவின் தயார்நிலை

ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் போன்ற சிறப்பு தொழில்நுட்பம் தேவைப்படுவதால் ஷேல் எரிவாயுவை உற்பத்தி செய்வதில் ஏராளமான சவால்கள் உள்ளன. ஆதாரங்களின் மதிப்பீடு, வரன்முறை, சுற்றுச்சூழல் கட்டமைப்பு, திறந்த வெளி நிலம், தண்ணிர் இருப்பு, நில அதிர்வு உள்ளிட்ட சவால்கள் இதில் உள்ளன. அமெரிக்காவில் ஷேல் எரிவாயு வெற்றி கண்டுள்ள போதிலும் நமது நாட்டில் நிலப்பரப்பு பரவலாக மாறுபட்டதாக இருப்பதால் இவை குறித்தும் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை நாம் அப்படியே இங்கு மேற்கொள்ள முடியாது. எனினும் சிபிஎம் எனப்படும் மரபு சாரா எரிவாயு ஆதாரங்களை கண்டுபிடிக்கும் வெற்றிகரமான கொள்கை நம்மிடம் ஏற்கனவே உள்ளது. இது நமக்கு போதுமான அனுபவத்தை அளித்துள்ளது.

ஷேல் சவால்களை எதிர்கொள்வதன் தொடக்கப்புள்ளி சட்டரீதியான கட்டமைப்புகள் மற்றும் தற்போதைய கொள்கைகளை விளங்கிக் கொண்டு ஷேல் எரிவாயு உற்பத்திக் 3/TGÖT வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். எண்ணெய் பகுதி வரன்முறை மற்றும் மேம்பாட்டு சட்டம் 1948 மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விதிகள் 1959 சட்டங்களின் கீழ் இயற்கை எரிவாயு என்பதற்கான விளக்கத்தில் இயற்கையாக தோன்றும் எரிவாயு அடங்கும் என்பதை கவனிக்க வேண்டும். இந்த சட்டப் பூர்வமான விளக்கத்தின் காரணமாகத்தான் நிலக்கரி படுமை மீத்தேன், இயற்கை எரிவாயுவின் கீழ் வந்தததால் அது நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் வராமல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் வந்துள்ளது. என்இஎல்பியின் கீழ் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொகுதிகள் அளிக்கப்பட்டாலும் கூட சிபிஎம்மும் என்இஎல்பி பிஎஸ்இ கீழ் வரும். சிபிஎம்முக்கு தனி ஆளுமை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் என்இஎல்பியின் உற்பத்திப் பகிர்வு ஒப்பந் தங்கள் நிலக்கரிப் படுகை மீத்தேனை இதில் இருந்து விலக்கி வைத்துள்ளது. 2013ஆம் ஆண்டு பொதுத் துறை நிறுவனங்கள் ஷேல் எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்ய அனுமதித்தது. ஒஎன்ஜிசி மற்றும் ஆயில் போன்ற நிறுவனங்களுக்கு என்இஎல்பிக்கு முன்பு வழங்கப்பட்டவையில் இது செல்லும். எனினும் என்இஎல்வி தொகுதிப்புகளைப் பொருத்தவரையில் ஒப்பந்ததாரர்ககள் ஆய்வு தொடர்பான ஒப்பந்த அம்சங்களுக்கு கட்டுப் பட வேண்டும். இந்தத் தொகுப்புகள் ஆய்வுக் கட்டத்தில் இருந்து நீக்கப்பட்டால் அவர்கள் ஷேல் எரிவாயு தொடர்பான ஆய்வை மேற் கொள்ள முடியாது. சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன்கள் ஆய்வு உரிமக் கொள்கையில் ஒருங்கிணைந்த ஆய்வு உரிமம் அளிக்கப்பட்டு அது ஹைட்ரோகார்பன்கள் ஆய்வுக்கு அனுமதிக்கப்படும். இது முன்பிருந்த நிலையில இருந்து ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாடு ஆகும்.

நிலம் மற்றும் தண்ணிர் இருப்பு இரண்டாவது பெரிய சவாலாகும். அமெரிக்காவில் தனியார் நில உரிமையாளர்கள், மாநில அரசுகள் மற்றும் மாகாண அரசுகளுக்கு அந்த நிலங்களில் உள்ள தாதுக்களுக்கும் முழு உரிமை உள்ளது. இந்தியாவில் மாறுபட்ட சூழ்நிலை உள்ள நிலையில் ஒரு புறம் மத்திய அரசு ஷேல் எரிவாயு உற்பத்திக்கு அங்கீகரிப்பது எளிதானது என்ற போதிலும் நிலத்தில் இருப்பவரது உரிமை அதற்கு ஒரு பெரும் தடையாக ஆகிறது. அமெரிக்காவில் நில உரிமையாளர்களுக்கு கிடைக்கும் ஊக்கத் தொகை காரணமாக அவர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு ஷேல் எரிவாயு செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கின்றனர். எனினும் இந்தியாவின் மக்கள் தொகை அளவு மற்றும் வேளாண்மை செயல்பாடுகள் ஷேல் எரிவாயு உற்பத்திக்கு ஒருபெரும் சவாலாகவே உள்ளது. இது தண்ணிர் இருப்பு மற்றும் விநியோகத்திற்கும் பொருந்தும். இந்த நிலையில் சீனாவின் சிச்சுவான் படுகையில் தண்ணிர் ஆதாரம் அதிகம் உள்ள வளமான பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு விட்டனர். தண்ணிர் மாசடைதல் மற்றும் ஹைட்ராலிக் திரவம் செலுத்தப்படும் விவகாரம் மற்றும் இதர சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இந்தியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே ஒரு வேறுபாடான செயல்பாடு போற்றுதலுக்கு உரியதாகும். அமெரிக்காவில் மத்திய சட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற போதிலும், மாநிலங்கள் கூடுதல் வரன்முறைகள் போட அனுமதிக்கப்படுகின்றன. பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான சட்டங்கள் / வரன்முறைகள் மாநிலங்களிடம் விடப்பட்டிருப்பதுடன் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி குறித்த உரிமங்கள் மற்றும் வரன்முறைகளை அமல்படுத்தும் பொறுப்பு வரன்முறை அமைப்புகளிடம் விடப்பட்டுள்ளன. உரிய முறையில் வேலி அமைத்தல், கிணறுகள் கட்டுமானத்தில் தர நடைமுறைகள், ஹைட்ராலிக் ஃபிராக்சரிங், கழிவு மேலாண்மை மற்றும் ரசாயனங்கள் மற்றும் தண்ணிர்க் கசிவைத் தடுப்பது ஆகியவை இ அண்ட் பி வரன்முறைகளில் இடம்பெற்றுள்ளன. இந்த வரன்முறைகள் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் வரன்முறைகள் முழுமையான சட்டப் பூர்வமான கட்டமைப்பை அளிக்கின்றன. மேல் கூறப்பட்டவைகளுடன் அமெரிக்க பெட்ரோலியம் இன்ஸ்டிடியூட் போன்ற தொழில் அமைப்புகள் ஷேல் எரிவாயுவுக்கான குறிப்பிடத்தக்க செயல்பாட்டுத் தரங்களை உருவாக்கியுள்ளன. இந்தியாவில் இத்தகைய வரன்முறை மற்றும் சட்டங்களை உருவாக்குவது பெரும் சவாலாக உள்ளது என்ற போதிலும் உலகின் மற்ற பகுதிகளில் உள்ள கட்டமைப்புகளைக் கொண்டு நமது தேவைகளுக்கு ஏற்ப அதே போன்றவற்றை உருவாக்குவதில் சிரமம் இருக்காது. ஐஇஏவில் அர்ப்பணிக்கப்பட்ட வெளியீடு ஒன்றில் விவாதிக்கப்பட்ட தங்க விதிகள் குறித்த பரிந்துரைகள் ஷேல் எரிவாயு ஆய்வில் அவசியம் தேவைப்படும் ஒன்றாகும்.

ஹைட்ராலிக் திரவங்களின் இயல்பு, நில அதிர்வு அச்சுறுத்தல், தண்ணிர் மாசடைதல், மீத்தேன் கசிவுகள் போன்ற பல சவால்கள் ஷேல் எரிவாயு ஆய்வில் உள்ளபோதிலும், இவை இந்தத் துறையில் வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் கவனிக்கப்படலாம் என்பதுடன் இந்த அச்சுறுத்தல்கள் ஷேல் எரிவாயு ஆய்வுக்கு மட்டுமே தொடர்பு உடையவை அல்ல. சிபிஎம் ஆய்வுகளிலும் ஏராளமான தண்ணீர் செயல்பாடுகள் இருப்பதால், அதுவும் ஷேல் எரிவாயுவை விட ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டும் கடந்த 10 ஆண்டுகளில் எந்த எதிர்மறையான பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேலும் எரிவாயு உற்பத்தி பரவலாகத் தொடங்குவதற்கு முன் அரசும் அது குறித்த நம்பகமான, அறிவியல் பூர்வமான தகவல்களை அணுகத் தேவை உள்ளது என பரிந்துரைக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா ஒரு நிபுணர் குழுவை அமைத்து 150 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கி சிபிஎம் தொடர்பான சுற்றுச்சூழல் மற்றும் இதரப் பிரச்சனைகள் குறித்து கவனித்து வருகிறது.

ஷேல் எரிவாயு திட்டத்தால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விவரங்கள் தொடர்பாக இந்திய சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதிக அளவிலான பொதுமக்கள் ஈடுபாடு, வலிமையான நீதித்துறை கண் காணிப்பு மற்றும் போதிய நில, தண்ணிர் பற்றாக்குறை காரணமாக ஷேல் எரிவாயு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்படாத நிலை உள்ளது. இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்கள் அமெரிக்காவில் இருப்பதுபோலவே உள்ள போதிலும் ஷேல் எரிவாயுவைப் பொருத்தவரையில் நடைமுறைகள் தெளிவாக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளில் வர்த்தகம் செய்யும் போது அதிக அளவில் தொழில்சாலை தரங்கள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தியாவில் அந்த நிலை இல்லை. ஷேல் எரிவாயு தொடர்பான விதிமுறைகள் மாநில அரசுகள் கொண்டு வர முடியாத நிலை உள்ளதால் மத்திய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். எனினும் நிலம் மற்றும் தண்ணிர் அகியவை உள்ளூர் பிரச்னைகள் என்பதால் மாநில அரசுகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். வரன்முறைகளை உருவாக்கும் முன்னதாக தண்ணிர் தகவல் குறித்து கவனிக்கப்பட வேண்டும், ஷேல் எரிவாயு ஆய்வு ஒப்பந்த, நிதி மற்றும் தொழில்நுட்ப சவால்களை மட்டும் இன்றி சுற்றுச்சூழல் தொடர்பான சவால்களையும் கொண்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உள்ள தேக்கம் மற்றும் அதிக அளவு இறக்குமதியை இந்தியா சார்ந்திருக்க வேண்டியிருப்பதால், மேற்கூறப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

ஆதாரம் : திட்டம் ஆகஸ்ட் மாத இதழ்

ஆக்கம் : அனில் குமார் ஜெயின், ஐ.ஏ.எஸ். ஆலோசகர் (எரிசக்தி)

Filed under:
3.06451612903
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top