பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / தொிந்து கொள்ள வேண்டியவை / தேசிய சூரிய மின்சக்தி இயக்கம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய சூரிய மின்சக்தி இயக்கம்

தேசிய சூரிய மின்சக்தி இயக்கம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பின்னணி


சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கவும், அதே சமயம் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு பிரச்சினைகளை அணுகவும், நாட்டின் பருவ நிலை சமாளிக்கவும், மாநிலங்கள், ஆய்வு மற்றும் மாற்றங்கள் சார்ந்த சவால்களை மேம்பாட்டு நிறுவனங்கள், தொழிற் நிறுவனங்களோடு இணைந்து இந்திய அரசு ஜனவரி 2010ல் மேற்கொண்டுள்ள தேசிய சூரிய மின்சக்தி இயக்கம் ஒரு மிகப்பெரிய முயற்சியாகும். அந்த வகையில் அது பருவநிலை மாற்றங்கள் சார்ந்த சவால்களை சமாளிக்க உலகளாவிய முயற்சிகளுக்கு இந்தியாவின் மிக முக்கிய பங்களிப்பாகும். இந்த இயக்கம் பருவநிலை மாற்றங்கள் சார்ந்த திட்டத்தின் பல முயற்சிகளில் ஒன்றாகும்.

விரைந்து வளரும் பொருளாதாரத்தை கொண்ட இந்தியாவுக்கு சுத்தமான, ஏற்கக்கூடிய விலையிலான, நம்பகமான ஆதாரங்களிலிருந்து எரிசக்தி தேவைப்படுகிறது. பூமியில் மிக அதிக சூரிய ஒளி, வெப்பம் படும் இடங்களில் இந்தியா அமைந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி உள்ளது. ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு 4 முதல் 6 கிலோ வாட் மின்சக்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது அந்தந்த இடங்களையும் வருடத்தின் நேரத்தையும் பொறுத்து உள்ளது. நாட்டில் கிடைக்கக்கூடிய சூரிய மின்சக்தி சுமார் 748.98 கிகா வாட் அளவு உள்ளது என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இயக்கத்தின் நோக்கங்கள்

இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவை சூரிய மின்சக்தித் துறையில் உலக முன்னோடியாக உயர்த்துவதாகும். அதற்காக, சூரிய சக்தியை நாடெங்கிலும் விரைவாக, பரவலாகப் பயன்படுத்த கொள்கைத் திட்டங்களை வகுத்து, கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைத்து, திறன்கொண்ட மற்றும் திறன் அற்றவர்களுக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியனவாகும்.

குறிக்கோள்களும் இலக்குகளும்

இந்த இயக்கத்தின் இலக்கு, 2022க்குள் மின் கிரிட்டில் இணைக்கப்படக்கூடிய சூரிய மின்சக்தி உற்பத்தி 20,000 மெகாவாட்டாகும். அந்த இலக்கு மூன்று கட்டத்தில் எட்டப்படும் (முதல் கட்டம் 2012-13க்குள், இரண்டாவது கட்டம் 2013ல் இருந்து 2017க்குள், மூன்றாவது கட்டம் 2017ல் இருந்து 2022 வரையில்).

நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு சூரிய மின்சக்தி அளிக்கக்கூடிய பங்கை உணர்ந்தும், சூரிய மின்சக்தி உபகரணமான போட்டோ ஒல்டிக்களின் விலை குறைந்துள்ளதாலும், சூரிய சக்தியை மின் கிரிட்டோடு இணைக்கும் சாத்தியம் முழுமையாக உள்ளதாலும், புதிய சூரிய மின்சக்தி அமைப்புகள் நாட்டில் வெகுவாக செயல்படத்துவங்கியுள்ளதாலும், ஜூலை 2015ல் அரசு 2021-22 வாக்கில் நாட்டின் சூரிய மின்சக்தி உற்பத்தியின் கொள்ளளவு இலக்கை 100 கிகாவாட்டாக உயர்த்தியது. இதில் 60 கிகாவாட் சூரிய மின்சக்தி பெரிய அளவிலான திட்டங்களிலிருந்தும் 40 கிகா வாட் அளவு கட்டிடங்கள் மீது அமைக்கப்பட்டு, கிரிட்டில் இணைக்கப்படும் திட்டங்களிலிருந்தும் கிடைக்கும்.

திட்ட அணுகுமுறை

2022க்குள் 100 கிகாபைட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அடைய புதிய மற்றும் புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி அமைச்சகம் பல திட்டங்களை உருவாக்கியுள்ளது. சில வாய்ப்புகளாக சூரிய மின்சக்தி அமைப்புகளை இணைப்பது, உற்பத்தி சார்ந்த ஊக்கங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தட்டுப்பாடுகளை நீக்க நிதி அளித்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டங்கள் வாரியான அணுகுமுறையும் சாதனைகளும் பின்வருமாறு

தேசிய சூரிய மின்சக்தி இயக்கத்தின் முதல் கட்டத்தில் என்டிபிசி வித்யுத் வியாபார் நிகம் மூலம் 1000 மெகாவாட் கொள்ளளவு கிரிட் இணைப்பு சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்கள் இந்த இயக்கத்தின் முதல் கட்டத்தில் 950 மெகாவாட் சூரியசக்தி மின்திட்டங்கள் (மாற்றி அமைக்கும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 84 மெகாவாட் திட்டங்கள் நீங்கலாக) இரண்டு குழுக்களாக பின்நோக்கு ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. (முதல் குழு 2010-11ல் மற்றும் இரண்டாம் குழு 2011-12ல்). இதன்படி முதல் குழுவில் SPV திட்டங்களுக்கு கொள்முதல் விலை யூனிட்டுக்கு ரூ.10.49 முதல் ரூ.12.76 ஆகவும் (சராசரியாக ரூ.12.12) சூரிய அனல் மின்சக்திக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.10.49ல் இருந்து ரூ.12.24 ஆகவும் (சராசரியாக ரூ.148) உள்ளது. இரண்டாவது குழுவில் SPV திட்டங்களுக்கு கொள்முதல் விலை யூனிட் ஒன்றுக்கு ரூ.7.49 முதல் ரூ. 9.44 வரையிலும் (சராசரி ரூ.8.77) உள்ளது.

என்டிபிஸியின் வித்யுத் வியாபார் நிகம் இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்கி என்டி பிஸியின் ஒரு பிரிவு மின்சாரத்தோடு இணைத்து அதனை விநியோகம் செய்யும் டிஸ்காம்களுக்கு விற்பனை மின்சாரத்தின் சராசரி விலை குறைகிறது. 31.3.2013 வரை முதல் கட்டத்தில் 420 மெகாவாட் அளவு சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது அல்லாமல் மாற்றி அமைக்கும் திட்டத்தின் கீழ் 50.5 மெகாவாட் அளவுக்கும், இந்திய புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி மேம்பாட்டு அமைப்பு மூலம் 88.8 மெகாவாட் அளவுக்கும், பழைய மாதிரி விளக்க திட்டங்கள் மூலம் 21.5 மெகாவாட் அளவுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், மொத்தக் கொள்ளளவு முதற்கட்டத்தில் 580.8 மெகாவாட் அளவுக்கு உள்ளது.

சூரிய வெப்பச் சுடுநீர் உபகரணங்கள்

நாட்டில் 80,00,000 சதுர மீட்டர் அளவுக்கு சூரிய வெப்பச் சுடுநீர் உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.

கிரிட்டில் சேராத சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பு

நாட்டில் சுமார் 320 மெகாவாட் அளவுக்கு கிரிட்டில் சேராத சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய சூரியசக்தி இயக்கத்தின் இரண்டாம் கட்ட செயல்பாடுகள்

சூரியசக்தி பூங்காக்கள் மற்றும் மிகப்பெரிய மின் உற்பத்தி திட்டங்கள் : 500 மெகாவாட்டுக்கும் மேற்பட்ட திறன் கொண்ட 25 சூரிய சக்தி பூங்காக்களை அமைக்க அமைச்சகம் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இதனால், நிறுவப்படும் இலக்கின் மொத்த அளவு 20,000 மெகாவாட் இருக்கும். 2014-15 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த சூரிய சக்தி பூங்காக்கள் அமைக்கப்படும். தொடர்ச்சியான அதிக அளவிலான நிலங்களைக் கையகப்படுத்த முடியாத இமாலயப் பகுதியிலும், மலைப்பகுதிகளிலும் விவசாயம் அல்லாத நிலங்கள் கிடைக்காத மற்ற மாநிலங்களிலும் சிறிய அளவிலான சூரிய சக்தி பூங்காக்கள் அமைக்கப்படும்.

  • இந்த சூரிய சக்தி பூங்காக்கள் மாநில அரசுகள் மற்றும் அவற்றின் அமைப்புகளோடு இணைந்து அமைக்கப்படும். இந்த சூரிய சக்தி பூங்காக்களின் செயலாக்கமும் தொடர் நிர்வாகமும் மாநில அரசுகளின் பொறுப்பில் இருக்கும்.
  • இந்த சூரிய சக்தி பூங்காக்களை அமைக்க ரூ.4,050 கோடி பட்ஜெட் நிதி தேவைப்படும்.
  • இந்த திட்டத்தின்கீழ் மத்திய அமைச்சகம் இந்த புதிய சூரியசக்தி பூங்காக்களை அமைக்க மேற்கொள்ளப்படும் விவரமானதிட்ட அறிக்கைதயாரிக்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் ரூ.25லட்சம் மத்திய நிதி உதவி அளிக்கும். இந்தத் திட்டத்தின் அடிப்படையிலான அளவுகளை எட்டும் போது ஒரு மெகாகவாட்டுக்கு ரூ.20 லட்சம் அல்லது கிரிட் தொடர்பு ஏற்படுத்துவது உட்பட்ட மொத்த திட்ட செலவில் 30 சதவிகிதம், எது குறைவோ அது மத்திய நிதி உதவியாக அளிக்கப்படும்.

சூரிய சக்திபோட்டோ ஓல்டிக் மின் உற்பத்தி அமைப்புகள்

இந்த திட்டத்தின்படி மாநில மின் உற்பத்தி நிறுவனங்கள் / மாநில அரசின் பொதுச்சேவை நிறுவனங்கள் / இதர மாநில அரசின் அமைப்புகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / மின் கிரிட்டோடு இணைக்கப்படக்கூடிய மொத்தம் 100 மெகாவாட் திறன் கொண்ட பல 1 முதல் 10 மெகாவாட் திறன் கொண்ட போட்டோ ஒல்டிக் மின் அமைப்புகளை அமைக்க ஊக்கம் அளிக்கப்படும். வாய்க்கால்கள் மீது 50 மெகாவாட் மற்றும் வாய்க்கால் கரையோரங்களில் 50 மெகாவாட் திறன்கொண்ட சூரிய சக்தி மின் அமைப்புகளை ஏற்படுத்த மூலதன உதவித்தொகை அளிக்கப்படும்.

இடங்கள் பயன்படுத்தப்படுவதோடு, இதில் பங்குபெறும் மாநிலங்கள் புதுப்பிக்கப்படக்கூடிய மின்சக்தி உற்பத்தி கட்டாயத்தை பூர்த்தி செய்வதோடு, பகுதி மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்பையும் வழங்க முடியும்.

* கால்வாய்கள் மீதும், கால்வாய் ஓரங்களிலும் 50 மெகாவாட் போட்டோ ஒல்டிக் சூரியசக்தி மின் திட்டங்களை அமைக்க ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆந்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், உத்திராகண்ட், உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.

மத்திய இயற்கை மற்றும் புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அமைப்புகளுக்கும் 924.50 மெகாவாட் திறன் கொள்ளளவை ஏற்கனவே வழங்கியுள்ளது. மீத முள்ள கொள்ளளவை இந்த அமைச்சகம் பின் வரும் விண்ணப்பங்களுக்கு ஏற்று வழங்கும். ஒதுக்கப்படாத முறையான உற்பத்தியோடு இணைந்து செயல்படும் வகையில் 3000 மெகாவாட் சூரிய சக்தி இந்த திட்டத்தை என்டிபிசி செயல்படுத்தும்.

அது, சூரிய சக்தி போட்டோ ஒல்டிக் மின் நிலையங்களிலிருந்து ஏலத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட விலையில் மின்சாரத்தை வாங்கி மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலையில் அனல்மின்சாரத்தை தனக்கு ஒதுக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வாங்கி அதை இரண்டுக்கு ஒன்று என்ற வீதம் கலந்து (இரண்டு மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்திற்கு ஒரு மெகாவாட் அனல் மின்சாரம்) இதனை மாநில சேவை வழங்கு அமைப்புகளுக்கு 25 வருட மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்களின்படி சராசரி விலையில் விற்கும்.

2000 மெகாவாட்டிற்கு ஃபோட்டே ஒல்டிக் சூரிய மின் திட்டங்கள்

இந்த திட்டத்தின்கீழ் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்பவர்கள் உருவாக்கி, சொந்தமாக்கி நடத்த இயலும் முறையில் 2000 மெகாவாட் சூரிய சக்தி போட்டோ ஒல்டிக் மின் நிலையங்களை அமைப்பார்கள். குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு இந்த நிலையங்களை தொடர்ந்து இயக்குவதற்காக மானியங்கள் வழங்கப்படும். அதிகபட்சமாக பொதுவான திட்டங்களுக்கு ஒரு மெகாவாட்டிற்கு ரூ. ஒரு கோடி யாகவும் உள்நாட்டு உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 1.31 கோடி வரை வழங்கப்படும். இவர்களிடமிருந்து வாங்கப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான மின்சாரம் சராசரியாக ஒரு கிலோவாட்டிற்கு ரூ.579ஆக இருக்கும். முதல் ஆண்டு விலை ரூ.543 ஆகவும், அடுத்து 20 ஆண்டுகளில் ஆண்டு தோறும் 5 பைசா அதிகரித்து பிறகு, ஒப்பந்தம் முடியும் வரை ஒரு கிலோவாட் மின்சாரம் ரூ.6.43க்கும் வாங்கப்படும். இந்த திட்டங்கள் ஏலம் விடும் நிலையில் உள்ளன.

5000 மெகாவாட்டிற்கு ஃபோட்டோ ஒல்டிக் சூரிய மின் திட்டங்கள்

இந்த திட்டம் மேற்கூறப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலேயே செயல்படும். ஆனால், அளவு 5000 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முழு அளவையும் நிறுவனங்கள் நான்கு கட்டமாக அதாவது (1250 மெகாவாட்டுகள் என்று) செயல்படுத்தும். முதல் கட்ட மின்சாரம் வாங்கும் விலை மேற் கூறப்பட்டது போலவே இருக்கும். மீதமுள்ள பகுதிக்கு ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு கிலோ வாட்டிற்கு 10 பைசா குறைக்கப்படும்.

மின் கிரிட்டில் இணைக்கப்பட்ட கட்டிட மாடிகளில் அமைக்கப்படும் சூரியசக்தி மின் உற்பத்திகள்

இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரிவினருக்கு 30 சதவிகித நிதிசார் ஊக்குவிப்பின் மூலம் 4200 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள், பிற அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு அவர்கள் மேற் கொள்ளும் சாதனையின் அடிப்படையில் ஊக்கத்தொகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு அரசு ரூ.5000 கோடி ஒதுக்கியுள்ளது. இதுவரை 27 மாநிலங்கள் இந்த திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் மின்சக்தியை மீட்டர் மூலம் பதிவு செய்து நிகர மின் சக்தியை கிரிட்டுடன் இணைப்பதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளன. இதுவரை, 300 மெகாவாட் அளவிற்கு கட்டிடங்கள் மீதான சூரிய சக்தி மின்உற்பத்தி கொள்ளளவு நிறுவப்பட்டுள்ளது.

புதிய முயற்சிகள்

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் / இந்திய அரசு நிறுவனங்கள் / மாநிலங்கள் - ஃபோட்டோ ஒல்டிக் சூரியசக்தியின் மூலம் 5000 மெகாவாட் உற்பத்தி

இந்த திட்டம், முந்தைய திட்டத்தின் இரண்டாவது கட்டமாக செயல்படுத்தப்பட்டு, புதிய முயற்சிகள் செயல்படுத்துவதற்கு ஏதுவாக நிதி உதவி அளிக்கும் திட்டத்தின்கீழ் கூடுதலாக 5000 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கான மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இவ்வகையான மின்சாரம் செய்பவர்களுக்கு அதன் கொள் விலையாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.4.50 அல்லது புதிய மற்றும் புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி அமைச்சகம் நிர்ணயிக்கும் விலை கொடுக்கப்படும். இந்தத் திட்டத்தில் பங்கு பெறும் நிறுவனங்கள் ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தத் திட்டங்கள் புதிய மற்றும் புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்யும் வகையில், உருவாக்குபவர்கள் வகையிலோ ஒவ்வொரு திட்டத்தின் கொள்ளளவு அளவிலோ உருவாக்கப்படும். இந்த திட்டம், ஒப்புதல் அளிக்கும் நிலைமையில் உள்ளது.

சூரிய சக்தி பூங்காக்கள் மற்றம் மிகப்பெரிய சூரிய சக்தி மின் உற்பத்தி பூங்காக்களிள் வெற்றியை கருத்தில் கொண்டு மேலும் 20,000 மெகாவாட்டிற்கான சூரிய சக்தி பூங்காக்களை அனுமதிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம், நாட்டில் மொத்தம் 40,000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அப்படி அமையும் போது, இது உலகிலேயே மிகப்பெரிய அளவாக இருக்கும். இது, ஏற்கனவே உள்ள திட்டத்தின் இரண்டாவது கட்டமாகவும் 20,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகவும் இருக்கும்.

தற்போது உற்பத்தி செய்யும் சோலார் செல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பாளர்களுக்கு உற்பத்தி சார்ந்த மானியம் வழங்கு திட்டம்

எல்லா திட்டங்கள் மூலம் சூரிய சக்தி மின் நிலையங்களை அமைப்பவர்களுக்கு 6375 மெகாவாட் அளவிற்கு சோலார் செல்களையும் 15775 மெகாவாட் அளவிற்கு சூரிய சக்தி உபகரணங்களை தயாரிப்பதற்கு ஏற்கனவே உள்ள தயாரிப்பாளர்களுக்கு உற்பத்தி சார்ந்த மானியம் வழங்கப்படும்.

நாட்டில் சூரிய சக்தி மின்உற்பத்தி கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 46 சதவிகிதம் உயர்ந்து உள்ளது. இந்தியாவில் சூரிய மின் உற்பத்திசெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் இது படிம வளங்கள் குறைந்து வருவதால் அதிலிருந்து தயாரிக்கப்படும் மின் உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது. உற்பத்தியின் அளவிலும் அதிக போட்டிகள் இருப்பதாலும், சூரிய சக்தி மின்சாரத்தின் விலை பாரம்பரிய பிற மின்சாரத்தைவிட குறைவாக உள்ளது.

மாநிலங்களிலுள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் நாட்டில் கிடைக்கும் மொத்த மின்சாரத்தில், நீர் மின்சாரம் நீங்கலாக மீதமுள்ளவற்றில் 8 சதவிகிதம் சூரிய சக்தி மின்சாரமாக இருக்க வேண்டும் என்றும் இந்த நிலைமை மார்ச் 2022க்குள் அல்லது மத்திய அரசு நிர்ணயிக்கும் கால கட்டத்தில் எட்டப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார கொள்முதல் கொள்கையினால் மாநில அரசுகள் சூரிய சக்தி மின்சாரத்தை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு சூரியசக்தி செல்கள் மற்றம் சூரிய சக்தி மின் உபகரணங்களை தயாரிக்கவும், உற்பத்தி சார்ந்த ஊக்கங்களை அளித்து இந்தத் துறைக்கு மேலும் வாய்ப்பு அளிக்க புதிய திட்டங்களை கொண்டு வர உள்ளது. இதனால், இப்போது இறக்குமதி செய்யப்பட்டு வரும் சூரிய மின்சக்தி உற்பத்தி உபகரணங்களின் விலையிலேயே இந்திய உற்பத்தியாளர்கள் சூரிய சக்தி செல்களையும், உபகரணங்களையும் தயாரிக்க உதவியாக இருக்கும். இது அல்லாமல், பிற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில அளவிலும் கூட பல மாநில அரசுகள், தகுந்த கொள்கைகள் மற்றும் நடைமுறை திட்டங்கள் மூலம் சூரிய சக்தி மின் உற்பத்தியைப் பெருக்க ஊக்கங்கள் அளித்து வருகின்றன.

100 கிகாவாட் அளவுக்கான சூரிய சக்தி மின் உற்பத்தி ஏற்படும்போது அதனால், 17 கோடியே 5 லட்சம் டன் அளவிற்கு கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என்று கருதப்படுகிறது. உயர்த்தப்பட்டுள்ள 1 லட்சம் மெகாவாட் இலக்கின்படி 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன. அதிக வேலை வாய்ப்புகளினாலும், முதலீட்டு வாய்ப்புகளினாலும், மக்களின் வருமானம் உயரும். உயர்ந்து வரும் சூரிய சக்தி மின் உற்பத்தி இலக்குகளினால், மொத்த மின் உற்பத்தி உயர்ந்து அதனால் எரிசக்தி பாதுகாப்பு உயர்ந்து, எல்லோருக்கும் எரிசக்தி கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. சூரிய மின்சக்தி பற்றி அதிகம் தெரியவரும்போது, இது சார்ந்த உற்பத்திகள் அதிகரித்து இலக்குகள் எட்டப்படும். சூரியசக்தி மின் உற்பத்தி அதிகரிக்கும்போது, பாரம்பரிய மின் உற்பத்தி குறைந்து அதனால், தற்போது இறக்குமதியாகும் நிலக்கரி மற்றும் எரிவாயு குறைந்து அந்நிய செலாவணியில் சேமிப்பு ஏற்படும்.

சக்தி மின் உற்பத்தி அதிகரிப்பதால் அரசாங்கத்திற்கு வரிவாய்ப்புகள் உயர்ந்து தற்போது பயன்படாமல் இருக்கும் பெருமளவிலான தரிசு நிலங்கள் நல்ல வகையில் பயன்படுத்தப்படும். மேலும், தற்போது ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் செயல்பட ஏதுவாக உள்ளனவா என்ற வளர்ந்துவரும் கவலைகளும் உள்ளன.

ஒவ்வொரு திட்டமும் ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்டு போட்டிகள் அதிகரித்துள்ளதால் அந்த நிறுவனங்கள் அடையக் கூடிய லாபத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் சூரிய சக்தி செல்கள் மற்றும் உபகரணங்கள் அதிகமாவதால் இந்த பிரச்சினைகள் களையப்பட்டு, மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தியின் கொள்ளளவு, மத்திய அரசு கருதும் அளவில் இருக்கும்.

ஆதாரம் : திட்டம் ஆகஸ்ட் மாத இதழ்

ஆக்கம் : அருண் K. திரிபாதி, ஆலோசகர், புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம், இந்திய அரசு

2.87878787879
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top