பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / ஈரப்புலங்கள் பாதுகாப்பு / ஈரப்புலங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஈரப்புலங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள்

ஈரப்பபுலங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை பற்றிய குறிப்புகளைப் பற்றி காண்போம்.

இந்திய வனவிலங்குகள் மையத்தின் ஆய்வின்படி கடந்த 50 ஆண்டுகளில் கங்கை வெள்ளப்பெருக்கு சமவெளிகளில் உள்ள நன்னீர் சதுப்புநிலங்களும் ஏரிகளும் மறைந்துவிட்டன.  தற்போது 50 விழுக்காடு ஈரப்புலங்களே இந்தியாவில் உள்ளன.  ஆண்டொன்றிற்கு 2 முதல் 3 விழுக்காடு அளவிற்கு இவை குறைந்து வருகின்றன.

நம் நாட்டில் 1987ல் 7,00,000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த ஈரப்புலங்கள், 1995ல் 4,53,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு குறைந்துள்ளது (நிலைத்த ஈரப்புலங்கள், சுற்றுச்சூழல் ஆட்சிமை-2, 1999).  தொலையறிதல் முறைப்படி தற்போதைய இந்திய சதுப்புநில வளங்களின் பரப்பளவு 4,000 சதுர கிலோமீட்டர் என கண்டறியப்பட்டுள்ளது.

ஈரப்புலங்கள் அழிந்து வருவதால் அதனை சார்ந்துள்ள மக்களின் சமூக-பொருளாதார நன்மைகள் குறைகின்றன.  மேலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தல், பல்லுயிர் வளம் குறைவு, உருமாற்றம் அல்லது அழிந்துபோகுதல் மற்றும் நீரின் தரம் குறைதல் போன்றவை ஏற்பட காரணமாகின்றது.  உலகின் 3/4 மக்களின் நிலையான உணவாக விளங்கும் நெல் போன்ற பல தாவர வகைகளின் மரபியல் கருவூலமாக ஈரப்புலங்கள் விளங்குகின்றன.

நகரமயமாதல் நகரப்புறங்களில் அமைந்துள்ள ஈரப்புலங்கள் மக்களுக்குத் தேவையான நீரை பாதுகாத்து சேமித்து வழங்குகின்றன.  ஆனால் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் உருவாதல் போன்ற அபரிமிதமான வளர்ச்சியினால் நகரங்களின் அருகிலுள்ள ஈரப்புலங்கள் அதிக அளவு பாதிப்புக்குள்ளாகின்றன.

மனிதவள செயல்கள்      திட்டமிடாத நகர வளர்ச்சி, விவசாயம், தொழிற்சாலைகள், சாலையமைத்தல், நீர்த்தேக்கங்கள் மற்றும் குப்பை கொட்டுதல் போன்ற செயல்களால், ஈரப்புலங்கள் பாதிக்கப்படுவதோடு நீண்ட காலத்திற்குப் பொருளாதார மற்றும் சூழல் பாதிப்புகள் ஏற்படும்.

வேளாண்மை மற்றும் நீரியல் 1970களில் ஏற்பட்ட பசுமைப்புரட்சியைத் தொடர்ந்து அனேக செயல்பாடுகள் ஈரப்புலங்கள் நெல்வயல்களாக மாற்றப்பட்டன. பாசனத்திற்காக நீர்த்தேக்கங்கள், பாசனக் கால்வாய்கள் மற்றும் அணைகள் பல கட்டியதால் ஈரப்புலங்களை சார்ந்த பகுதிகளில் நீரியல் சுழற்சி  பாதிப்படைந்தது.

காடழிப்பு    நீராதாரப் பகுதிகளில் காடுகளை அழிப்பதால் தூரடைதல் மற்றும் மண் அரிப்பு ஏற்படுகின்றது.

மாசுபடுதல்   தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுதல் போன்ற காரணங்களினால் பல நன்னீர் ஈரப்புலங்கள் மாசடைந்துள்ளன.

உவர் தன்மையடைதல் நிலத்தடி நீரை அளவிற்கு அதிகமாக வெளிக்கொணர்வதால் நீர் நிலைகள் உவர்தன்மையடைகின்றன.

மீன்வளரியல்,      இறால் மற்றும் மீன்கள் உற்பத்தியினால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சிக்காக, ஈரப்புலங்களும் சதுப்புநில வனங்களும் நில சீர்திருத்தம் செய்யப்படுவதால் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன.

அயல்நாட்டு தாவரவகைகள்,     ஆகாயதாமரை மற்றும் சால்வினியா போன்ற அயல்நாட்டுத் தாவரங்கள் இந்திய ஈரப்புலங்களை அச்சுறுத்துகின்றன.  இவைகள் நீர்வரத்துப் பகுதிகளில் தடைகளாகவும் உள்நாட்டு தாவர வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் செய்கின்றன.

காலநிலை மாற்றம்  வெப்பநிலை அதிகரிப்பு, இடம்பெயர்ந்த மழைபொழிவு, அதிகளவில் ஏற்படும் புயல்கள், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு, காற்றில் கரியமிலவாயு அதிகரித்தல் மற்றும் கடல்மட்ட உயர்வு போன்றவை ஈரப்புலங்களை பாதிப்புக்குள்ளாக்குகின்றது.

மேற்கண்ட காரணங்களால் தாவர மற்றும் விலங்குகளின் பல்லுயிர் வளம், பறவைகள் வரவு மற்றும் ஈரப்புல அமைப்புகளின் உற்பத்தித் திறன் குறைகிறது.  இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

ராம்ஸர் ஒப்பந்தம்

பெரும்பாலானோர், ஈரப்புலங்கள் பயனற்ற விளைச்சலில்லா நிலங்கள் எனக்கருதி, அதனை அழித்து மற்ற வளர்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.  ஈரப்புலங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றிய முதல் ஈரப்புலங்கள் ஒப்பந்த மாநாடு 1971ம் ஆண்டு ஈரான் நாட்டின் ராம்ஸர் நகரத்தில் நடைபெற்றது. 135 உலக நாடுகளின் ஈரப்புலங்கள் பாதுகாப்பு பற்றிய ஒப்பந்தமே ராம்ஸர் ஒப்பந்தம் எனப்படுகிறது.  உலகம் முழுவதும் நிலைத்த வளர்ச்சி அடையும் பொருட்டு, உலகில் உள்ள அனைத்து ஈரப்புலங்களையும் முறையாக பயன்படுத்தி பாதுகாப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.  உலகம் முழுவதும் 1235 ஈரப்புலங்களை உள்ளடக்கிய ராம்ஸர் பகுதிகளின் மொத்த பரப்பு 106.6 மி.ஹெ. ஆகும்.  19 நீர்ப்பறவைகள் வாழிடப் பாதுகாப்புக்காக நம் நாடும் ராம்ஸர் ஒப்பந்தத்தல் கையெழுத்திட்டுள்ளது.  ஒப்பந்தம் கையெழுத்திட்ட தேதியை நினைவு கூர்வதற்காக 1997லிருந்து பிப்ரவரி 2ம் தேதி ‘உலக ஈரப்புலங்கள்’ தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  சிலிக்கா ஏரியும் கீலாதேவ் தேசீய பூங்காவும் உலக அளவில் நீர்ப்பறவைகள் வாழிடப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.

உலகளவில் அனைத்து ஈரப்புலங்களின் புள்ளி விபரங்கள் மான்ரியாக்ஸ் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.  இதில் இடம்பெற்றுள்ள ஈரப்புலங்கள் அனைத்தும் உலக அளவு பாதுகாப்பு செயல்களுக்கு தகுதி வாய்ந்ததாகும்.  ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் ஈரப்புலங்கள் பாதுகாக்கும் செயல்களை பாராட்டும் பொருட்டு ரொக்கப் பரிசாக 10,000 டாலர்களை உள்ளடக்கிய உலக ராம்ஸர் ஒப்பந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் ராம்ஸர் ஈரப்புலங்கள்

ஈரப்புலங்கள் பாதுகாப்பு

நம் நாட்டில் 1987லிருந்து ஈரப்புலங்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  மத்திய அரசு நடவடிக்கைகள் அனைத்தும் பொறியியல் முறைப்படி இல்லாமல் உயிரியல் பாதுகாப்பு முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  மேலும் ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அணுகுமுறைக்காக தேசிய ஈரப்புலங்கள் படவரைவியல் திட்டம் தொடங்கப்பட்டது.  சில ஈரப்புலப் பகுதிகளில், அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அப்பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து ஒருமித்தமாக ஈரப்புலங்களை பாதுகாப்பதிலிருந்து ராம்ஸர் ஒப்பந்தத்தின் நோக்கங்களை நம்மால் உணர முடிகிறது.

உகந்த ஈரப்புல பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை பற்றி அரசுக்கு அறிவுறுத்த ஈரப்புலங்கள், சதுப்பு நில வனங்கள் மற்றும் பவழப்பாறைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  ஈரப்புலங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டி உலக நாடுகளின் உதவியைப் பெறுவதற்காக 19 ஈரப்புலங்கள் நம் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஈரப்புல பாதுகாப்பு திட்டங்களை பயனுள்ள முறையில் செயல்படுத்த மாநில அளவில் அரசு துறைகள், பல்கலைகழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களிலிருந்து பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து இயக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தேர்ந்தெடுத்த ஈரப்புலங்களை பாதுகாக்க பல பிராந்திய ஆராய்ச்சி/கல்வி மையங்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் ஈரப்புலங்கள்

நம் மாநிலத்தில் 90 விழுக்காடுக்கும் அதிகமாக மேற்பரப்பு நீரையும் 60 விழுக்காடுக்கும் அதிகமாக நிலத்தடி நீரையும் பயன்படுத்தி வருகிறோம். நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மேற்பரப்பு நீரை பயன்படுத்த பல அணைகள் கட்டப்பட்டன.  அதன்பிறகு எந்த ஒரு வளர்ச்சியும் நடைபெறவில்லை. தற்பொழுது ஏரிப்பாசனம் குறைந்து கிணற்று பாசனம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் மாநிலத்தின் அனேக நகரங்களின் குடிநீர்த் தேவையை ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் பூர்த்தி செய்தன.  நம் முன்னோர்கள் இத்தகைய நீர்நிலைகளை முறையாக பராமரித்து வந்தனர்.  ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக பராமரிக்க தவறியதால், தற்பொழுது குடிநீர் தேவைக்காக அரசாங்கத்தின் உதவியை நாட தொடங்கி விட்டோம்.

மொத்த நீர்நிலைகள்  39,202

ஊராட்சி ஒன்றிய ஏரிகள் 20,413

பொதுப்பணித்துறை அணைக்கட்டுகள்   8,903

பழைய ஜமீன் ஏரிகள்  9,886

ஆறுகள் மற்றும் கால்வாய்களின் நீளம்     7,420  கி.மீ.

நீர்த்தேக்கங்களின் பரப்பளவு     52,000 ஹெக்டேர்

காயல் பரப்பளவு (5600 இடங்கள்) 400ஹெக்டேர்

சதுப்புநில வனங்கள் 21 ச.கி.மீ.

கடற்கரை நீளம் 1,076 கி.மீ.

ஏரிகள் மற்றும் குளங்களின் பரப்பளவு   6,92,000 ஹெக்டேர்

முக்கிய ஈரப்புலங்கள்

ஈரப்புலங்களின் பெயர்கள் மாவட்டம்

கோடியக்கரை வனவிலங்கு

மற்றும் பறவைகள் சரணாலயம்   நாகப்பட்டிணம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்  காஞ்சிபுரம்

கரிக்கிலி பறவைகள் சரணாலயம் காஞ்சிபுரம்

மன்னார் வளைகுடா உயிர்சூழல் மண்டலம் பாதுகாப்பு இராமநாதபுரம்

காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம்  இராமநாதபுரம்

சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்    இராமநாதபுரம்

பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள்  கடலூர்

பழவேற்காடு ஏரி   திருவள்ளூர்

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்   சிவகங்கை

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் திருவாரூர்

வடுவூர் பறவைகள் சரணாலயம்  திருவாரூர்

மேல்செல்வனூர் பறவைகள் சரணாலயம் இராமநாதபுரம்

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்    ஈரோடு

கரைவெட்டி பறவைகள் சரணாலயம்    பெரம்பலூர்

சென்னையின் ஈரப்புலங்கள்

சென்னையில்  சுமார் 150 சிறிய மற்றும் பெரிய நீர்நிலைகள் காணப்பட்டன.  ஆனால் தற்பொழுது 27 நீர்நிலைகளே எஞ்சியுள்ளன.  முனைவர் சஞ்சீவராஜ் (2002) ஆய்வின்படி, ஆதம்பாக்கம், முகப்பேர், செங்குன்றம், சேத்பட்டு, வியாசர்பாடி, சிட்லபாக்கம், அம்பத்தூர், பழவேற்காடு, பள்ளிக்கரணை, வேளச்சேரி, ரெட்டைஏரி, போரூர், சுண்ணாம்பு கொளத்தூர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளும், மணலி மற்றும் மாதவரம் சதுப்பு நிலங்களும் இன்றளவும் காணப்படும் நீர்நிலைகளாகும்.  இவை மாநகரத்தின் நிலத்தடி நீர் நிலைகளை மறுசெறிவடைய உதவி புரிகின்றன.

பள்ளிக்கரணை ஈரப்புலம்

பள்ளிக்கரணை ஈரப்புலம் என்பது ஒரு நன்னீர் சதுப்பு நிலமாகும்.  சென்னையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் வங்காளவிரிகுடாவின் அருகாமையில், சுமார் 80 ச.கி.மீ. பரப்பளவில் காணப்படுகிறது. அப்பகுதிகளின் நிலத்தடிநீர் நிலைகளை மறுசெறிவடைய உதவிபுரிகின்றது. சென்னையில் எஞ்சியுள்ள சில இயற்கையான சூழல் அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

எப்பொழுதுமே நீரை தேக்கிவைத்துள்ள இந்த நீர் சூழல் அமைப்பில் 61 வகையான தாவரங்கள், 46 வகையான மீன்கள், 106 வகையான பறவைகள், 7 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 21 வகையான ஊர்வன மற்றும் நீரில் மிதக்கும் தாவர இனங்களான ஆகாய தாமரை மற்றும் சுருள்முட்டை கீரை போன்றன காணப்படுகின்றன.

ஆசியாவில் உள்ள வீரியன்பாம்பு  இனங்களில் மிகப்பெரியதான, விலைமதிப்பற்ற கண்ணாடி வீரியன் இங்கு காணப்படுகிறது.  மேலும் பல அரிய மீன் இனங்கள் இங்கு காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்

திடக்கழிவுகளை கொட்டுதல்

வீட்டு கழிவுகள் கலத்தல்

வீடு மற்றும் புகைவண்டி நிலையம் கட்டுதல்

பல்லாவரம்-பழைய மகாபலிபுரம் இணைப்பு சாலைகள் அமைத்தல்

போன்றன பெரும் அச்சுறுத்தல்களாகும்.

மாதவரம் மற்றும் மணலி சதுப்பு நிலங்கள்

மணலி சதுப்புநிலம் சென்னையிலிருந்து வடக்கே 16 கி.மீ. தூரத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது.  இயற்கை பாதுகாப்பிற்கான உலக நிதி அமைப்பின் முகவரிப் பட்டியலில் மணலி-மாதவரம் சதுப்புநில சூழலமைப்பு இடம் பெற்றுள்ளது.  மணலி சதுப்பு நிலத்திற்கு அருகாமையில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் மாதவரம் சதுப்புநிலம் காணப்படுகிறது.  இங்கு அல்லி, ஈரப்புல நாணற்புதர்கள் மற்றும் புற்கள் அதிகமாக காணப்படுகின்றன.

வடகிழக்கு பருவமழையின் பொழுது, 7 அல்லது 8 அடி நீர் மட்டம் உயரும்.  மேற்கு மற்றும் வடக்கு கரைப்பகுதிகளில் நீர் அதிகமாக தேக்கி வைத்துக் கொள்ளப்படுகிறது.  கிழக்கு பகுதியில் ஏற்படும் வெள்ள பெருக்கு, வடகரையில் சிறிதளவு உடைத்துவிடுவதன் மூலம் தடுக்கப்படுகிறது.

இச்சதுப்பு நிலத்தில் பல அரிய மீன் வகைகள், பூச்சியினங்கள், ஊர்வன மற்றும் பல வகையான பறவைகள் காணப்படுகின்றன.  மாதவரம் பால் பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவுகள்  கலப்பதால் ஏற்படும் பிராணவாயு பற்றாக்குறையினால் மீன்கள் பல இறந்து விடுகின்றன.

கடந்த 1990ம் ஆண்டு வரை மாதவரம் சதுப்பு நிலமானது, ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதி மக்களுக்கு மீன்பிடிப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டு வந்தது.  நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு மீன் பிடிப்பதாலும், தாவரங்கள் வேரோடு அகற்றப்படுவதாலும், இச்சதுப்பு நிலத்தை விட்டு தாமரைகோழியினம் இடம் பெயர்ந்து விட்டது.   அதிகப்படியான தூரடைவதால், இச்சதுப்பு நிலத்தின் நீர் கொள்ளளவு குறைந்து விட்டது.

பழவேற்காடு கடல்தாங்கு (புலிகட்)

பழவேற்காடு கடல்தாங்கானது, உலக இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் அமைப்பால் சமீபத்தில் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ராம்ஸர் பகுதியாகவும், இயற்கை பாதுகாப்பிற்கான உலக நிதி அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.  இது சென்னையிலிருந்து வடக்கே 60 கி.மீ. தூரத்தில், 18,440 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படுகிறது.

நம் நாட்டில் இரண்டாவது பெரிய உவர்நீர் ஏரியாகும். வங்காளவிரிகுடாவுக்கு அருகே தமிழ்நாட்டின் வடபுறமும் ஆந்திரபிரதேசத்தின் எல்லையையும் ஒட்டி அமைந்துள்ளது.  பக்கிங்காம் கால்வாய் இதன் தென்புறத்தில் இணைந்துள்ளது.

ஸ்வர்ணமுகி, காலங்கி, ஆரணியாறு மற்றும் ராயல காலவா ஆறுகளிடமிருந்து நன்னீர் பெறப்படுவதால் பல இயற்கை வளங்களை பெற்றுள்ளது.  நீர்வாழ் மற்றும் தரைவாழ் தாவர மற்றும் விலங்கினங்கள் பல காணப்படுகின்றன. 50 வகையான நீர்ப்பறவைகளுக்கு புகலிடமாக உள்ளது.  நெல் மற்றும் முந்திரி போன்றவையும் பயிரிடப்படுகின்றன.

வட சென்னை அனல்மின் நிலையத்திற்காக ஆயிரக்கணக்கான நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது. எண்ணூர் செயற்கைக் துறைமுகம் மற்றும் கன்னெய்வேதிகள் தொழிற்சாலை போன்றன தொடர்ந்து பழவேற்காடு சூழலமைப்புக்குப் பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன. வட சென்னை அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கனநீர் கழிவு மற்றும் பிற திட கழிவுகள் பக்கிம்காம் கால்வாயில் கலப்பதால், பழவேற்காடு கடல்தாங்குவில் தூரடைதல் ஏற்பட்டு, சூழல் பாதிக்கிறது.

அடையாறு முகத்துவாரம்

ஆற்று முகத்துவார சூழலமைப்பு கொண்ட சில நகரங்களில் சென்னையும் ஒன்றாகும்.  ஓத வகையைச் சேர்ந்த இயற்கையான இந்த அடையாறு முகத்துவாரம் சென்னையின் மையத்தில் அமைந்துள்ளது. ஒரு சிறிய தீவை கடலருகில் உள்ளடக்கி மணல் திட்டிலிருந்து அடையாறு பாலம் வரை பரவி காணப்படும் இந்த அடையாறு முகத்துவாரம் செட்டிநாடு அரண்மனை அருகே ஆரம்பமாகிறது. இதன் மொத்த பரப்பளவு 100 ஏக்கர் ஆகும்.

இம்முகத்துவாரத்தில் 1970ம் ஆண்டு வரை சதுப்புநிலக் காடுகள் காணப்பட்டன.  தற்பொழுது அவை இல்லாமல், பல்லுயிர் வளம் குறைந்து காணப்படுகிறது.  வேலிகாத்தான், பூவரசு, ஆட்டுக்கால் அரும்பு, தகரை, புங்கு, குன்றிமணி, உண்ணு, இலந்தை, வேம்பு, மஞ்சநெத்தி மற்றும் ரயில்கொடி போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன.  கேஸ்ட்ரோ போட்ஸ், ஸ்பிரிங் டைல், பாலிகேட்ஸ், நண்டுகள் மற்றும் பல உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன. ஒரு காலத்தில் அநேக மீன் இனங்கள் காணப்பட்ட இம்முகத்துவாரத்தில் தற்பொழுது ஒரு சில மீன் இனங்களே வாழ்ந்து வருகின்றன.

ஏறத்தாழ 170 நீர்பறவையினங்கள் சார்ந்திருந்த இம்முகத்துவாரத்தில் தற்பொழுது நாட்டு காகங்கள் தான் அதிகமாக காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்

  • தூரடைதலால் மண்மேடாகுதல்
  • முகத்துவாரத்தின் இருகரைகளிலும் அமைந்துள்ள எண்ணற்ற ஆட்டுப்பட்டிகளால் மாசடைகிறது
  • திடக்கழிவுகள் கொட்டுதல்
  • வீட்டுக்கழிவுகள் கலத்தல்

ஒரு காலத்தில் பறவைகளின் சொர்க்கபூமியாக இருந்த இப்பகுதி தற்பொழுது அழிந்து வருகிறது.

கூவம் ஆற்று முகத்துவாரம்

தமிழ் இலக்கியங்களில் கூவளன் என்றால் “நீரியல் பற்றி முழுவதும் தெரிந்தவன்” என்பதிலிருந்து இந்நதிக்கு கூவம் என்று பெயர் வந்தது. ஒரு காலத்தில் நன்னீர் ஆதாரமாக விளங்கிய இந்நதி, தற்பொழுது 75க்கும் மேற்பட்ட சிறு ஏரிகளிலிருந்து வரும் கழிவுகள் கலக்கும் ஆறாக மாறிவிட்டது.

கூவம் நதி உயிர் சிதைவுறுதல் நடைபெறும் இயற்கையான நதியாகும்.  இந்நதி சென்னை நகரத்தின் பெருமளவு கழிவுப்பொருட்கள், சாக்கடை நீர், கால்நடைக் கழிவு ஆகியவற்றை சேகரித்துச் செல்லும் நதியாக உள்ளது.  ஒரு வருடத்திற்கு 3200 டன் வண்டல் படிவதால் ஆங்காங்கே நீர் தேங்கியுள்ளது.  இதன் விளைவாக பிராணவாயு அளவு குறைந்து மீன்கள் வாழ்வதற்குக் கூட உபயோகமற்றதாக உள்ளது.

மீன் வகைகள் குறைந்து வருதல்

(ஆஸாரியா.ஜெ. மற்றும் ஆஸாரியா.எச். 1987 அ)

வருடம்      மீன் வகை எண்ணிக்கை

1949  49

1957-59     30

1975-79     21

2000  மீன் இல்லை

வெகுகாலமாக சென்னை நகரின் விலைமதிப்பற்ற சொத்தாக விளங்கிய கூவம் நதியானது சென்னை நகரவாசிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் காண சகிக்காத சாக்கடை ஆறாக மாறி, பயனற்று காணப்படுகிறது.

ஈரப்புலங்களை பாதுகாப்போம்

ஈரப்புலங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு வேளாண்துறை, மீன் வளரியல் துறை, பாசனத்துறை, வருமானத்துறை, சுற்றுலாத்துறை, நீராதாரங்கள் துறை மற்றும் அவ்வப்பகுதிகளில் உள்ள சங்கங்கள் என அனைத்து துறைகளிடமும் உள்ளது.  ஒரு உதாரணத்திற்கு சதுப்புநில வனங்கள் அனைத்தும் வனத்துறையின் நேரடி பாதுகாப்பில் இருந்து வருகின்றன.  ஒருமித்த ஈரப்புலங்கள் பாதுகாப்பு திட்ட கொள்கைகள் இல்லாததால் ஒவ்வொரு துறையும் அதன் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதால், முடிவுறாத பிரச்சனைக்கு வழிவகுக்கின்றன.

ஈரப்புல சூழலமைப்பானது ஒரு நீர்ப்பிரி முகட்டிற்குள் ஒன்றிற்கொன்று தொடர்புடையதாகவும், அதற்குள் ஏற்படும் செயல்எதிர் செயலாற்றலுடையதாகவும் இயற்கையிலேயே அமையப்பட்ட ஒன்றாகும்.  நம் நாட்டில் முறையாக திட்டமிடாத நகரமயமாதல் மற்றும் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக ஈரப்புலங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. இதை சரிசெய்ய வேண்டி, முறையான திட்டமிடல், நிர்வாகிப்பு மற்றும் கண்காணிப்பு போன்ற ஒருங்கிணைந்த அணுகுமுறை கொண்ட ஈரப்புலங்கள் மேலாண்மை தேவைப்படுகிறது.  திறமையான கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களாகிய சூழலியலாளர்கள், நீரியலாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், நீர்ப்பிரிமுகடு மேலாண்மை வல்லுனர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் தீர்மானிப்பாளர்கள் போன்றோர் ஒருவருக்கொருவர் முறையான தொடர்பு கொண்டு அப்பகுதியில் உள்ள வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த மேலாண்மையினால் மட்டுமே ஈரப்புலங்களை பாதுகாக்க முடியும்.  இவை அனைத்தும் ஈரப்புலங்கள் பற்றிய முழு அறிவு மற்றும் புரிந்து கொள்ளுதலுக்கு உதவிபுரிவதுடன், ஒரு நீண்ட பாதுகாப்பு மற்றும் மேலாண்மை யுக்திகளுக்கு வழிவகுக்கும்.  கல்வி புகட்டும் நிகழ்ச்சிகள் மூலம், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடையே ஈரப்புலங்கள் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.  மேலும் ஈரப்புலங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று அதனை முறையாக கண்காணித்து நீரின் தரத்தை முறைப்படுத்துவதன் மூலம் அழிந்துவரும் ஈரப்புலங்களை பாதுகாக்க முடியும்.

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்.

Filed under:
3.16
கார்த்திக் Mar 19, 2015 01:04 PM

புதிய தலைமுறை தொலைக்காட்சி உரக்கச் சொல்லுங்கள் என்ற விவாத நிகழ்ச்சியை வழங்கிவருகிறது

உரக்கச் சொல்லுங்கள் விவாத தலைப்பு
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்பு யாருக்கு அதிகம் ? அரசிற்கா ? மக்களுக்கா ?
விருப்பமுள்ள நண்பர்கள் 87*****62 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டிகிறேன்

விவாதம் நடைபெறும் இடம் :
புதிய தலைமுறை அலுவலகம்
25A.NP INDUSTRIAL ESTATE,
EKKATTUTHANGAL.
CHENNAI

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top