பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உயிரினப்பன்மை உலகம்

விப்ரோவின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான நீடிப்புத்திறன் கல்வி திட்டத்தின் பகுதி விவரிக்கப்பட்டுள்ளன.

கட்டாய செயல்கள்

இந்த பகுதி பரந்த ஆனால் குறிப்பிட்ட சூழலில் உயிரினப்பன்மையை புரிந்துக் கொள்ள, அது மனிதன் மற்றும் மற்ற உயிர்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்திருப்பதை அறிந்து கொள்ள உதவும். உணவு, நலம், தங்குமிடம், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் வறுமையை ஒழிப்பது ஆகிய அனைத்தும் உயிரினப்பன்மையோடு நெருங்கிய தொடர்புடையது மற்றும் இவற்றின் மேல் இது இருப்பதால், இல்லாததால் உண்டாகும் தாக்கம்.

குறிக்கோள்:

உங்கள் சூழலுக்கு வெளியே, உங்களுடைய கிராமம், நகரம், மாநகரத்தில் உள்ள பிரச்சினைகள் எந்த அளவிற்கு சூழ்நிலையமைப்பை பாதிக்கிறது என சிந்தனை செய்ய வேண்டும். நீங்கள் உங்களை சுற்றி மற்றும் பள்ளியின் சூழ்நிலையை பற்றி அறிந்து கொண்டீர்கள், ஒரு நில அல்லது நீர் உயிர்க்காட்சிசாலை சூழ்நிலையை அமைத்தீர்கள். இதன் மூலம் பெற்ற அறிவை வைத்து உணவு, நலம், மக்கள்தொகை, பொருளாதாரம் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்திலும் சூழ்நிலையமைப்பின் பங்கை ஆராயுங்கள்.

உயிர்னப்பன்மை உலகம்

உயிருள்ள மற்றும் உயிரற்ற (காலநிலைக் காரணிகள், மண், நீர், போன்றவை) கூறுகளை கொண்ட சூழ்நிலையமைப்பு ஒரு மாறும் உருபொருள் ஆகும். உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகள் பிணைந்து சுய ஆதரவுடன் நிலையாக இருக்கும். உயிர்கள் மற்றும் அவற்றின் மக்கள் தொகை மற்றும் உயிரற்ற காரணிகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் இவை சூழ்நிலையமைப்பின் பண்பையே மாற்ற காரணமாயுள்ளது. நிலநடுக்கம், எரிமலை, எல்நினோ போன்ற இயற்கை பேரிடர்கள் சூழ்நிலையமைப்பை மாற்றுகிறது. ஒரு உயிரின் எண்ணிக்கை பெருக்கம் அதன் பண்பை மாற்ற வல்லது. புல்வெளி மற்றும் காடு சூழ்நிலையமைப்பை, மனிதனின் செயல்கள் மாற்றி அமைத்திருக்கிறது. ஆற்றில் அணை கட்டுவது, மகா சமுத்திரத்தில் எண்ணெய் எடுக்க தோண்டுவது போன்றவை நீர் சூழ்நிலையமைப்புகளை பாதிக்கிறது. சூழ்நிலையமைப்பு தானே தன்னை மீட்கும் திறன் உடையது. மனிதன் அவை மீண்டு வர உதவலாம். ஒரு மாறிய சூழ்நிலையமைப்பு உயிர்பெற மற்றும் அதன் இயற்கையை மீண்டும் பெற என்ன தேவை?

மனிதனின் பார்வையில், சூழ்நிலையமைப்புகளே உயிரிகள் வாழ அவசியாமாகிறது. வரலாற்று சிறப்பாக, சூழ்நிலையமைப்பே காட்டில் திரிந்துக் கொண்டிருந்த மனிதனை குடியேறிகளாக மாற்றியுள்ளன. நிறைய காட்டு வகைகளை வேளாண்மைத்தாவரமாக மாற்றி அவன் உணவு தேவையை பூர்த்தி செய்துள்ளது. பசுமைப்புரட்சி வேளாண்மையின் முறைகளை மாற்றி, சூழ்நிலை மற்றும் உயிரினப்பன்மையையும் மாற்றியமைத்து மனிதனின் உணவு பற்றாக்குறையை தீர்த்துள்ளது. பழைய முறை ஆங்காங்கே இன்னும் நடைமுறையில் இருக்கிறது. கரிம வேளாண்மை அல்லது உள்ளூர் கால்நடை இனங்கள் பாதுகாத்தல் போன்றவை மெதுவாக பழைய முறைகளுக்கு பதிலாக பின்பற்றப்படுகிறது. இயற்கை பேரிடர்களான நில நடுக்கம், எரிமலை, ஆழிப்பேரலை ஆகியவை வாழிடங்கள் மற்றும் உயிர்களை மாற்றுகிறது. பரவும் அன்னிய இனங்கள் உள்நாட்டு இனங்களை ஒரம் தள்ளிவிடும். மனிதன் செல்லாமல் குறைத்த இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதற்காகவே தேசிய பூங்கா, உயிர்க்கோள வளங்காப்பகங்கள் உருவாக்கப்பட்டு அதில் மைய பகுதியை வரையறுத்து, மனிதன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் பல ஈரநிலங்கள் (கேரளத்தில் அஷ்டமுடி ஏரி, ஒடிஷாவில் சில்கா ஏரி மற்றும் கியோலாடியோ தேசிய பூங்கா (பரத்பூர் பறவைகள் சரணாலயம்) ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக கருதப்படுகிறது. உயிரினப்பன்மை வாய்ந்த இடங்களை பாதுக்காக்கப்பட்ட பகுதியாக மாற்றியது மட்டுமில்லமல், வாழிடங்கள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை பாதுகாக்க பல சர்வதேச ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சூழ்நிலையமைப்பின் நலத்தை சில காரணிகளை சுட்டிக்காட்டிகளாக வைத்து அதன் நலனை கண்டறிவார்கள். இந்த மாறுபடும் காரணிகள், ஆய்வின் குறிப்பிட்ட நோக்கங்களை சார்ந்துள்ளது. இவை சூழ்நிலையமைப்பின் போக்குகளை புரிந்து கொள்ள உதவும். சூழ்நிலையமைப்பில், விலங்கின வேறுபாடு மற்றும் அவற்றின் அமைப்பு ஒரு முக்கிய சுட்டிக்காட்டியாகும். சமுதாய கட்டமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இயற்கையை புரிந்துகொள்ள உதவும். தாவரம் இருப்பதும் அல்லது இல்லாததும் ஒரு சுட்டிக்காட்டியாகும். நீர்நிலைகளில் ஐகோர்னியா மற்றும் பிஸ்டியா வளர்ந்திருப்பது அச்சூழ்நிலையின் நலம் சரியில்லை என்று வலியுறுத்துகிறது. இது நீரில் பாஸ்ஃபேட்டுகள் மற்றும் நைரேட்டுகள் அதிகமாகிறது என சுட்டிக்காட்டுகிறது. இது ஊட்டமிகுதல் என கண்டறிய உதவுகிறது. தவளைகள், பூஞ்சைப்பாசிகள், சில பிரையோஃபைட்டுகள் நகரங்களில் இல்லாதது, நீரில் மீன்கள் குறைவது, பவளப்பாறைகள் வெளுப்பது மற்றும் நாரைகள் இல்லாமை ஆகியவை அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது என சுட்டிக்காட்டுகிறது. கால்நிலை, மழைப்பொழிவின் மாற்றம், வளிமண்டல வேதியியல், வேளாண்மை வெளியீடு மற்றும் மண் வளம் போன்றவை சூழ்நிலை நலத்தை சுட்டிக்காட்டுகின்றன. மேற்கூறிய முக்கிய கூறுகளை விரிவாக ஆராய்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.

அறிவுறுத்தல்கள்

நீங்கள் வாழும் கிராமம், நகரம் மற்றும் மாநகரம் ஆகியவற்றில் என்ன வகை சூழ்நிலையமைப்பை காணாலாம்? சூழ்நிலையமைப்பை வழி நடத்தும் முக்கிய உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகள் யாவை? அவை எந்த வகை சேவைகளை புரிகின்றன? அவற்றின் நலம் என்ன?

உங்கள் சுற்றுப்புரத்தில் உள்ள ஏதாவது ஒரு சூழ்நிலையை கண்டு, அதை பற்றி விவரித்து விரிவாக கட்டுரை எழுதுக. அங்குள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித வாழ்வில் அவற்றின் பங்கு.

கட்டாயமாக கட்டுரையில் இருக்க வேண்டிய கூறுகள்:

1. கட்டுரை 2500 வார்த்தைகளை மிகாமல் இருக்க வேண்டும்.

2. சூழ்நிலையமைப்பின் இருப்பிடத்தை கையால் வரையவும்.

3. உயிருள்ள கூறுகளின் படங்கள்

ஒளிப்படங்கள் இருக்கலாம் ஆனால் வரைவதிற்கு மாற்றாகக் கூடாது. 2 அல்லது 3 புள்ளிகளை, கண்டிப்பாக இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய கூடாது.

வளங்கள்

கட்டுரைக்கு தேவையான பயனுள்ள குறிப்புகள்

 • குளங்கள், ஏரிகள், நீரோடைகள், ஆறுகள், கால்வாய்கள், தொட்டிகள், சிறிய/பெரிய அணைகள், சதுப்பு நிலக்காடுகள், முகத்துவாரங்கள், கடற்கரைகள், புல்வெளிகள், மரங்கள் அடர்ந்த பகுதி, பூங்காக்கள், சொந்த காடுகள், பாதுகாக்கப்பட்ட காடுகள் போன்றவற்றை ஆய்விற்கு பயன்படுத்தலாம்.
 • இது ஒரு ஆய்வு திட்டம், உங்களுக்கு ஆர்வமுடைய, சூழ்நிலையமைப்பின் ஒன்று அல்லது இரண்டு பிரச்சினைகளை எடுத்து ஆராயவும்.
 • புறவெளி மற்றும் காலத்தின் மாற்றங்கள் அல்லது போக்குகள் முக்கியமானவையாகும்.
 • எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் முதன்மை தகவலை பயன்படுத்துங்கள்.
 • உயிருள்ள கூறுகளின் தொடர்புகள், தனி உயிரினம், கால நிலை பண்புகள், மாசுபாட்டின் நிலை, உள்ளூர் நடவடிக்கைகள், சேவைகள் புரிதல், அச்சுறுத்தல்கள், காரணங்கள், தீர்வு, போன்ற தலைப்புகளில் கட்டுரை எழுதலாம்.
 • நீங்கள் குறிப்பெடுத்த புத்தகப் பெயர், கட்டுரைகள் குறிப்பு பிரிவில் சேர்க்கலாம். இரண்டாம் நிலை தகவல்களை சேர்க்க அராய்ச்சி கட்டுரைகளை படிக்க வேண்டும்.
 • பல பிரிவினுருடன் (வெவ்வேறு தொழில் செய்பவர் மற்றும் வயதினர்) பேசி தகவலை சேகரியுங்கள். உங்கள் கட்டுரைக்கு நேர்காணல் நிறைய தகவலை தரும்.

ஆராய்ச்சிக்கு உதவும் கேள்விகள்

உங்கள் ஆராய்ச்சியில் பல விஷயங்களை கவர, இந்த கேள்விகள் உதவும். நீங்கள் ஆய்விற்கு தேர்ந்தெடுத்த பிரச்சினையுடன் இணைந்துள்ள கேள்விகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

 • ஒரு காலக்கட்டத்திற்கு மேல் சூழ்நிலையமைப்பின் நிலை மாறியுள்ளதா? இப்படியே இருந்ததா அல்லது மாற்றம் அடைந்துள்ளதா? இப்போதைய நிலையை எப்படி விவரிப்பாய்?
 • சூழ்நிலையமைப்பை பாதிக்கும் சில முக்கிய காரணிகள் யாவை? எப்படி?
 • தனி உயிரினங்களுக்குள்ளே மற்றும் உயிருள்ள கூற்றுகளின் மக்கள்தொகையுடன் வெவ்வேறு தொடர்பை காணலாம். இந்த தொடர்புகளின் தாக்கம் யாது?
 • சூழ்நிலையமைப்பின் பணிகள் மற்றும் சேவைகள் பற்றி ஆராயவும்.
 • இங்கு என்னென்ன பிரிவுகளின் உயிரினங்களை காணலாம்? உலகில் இவை இங்கு மட்டுமே காணக்கூடியதா? அங்கு துளையிடும், அன்னிய, உள்ளூர் மற்றும் இடத்திற்குரிய உயிரினம் உள்ளதா என்று ஆராய்ந்து, அவற்றின் தாக்கம் என்ன?
 • மனிதர்கள் இவற்றுடன் எப்படி தொடர்பு வைத்திருக்கிறார்கள்? பல்வேறு வயதுடைய மக்களின் நடத்தை / மனப்பான்மையில் ஏதாவது மாற்றம் உள்ளதா?
 • ச இபா ச விண்ணப்பித்தால் எந்த பிரிவில் இது வரும்? ஏன்?
 • சூழ்நிலையமைப்பை நீடித்து மற்றும் உயிரோட்டத்துடன் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா?
 • உயிரினப்பன்மையை காக்க தனி மனிதன், சமூகம், அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகள் வெற்றிபெற்றுள்ளதா?
 • உயிரினப்பன்மையை பற்றி என்ன கற்றுக் கொண்டீர்கள்?

சிந்தனைகள்

நீங்கள் சிந்திக்க சல கேள்விகளை அழுந்தக் கூறியுள்ளோம். ஒருவர் கேட்பதற்கு இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன? நீடிப்புதிறன் மற்றும் உயரினப்பன்மை ஆகய இரண்டு முக்கிய கருத்துக்களை மையமாக கொண்டு அனைத்து கேள்விகளும் உள்ளன. முயற்சி செய்து இந்த இரண்டுக்கும் உள்ள இணைப்பை கண்டுபிடித்து மற்றும் இவை இந்த பூமியின் எதிர்காலத்திற்கு முக்கயமானதா என கண்டறியுங்கள். புதுமையாக சிந்தித்து கேள்விகள் எழுப்பி, கற்று, ஆராயுங்கள். நீங்கள் கற்றதை எங்களுடன் பகர்ந்து கொள்ளுங்கள்.

ஆதாரம் : விப்ரோ எர்தியன் - குழந்தைகளுக்கான நீடிப்புத்திறன் மற்றும் உயிரினப்பன்மை குறித்த கையேடு

3.27272727273
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top