பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு / சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

சுற்றுச் சூழல் சார்ந்த சுற்றுலா என்பது 'சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் உள்ளூர் மக்களின் நலனை மேம்படுத்தக் கூடிய இயற்கையான பகுதிக்கு மேற்கொள்ளப்படும் பொறுப்புள்ள சுற்றுலா ஆகும்' என்று சர்வதேச சுற்றுச்சூழல் சுற்றுலா சங்கம் வரையறுத்திருக்கிறது. தேசிய சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் உத்திகளுக்கான ஆஸ்திரேலிய ஆணையம் சுற்றுச் சூழல் சுற்றுலாவை, இயற்கைச் சார்ந்த சுற்றுலா, இயற்கை சூழலை பகுத்துப் பார்த்தல் மற்றும் அது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளுதல், சுற்றுச் சூழலை நீடிக்கச் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது' என்று வரையறுத்திருக்கிறது.

நவீன காலத்தில் சுற்றுச் சூழல் என்பது கீழ்க்கண்ட நோக்கங்களை எட்டுவதற்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது :

1) இயற்கையான சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா செல்லுதல்

2) இயற்கை வளங்கள் மீதான தாக்கத்தை குறைத்தல்

3) சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

4) சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அழுத்தத்தையும் நிதியுதவியையும் அளித்தல்

5) உள்ளூர் மக்களுக்கு நிதியுதவி மற்றும் அதிகாரமளித்தல்

6) உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்கும் தன்மையை ஏற்படுத்துதல்.

சுற்றுச் சூழல் சுற்றுலாவால் ஏற்படும் பொருளாதார பயன்கள் குறித்து சர்வதேச சுற்றுச்சூழல் சுற்றுலாச் சங்கம் குறிப்பிட்டு கூறியிருக்கிறது. சுற்றுச் சூழல் சுற்றுலா மூலம் கிடைக்கும் பணம் உள்ளூர் பொருளாதாரத்தைத் தாண்டி வெளியில் செல்வதற்கு சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகள் அனுமதிக்கக் கூடாது என்று இந்தச் சங்கம் குறிப்பிட்டிருக்கிறது. சுற்றுச் சூழல் ரீதியாக எளிதில் பாதிக்கப்படகூடிய தன்மையுடைய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் சுற்றுலா செல்வதையும் மிகப் பெரிய அளவில் ஹோட்டல்களை கட்டுவதையும் பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ளுவதையும் இந்தச் சங்கம் எதிர்க்கிறது. சுற்றுச்சூழலுக்குச் சாதகமான சுற்றுலா : சமஸ்கிருத இலக்கியக் குறிப்பு இந்தியாவை பொறுத்தவரை சுற்றுச்சூழல் சுற்றுலா எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக சாகாவரம்பெற்ற கவிஞர் காளிதாசர் எழுதிய மேகதூது என்ற சமஸ்கிருத கவிதை நிலவுகிறது. ஒரு யாக்ஷையின் காதலி இருக்கும் இடத்தை சென்றடைவதற்கு எத்தகைய வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விளக்கும் பாடல்தான் அந்த கவிதை ஆகும்.

இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தக் கவிதை வலியுறுத்துகிறது. மேகதூது கவிதையில் இடம்பெற்றுள்ள ஒரு ஸ்லோகத்தின் பொருள் என்னவென்றால் நாம் தண்ணிர் ஊற்றி வளர்த்த மரங்கள் கோடைக் காலத்தில் பூத்துக் குலுங்குகின்றன. இப்போது பூத்து முடித்த செடிகளுக்கு தண்ணிர் ஊற்றுவோம். அதுதான் நல்ல செயலாக இருக்கும். ஏனெனில் நாம் வெகுமதியை எதிர்பார்த்து எதையும் செய்வதில்லை' என்பதாகும்.

மத்திய இந்தியாவின் சமவெளி பகுதிகள், அதிலுள்ள பல்வகையான நுண்ணுயிர்கள் மற்றும் நுண் தாவரங்கள் ஆகியவற்றையும் மழை மேகம் கடந்து செல்லும் ஒவ்வொரு மண்டலத்தின் பூகோள மற்றும் இயற்கை அம்சங்களையும் மிகவும் அக்கறையுடனும் கவனத்துடனும் இந்தக் கவிதை விவரிக்கிறது.

சுற்றுச்சூழல் உறுதிமொழி

சுற்றுச்சூழல் சுற்றுலா கொள்கைக்கு இணங்க சுற்றுச்சூழல் உறுதிமொழியை மதித்து நடக்க இந்தியா உறுதி மேற்கொண்டிருக்கிறது. சுற்றுச் சூழல் உறுதிமொழியின் முதன்மையான அம்சங்கள் பின்வருமாறு:

1) சுற்றுலா குறித்து விளம்பரம் செய்வதற்கான அனைத்துப் பொருட்களும், ஸ்டேஷனரி பொருட்களும் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தைக் கொண்டே தயாரிக்கப்பட வேண்டும். இந்திய சுற்றுலா அமைச்சகம் அதன் அனைத்து செயல்பாடுகளுக்கும் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களையே பயன்படுத்துவோம் என்று சபதம் ஏற்றிருக்கிறது.

2) சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளைப் பொறுத்த வரையில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் என்பது மக்காதப் பொருளாகும். ஒரு சிறிய பிளாஸ்டிக் பை மக்கி மண்ணோடு மண்ணாக பலநூற்றாண்டுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலாவின்போது நுகரத்தக்கப் பொருட்களை கொண்டு செல்வதற்காக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் துணிப் பையையோ அல்லது காகிதப் பையையோ எடுத்துச் செல்வதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க பேருதவி செய்கிறார்கள் என்று பொருள் ஆகும்.

3) சுற்றுலாவின் சுற்றுச்சூழலுக்குச் சாதகமான தன்மை வெளிப்படும் இன்னொரு இடம் எதுவென்றால் மின்சாரப் பயன்பாடு மற்றும் அதன் உற்பத்தியாகும். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்குடன் சுற்றுலாப் பயணிகளும், சுற்றுலா வசதிகளை செய்து தருவோரும் சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் உறுதிமொழி வலியுறுத்துகிறது.

4) பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறு சுழற்சி செய்தல், மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், தண்ணிர் தேவை குறைவாக உள்ள பகுதிகளில் கழிப்பறைகளை அமைத்தல் ஆகியவை தண்ணிர் சிக்கனத்திற்கு கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில முக்கியமான அம்சங்களாகும்.

5) இவை மட்டுமின்றி, சுற்றுலாத் திட்டங்களை உருவாக்கும்போது சுற்றுலாத் தலங்களில் உள்ள பல்லுயிர் வாழிடங்கள், தாவரங்கள், விலங்குகள், ஆகியவற்றை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தப்பட வேண்டும். இதற்காக மரக்கன்றுகளை நடுதல், ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். சமையல் மற்றும் சூடுபடுத்துவதற்காக விறகுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மூலிகைச் செடிகளை நடுதல்

பாதை அமைத்தல் உட்புற அலங்காரம் ஆகியவற்றுக்காக தாவரங்கள் அல்லாத, சுற்றுச்சூழலுக்கு சாதகமான பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் சுற்றுச்சூழல் உறுதிமொழியின் முக்கியமான அம்சம் ஆகும். சுற்றுச்சூழலுக்கு சாதகமான சுற்றுலா திட்ட நடவடிக்கைகளில் மிக முக்கியமான மற்றொரு அம்சம் என்னவென்றால் கழிவுகளை பிரிப்பது ஆகும். மக்கும் தன்மை கொண்ட பொருட்கள் மட்டுமே பூமியில் புதைக்கப்பட வேண்டும் அல்லது மக்கிய உரம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட வேண்டும். மக்காத தன்மை கொண்ட கழிவுகள் ஏதேனும் இருந்தால் அது அறிவியல் ரீதியில் அழிக்கப்படுவதற்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ், டாக்டர் கே. பரமேஸ்வரன், உதவி இயக்குனர், பத்திரிகை தகவல் அலுவலகம்

3.09677419355
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top