பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / தட்பவெப்ப மாற்றம் / தட்பவெப்ப நிலை பாதிப்பு மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தட்பவெப்ப நிலை பாதிப்பு மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல்

தட்பவெப்ப நிலை பாதிப்பு மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற பகுதிகளில் பசுமைப் போர்வையை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க அளவு வெற்றியுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் அதிகரித்து வரும் மனித அழுத்தம் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்கள் நடப்படாமல் மோசமாக திட்டமிடப்படும் வளர்ச்சித் திட்டங்களில் மோசமான பக்கவிளைவுகள் ஆகியவற்றால், காடுகளிலும் ஊரகப் பகுதிகளிலும் உள்ள பெருமளவிலான பசுமைப் போர்வைகள் அழிந்து வருகின்றன. 2012 ஆம் ஆண்டில் இந்தியா புதிய நீர்க்கொள்கையை உருவாக்கியது. ஆனால், உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உத்தி சார்ந்த சுற்றுச்சூழல் மதிப்பீடு இந்தியாவில் நடைமுறையில் இருக்கும்போதிலும் இந்தக் கொள்கையை முறையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டிற்கு உட்படுத்தாமலேயே இந்தியா செயல்படுத்தி வருகிறது.

தட்பவெப்ப நிலை பாதிப்பு மற்றும் இந்தியாவின் சுற்றுச் சூழல் தட்பவெப்ப நிலை மாற்றத்தால், இந்தியாவின் பல பகுதிகள் மோசமான தாக்கங்களை அனுபவிக்க வேண்டியுள்ள நிலையில், அவற்றின் சில பாதிப்புகள் சரி செய்ய முடியாத அளவுக்கு இருக்கும்; வேறு சில பாதிப்புகள் பயனைத் தரக்கூடும். தட்பவெப்ப நிலை பாதிப்பு மேலாண்மை உலக வங்கி குழு செயல்பாடுகளில் தட்பவெப்பநிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்வதை ஒருங்கிணைத்தல்' என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில், தெற்காசியாவில் சுற்றுச் சூழல் மாற்றங்களால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது அடையாளம் காட்டப்பட்டிருந்தது.

  • தண்ணிர் இருப்பு குறைதல் மற்றும் வறண்ட, ஒரளவு வறண்ட பகுதிகளில் தண்ணிரின் தரம் குறைதல்
  • வெள்ளம், வறட்சி, தண்ணிர் சார்ந்த நோய்கள்/ கொள்ளை நோய்கள் அதிகரித்தல்
  • மலைப்பகுதி குடியிருப்புகளில் தண்ணிர் ஒழுங்குமுறை குறைதல்
  • நீர்மின் உற்பத்தி மற்றும் உயிர்வாயு உற்பத்தியில் நம்பகத் தன்மை குறைதல்
  • மோசமான தட்பவெப்பநிலை சார்ந்த நிகழ்வுகளால் பாதிப்புகளும், உயிரிழப்பும் அதிகரித்தல்

வேளாண் உற்பத்தி, மீன் உற்பத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைப்புகளின் நீடித்த தன்மை குறைதல் கடுமையான பொருளாதார அதிர்ச்சிகள் என்ற வடிவில், இந்த தாக்கங்களின் விளைவுகளை உலக வங்கி குறிப்பிட்டிருக்கிறது. இவை தற்போதுள்ள சமூக மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளை அதிகரிப்பதுடன், உள்நாட்டிற்குள்ளும், உள்நாட்டிற்கு வெளியேயும் இடம் பெயர்தலை அதிகரிக்கும் என்றும் உலக வங்கி குறிப்பிட் டிருக்கிறது.

இதுவரை உருவாக்கப்பட்ட தட்பவெப்பநிலை மாற்றம் தொடர்பான பெரும்பாலான கொள்கை நடவடிக்கைகள், அதன் பாதிப்புகளை குறைப்பது சம்பந்தப்பட்டவையாகவும், பூகோள - இயல் அளவீடுகளின் அடிப்படையிலும் தான் அமைந்திருக்கின்றன. எனினும், தற்போது பாதிப்பு குறைப்பு சார்ந்த அணுகுமுறையில் இருந்து தட்பவெப்பநிலை பாதிப்புகளை ஏற்றுக்கொள்வது சார்ந்த அணுகுமுறை மீது நமது கவனம் மாறிக்கொண்டிருக்கிறது. இப்புதிய அணுகுமுறை சுற்றுச் சூழல் பாதிப்புகளை குறைப்பது மட்டுமின்றி, அதை ஏற்றுக்கொள்வதையும் அடிப்படையாகக் கொண்டது.

தட்பவெப்ப நிலை மாற்றத்தின் விளைவாக, மழையின் தன்மை, மழையின் தீவிரம் மற்றும் மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை, வெப்பமான மற்றும் குளிர்ச்சியான நாட்களின் எண்ணிக்கை, வெப்ப / குளிர் அலைகள், கடல் மட்டம் உயர்தல், புயல் போன்றவற்றில் மாற்றம் ஏற்படும் என்றும், நிலத்தை முறையற்ற வழிகளில் பயன்படுத்துவதால் ஏற்படும் சூழலியல் சீரழிவின் காரணமாக, நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற பேரழிவுகளாலும், மேற்கூறப்பட்ட தட்பவெப்ப நிலை மாற்றத்தின் விளைவுகளாலும், மக்கள் பாதிக்கப்படும் விகிதம் அதிகரித்திருக்கிறது என்றும் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீரின் இருப்பு மட்டுமின்றி, அதன் தரமும், சுகாதாரம் வேளாண்மைக்கு மிகவும் முக்கியமானதாகும். கடந்த பத்தாண்டுகளில் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், காற்றின் தரம் குறைந்து கொண்டே செல்கிறது. இந்தியாவின் பல நகரங்களில் கழிவு மேலாண்மை நிலை மேம்பட்டிருக்கும் போதிலும், திருப்தி அளிக்கும் நிலையை இன்னும் எட்டவில்லை. நகர்ப்புறங்களில் வெள்ளம் ஏற்படுவது ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் பெரும் தொல்லையாகிவிட்டது.

சூழல் அமைப்பு சேவைகள்

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம்

இந்தியாவில் சுற்றுச் சூழல் சார்ந்த பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதிகரித்து வரும் பொருளாதார மேம்பாடு, 1947 ஆம் ஆண்டில் 30 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை, தற்போது 100 கோடியாக பெருகியிருப்பது ஆகியவை இந்தியாவின் சுற்றுச் சூழல், உட்கட்டமைப்பு மற்றும் நாட்டின் இயற்கை வளங்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

உலக அளவில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, அதிக அளவில் கார்பன்-டை- ஆக்சைடை வெளியேற்றும் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றம் குறித்த அறிக்கை, இந்தியாவுக்கு கவலை அளிக்கும் ஒன்றாகும். தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தல் மற்றும் ஏற்றுக்கொள்வதற்கான சூழல் அமைப்பு சார்ந்த அணுகுமுறைகள்தான் நம்முன் தற்போது இருக்கும் உன்னதமான வாய்ப்புகள் ஆகும். தட்பவெப்ப நிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் உத்திகளுக்கான பாதிப்பு குறைப்பு மதிப்புகள் மற்றும் அதே நேரத்தில் பேரிடர் பாதிப்பு குறைப்பை ஒரு பயனாகக் கொள்ளும் அணுகுமுறையை நாம் உருவாக்க வேண்டும். நமது ஈர நிலங்கள் மற்றும் நதிகள் அமைப்பை சீரழித்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த நில மண் அமைப்பையும் நாம் சீர்குலைத்து விட்டோம். குறுகிய காலத்தில் அதிக விளைச்சலைப் பெறவேண்டும் என்ற தேடலில், அதிக உரங்களைப் பயன்படுத்தி நமது நிலங்களை இரசாயனம் அதிகம் உள்ளவையாக மாற்றியிருக்கிறோம். ஒரு காலத்தில் இந்தியா அதன் மக்களுக்கு வழங்க உணவு தேவைப்பட்டதால், அந்தக் காலத்தில் பசுமைப்புரட்சி தேவைப்பட்டது. ஆனால், இப்போது சொல்லப்படும் 2-வது பசுமைப் புரட்சி என்பது மிகவும் எச்சரிக்கையுடனும், நீடித்தல் குறித்த அக்கறைகளுடனும் கட்டி எழுப்பப்படவேண்டும். இந்திய மக்களைப் பொறுத்தவரை, இயற்கை வளங்கள் சார்ந்த நடவடிக்கைகள் தான் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளன. நிலம், தண்ணிர் மற்றும் தாவர உற்பத்தியை தனித்தனியாக எதிர்கொள்ள முடியாது. 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புத்தாயிரமாண்டு சூழல் மதிப்பீட்டு அறிக்கையில், இயற்கை அமைப்புகள்தான் மனித குலத்தின் வாழ்க்கை ஆதரவு அமைப்பு என்றும், வாழ்வதற்கும், சமூகப் பொருளாதார நலனுக்கும் தேவையான சூழல் அமைப்பு சேவைகளை வழங்குகின்றன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மொத்தம் 24 சேவைகள் 4 பெரிய பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் விவரம் வருமாறு:

உணவுப்பொருள் வழங்கல் சேவைகள்

உணவு, தண்ணிர் மற்றும் வனத்தில் கிடைக்கும் பொருட்கள் போன்றவற்றை சூழல் அமைப்பில் இருந்து பொதுமக்கள் நேரடியாகப் பெற்றுக் கொள்வது.

ஒழுங்குமுறை சேவைகள்

தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களை சீரமைத்தல், வெள்ளம், வறட்சி, நோய், கழிவு மற்றும் தண்ணின் தரம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல்.

கலாச்சார சேவைகள்

சுற்றுலா, அழகியல் மற்றும் தெய்வீக பயன்கள் சார்ந்த சேவைகள். நகராட்சிகள், குறிப்பிடத்தக்க அளவு தண்ணிர் எரிசக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தும் அல்லது தீமை பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ள அமைப்புகள், ஆகியவற்றில் விரிவான சுற்றுச் சூழல் தணிக்கை செய்வது கட்டாயமாகும்.

இயற்கை வள கணக்குப் பதிவு

இயற்கை வளங்களை கணக்கெடுத்து பதிவு செய்வது அல்லது பசுமை கணக்குப் பதிவு என்ற நடைமுறை 1990-களில் உருவாக்கப்பட்டு, சோதனை அடிப்படையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, எனினும் அந்த நடைமுறை வளர்ச்சியடையவில்லை. பசுமை கணக்குப் பதிவு மற்றும் பசுமை உற்பத்தி மதிப்பு ஆகியவை தேசிய மற்றும் மாநில அளவிலான சுற்றுச் சூழல் செயல்திட்டத்தை உருவாக்குவதில், வளர்ச்சித் திட்டமிடுதலும் ஓர் அங்கமாக சேர்க்கப்படவேண்டும்.

சுற்றுச் சுழல் தாக்கத்தின் மீதான பொருளாதார மதிப்பீடு

முறையான பொருளாதார மதிப்பீடு இல்லாததால், திட்டமிடுதலிலும் முடிவு எடுப்பதிலும் சுற்றுச் சூழல் தாக்கங்கள் மற்றும் பாதிப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. உதாரணமாக, பேரழிவு காரணமாக சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளும், பேரிடர் ஏற்பட்ட பின்னர் அப்பகுதியை சீரமைக்கத் தேவைப்படும் சுற்றுச் சூழல் தேவைகளும், பொருளாதார அடிப்படையில் மதிப்பிடப் படவில்லை. இதனால் இவற்றின் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக் கொள்கைகளின் ஆராய்ச்சி திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு சூழலியல் பொருளாதார நடைமுறையை ஊக்குவிக்க வேண்டும்.

சூழலியல் தணிக்கை

சூழலியல் தணிக்கை என்பது 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கொள்கையை விரிவாக்கம் செய்து உருவாக்கப்பட்ட புதிய கருவி ஆகும். இயற்கை வள அமைப்புகளையும், சூழல் அமைப்பின் அணுகுமுறையின் சுற்றுச்சூழல் தரம் சார்ந்த அம்சங்களையும் தணிக்கை செய்வதில் இது அதிக கவனம் செலுத்துகிறது. சூழல் அமைப்பின் திறன்கள், சேவைகள், உட்புற, வெளிப்புற மற்றும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அம்சங்கள் தொடர்பான நீடித்த அளவீடுகள், சூழல் அமைப்பின் திறன்கள், சேவைகள் ஆகியவற்றை இது கருத்தில் கொள்கிறது.

நீடித்த தன்மைக்காக பொருளாதார வளர்ச்சியை மறு ஆய்வு செய்தல்

நீடித்த தன்மை என்பது, நீடித்து இருப்பதற்கான திறன் ஆகும். சூழலியலில் நீடித்த தன்மை என்பது உயிரியல் அமைப்புகள் நீண்ட காலத்திற்கு பன்முகத்தன்மை கொண்டதாகவும், உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகவும் எவ்வாறு விளங்குகின்றன என்பதைக் குறிக்கிறது. மனிதர்களைப் பொறுத்தவரை, நீடித்த தன்மை என்பது நீண்ட காலத்திற்கு உடல் நலத்தை பராமரிக்கும் தன்மை ஆகும். இது சூழலியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சார பரிமாணங்களைக் கொண்டதாகும். மனிதர்களும் பிற உயிரினங்களும் வாழ்வதற்கும், வளர்வதற்கும் ஆரோக்கியமான சுகாதார அமைப்புகளும், சுற்றுச் சூழலும் அவசியமாகும்.

இயற்கையாக ஏற்படும் தீங்காக இருந்தாலும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட தீங்காக இருந்தாலும், தொழில்நுட்ப அல்லது சமூக அரசியல் காரணமாக ஏற்பட்ட தீங்காக இருந்தாலும், அதை எதிர்கொள்ளும் நிலைக்கு மக்களைத் தள்ளுவது வறுமை, பாரபட்சம், சமத்துவம் இன்மை ஆகியவைதான். இதனால், பேரழிவை ஏற்படுத்தும் சூழல் அல்லது நெருக்கடி ஏற்படுகிறது. சூழலியல் கவனிப்பின்மை, இயற்கை வளங்களின் மோசமான மேலாண்மை, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவதில் பாகுபாடு ஆகியவற்றின் காரணமாக, மேற்கூறப்பட்ட அம்சங்கள் தீவிரமடைகின்றன. எந்தவொரு பொருளாதார வளர்ச்சி மாதிரியாக இருந்தாலும், அது உள்ளூர் அளவிலும் மண்டல அளவிலும் சூழலியலை மதிக்காத பட்சத்தில் அதனால் நீடிக்க முடியாது. அதே நேரத்தில் சுற்றுச் சூழல் என்பது இயற்கையான சுற்றுச்சூழல், மனிதர்களால் உருவாக்கப்படும் சுற்றுச் சூழல், சமூக கலாச்சார சுற்றுச் சூழல் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை உள்ளடக்கிய பரந்துபட்ட விஷயமாகும். மோதல்களுக்கான சூழலியல் அடிப்படை, உள்ளூர் மற்றும் மண்டல அளவிலான தீவிரவாதம் உருவாதல் ஆகியவற்றை நாம் முழுமையாக புரிந்துகொள்ளாவிட்டால், நீடித்த தீர்வுகளைக் காண்பதில், தோல்வியடைந்து விடுவோம். தட்பவெப்பநிலை மாற்றத்தையும், பேரிடர் பாதிப்புக் கவலைகளையும் ஏற்றுக்கொள்வதற்கான நீடித்த நில பயன்பாட்டு பொருளாதாரத்திற்கான மாற்று மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும். நீடித்தல் தன்மை என்பது பொருளாதார செயல்பாடுகளின் சமூக மற்றும் சுற்றுச் சூழல் விளைவுகளின் மூலமாக பொருளாதாரத்துடன் இணைகிறது. நீடித்தல் பொருளாதாரம் என்பது, சூழலியல் பொருளாதாரத்தை உள்ளடக்கியதாகும். சூழலியல் பொருளாதாரத்தில் சமூக - கலாச்சார, பொருளாதார மற்றும் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்கள் ஒருங்கிணைந்திருக்கும். ஒருங்கிணைந்த மாவட்ட திட்டமிடல் நடைமுறையை அறிமுகம் செய்யவேண்டும் என நாமெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், உள்ளூர் அளவிலும் சூழலியலுக்கு ஏற்ற வகையிலான ஒருங்கிணைந்த திட்டமிடல் மாதிரிகளையும், சட்டங்களையும் நாம் உருவாக்க வேண்டும். அதே நேரத்தில், ஊரக, நகர்ப்புற மற்றும் தொழில்துறை மேம்பாட்டு திட்டமிடல்களுக்கு இடையே உள்ள சூழல் அமைப்பு உறவுகளை நாம் அங்கீகரிப்பது மிகவும் அவசியமாகும்.

தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்

பேரிடர் மேலாண்மை என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ள ஓர் அம்சமாகும். அதே நேரத்தில் சுற்றுச் சூழல் என்பது, ஒரு பெரிய துறையாகும். இது பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மத்திய அரசுப் பட்டியல், மாநில அரசுப் பட்டியல், பொதுப்பட்டியல் ஆகிய 3 பட்டியல்களிலும் இடம்பெற்றிருக்கிறது. சுற்றுச் சூழல் தொடர்பான பெரும்பாலான விஷயங்களில் மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மாநில அரசுகள்தான் அனுபவிக்கின்றன. எனவே விரிவான கொள்கைகளையும், விதிமுறைகளையும் அதன் சொந்த தரங்களையும் உருவாக்குவதற்கான ஒரே நிறுவனமாக தேசிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் இந்த கொள்கைகளையும், விதிமுறைகளையும் அடிமட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்துவதற்கு பொறுப்பேற்கும் நிறுவனமாக இது இருக்க வேண்டும். இது எப்படி சாத்தியம் என்பதை அமெரிக்காவின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்' என்பவை, காலம் கடந்த தன்மை கொண்டவை. அவற்றை கலைத்துவிட்டு, அவற்றுக்கு பதிலாக, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அளவிலும் ஒரே மாதிரியான அமைப்பு முறை கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இந்த அமைப்புகளில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் சமூக வல்லுநர்கள் தரமான விகிதத்தில் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும்.

கொள்கை நடவடிக்கைகள்

தேசிய சுற்றுச் சூழல் குழு சுற்றுச் சூழல் தொடர்பான விஷயத்தில் கொள்கை அடிப்படையிலான மாற்றம் தேவை. முழுமையற்ற பதில் நடவடிக்கை எடுத்தல் அல்லது நெருக்கடி நிலை உருவாகும் வரை காத்திருத்தல் அணுகுமுறையில் இருந்து,

  • தட்பவெப்பநிலை மாற்றம்
  • இயற்கை பேரிடர் மேலாண்மை
  • ரசாயனப் பாதுகாப்பு

சுற்றுச் சூழல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த இயற்கை வள மேலாண்மை அமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரங்கள் மீதான பொறுப்புடைமை மற்றும் இழப்பீடு அடிப்படையிலான தீவிர செயல்பாட்டு கலாச்சாரம் கொண்ட அணுகுமுறைக்கு நாம் மாறவேண்டும்.

பிரதமரின் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான குழு என்பது

  • சுற்றுச்சூழல் மற்றும் வனம்,
  • புவி அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்,
  • சுற்றுச் சூழலுடன் தொடர்புடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை,
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழு,
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு,
  • உயிரி தொழில்நுட்பத்துறை,
  • அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக்குழு,
  • இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்குழு,
  • இந்திய சமூக அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் குழு,
  • பல்கலைக்கழக மானியக் குழு,
  • தேசிய பல்லுயிர் வாழ்நிலை வாரியம்

போன்ற தேசிய அளவிலான அமைப்புகளையும், ஐ.நா. சுற்றுச் சூழல் திட்டம் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அமைப்பு, உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, ஐ.நா., வளர்ச்சித் திட்டம், யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகளையும் ஒருங்கிணைக்கக்கூடிய வகையில், பிரதமரின் தேசிய சுற்றுச் சூழல் குழு என்று பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும். கிராம அளவிலும் வட்ட அளவிலும் மாவட்ட அளவிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான சுற்றுச் சூழலுடன் இணைந்த வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்பு மாதிரிகள்தான் நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். இந்த நோக்கங்களை அடைய தீவிரமான மற்றும் சிறப்பான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவை. சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையிலான ஒருங்கிணைந்த மாவட்ட திட்டமிடல் குறித்த கொள்கை வழிகாட்டுதல் உருவாக்கப்படவேண்டும். ஸ்டாக்ஹோம் மாநாடு, ரியோடிஜெனிரோ மாநாடு போன்ற உலக அரங்குகளில் சுற்றுச்சூழல் குறித்து உரக்கக் குரல் எழுப்பும் இந்தியா, உள்நாட்டில் திட்ட ஆணையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய முதலீட்டமைப்பு போன்ற அமைப்புகளில் சூழலியலுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க தவறிவிட்டது முரண்பாடானதாகும். சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக நமது அனைத்து செயல்களுக்கும் நாமே பொறுப்பேற்கவும், நீண்ட கால நீடித்த தன்மையை உருவாக்குவதற்கான உணர்வுடன் செயல்படவும் நேரம் வந்துவிட்டது.

கல்வி மற்றும் ஆராய்ச்சி

இந்தியாவைப் பொறுத்தவரை, சுற்றுச் சூழல் ஆராய்ச்சி என்பது முழுமையற்றதாக உள்ளது. இந்த ஆராய்ச்சி, இரட்டை நிலை கொண்டதாகவும் இடைவெளி உள்ளதாகவும் சில நேரங்களில் மாறுபட்ட முடிவுகளை தருவதாகவும் உள்ளது. எனவே புதிதாக அமைக்கப்படவிருக்கும் தேசியக் குழுவும் தேசியப் பல்கலைக்கழகமும் இத்தகைய சவால்களை தவிர்க்கும் வகையில், சம்பந்தப்பட்ட அமைப்புகளை ஒரு பறந்த கட்டமைப்பாக இணைத்து, பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சில அவற்றை ஒருங்கிணைக்கும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களில் சுற்றுச்சூழலையும் இணைத்திருக்கின்றன. இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். சுற்றுச் சூழலுக்கான பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டம் புதிதாக ஏற்பட்டுள்ள தேவைகளை நிறைவேற்றும் வகையில், சுற்றுச் சூழல் ஆரோக்கியம், சூழலியல் அமைப்பு, தட்பவெப்பநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சட்டம் மற்றும் கொள்கை, சுற்றுச் சூழல் பொருளாதாரம், தொழிற்சாலை பாதிப்புகள் போன்றவை குறித்த பிரிவுகளை விளக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல் ஆய்வுகள் குறித்த கல்வியும் பயிற்சியும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அளவில் பரவலாக்கப்படவேண்டும். நெருக்கடி கால பிரச்சினைகள் மற்றும் சவால்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் இவை விரிவுபடுத்தப்படவேண்டும்.

சுற்றுச் சூழல் மற்றும் நீடித்த தன்மைக்கான தேசிய பல்கலைக் கழகம் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மத்திய கல்வி நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய காலத்தில் பேரிடர்கள், தட்பவெப்பநிலை மாற்றம், சுகாதார பாதிப்புகள் போன்றவை அவசரகால சவால்களாக இருப்பதால், முதுநிலை பட்டம் மற்றும் முனைவர் பட்டங்களை வழங்குவதற்கான தரமான ஆராய்ச்சி, பயிற்சி, கல்வி ஆகியவற்றை வழங்கும் சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த தன்மைக்கான தேசிய பல்கலைக்கழகம் ஒன்று வகையில், உருவாக்கப்படவேண்டியது அவசியமாகும். இந்த பல்கலைக்கழகம், கொள்கை வகுத்தல், திட்டமிடல், மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றிலும் ஆலோசனை உதவியை வழங்கும் வகையில் இருக்க வேண்டும். சுற்றுச் சூழல், தட்பவெப்பநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை பிரச்சினைகள் போன்றவை தொடர்பான தகவல்கள், திறன்கள், தொழில்முறை மதிப்புக் கூட்டல் ஆகியவற்றை பகிர்ந்துகொள்வதற்கு வசதியாக, இத்துறைகளில் செயல்படும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பேரமைப்பாகவும் இந்தப் பல்கலைக்கழகம் செயல்படவேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : டாக்டர் அனில் குமார் குப்தா, மூத்த இணை பேராசிரியர், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், புதுதில்லி

3.06451612903
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top