பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / கழிவு மேலாண்மை / சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள்

சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள் பற்றிய தகவல்.

மின்னணுக் கழிவுகள்

சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் வகையில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது மின்னணுக் குப்பைகள். மின்குப்பைகளை உருவாக்குவதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பதே அச்சத்தை ஏற்படுத்தும் புள்ளி விபரம்.

இவற்றை அகற்றுவதற்கு முறையான வழிமுறைகளை உருவாக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாகியும், சில நிறுவனங்கள் மெத்தன போக்கைக் கடைபிடிக்கிறது.

இரண்டாம் இடத்தில் தமிழகம்

அறிவியல் தொழில் நுட்பம் ஒருபுறம் வளர்ச்சி பெற்று பிரம்மிப்பை ஏற்படுத்தினாலும், அதனால் உருவாகும் கழிவுகள், பிரமிடுகளை மிஞ்சும் அளவிற்கு உயர்ந்து நம்மை அச்சுறுத்த செய்கின்றன.

இந்தியாவில் 5 கோடி டன் மின்குப்பைகள் சேர்வதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, மின்குப்பைகள் உருவாக்குவதில் மகாராஷ்ட்ரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக கூறி, தமிழர்களின் தலையில் இடியை இறக்குகிறது சமீபத்திய புள்ளி விபரம்.

இவ்வாறு உருவாகும் மின்குப்பையில், 5 சதவிகிதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்பட்டுகிறது. மீதமுள்ள குப்பைகள், மண்ணுக்குச் சென்று, மனிதர்களுக்கு ஆபத்தை உருவாக்குவதாக எச்சரிக்கின்றது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.

வெளிப்படும் வேதிப்பொருட்கள்

ஒரு கம்யூட்டர் தயாரிக்க அதிகளவில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதனை எரிக்கும் போது வெளிவரும் டயாக்சின், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. பேட்டரி தயாரிக்க பயன்படுத்தப்படும் பாதரசம், மண்ணிலோ, நீரிலோ கலக்கும் போது மனிதனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், காரீயம், குரோமியம், பெரிலியம், கேட்மியம், உள்ளிட்ட பல வேதி பொருட்கள் மின்குப்பைகளிலிருந்து வெளிப்படுகின்றன. இதனால், உடல் உறுப்புகள் பாதிப்பு, டி.என்.ஏ. மூலக்கூறுகள் பாதிப்பு போன்ற மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை மறுசுழற்சி செய்யும் அமைப்புகளும் ஆமோதிக்கின்றன.

சமூக பொறுப்புடன் செயல்படுவோம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சரியான சட்ட வழிகாட்டுதல்களும், முறையான திட்டமிடல்களும் தேவை என மறுசுழற்சி செய்யும் அமைப்பினர் கூறுகின்றனர். எனவே, உபயோகித்து முடிந்த மின்னணு சாதனங்களை தெருவில் கொட்டாமல், மக்கும், மக்காத குப்பை என்று தரம்பிரித்து மறுசுழற்சி செய்யும் அமைப்புகளிடம் ஒப்படைக்குமாறும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


ஈ - வேஸ்ட்

ஆதாரம் : சுற்றுச்சூழல் - தகவல் தளம்

3.18181818182
arasu Oct 28, 2016 03:40 PM

சிறந்த மின் கழிவு குறும்படம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top