பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக்

நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ள பிளாஸ்டிக், லேசான எளிதில் மடக்கக்கூடிய மற்றும் வலிமையான, அதே நேரத்தில் குறைந்த விலையில் கிடைக்கின்றது. ஒரு காலத்தில் வியக்கத்தக்க பொருள் என்றிருந்த பிளாஸ்டிக்கானது, அதன் மட்காத தன்மையால் தற்போது சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியதாக கருதப்படுகின்றது.

நம் நாட்டில் 60 - 80 விழுக்காடு பிளாஸ்டிக் மட்டுமே பிரித்தெடுக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு உட்படுத்தி பல பிளாஸ்டிக் பொருள்கள் செய்யப்படுகின்றன.  20 - 40 விழுக்காடு பிளாஸ்டிக்கானது, பொறுப்பற்று சாக்கடைகளில் போடப்படுவதால் அடைப்பு ஏற்படுகிறது, நிலத்தில் போடுவதால் மண் துகள்கள் அடைக்கப்பட்டு மழையால் நிலத்தடி நீர் மறுசெறிவடைவது தடைப்படுகிறது.

மேலும் மண்ணில் நுண்ணுயிரிகளின் செய்லபாடுகளை பாதிக்கிறது.  உணவுப்பொருட்களுடன் கூடிய பைகளை கால்நடைகள் உண்பதால் உயிருக்குக்கேடு விளைகின்றது.மேலும் உணவுப் பண்டங்களில் விஷசாயங்கள் மற்றும் கிருமிகள் கலப்பதால் பிளாஸ்டிக் பை மனித உயிருக்கு பேராபத்தை விளைவிக்கின்றது. பிளாஸ்டிக் மறுசுழற்சியின் பொழுதும் எரிக்கும் பொழுதும் வெளியாகும் டையாக்சின் காற்றில் கலந்து அந்தக்காற்றை சுவாசிப்பதால் மலட்டுத்தன்மை மற்றும் புற்றுநோய் ஏற்படுகிறது.

ஆதலால் சுற்றுச்சூழலை பாதிக்காத, மட்கக்கூடிய பிளாஸ்டிக்கை தயாரிப்பது தற்பொழுது மிக முக்கியமானதாகும்.  பகுதி மட்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்படுத்தப் பட்டாலும், முழுவதும் மட்கக்கூடிய பிளாஸ்டிக்கை தயாரித்து பயன்படுத்துவதே மிக நல்லது, தற்பொழுது வாணிப உலகில் வருவதற்கு ஆரம்ப நிலையில் உள்ளது.

பிளாஸ்டிக் கழிவின் ஆதாரப் பொருட்கள்

 • வீட்டு உபயோகம்
 • தூக்கு பை
 • சீசா
 • கொள்கலன்கள்
 • கழிவு பை

ஆரோக்கியமும் மருத்துவமும்

 • பயன்படுத்தப்பட்ட ஊசி
 • குளுக்கோஸ் சீசா
 • இரத்தம், சிறுநீர் சேகரிக்கும் பைகள்
 • உடற்கூறு குழாய்கள்
 • சிறுநீர் வாங்கி
 • அறுவை சிகிச்சை கையுறை
 • உணவகம்
 • பொட்டல வகைகள்
 • குடி நீர் சீசா
 • பிளாஸ்டிக் தட்டு,
 • கோப்பை, சிறுகரண்டி
 • வானூர்தி / புகைவண்டி பயணம்
 • குடி நீர் சீசா
 • பிளாஸ்டிக் தட்டு,
 • கோப்பை, சிறுகரண்டி
 • பிளாஸ்டிக் பைகள்

ஆதாரம் : சி.பி.ஆர்.சுற்றுச்சூழல் கல்வி மையம்

2.70454545455
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top